Blog Archive

Thursday, December 12, 2019

ஆழ்வார் திருநகரி தொடர்கிறது

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும் 
ஆழ்வார் திருநகரி  தொடர்கிறது 
++++++++++++++++++++++++++++++++++++

Related image





Image result for namazvar saranagathi
நம்மாழ்வார் சரணாகதி 

Image result for nammazhvar saranagati

மார்கழி மாத  வைகுண்ட ஏகாதசியின் பொது நம்மாழ்வார்  சரணாகதிக் காட்சி ஸ்ரீரங்கம் ,ஆழ்வார் திருநகரியில் நடக்கும் ,
இந்த செய்திகளை அம்மா சொல்லி கேட்பது வழக்கம்.

திரு வேளுக்குடி  சுவாமிகளும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

பெருமாளுடன்  ஐக்கியமானவர் பக்தர்களுக்காகத் திரும்பி வந்துவிடுகிறார்.

நாங்கள்  ஆழ்வார் திருநகரி சென்றபோது   ,உறங்காப்புளியின் தரிசனமும் கிடைத்தது.
பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அநேகர் மரத்தின் பட்டைகளை எடுத்துச் சென்றதால் 
இந்த ஏற்பாடு என்று சொன்னார் அங்கிருந்த பட்டர்.

எவ்வளவு பெரிய சரித்திரம் இங்கே நடந்திருக்கிறது.

File:Swami Nammaazhvar.jpg
ஸ்ரீ நம்மாழ்வார். அவருடன் மதுர கவி ஆழ்வாரும், ஸ்ரீ நாத முனிகளும்.

Image result for Sri Nammazhwar parentsகலியில்  நம்மை உய்விக்க வந்த ஸ்ரீ நம்மாழ்வாரின் பெற்றோர், பிள்ளை வரம் வேண்டி திருக்குருகூரிலிருந்து 
திருக்குறுங்குடி  அழகிய பரிபூர்ண சுந்தர நம்பியை வேண்டி வர,
அவர்களுக்குத் தானே மகாவாகப் பிறப்பதாக வாக்களிக்கிறார் நம் தெய்வம்.
அவதாரம் செய்த  நாளிலிருந்து அழாமல் அசையாமல் இருந்த மகன், திருக்குருகூர்,
சந்நிதியில் எழுந்து நடந்து ,
அங்கே புளிய மரத்தில் பொந்தில் தியான நிலையில் அமர்ந்து விட்டதாம்.
ஸ்ரீ ஆழ்வாரின் 16 வயதில் மதுரகவி அவரைத் தேடி வந்து பிரபந்தங்களை பெறுகிறார்.
இது போல ஒரு குரு  சிஷ்ய பந்தத்தை இனியும் பார்ப்போமா.
ஸ்ரீ நம்மாழ்வாரின் மொழிகளாக நமக்கு கிடைத்திருக்கும் 
திருவாய் மொழி,1102 பாசுரங்கள்,
திருவிருத்தம்    100 பாசுரங்கள்,

திருவாசிரியம் 7 பாசுரங்கள்,
பெரிய திருவந்தாதி  87 பாசுரங்கள்.

எனக்குத் தெரிந்ததை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

உபன்யாசங்களில் கேட்க கிடைத்த செய்திகள்,இந்தப் பாசுரங்கள் அனைத்துமே 
வேதத்தின் சாரம், மோக்ஷம் அடையும் வழி  என்பதே.

விரிவாக எழுத எனக்கு ஞானம் போதாது,.
இதுவரை எழுத்தாக கிடைத்ததே பெரிய பாக்கியம்.
ஸ்ரீ நம்மாழ்வார், ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம்.

சுபம்.





6 comments:

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்லியிருப்பது எல்லாம் படிக்கும்போது ஒருமுறை சென்றுவரும் ஆவல் வருகிறது.

வல்லிசிம்ஹன் said...

எல்லாமே புண்ணியத் தலங்கள் அன்பு ஸ்ரீராம்.
நல்ல தெய்வங்களை நம்பி நாமும் வளம் பெற வேண்டும்.
மிக மிக நன்றி மா.

துரை செல்வராஜூ said...

ஆழ்வார் திருநகரி ..

10/12 வருடங்களுக்கு முன் சென்றது...

தங்களால் மீண்டும் தரிசனம்....

ஹரி நாராயண...

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
இறை பக்தி அழைத்த இடம் நாம் செல்கிறோம். மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது
செல்லலாம். நமோ நாராயணா.

Geetha Sambasivam said...

எல்லாமே அருமை. நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள்.

மாதேவி said...

அற்பபுதம்.திருவடிகளே சரணம்.