Blog Archive

Thursday, December 12, 2019

ஆழ்வார் திருநகரி பயணத்தின் கடைசி நாள்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .
ஆழ்வார் திருநகரி பயணத்தின் கடைசி நாள்.

+++++++++++++++++++++++++++++++++++++++
ஆழ்வார் திருநகரியை அடைந்ததும்
கோவில் முகப்பே பிரம்மாண்டமாகப் பிரமிப்பில் ஆழ்த்தியது.
வெகு நாட்களாகக் கேட்ட வரலாறு.
அம்மா அப்பா தாத்தாவின் நம்மாழ்வார் பக்தி.

திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பியே  நம் ஆழ்வாராக வந்தது.

பிறந்தது முதல்  அசையாமல் பேசாமல் இருந்த குழந்தை ஆழ்வார் திருநகரியில் புளியமரத்தைப் பார்த்ததும்
தவழ்ந்து சென்று
அந்தப் பெரிய பொந்தில் உட்கார்ந்து
தியான நிலையை அடைந்து யாரிடமும் பேசாமல் இருந்தது.

அந்த நிலையிலே அத்தனை திருப்பதிகளில் பெருமாள்களும் நம்மாழ்வாருக்கு காட்சி தந்து

அவர்கள் மேல் திவ்ய பிரபந்த பாடல்களை பாடியது
இவை அனைத்தும் எப்பொழுதும் என்னை ப் பிரமிக்க வைக்கும்.

மதுரகவி ஆழ்வாரின் குருபக்தி,

//கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. (2) (1) //
திருக்குருகூர் மாறன் சடகோபன் நம்மாழ்வார் பக்தியில் அவர் பாடிய பதினோரு பாடல்கள்,
எல்லாமே மெய் சிலிர்க்க வைக்கும்.




Related image
உறங்காப்புளி 
Image result for uranga puli maram azhwar thirunagari
நம்மாழ்வார்









13 comments:

Geetha Sambasivam said...

கண்ணி நின் சிறுத்தாம்பு திவ்யப்ரபந்தம் பற்றி எங்கள் நண்பர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள் எழுதிப் படிக்கணும். அருமையாக இருக்கும். இப்போ ஸ்ரீரங்கத்தில் தான் இருக்கார்.

Geetha Sambasivam said...

ஆழ்வார்திருநகரி போனதும், அங்கே பார்த்தவைகளும் இன்னமும் நினைவில் இருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

இணையத்தில் ஏதோ சரியில்லை. நம் ஆழ்வார் பற்றி
மீண்டும் பதிகிறேன்.

ஸ்ரீராம். said...

காணொளி கேட்டு ரசித்தேன்.

யானை காணொளி என்று க்ளிக்கிக் க்ளிக்கிப் பார்த்து போட்டோதான் என்று தெளிந்தேன்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Anuprem said...

ஓம் நமோ நாராயணா ....

கோமதி அரசு said...

உறங்காப்புபுளியமரத்தை பார்த்தோம்.
குழந்தை பொந்தில் உட்கார்ந்து என்று பட்டர் வரலாறு சொன்ன போது நம் உடல் சிலிர்க்கும்.

நீங்களும் அழகாய் சொல்லி வருகிறீகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
அவர் சொல்லி நான் கேட்டதில்லை.
அம்மாவின் தாத்தா சொல்வார்.
அவர்களுக்கெல்லாம் மனப்பாடமாகத் தெரியும்.
உங்களால் நிறைய நேரம் திருக்குருகூரில்
செலவழிக்க முடிந்ததா. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் . அது வீடியோ தான் மா. என்னவோ அதைப் பதிவேற்ற முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுப்ரேம்,
நாராயணனே நமக்கே பறை தருவான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,
உண்மைதான் அவர் சொல்லும்போதே அந்த ஞானக்குழந்தை வடிவை நினைத்து
மனம்,உடல் பூரிக்கும்.
நீங்களும் சென்று வந்திருக்கிறீர்கள் என்பதே மகிழ்ச்சி.
நன்றி மா.

மாதேவி said...

இனிமை.