எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்.1977.
கையில் ஒரு சிறு பெட்டியுடன் நின்று கொண்டிருந்தாள்
லலிதா. அவளை வழி அனுப்ப வந்த அக்கா வசந்தா,
பயப்படாமல் போ.
உன் கல்வி உன்னை எப்போதும் கைவிடாது.
ராமனைப் பற்றிய நினைவுகளை மறக்கச் சொல்லவில்லை. அதை ஒரு துணையாக எடுத்துக்கொள்.
முன்னே போக வேண்டிய பாதைக்கு விளக்காக வைத்துக்கொள்.
திரும்பிப் பார்க்காமல் முன்னேறும் வழியைப் பார்.
கடவுள் முகத்தை முன் பக்கமாகப்
பார்க்கத்தானே வைத்திருக்கிறார்.
அக்காவின் வார்த்தைகளை ஜீரணிக்க முயன்றாள்
லலிதா.
ஒரு மாதமே கடந்திருந்தது, கணவனின் மறைவு நிகழ்ந்து.
நாற்பது வயது மனிதன் அப்படித் திடீ ரென்று மறைய முடியுமா.
நினைத்ததும் கண்ணில் துளிர்த்தது நீர்.
சமாளித்த வண்ணம் திருச்சிக்குச் செல்லும் விமான
அறிவிப்பை எதிர்பார்த்தாள் .
![]() |
| துள்ளித் திரிந்ததொரு காலம் |
போய்க் கொண்டிருந்தாள்.
மாமாவீட்டுக்கு முதலில் சென்று அங்கிருந்து
அவள் படிக்க வேண்டிய பள்ளியின் விடுதியில் சேருவதாக ஏற்பாடு.
தாய் மாமன் சோமு , ,திருச்சி மெயின் கார்டு கேட்டில் ஒரு பெரிய ஆயத்த உடைகள் மற்றும் சூரத் சில்க் புடவைகள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன் தன் தமக்கை முதுமையின் காரணமாக மறைந்ததும் அவள் பெற்ற செல்வங்களை
தனதாகவே நினைத்து அரவணைத்துக் கொண்ட வர் .
அவர் மனைவியும் இசைந்த வாறு நடந்தது அவருக்கு இடையூறு இல்லாமல் தன் வழி நடக்க முடிந்தது.
லலிதாவிற்கு ஒரு சகோதரனும் , ஒரு சகோதரியும்.
அண்ணனுக்கு நல்ல வேலை செய்து வைத்தவரும் மாமா தான்.
அவனும் மாமன் மகளை நேசித்து மணம் முடித்தான்.
அக்கா வசந்தா பெற்றோர் பார்த்து வைத்த சண்முகத்தை
திருமணம் செய்தாள் .
லலிதாவின் திருமணம் காதலித்துச் செய்து கொண்டது.
ராமனின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாமல் நடந்தது.
குழந்தைகளும் பிறக்கவில்லை.பத்து வருட தாம்பத்யம்
இனிதாகத் தான் நடந்தது.
ராமனின் அகால மரணம் அவன் பெற்றோர்களுக்கு
அதிர்ச்சி . ஜாதகம் பார்க்காமல் மணமுடித்தது.
தான் இவ்வாறு நடக்கக் கரணம். லலிதாவுக்கு
அதிர்ஷ்டம் போதாது என்று தீர்மானம்.
எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுத்து அழைத்தது மாமா
சோமு தான். பட்டம் மட்டும் பெற்றிருந்த 32 வயது லலிதாவின் எதிர்காலம் இனி பார்க்கலாம்.

