Sunday, March 03, 2019

ஒரு நல்ல ஆத்மாவுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

என் மாமனார்,மாமியாருக்கு முயன்று பெண்கள் பிறந்த பொது,
மகன் இல்லையே என்ற  கவலை அதிகரித்தது.
தாத்தாவின் சொல்படி  சேது, ராமேஸ்வரம்
சென்று பிள்ளை வரம் கேட்டுவாங்கி    பிறந்த மகன்தான் என் கணவர்.
ஒரு மாசி மாதம்  உத்திராட நக்ஷத்திரமும் சேர்ந்த நாள்.
மார்ச் 5 ஆம் தேதி.

எங்களையும் அரவணைத்துக் கொண்ட அன்பு மாமியாரும் மாமனாரும்.

தேடிக் கண்டு பிடித்து என்னையும்  மருமகளாக ஏற்றுக் கொண்ட பண்பு.

பல பாடங்களைக் கற்றுக் கொடுத்த வாழ்க்கைக்கு காரணமாயிருந்த கூட்டுக குடும்பம்.
இன்னும் அன்பு செலுத்தும்  சகோதரிகளும் ,அவர்கள் குழந்தைகளும். இறைவனுக்கு நன்றி.

என் அருமை சிங்கத்துக்கு இனிய வாழ்த்துக்கள்.

20 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எனது வாழ்த்துகளும்

துரை செல்வராஜூ said...

அன்பில் இணைந்து எல்லாரும் நலமாக வாழ வேணும்...

கோமதி அரசு said...

அன்பான அழகான குடும்பம்.
சாருக்கு வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai said...

அளவான குடும்பம், அன்பான குடும்பம்.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

Thulasidharan V Thillaiakathu said...

அன்பான குடும்பத்திற்கு எங்கள் வாழ்த்துகளும் அம்மா.

காணொளி வேலை செய்யலையே...மீண்டும் பார்க்கிறேன்...

கீதா

Geetha Sambasivam said...

எங்கள் வாழ்த்துகள், அஞ்சலிகள்.

ஸ்ரீராம். said...

சிங்கம் பிறந்த நாளுக்கு என் நமஸ்காரங்கள்.

ஸ்ரீராம். said...

கீதா... படத்துக்கு கீழேயே அம்மா "இது காணொளி இல்லை, கேமிரா பிழை" என்று கொடுத்திருக்கிறார்களே...

வெங்கட் நாகராஜ் said...

சிங்கத்தின் பிறந்த நாள்.... எனது வாழ்த்துகளும் அம்மா...

அனைவரிடமும் அன்பு செலுத்துவோம். மகிழ்ச்சியுடன் இருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா. என்றும் வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,நன்றி ராஜா. என்றும் வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, என்றும் வளமுடன் வாழ்க அம்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, நன்றி ராஜா. அது படம் எடுக்கும் போது
இப்படி வந்தது மா. 1976இல் எடுக்கப்பட்டது.
நான்கு நாத்தனார்கள், இவர்,மாமனார்,மாமியார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி, நீங்கள் அனைவரும் நலமோடு இருக்க
அப்பாவோடு நானும் சேர்ந்து ஆசீர்வதிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். மனம் நிறை ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,, வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா. உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,
உங்க எல்லோரின் அன்பையும் அவர் வரவாகக் கொடுத்திருக்கிறார் மா.
மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,உங்கள் குடும்பமும் தழைத்தோங்க மன்ம் நிறை ஆசிகள்..
மிக நன்றிமா.

Anuprem said...

புன்னகை முகங்களை காணும் போது மிக மகிழ்ச்சி மா...

Asha Bhosle

வல்லிசிம்ஹன் 12th April 2026.  The world lost a glorious voice  which will echoing in our hearts. Rest in Peace,