Blog Archive

Wednesday, December 11, 2019

இங்கிலிஷ் பாட்டி 2

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .
 இங்கிலிஷ் பாட்டி  2

முதல் பகுதியில்  ஆனந்தி  30 வருடங்களுக்குப் பிறகு திருச்சிக்குப்  பக்கத்தில் மாகாளிபுரத்துக்கு வரும்போது  சந்திக்கும் ஆச்சர்யங்கள் பற்றி எழுத ஆரம்பித்தேன்.


Image result for asian  women settled in usa
ஆனந்திப்பாட்டி  முதன் முதலில் எடுத்த படம்  30 வருடங்களுக்கு முன் எடுத்தது.
ஆனந்தியின் கணவர் நாகரிக்கத்தில் மிகவும் பற்றுள்ளவர்.
அதாவது அமெரிக்க நாகரிகத்தில்.

திருமணம் ஆகி வந்ததும் அவர் செய்த முதல் வேலை 
அவளுக்கு பாண்ட் சட்டை போடக்  கற்றுக் கொடுத்துதான்.

நீளக்  கூந்தலும் பொட்டுமாக அவள் வளைய வந்தது அவரது 
மற்ற தோழர்களுக்கு வேடிக்கையாக  இருந்தது.

அவர்களது மனைவிகள் கற்றுக் கொடுத்த முறைப்படி 
கூந்தல்  கழுத்துடன் நின்றது.

இல்லையே அப்படி எல்லாம் இப்போது இல்லையே,
என்பவர்களுக்கு  சொல்லிக் கொள்வது இது நடந்தது ஆனந்தியின் வாழ்வில்,
Midwest  நகர் ஒன்றில்  ,ஒரு மழைப் பிரதேசத்தில் 
அவர்கள் குடியேறிய போது  நடந்தது.

அவளுக்கும் மேல் படிப்புக்கு வசதி செய்து கொடுத்து வேலையும் வாங்கிக்  கொடுத்தார்.
அம்மா போற்றிப் போற்றி வளர்த்த கூந்தல்  காதோரத்துக்கு வந்து. கொசு அளவில் போட்டு உருமாறி 
மாநிறம் சிவப்பாகி ஆளே  மாறி  4 வருடங்களுக்குப் பிறகுக் கணவனோடு வந்தவளைக் கண்டு 
ஊரே திகைத்தது.

Actress Sowcar Janaki at the Vaanavarayan Vallavarayan Audio Launch

இப்போதிருக்கும்  ஆனந்திப் பாட்டி .
வருடங்கள்  செல்ல கிராமத்தவர்கள்  ஆனந்தியின் 

தோற்றத்துக்குப் பழகிக் கொண்டாலும்  அவள் கணவர் 
மறைந்த பிறகு இப்போது அதே அலங்காரங்களுடன் 
வந்தது அவர்களுக்கு ஏற்கவில்லை.  பார்க்கலாம்.








12 comments:

ஜீவி said...

ஆனந்தி பாட்டி அசப்பில் செளகார் ஜானகி போலவே இருக்காங்க..

டிபிஆர்.ஜோசப் said...

செளக்கார் பாட்டியோட ஹேர் ஸ்டைல் நல்லா பொரூத்தமாத்தான் இருக்கு.

KILLERGEE Devakottai said...

இது சௌகார் ஜானகிதானே....?

Geetha Sambasivam said...

கதை நன்றாக சுவாரசியமாகப் போகிறது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜோசஃப் சார். யதேச்சையாக இவங்க படம் கிடைத்தது.
ஆனந்தியின் சாயல் போலவே இந்தப் படம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜீவி சார். அதே அதே.ஆனந்திக்கு இன்னும் கொஞ்சம் வயசு குறைவு. 64
தான் ஆகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி அவங்களே தான். 80 ஆவது பிறந்த நாள் படம்.

வல்லிசிம்ஹன் said...

கீதா, நிஜமாவாமா.
உண்மைக்கதைகள் சுவாரஸ்யப் படணும்னு கொஞ்சம் பொய் கலக்கணும்.
கலந்துடலாம்:)

கோமதி அரசு said...

ஆனந்தி பாட்டியின் தோற்றத்தை ஏற்று கொள்ளாவிட்டாலும் அவரை ஏற்றுக் கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தொடர்கிறேன்.

மாதேவி said...

பாட்டி.....தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி மிக நன்றி மா.