Blog Archive

Monday, December 09, 2019

English பாட்டி

வல்லிசிம்ஹன்


இங்க்லிஷ் பாட்டி.
++++++++++++++++++++
இவங்க பேரு ஆநந்தி அம்மா.
இவங்களுக்குச் சின்ன வயதிலேயே அமெரிக்கா போகிற சந்தர்ப்பம் கிடைத்துக் கணவரோடு குடியேறிவிட்டார்.
எந்த ஊரு எல்லாம் நான் சொல்லவில்லை.
வம்பு வரும்.
இயல்பிலியே நல்ல பக்தி உள்ளவங்கதான்.
அவங்க குடியேறின இடம் ஒரு ரெண்டுங்கெட்டான் ஊரு. நம்ம சாமிக் கோவிலுக்குப் போகணுமானா இரண்டு மணி நேரம் ஓட்டினாதான் அம்மனைப் பார்த்து வரமுடியும்.
ரொம்ப வருஷமாக அங்க இருக்கிறதனால கோவிலுக்கே ஜீன்ஸ் போட்டுக் கொண்டுதான் செல்வார்கள்.
அவங்க ஊர்ப் பூசாரியும் இதை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.
அந்த ஊர்க் குளிர் அப்படி.
ஒரு முப்பது வருடம் கழிந்தது.
கணவருக்குச் சொல்லக் கூடாத நோய் வந்து நல்ல வைத்தியம் செய்தும் இறைவனடி சேர்ந்துவிட்டார். ஆனந்தா அம்மா
வேலைக்கும் சென்று கொண்டிருந்ததால் அந்த ஊர்
நாகரீகத்துக்கு ஏற்ற மாதிரி தலைமுடியும் வைத்திருந்தார்.
இப்பொது சொந்த ஊருக்கு ஒரு திருவிழாவுக்குச் செல்ல வேண்டிய
தேவை வந்தது.
உறவினர்கள் இருந்த திருச்சிக்குப் பக்கத்தில்
ஒரு சின்ன ஊருக்கு வந்தார்.
திருச்சியில் தங்கி அழகாகப் புடவை கட்டிக் கொண்டுதான் வந்தார்.
அழகிய பொட்டு, நல்ல சிவப்பு வண்ண சரீரம்.
இந்த அலங்காரங்களுடன் மாகாளிபுரத்துக்கு வந்ததும்
உறவினர்களுக்கே தூக்கிவாரிப்போட்டது.
யாரோ அம்மா {மன்னிக்கணும்)பொன்மலைலேருந்து தப்பா இங்கே
வந்துட்டாங்க என்று ஊர்ப் பிள்ளைகள்
கூச்சலோடு வண்டியை அணுகினார்கள். தொடரும்.
இந்தக் கதை எப்படித் திருப்பணும்னு படிப்பவர்கள் சொல்லலாம்.
-2:25

12 comments:

ஸ்ரீராம். said...

கதை என்றால் திருப்பலாம்.   நடந்த சம்பவங்களைத் திருப்பலாமா?  யார் என்ன சொல்கிறார்கள் என்று படிக்க நானும் காத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

உண்மை கதையை சொல்ல போகிறீகளா?
படிக்க ஆவலாக இருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... அடுத்த தொடரா...

படிக்கக் காத்திருக்கிறேன்.

KILLERGEE Devakottai said...

ஆவலுடன் நானும்...

Geetha Sambasivam said...

நல்ல சுவாரசியமாக ஆரம்பித்திருக்கிறீர்கள். இதை எப்படித் திருப்பணும் என்பது உங்களுக்குத் தான் தெரியும். திருப்புங்கள். காத்திருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.
கற்பனை சேர்க்கிறேன். ஆனால் நடந்ததுதான். மற்றவர்களால்
கணிக்க முடியாது. ஒருவர் மட்டும் சம்பந்தப் படவில்லை. இரண்டு மூன்று நபர்களுடன் எழுதவேண்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. உண்மையாக
நடந்ததை இட்டுக்கட்டி சொல்லும் கதை.இதோ ஊருக்குக் கிளம்பும் நாள் வருகிறது அதற்கு முன் முடிக்க வேண்டும். நன்றீ மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், உங்கள் ஆர்வத்த்க்கு ஏற்ற மாதிரி கதை அமைய வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு தேவகோட்டைஜி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
கோர்வையாக எழுத முயற்சிக்கிறேன் மா.நன்றி மா.

மாதேவி said...

கதையின் தலையங்கமே அள்ளுதே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி நல்வரவு. மிக மிக நன்றி மா. உங்களைப் பார்ப்பதே அருமையாக
இருக்கிறது.