Blog Archive

Wednesday, March 13, 2019

பாதுகாப்பு

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் .

பெண்களின்  வாழ்வு முறைகளை பேணிக் காத்த பெற்றோரிடமிருந்து

முறையாக மணந்த கணவனின்  வீட்டில்  மகிழ்ந்திருந்த காலம் மாறிப்  பெண்கள் அவர்களுக்கென ஒரு சுதந்திரம் கிடைத்திருப்பது இந்தக் காலம்.

யாரும் விதி முறைகளை மீறாமல் பழகி வரும் வரை பாதகம் இல்லை.
இப்பொழுது நடந்திருக்கும் விபரீதம் பற்றிப் படிக்கவே பதட்டமாக இருக்கிறது.
நிலைமை இவ்வளவு சீரழிய யார் காரணம் என்று பேசி பெண்களைக்  குற்றம் சொல்வதில் லாபம் இல்லை.
எப்பொழுதும் பாதிக்கப் படுவது அவர்கள் தான்.

இவ்வளவு முதுமையிலும் நானே இங்கே வர பயப்பட்டுக் கிடந்தது  இந்தப் பத்து   நாட்களாகக்  கண்கூடாகப்
பாதிக்கப் பட்ட  விஷயம்.
இப்பொழுதும் அந்த ஆபத்து விலகி விட்டதா என்று பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும். அனைவருக்கும்
காரடை நோன்பு நல்வாழ்த்துக்கள்.

27 comments:

வல்லிசிம்ஹன் said...

testing my post

திண்டுக்கல் தனபாலன் said...

அநீதியின் உச்சம்...

வல்லிசிம்ஹன் said...

தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் அசடும் சண்டப் பிரசண்டன் தான் அன்பு தனபாலன்.

//நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி
நான்கு விரல் இடை தூர வழி. சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி.
நம் அரசும் அதே.//

KILLERGEE Devakottai said...

எது எப்படியோ பாதிப்பு பெண்களுக்கு என்று அறிந்த பிறகு சற்று கவனத்தை எடுப்பதில் என்ன கஷ்டம் ?

இன்று 90% பெண்களும் பெற்றோர் சொல்வதை கேட்பதில்லை அம்மா.

Angel said...

நடக்கும் விஷயங்கள் மனதை உடைக்கிறபோலிருக்கு வல்லிம்மா .முகநூலில் அதிகமாக பேசப்பட்டிருக்கும் இச்சம்பவம் என்று நினைக்கிறேன் .இந்த காலத்துபிள்ளைகளின் கட்டுப்பாடற்ற சுதந்திரம் பாதையை maatri வாழ்க்கையை உருக்குலைகின்றது .இறைவன் துணையிருக்கட்டும் எலலாருக்கும் எல்லா ஞானத்தையும் தெளிந்த புத்தியும் கிடைக்கணும் குறிப்பா அவசரப்படும் இளையோருக்கு .

கோமதி அரசு said...

தினம் தினம் நடப்பது , கேட்பது எல்லாம் ஏன் இப்படி? என்ற கேள்வியை எழுப்பினாலும் மனம் கனத்து போகிறது.

இளைய சமுதாயத்திற்கு இறைவன் துணையும், நல்லது கெட்டதை அறியும் தன்மையும் கொடுக்க வேண்டும்.

ஆண்கள் பெண்களை மதித்து வாழ்வதும், பெண்கள் பெற்றோர்கள் தங்களுக்கு கொடுக்கபட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாமலும் இருக்க வேண்டும்.

காலம் மாறுது, கருத்து மாறுது, கோலம் மாறுது கொள்கை மாறுது
நம்மை போன்ற பெரியவர்கள் வீட்டில் அமர்ந்து புலம்ப மட்டுமே முடிகிறது அக்கா.


கோமதி அரசு said...

பெண்களுக்கு நடக்கும் அநீதிக்கு காரணமானவர்களுக்கு தண்டனை அதிகமாக கொடுத்தால் பயம் வரும்.
இது பரந்து விரிந்து போகிறது குற்றம் செய்தவர்கள் எண்ணிக்கை.சிறு குழந்தைகள் கேட்கிறது குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை கொடுக்க வேண்டும் என்று.பிஞ்சு குழந்தைகள் கேட்பது எவ்வளவு கொடுமை.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை கஷ்டங்கள்.... கேள்விப்பட்ட முதல் மனதில் வலி.

குற்றங்களுக்கு தண்டனைகள் சசரியாகவும் விரைவாகவும் அளிக்க வேண்டும். இங்கே பல வழக்குகள் நிலுவையில்.....

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு தேவகோட்டை ஜி.
நஷ்டம் அடையாமல் இருக்கப் பெண்கள் உஷாராகத்தான் இருக்க வேண்டும்.
ஆண்களுக்கும் கருத்தொடு இருக்கக் கற்பிக்கணும்.

கலிகாலம் என்ன செய்வது. எலாம் தலைகீழாகத்தான் இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல், முக நூல முழுவதும் ஆற்றாமைப்படும்
பெண்களின் புலம்பலும், ஆக்க பூர்பவமான சிந்தனைகளும் தான் நிறைந்திருக்கிறது.
ஏழு வருடங்களாக நடக்கிறதாமே.

என்னப்பா நடக்கிறது நம் ஊரில். மனம் நொந்து போகிறது.
கட்டுப்பாடில்லாத வாழ்க்கையாகி விட்டது.

இன்னும் ஜாக்கிரதையாக கவனமாகப் பெண்கள் பழக வேண்டும்.
இறைவனை வேண்டுவதைதவிர வேறு தோன்றவில்லை ராஜா.

வல்லிசிம்ஹன் said...

காலம் மாறுது, கருத்து மாறுது, கோலம் மாறுது கொள்கை மாறுது
நம்மை போன்ற பெரியவர்கள் வீட்டில் அமர்ந்து புலம்ப மட்டுமே முடிகிறது அக்கா//

அன்பு தங்கை கோமதி,
நான் என்ன நினைக்கிறேனோ அதைச் சொல்லிவிட்டீர்கள்.
முள்ளும் சேலையும் கதை நினைவுக்கு வருகிறது. நஷ்டப் படுவது பெண்களே.

மீளாத துன்பத்துக்கு வழி தேடிக் கொண்டார்கள். மீண்டு விடுவார்கள் என்று நம்புவோம்.
அந்தக் குழந்தைகளின் பெற்றோர் நிலை இன்னும் மோசம்.

நடுக்கமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், பெண்குழந்தைகள் தாங்களாகவே உணர்ந்து ஜாக்கிரதையாக
இருக்கவேண்டும். இந்த நிகழ்வைப் பார்த்தாவது பெண்கள் விழிப்புடன் இருப்பார்கள்.

பெற்றோர் அரணாக இருக்க வேண்டும்.
இறைவனிடம் வேண்டிக்கொள்வதும் அதையே.
மன அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை.

ஸ்ரீராம். said...

சிறிய குழந்தைமுதல் வயதான பெண் வரை பாலியல் அநீதி நடந்து கொண்டே இருக்கிறது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் ஒழிய இவை குறையாது.

உங்கள் தளத்துக்கு வர முடிந்திருப்பதில் மகிழ்ச்சி. என்ன மாறுதல் செய்தீர்கள் அம்மா?

Geetha Sambasivam said...

பெண்கள் போராடிப் பெற்ற கட்டுப்பாடற்ற சுதந்திரமே இதற்குக் காரணம். பெற்றோர் தங்கள் பெண்கள் என்ன செய்கின்றனர் என்பதை அறியாமலும் இருந்திருக்கின்றனர். பெண்களின் அதீதமான ஆவல், ஆசை, உற்சாகம் எல்லாமும் காரணம். நீதி போதனைகள், ஒழுக்கக் கட்டுப்பாடு போன்றவற்றைப் பெண்களுக்குச் சிறு வயதிலிருந்தே போதிக்காத பெற்றோரும் முக்கியக் காரணம்.

Geetha Sambasivam said...

எல்லாம் போக நிர்பயா சட்டத்திலேயே பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களுக்கான தண்டனையைக் கடுமையாக்கப்பட்டிருக்கிறது என்பதோடு சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர், படங்கள், உறவினர் படங்கள், குடும்ப விபரங்களை வெளியிடக் கூடாது எனச் சட்டம் இருந்தபோதும் காவல் துறையே பொள்ளாச்சி விஷயத்தில் எல்லாவற்றையும் ஆதியோடு அந்தமாக வெளியிட்டிருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மற்றப் பெண்கள் வெளியே வந்து புகாரை உறுதிப்படுத்த அஞ்சுவதாகச் சொல்கின்றனர். மாநில அரசு இந்த விஷயத்தில் வாய் மூடி மௌனம் சாதிக்கிறது. ஆனால் அந்தக் குறிப்பிட்ட அதிகாரி சும்மாப் பெயரளவுக்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

Geetha Sambasivam said...

உங்கள் தளத்துக்கு இன்று வர முடிந்தது.

கரந்தை ஜெயக்குமார் said...

யாரும் விதி முறைகளை மீறாமல் பழகி வரும் வரை பாதகம் இல்லை

உண்மை
உண்மை

KILLERGEE Devakottai said...

அம்மா நான் ஆண்களிடம் தவறு இல்லை என்று சொல்லவில்லை ஆண் வர்க்கமான நான் சொல்கிறேன் 90% ஆண்கள் தவறு செய்ய தயங்குவதில்லை.
காரணம் அவனுக்கு சுமை கிடையாது

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா உங்கள் தளம் வர முடிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது நடந்த சம்பவம் மிக மிகக் கொடூரமானது. சட்டம் அரபு நாடுகளைப் போல வலுவாக்கப்பட வேண்டும். நீதிக்கு முன் எல்லோரும் சமம் எனும் நிலையும் வர வேண்டும். இது போன்ற குற்றங்களிள் குற்றவாளி யார் என்று தெரிந்ததும் உடனே தண்டனை வழங்க வேண்டும்...இதை கோர்ட் கேஸ் விசாரணை என்று நீட்டிக்கக் கூடாது. அப்படி நீளும் போதுதான் குற்றவாளிகள் தப்பிக்கின்றார்கள்.

துளசிதரன், கீதா

கூடவே பெண்களும் தற்காப்புக் கலைகள் கற்க வேண்டும். தைரியமாக இது போன்றவர்களை எதிர்க்கவும் துணிய வேண்டும். தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், சில வரம்பு மீறிய விஷயங்களைச் செய்யாமலும் இருக்க வேண்டும். என்னதான் பழகிய ஆணாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருத்தல் அவன் கூப்பிட்டான் என்றவுடன் வீட்டிற்குத் தெரியாமல் செல்லுதல் என்பதும் கூடாது என்பதும் வேண்டும். பெற்றோர் வளர்ப்பு, பெற்றோருடன் குழந்தைகள் எவ்வளவு நெருக்கமாக எல்லாம் ஷேர் செய்து கொள்கிறார்கள் எனப்தெல்லாமும் என்று இதில் பேச நிறைய உள்ளது அம்மா. ஏனென்றால் நம் சமுதாயம் அந்த அளவிற்குக் கெட்டுக் கிடக்கிறது டெக்னாலஜி என்பதாலும்....ஒரு போலீஸ் அதிகாரி அழகான விழிப்புணர்வு வீடியோ கூட பேசியிருந்தது வாட்சப்பில் வலம் வருகிறது...

கீதா

Anuprem said...

மிக வருத்தமான செய்திகள் ...

படித்தவர்கள் தானே FB உபயோக படுத்துகிறார்கள் ..அப்படி என்றால் அந்த படிப்புக்கு பயன் ஏது ....

நல் நெறிமுறைகளை கற்று தராத கல்வி ...இருபாலருக்கும்

துரை செல்வராஜூ said...

எத்தனை பார்த்தும் எத்தனை படித்தும் எத்தனை எத்தனை கேட்டும் எள்ளளவும் தற்காப்பு உணர்வு முன்னெச்சரிக்கை உணர்வு இன்றைய பெண்களுக்கு இல்லை என்றால் யார் குற்றவாளி?...

இத்தனை சுதந்திரம் - இப்படியெல்லாம் சீரழிவதற்கா?...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், ஆமாம் கடுமையாகத் தண்டிக்கப் பட்டாலொழிய வழி இல்லை.

எது நடக்குமோ தெரியவில்லை.
என் ப்ளாக் செட்டிங்க்ஸ் மீண்டும் பப்ளிக் என்று மாற்றி இருக்கிறேன்.
அந்த கெடுதலான site ஆடியன்ஸ் பக்கத்தில் வரக்கூடாது என்ற பிரார்த்தனையோடு.
பார்க்கலாம். இதுவும் ஒருவிதமான பலாத்காரம் தான் Against everyone.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. மிக நன்றி
ஆமாம். நீங்கள் சொல்வதுதான் சரியான காரணம்.
யாவருமே பெற்றோர் கண்காணிப்பில் இல்லாத போது
செய்ய வேண்டாத காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.

அதே தைரியத்தோடு வெளி வந்து சொல்ல முடியவில்லை. ப்ளாக்மெயில் செய்யப்படுவதாகச் சொல்லுகிறார்கள்.
நம் சமூகம் இப்படி சிதைக்கப் பட்டிருப்பது இன்னும் எத்தனை இடங்களிலோ.

மோகன்லால் படம் த்ரிஷ்யம் மீண்டும் பார்ப்பது போல இருக்கிறது.
அதிலாவது அந்தப் பெண் ஒன்றுமே அறியாமல் மாட்டிக் கொள்கிறாள்.

இந்த சம்பவத்தில் எல்லாப் பெண்களும் 50 சதவிகிதமாவது
அறிந்தே செயல் பட்டிருக்கிறார்கள்.
என்ன செய்யலாம். இந்த மாதிரி எழுதினால் நமக்குத் தான் பொல்லாப்பு.
எப்படிப் பார்த்தாலும் நஷ்டம் பெண்களுக்கே.
இந்த ஊரிலாவது துடைத்துவிட்டுப் போகும் தைரியம் இருக்கிறது ஒரு 20 சதவிகிதப் பெண்களுக்கு.
ஆனால் ஆணின் அக்கிரமத்துக்கு சிலசமயம் அடி பணிய வேண்டியதும் நடக்கிறது. எதைச் சொல்ல. மன சங்கடம் தான் அதிகம்.

வல்லிசிம்ஹன் said...

அதேதான் நிஜம் தேவகோட்டை ஜி. இருகரம் சேர்ந்தால் ஒலி.
இதில் பாதிக்கப் படப் போவது அதிகம் பெண்களே. நெருப்பில் குளிர்காயலாம். குதித்து விட முடியுமா.

அதுவும் திருமணத்துக்கு முன் ஏன் இந்த கோலம்.
எடுத்துரைக்க முடியாது.
பெண்களைப் புரிந்து கொள்ளவில்லை. பழமைப் பஞ்சாங்கம் என்றெல்லாம் முத்திரை குத்திவிடுவார்கள்.
நீங்கள் சொன்னதில் தவறில்லைமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, அன்பு கீதா,
உண்மைதான். நம்மைச் சுற்றித் தொலைக்காட்சியிலும், சினிமாக்களிலும், ஊடகங்களிலு நல்ல செய்திகளை விட நெகடிவ் வீடியோஸ் நிறைய வருகிறன.
போதாத குறைக்கு, கையில் அலைபேசி. அவ்வப்போது சேதி அனுப்ப.
நம் ஊர் இவ்வளவு மாறியது எப்போது.
நம் குழந்தைகளை அணைத்து வளர்க்கலாம். அவர்கள் மன ஓட்டத்தை,திருப்புவது எப்படி.

வீட்டிலிருக்கும் போதே சதா சர்வ காலமும் எலெக்ற்றானிக்ஸுக்கு அடிமையாகியபடியே வெளியிலும் செல்கிறார்கள்.
80 சதவிகிதப் பெற்றோருக்கு இது தெரிவதில்லை.
பெண்களையே கவனிக்க நமுடியவில்லை என்றால் 25 வயது வாலிபனை யார் கண்டிப்பது.

ஏதோ சினிமா போல காட்சிகள் விரிகின்றன.
இனியாவது மாற்றம் வரட்டும் அம்மா.
அரசு கையில் எடுக்காவிட்டால் விடிவு இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தை ஜெயக்குமார், மனக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் எதுவுமே சாத்தியம் இல்லை இல்லையாப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு, உண்மையே. எப்பொழுதும் அடக்கம் நன்மையே விளைவிக்கும். அளவில்லாத ஆசை, துன்பம் தரும் நம் மக்களுக்கு இதை சொல்லியே வளர்க்க. வேண்டும்.. உணர்வார்கள் என்று நம்பலாம்.