Blog Archive

Saturday, March 16, 2019

நியூ ஸீலாந்து பயங்கர தீவிர வாதத்தால் அமைதிஇழந்த நாள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
நியூ ஸீலாந்து   ,மார்ச் 15 பயங்கர தீவிர வாதத்தால் அமைதி  இழந்த நாள் ,.
நம் பதிவர் துளசி கோபால் அங்கு வசிப்பதால் இந்த பயங்கரம்  உடனே தெரிய வந்தது.

சக மனிதர்களை அழிக்கும் இந்த வெறியை என்னவென்று
சொல்வது.
எனக்குத் தெரிந்த வரையில் மிக்க அமைதி விரும்பும்
மக்களே அங்கே இருக்கிறார்கள்.

இயற்கையிலே  மெதுவாக,அன்புடன் பேசும் மக்கள்.
கோவையில் நாங்கள் இருக்கும் போது ஒரு தம்பதி அங்கே வசித்து வந்தனர்.

என்னுடைய அவசர  மொழிப்  பரிமாற்றத்தை அவர்களால்
புரிந்து கொள்ளவே  முடியாது. .
இருந்தும் ஆறு மாதங்களுக்கு  பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருந்தோம்.
அவர்களுக்குப் பிடித்த காரம் இல்லாத உணவுகளை ஏற்றுக் கொண்டார்கள்.
பதிலுக்கு  மகளுக்கு ஒரு  பச்சை நிற கவுன் ,
பெரியவனுக்கு நல்லதொரு கிரிக்கெட் மட்டை எல்லாம் பரிசாகக் கொடுத்துத் தங்கள் ஊருக்கு கிளம்பினார்கள்.
சின்னவன் அப்போது பிறக்கவில்லை.

இத்தனை சாந்தமான மனிதர்களை பார்த்ததே இல்லை என்று நானும் கணவரும் பேசிக் கொள்வோம்.

அவர்கள் ஊரில் இந்தக் கோரமான நிகழ்வு.
அனைவரும் அதிர்ந்து போயிருப்பார்கள்  என்பதில் ஆச்சரியமென்ன.
கொலை செய்த அந்த வெறியன், ஒரு பயத்தை விதித்துவிட்டான்.
ஆங்காங்கே போலீஸ் காவலோடு மதம் சார்ந்த
அமைப்புகளின்   வாயிலில் நிற்கின்றனர்.

பயம் என்பது என்னவென்றே அறியாத  மக்களிடையே
இது நடந்ததுதான் கொடுரம்.

உலக முழுவதும்  சூறாவளியாகச் சுற்றி வரும் இந்த அராஜகம்.
முடிய வேண்டும் என்று பிரார்த்தனைகளை செலுத்தியபடி அனைவரும் வளமுடன் வாழ இறைவன்  அருள வேண்டிக் கொள்ளலாம்.



18 comments:

ஸ்ரீராம். said...

மிகவும் அமைதியான நாடு என்று பெயர் பெற்ற நாட்டிலேயே பயங்கரவாதம் தலைதூக்கி இருக்கிறது. உலகில் எல்லா இடங்களிலும் பரவும் பயங்கரவாதங்கள் வேரறுக்கப்பட வேண்டும்.

ராமலக்ஷ்மி said...

உலக அமைதிக்காகப் பிரார்த்திப்போம்.

Thulasidharan V Thillaiakathu said...

நானும் பார்த்தேம் வல்லிம்மா. மிக மிக கொடூரமான செயல். பொள்ளாச்சி விஷயம் அதன் முன் என்றால் அடுத்து நியூசிலாந்து அமைதியான நாடு என்று பெயர் பெற்ற நாட்டில் இப்படி என்றால் என்ன சொல்லுவது? தீவிரவாதம் வேரோடு அழிக்கப்பட வேண்டும்.

துளசிதரன்


ஆமாம் வல்லிம்மா மிக மிக மிக அமைதியான நாடு என்று நானும் என் பையனும் இந்தக் கோரச் சம்பவம் நடந்த முதல் நாள் தான் பேசிக் கொண்டிருந்தோம் அந்த நாட்டைப் பற்றி...அவன் தனது வெட்னரி விஷயங்கள் பற்றிப் பேசிய போது நியூசிலாந்து பற்றியும் பேசிய போது இந்தப் பேச்சு. அடுத்த நாள் இப்படியான பயங்கரம்...எனக்கு வாட்சப்பில் வந்தது அதிர்ச்சியாக இருந்தது அதுவும் லைவ் வீடியோ..ஹையோ...மனம் மிகவும் வேதனை அடைந்தது...

இந்த டெரரிஸம் எல்லாம் முழுவதும் களையப்பட வேண்டும்...

கீதா

கோமதி அரசு said...

நிலந்டுக்கத்தால் மட்டுமே உயிர் இழப்பு, பொருள் இழப்பு ஏற்பட்ட நாடு.
இப்போது தான் முதன் முறையாக இப்படி.

குழந்தைகள் முதற் கொண்டு கொல்ல எப்படி மனம் வந்ததோ!

பிராத்தனை கூடத்தில் இறைவன் எப்படி இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்?

உலக அமைதி அடைய வேண்டும். மன அமைதியுடன் எல்லோரும் இருக்க வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் வருத்தம் தந்த சம்பவம். எத்தனை உயிரிழப்பு. என்னத்தை அடையப் போகிறார்கள் அடுத்தவர்கள் உயிரை எடுத்து....

சோகம் தான்.

நெல்லைத்தமிழன் said...

இப்படிப்பட்ட மத வெறியா? ப்ரார்த்தனைக் கூடத்திலா? அங்கு இருந்த இறைவன் அவன் கண்ணுக்குத் தெரியவில்லையா? ஒவ்வொரு குழந்தையும்தானே இறைவனின் பிரதிபிம்பம்.

அதுவும் நியூசிலாந்திலா? உடனடி அதிர்ச்சி (அப்புறம் வெட்கப்பட்ட மனச் சமாதானம், நமக்குத் தெரிந்தவர்கள் அங்கு போயிருக்கமாட்டார்கள், துளசி டீச்சர்/கோபால் சார் நலமுடன் இருப்பார்கள் என்று நினைத்தேன். உடனே அவர்கள் நண்பர்கள் அங்கிருந்திருக்கலாமே என்று மனது கேள்வி எழுப்பியது).

ஒவ்வொரு தீவிரவாதச் செயலும் நாட்டின் ஆன்மாவான சிறுவர்களை உலுப்பக்கூடியது. அந்தக் குழந்தைகள் இதனைக் கடந்து வரணுமே என்று மனதில் நினைத்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இறைவன் இருக்கும் இடத்தில் போய்க் கொல்ல வேண்டுமானால்
என்ன ஒரு வெறி இருக்க வேண்டும். நவீன ஹிட்லர்,முசோலினி வந்து விட்டார்கள்.
இனி இறைவன் அவதாரம் எடுத்தால் தான் இவர்கள் ஒழிவார்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், வீடு,நாடு,உலகம் என்று விவரத்தோடு அவரிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் அம்மா.

Geetha Sambasivam said...

என்ன சொல்வது? அன்று பதறிப்போய் முகநூல் மூலம் துளசியையும், ஜெயஶ்ரீயையும் தொடர்பு கொண்டேன்.ஜெயஶ்ரீ உடனே பதில்கொடுத்தார்.ஆனாலும் யாராக இருந்தாலும் உயிர் உயிர் தானே.அமைதிப் பூங்கா எனப் பெயரெடுத்த ஒரு நாட்டில் இத்தகையதொரு நிகழ்வு அதிர்ச்சியைத் தான் தருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, கீதா,

நேற்று நம் வீட்டுக்கு வந்திருந்தவர்கள் இந்த ஊர்க்காரர்கள். இங்கே இருக்கிற
பெரிய முதலாளியின் கட்சிக்காரர்கள். அவர்கள் பேஷைக்கேட்டால்,வெள்ளைத்தோல் மட்டுமே வாழ முடியும் என்ற ரீதியில் இருந்தது.
எனக்கு இதயமே நொந்துவிட்டது. அவர்கள் 50 வருடங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான்.
என்ன இது அனியாயம்னு மனசு புழுங்கியது.

நான் பதில் சொல்லிவிட்டேன். வெள்ளைத்தோல் காரனை விரட்டிவிட்டு பாரதம் சுதந்திரம் கண்டது. இன்னும் அவன் மோகம் தணியவில்லை ரொம்ப பேருக்கு என்று.

அவர்கள் புரிந்தது போலவே காண்பித்துக் கொள்ளவில்லை.
என்னடா உலகம் இது. கலகத்துக்காகவே இவர்கள் பேசுகிறார்களா.
இல்லை பொழுது போகாமல் பேசுகிறார்களா என்று தெரியவில்லை.
லண்டனிலும் சில நபர்களைப் பார்த்திருக்கிறேன்.
நம் பாரதம் பிழைத்திருக்கும்.நாம் பிரார்த்திப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
அந்த வீடியோவைப் பாதியில் நிறுத்திவிட்டேன்.
இதை எல்லாமெனக்கு அனுப்பாதீர்கள் என்று அனுப்பியவரிடம் கேட்டுக்கொண்டேன். எதையும் தாங்கும் சக்தி இல்லை.
அது நடந்த இடம் இறைவன் சன்னிதி.
சின்னக் குழந்தைகளை எல்லாம் சுட்டிருக்கிறான் அந்த ராட்சசன்.
வயதும் 27 ஓ என்னவோ.
எந்த வேதத்தில் அனுமதி கொடுத்திருக்கிறது இந்த மாதிரி செயலுக்கு.

இனியாவது இது போல நடக்காமல் இருக்க வேண்டும் மா.பிரார்த்திப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,, மனம் ஆறவே இல்லை. இப்படி ஒரு திட்டம் போட எத்தனை வெறி அந்த மனித உடலிலும் மனதிலும் இருந்திருக்க வேண்டும். உலக மக்கள் அனைவரையும் அந்த இறைவன் தான் காக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

மிக உண்மை முரளி மா.
இது நடந்துவிட்டது. இறைவன் சன்னிதானத்தில்.
உயிரோடு இருக்கும் சிறு குழந்தைகளின் மனதில் இது இன்னும் கொடுமையை விளைக்காமல் இருக்க வேண்டுமே.
தந்தை தாயை இழந்தவர்களின் துடிப்பு எத்தனை வேதனை. விழ வாதத்
தை அல்லவா
உற்பத்தி செய்திருக்கிறான் அந்த ஹிரண்யாக்ஷன்.

துளசி சொல்லித்தான் தெரியும். இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா. யாராயிருந்தால் என்ன. உணர்வுகள் ஒன்றுதானே. வன்முறை புகாத பூங்காவாக இருந்த இடத்தில் இது போன்ற நிகழ்வுகள் எல்லோர் மனதிலும் விடைக்கும் சந்தேகங்கள் போக நாட்களாகும்.
பதிலுக்குப் பதில் என்று அவர்கள் ஈடுபட மாட்டார்கள்.
அவ்வளவு நல்ல மனிதர்கள்.
இறைவன் அவர்கள் பக்கம் இருந்து காக்கட்டும் மா.

Angel said...

வருத்தமும் வேதனையும் தந்தது வல்லிம்மா செய்தி பார்த்ததும் .இப்படியும் இருக்கிறார்கள் கேவலமான கொடூரர்கள் .அமைதி பூங்காவை அழவச்சிட்டாங்க .இங்கே அரசல் புரசலா நடப்பது தான் .எல்லாரக்கும் இறைவன் நற்புத்தி தரட்டும் .
வல்லிமா உங்க வீட்டுக்கு வந்த அந்த குடும்பத்தினர் போல் இங்கும் பல வட இந்தியருண்டு.இன வெறி . கிறிஸ்டியனா ஹிந்துவா இல்லை முஸ்லிமானு பார்ப்பதில்லை சில விஷயங்க கேள்விப்பட்டா மனம் வருந்தும் .

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

செய்தி மிகவும் வருத்தத்தை தந்தது. இன வெறி காரணமாக உயிரை பறிப்பது எவ்வளவு வேதனை தரும் விஷயம். கொடுமை.. நெஞ்சில் இரக்கமில்லாத கொடூரர்கள்.. வேறென்ன சொல்வது?

தாங்கள் என் தளம் வந்து அன்பான கருத்துக்கள் சொல்வதற்கு மிகுந்த நன்றிகள் சகோதரி. நானும் கொஞ்ச நாளாக சில காரணங்களால் அனைத்து தளங்களும் வர இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும். இனி தங்கள் வலைத்தளத்திற்கு வருகை தருகிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலா மா.
உங்களைப் போல் அருமையாக எழுதுபவர்கள்
வந்து படிப்பதே எனக்குப் பெருமை.
உங்கள் நிலைமை தெரியும் அம்மா.
முடிந்த போது படியுங்கள் நானும் நிறைய எழுதுவதில்லை மா.

எங்கள் ப்ளாக் வழியே சென்று படிக்கிறேன்.
இந்த கொடுமையான நிகழ்ச்சி மனதை மிகவும் பாதித்தது.
எழுதினேன். அதுவும் என் தோழிகள் இருவர் அங்கிருப்பதால்
பயங்கரம் கூடியது.நன்றி மா.