வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
ஸ்ரீவைகுண்ட நாதரும் உபய நாச்சிமார்களும் |
கோவில் நாதர் |
வெளிச்சுற்று ஸ்ரீராமரும் ஆஞ்சநேயரும் |
ஸ்ரீ வைகுண்ட யானை
மண்டபத்தில் யாளிகள் இப்பொழுது நெல்லை மாவட்டத்தில் நல்ல மழை பெய்து நாங்கள் கண்டு மகிழ்ந்த வாழைத் தோட்டம் எல்லாம் நஷ்டப் பட்டுவிட்டதாக கோமதி அரசுவிடம் பேசிய பொது தெரிந்தது. அந்த வளப்பம் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது.நாங்கள் பயணம் செய்த நான்கு நாட்களிலும் நல்ல வெப்ப நிலை. திருக்குறுங்குடியில் தான் சில்லென்று மழை. கீழ் நத்தத்தில் கூ டத் தாமிரபரணியின் கரையோரங்கள் வீடுகளாக மாறி இருந்தன. அதனால்தான் எங்களால் அந்த புனித ஆ ற்றைக் காண முடியவில்லை. திருக்குறுங்குடியிலிருந்து பயணம் மதியம் ஒரு மணிக்கு கிளம்பினோம் வழி நெடுக வாழை தான். பத்தாயிரம் வாழைமரங்கள் பார்த்திருப்போமோ என்னவோ. வண்டி ஓட்டுநர் வண்டியை விரட்டுவதிலேயே இருந்தார் . மகனிடம் நிதானப் படுத்தச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அதிக அரசியல் பேசுவதிலும் வேறு கோவில்களுக்குப் போவதிலும் அக்கறை காட்டினார். அடுத்த நாள் சென்னை திரும்ப வேண்டிய நிலையில் அவரது திட்டங்கள் எங்களுக்கு ஒத்து வரவில்லை. அதுவும் மதுரை சென்று விமானம் ஏ ற வேண்டும். நல்லபடியாக இரட்டைத்திருப்பதி வந்து சேர்ந்தோம். அங்கு இருக்கும் இரண்டு திருமலை தெய்வங்களையும் சேவித்துக் கொண்டு சுற்றி இருந்த வயல்வெளிகளை அனுபவித்த படி அங்கு மேய்ந்து கொண்டிருந்த மயில்களை ரசித்தபடி நத்தம் திவ்யதேசத்திற்கு வந்தோம். ஸ்ரீவிஜயாசனப் பெருமாள் வரகுணமங்கை திருக்கோவில் வீற்றிருந்த கோலம் தாயார் வரகுணவல்லி அங்கு ஓடிய நதியின் பெயர் ரேவா. இந்தக் கோவிலுக்குள் சென்று தரிசிக்க என்னால் இயலவில்லை. மகன் கள் நன்றாகத் தரிசித்து வந்தார்கள். வண்டி பறந்த வேகத்தில் முதுகு மிக வலி கொடுத்ததால் என்னால் இறங்க முடியவில்லை. |
11 comments:
ரேவா... இப்படியொரு நதியா? உங்கள் பெயர்!
வண்டிக்காரர் விரட்டியது சிரமமெனினும் மிகச்சில சமயங்களில் அதுவும் தேவைதான். பார்க்கவேண்டிய இடங்களை நேரத்துக்குள் கவர் பண்ணவேண்டுமே...
//அங்கு பூ விற்று வந்த அம்மா என்னை வறுத்தெடுத்து விட்டார்.
புண்ணியம் தேடிக்காம இப்படி உக்காந்திருக்கியே
என்றார் .
இருந்த களைப்பில் எனக்கு பதில் சொல்ல தள்ளவில்லை .//
நம்ம உடல்நிலையும் வலியும் புரியாமல் பலரும் இப்படிச் சொல்லும்போது என்ன பதில்சொல்லுவது என்றே தெரிவதில்லை. ஸ்ரீவைகுண்டநாதர் தரிசனத்துக்கும் மற்றத் தகவல்களுக்கும் நன்றி. நாங்களும் அங்கே நிறைய வாழைத்தோட்டங்களைப் பார்த்திருக்கோம். அந்தப் பழங்களின் சுவை இங்கே வரதில்லை.
நல்ல பயணம்... ஆனா கீழநத்தம் தாமிரவருணி ஆற்றின் கரையை இன்னும் ஆக்கிரமிப்பு செய்யலை. ஓரளவு நல்லா இருக்கு. ஆனால் ஆறுதான், செடி, மரங்கள் வளர்ந்து இருக்கு. படித்துறை சிதிலமடைந்து இருக்கு.
ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை போன்ற கோவில்கள் மிகவும் பெரியன. சமீபத்தில் மன்னார்குடி சென்றபோது, கோவிலின் உள்ளே நெடுக நடந்துகொண்டே இருந்தால்தான் கடைசியில் பெருமாள் காட்சி தருகிறார் (திருவிடைமருதூரும் அப்படித்தான்).
அவ்வளவு தூரம் வந்து சேவிக்க முடியாதவர்களுக்குத்தான் கருடசேவை மற்ற சேவைகளில் வீதியில் வந்து பெருமாள் தரிசனம் தருகிறார் போலும்.
அன்பு ஸ்ரீராம்,
ரைவதம் என்ற மலையில் உற்பத்தியாவதால் ரேவதி என்ற பெயராம்.
அதை என்ன மாடர்னாக ரேவா என்றார்களென்று நினைத்தேன். அவருக்கு
சொல்ல முடியவில்லை. ஏதாவது பொருள் இருக்கும் எனு நம்புகிறேன்மா.
நாங்கள் எங்கள் திட்டத்தை முதலிலேயே சொல்லி விட்டோம்.
அவர் அவசரப்பட்டது ஒரு காரணத்துக்காக.
குறிப்பிட்ட மைலேஜுக்கு குறிப்பிட்ட பணம். அதற்கு மேல்
பயணம் இருந்தால் வேற ரேட்.
அதிக இடங்களுக்கு,அதுவும் திருச்செந்தூருக்குப் போக ஆசைப்பட்டார்.
எங்களுக்கோ அஸ்தமனத்துக்கு முன் திருனெல்வேலி திரும்ப
எண்ணம். இரவில் பயணம் வேண்டாம் என்றே நினைத்தோம்.
அன்பு கீதாமா,
மகள் சட்டென்று புரிந்து கொள்ளுவாள்.கணவரும் அப்படியே.
அந்தப் பூக்காரிக்கு அதிசயமாக இருந்திருக்க வேண்டும். தெற்குச் சீமைகளுக்கே உரிய
பிரசங்கித்தனம்.
இத்தனாம் கோவிலுக்குப் போயிட்டு ஒரு சின்னக் குங்குமம் வச்சிக்கலை
என்னம்மா நீ என்றாளே பார்க்கணும். சிரிப்புதான் வந்தது.
பலராமன் மனைவியின் பெயர் ரேவதி, ரைவத நாட்டு இளவரசி.
அன்பு கீதாமா, ஆமாம். மாயாபஜார் பார்த்துதான் எனக்கு
பலராமன் ரேவதி தெரியும் .9 வயதில்:)
இவர்கள் ரேவா என்றதும்
புரியவில்லை.நன்றி மா.
அன்பு முரளி மா,
உண்மைதான்.
நாங்கள் பார்த்த தாமிரபரணி வயல்,புல் ,புதர் என்றுதான் இருந்தது.
எங்கள் பாட்டி வர்ணித்த படித்துறை எல்லாம் இல்லை.
உடம்பில் வலு இருக்கும் போது போன கோயில்கள் பல
அப்போதும் பலன் பெறக் கோவிலையும் பெருமாளையும்
,இல்லையானல் நன்றிக்கடன் செலுத்த என்று சென்று வந்தோம்.
இப்போது நின்று ரசிக்க மனம் விரும்பும்போது
உடல் ஒத்துழைக்க மறுக்கிறது.
நீங்கள் மன்னார்குடி சென்று வந்தது அருமை. நன்றி மா.
நான் பார்க்க ஆசைப்படும் கோயில்களில் ஒன்றான, இதுவரை நான் செல்லாத கோயிலுக்கு இப்பதிவு மூலமாக அழைத்துச்சென்றமைக்கு நன்றி.
சென்ற வருடம் நாங்கள் சென்ற நவ திருப்பதி யாத்திரை நினைவுக்கு வந்தது. சில கோவில்களுக்கு என் கணவர் வரவில்லை, காரிலேயே காத்திருந்தார். ஒருவர் வெளியில் காத்திருக்கும் பொழுது நம்மால் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாது.
புண்ணிய தலத்தை கண்ணாலே கண்டாலே புண்ணியம்தான் என பூக்கார அம்மாவுக்கு தெரியவில்லைபோலும்.
Post a Comment