Blog Archive

Monday, March 04, 2019

சிங்கம் 70 , 2010

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

2010 ஆம் வருடம்  இவருக்கு 70 வயது பூர்த்திக்கு,
எல்லோரும் பீம ரத  சாந்தி செய்ய வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தினார்கள். பையன்கள்  இருவரும் ,துபாய் மருமகள் பேத்தி வந்தாச்சு.

இவர் அசைந்து கொடுத்தால் தானே.
வேண்டாம்மா
இதெல்லாம் அனாவசியம்.னு மறு த்துக் கொண்டே இருந்தார்.
 அவருடைய ஜிம்  தோழர்கள் ஆன்ட்டி , அங்கிளுக்கு  ஒரு பார்ட்டியாவது நீங்க கொடுக்கணும் என்று ஒரே வற்புறுத்தல் . அத்தனை பேருக்கும் வீட்டில் இடம் செய்ய முடியாது.
நம் வீட்டில்  இடம் போதாது . யோசித்துப் பார்த்ததில், நம் வீட்டுத் திருமணங்கள்  சில நடந்த வுட்லன்ட்ஸ் நினைவுக்கு வந்தது.
உறவுகள்,நண்பர்கள் அனைவர்களுக்கும் பிருந்தாவன்  ஹால் இடம் கொடுக்கும் என்று தீர்மானித்து  உடனே சென்று பதிவு செய்துவிட்டேன். ஒரு அறுபது பேருக்கு மத்திய உணவு மெனு தயாரானது.
அது மட்டும் போதாது என்று தோன்றவே, என் நல்ல தோழரான ஸ்ரீராம் டிராவல்ஸ்  ஷங்கரிடம், ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் சர்க்கரைப் பொங்கலுக்கு ஏற்பாடு செய்ய உதவி கேட்டேன்.

அவரும் அங்கு தொடர்பு கொண்டு,அவர்களிடம் நான் வருவத்தைச் சொன்னார்.
அப்படியே மூலவருக்கு  தோளிலிருந்து தரை வரை தொங்கும் நிலமாலையும்   சொல்லிவிட்டேன்.
திருக்கோவிலுக்குச் சென்று  பணம் கட்டிவிட்டு வந்ததும்தான் நிம்மதி.

நம் துளசியும் கோபாலும் அப்போது சென்னையில் இருந்தார்கள்.
அவர்களையும் சேர்த்துக் கொண்டேன், தம்பி,அவன் குடும்பம், நாத்தனார்கள்  அவர்கள் குடும்பம், நண்பர்கள் அவர்கள் குடும்பம் என்று அவருக்கு மனதுக்கு  இனியவர் சேர்ந்ததும் தான் ஐயா முகத்தில் சிரிப்பு  வந்தது.
மாலை போடக்கூடாது என்று கண்டிப்பாக ஆர்டர்.

எனக்கு எவ்வளவு இதெல்லாம் பிடிக்குமோ  அதற்கு ஜஸ்ட் எதிர்  இவர்.

நான் நிறைய புடவைகள் வாங்கி கொண்டேன். 😃?😃😃😃😃😃😃😃

நல்ல படியாக 70 ஜக் கண்டோம். இறைவனுக்கு நன்றி.

27 comments:

Bhanumathy Venkateswaran said...

உங்க கணவரின் பீமரத சாந்தி பற்றி நீங்கள் விவரித்திருக்கும் பாங்கு வெகு பாந்தம்! 'இறைவனுக்கு நன்றி', 'எல்லோரும் நலமாய் வாழட்டும்' எத்தனை பாசிட்டிவ் அலைகளை பரப்புகிறீர்கள்.! மிக்க நன்றி! Me the first..!!!??

ஸ்ரீராம். said...

இனிய நினைவுகள்மா...

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள்....

வல்லிசிம்ஹன் said...

Ofcourse you are the first Bhanu ma.நடப்பவை வேறாயிருந்தாலும் நினைவுகளாவது நன்றாக இருக்கட்டுமே
என்று தான் எழுதுகிறேன்.
மிக மிக நன்றி.இனி எல்லாம் நலமே.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா வெங்கட் . வாழ்க வளமுடன்.

கோமதி அரசு said...

இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
மிக அருமையான தருணங்கள்.
வாழ்த்துக்கள் அக்கா.
வாழ்க வளமுடன்.

KILLERGEE Devakottai said...

நினைவுகளை மீட்டெடுங்கள் மகிழ்வைத்தரட்டும் அம்மா.

Anuprem said...

அழகிய தருணங்கள் மா...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள் அம்மா...

காமாட்சி said...

இனிய நினைவுகளின் அலைகள். ஒவ்வொன்றாக மனதில் அசைபோட வைக்கிறது. நல்லதே. அன்புடன்

Geetha Sambasivam said...

2010 மார்ச் மாதம் சென்னையில் தான் இருந்தேன். எங்களை விட்டுட்டீங்க! :))) கூப்பிட்டிருந்தால் ஓடோடி வந்திருப்போம்.

அருமையான மலரும் நினைவுகள்! அந்த நிகழ்வின் படங்கள் இருந்தால் கூடப்பகிர்ந்து இருக்கலாமோ? ஒரே முறை தான் சிங்கத்தைப் பார்த்திருக்கேன். என்றாலும் முகம் அவரோட மென்மையான பேச்சு, சிரிப்பு எல்லாம் மறக்க முடியவில்லை. தொலைபேசியில் உங்களை அழைத்தால் மறக்காமல் அம்பத்தூர் கீதா என்று சொல்லிக் கூப்பிடச் சொல்லுவேன். :)))) உங்க மாட்டுப்பெண்ணும் ஒரு கீதா இல்லையா?

நெல்லைத்தமிழன் said...

இதுக்கு முன்னால இதனை போட்டோவோட எழுதியிருக்கீங்களா? இருந்தால் லிங்க் கொடுங்க.

இறைவன் சித்தம் வேறுவிதமா இருந்ததுதான் ஆச்சர்யம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, வாழ்வின் அருமையான மகிழ்ச்சிகளைப் பதிவு செய்தவர் மகன்.

அவரிடம் கேட்கலாம் என்றால் அப்பா நினைவில் பேசக்கூட மாட்டேன் என்கிறார்.

என் பிள்ளைகள் என்னைப் போல. நன்றி அம்மா எப்பொழுதும் வளமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டையாருக்கு வணக்கம்.
சிலசமயம் புத்தரைப் போல எல்லாம் துறக்க ஆசைதான்.
பாசம் விட மாட்டேன் என்கிறது.
உங்களை நினைத்துப் பார்க்கிறேன். இந்தச் சின்ன வயதில் ,ஞானியினைப் போல் கடமைகளை நிறைவேற்றி வருகிறீர்கள்.
என்றும் வாழ்க வளமுடன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். அன்பு காமாட்சிமா. அன்னம் போலவே அல்லாததைத் தள்ள நினைக்கிறேன் .
வெற்றியும் பெறுவேன். இனியும் நல்லதே நடக்க வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

@ அனுராத ப்ரேம்குமார்,
@ அன்பு தனபாலன்,

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.
சற்று நேரத்தில் கோவில் செல்ல வேண்டும்.
என்றும் வாழ்க வளமுடன்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா பதிவை வாசித்ததும் அருமையான நினைவுகள் அப்போவே உங்களைத் தெரிந்திருந்தான் நான் சென்னையில்தானே இருந்தேன் அப்போ வந்திருப்பேன்... அடடா நான் சிங்கம் அப்பாவை சந்திக்க முடியாமல் போனதேன்னு அவர் விருப்பங்கள் அப்படியே என் விருப்பங்கள் போல....

கீதா
மீண்டும் வரேன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இன்னும் ஃபோட்டோக்கள் இருந்தால் போட முடிந்தால் போடுங்களேன்..

அப்பா நிஜமாகவே சிங்கம் தான்!!! பார்ப்பதற்கும் சரி அவரது எண்ணங்களும் சரி!!

நல்ல இனிமையான நினைவுகள்...

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இனிய நினைவுகளைப் பகிர்ந்தவிதம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா சாம்பசிவம் மா. அந்தத் திட்டம் போட்ட போது,
அவருடைய தோழர்கள் லிஸ்டில் இருந்தவர்கள் மட்டும் அவர் அழைத்தார்.

இவ்வளவாவது சம்மதித்தாரே என்று நானும் சரின்னு சொல்லிட்டேன்.
எனக்கு எம்பதுன்னு ஒண்ணு வந்தால் நாம் எல்லோரும்
சேரலாம்.👍👍👍👍👍

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா. ஆமாம், அவருக்கு எந்த வித ஆடம்பரமும் பிடிக்காது.
அன்னிக்கு கோவிலில் அவருக்குக் கொடுத்த மாலையைக் கூட என் கையில் கொடுத்து விட்டார்.எல்லாமே இறைவன் சித்தம் தான். I have posted in FB many pictures.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, என் நண்பர்கள் அனைவரையும் அழைக்க ஆசைதான். அப்பா மிகவும் கூச்சப் படுவார். இதெல்லாம் வேண்டாத வேலைன்னு உறுமுவார்.

முடிந்தவரை எல்லப் படங்களையும் வலைப்பதிவில் போடப் பார்க்கிறேன்.

மகனுக்கு அப்பா பேரைச் சொன்னாலே துக்கம் தொண்டை அடைக்கிறது.
நேற்று இரண்டு அனுப்பினான். அதைச் சேமித்துப் போடுகிறேன் ராஜா.
இந்த அன்புக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்ல முடியும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஜம்புலிங்கம் ஐயாவுக்கு வணக்கமும் நன்றிகளும்.

KILLERGEE Devakottai said...

மிக்க நன்றி அம்மா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Lovely memories amma. Thanks for sharing. Lost my grandma couple of weeks ago, adhula irundhu veliya varave mudiyala. Loss after loss in the family is just bringing me down.
May be writing like this will make it better, will see :(

வல்லிசிம்ஹன் said...

அன்பு புவன்,
அச்சோ பாவமே. ரொம்பக் கஷ்டம் டா.
ஆனால் உடல் வலி இல்லாமல் ஒரு ஜீவன் பிரிந்தால்
நாம் அவர்களுக்காக்ப் பிரார்த்தனையே செய்ய வேண்டும்.
மனம் ஆறுதல் அடையட்டும். குழந்தை எப்படி இருக்கிறாள்.
உங்களுக்கு என் அன்பும் அரவணைப்பும்.