Blog Archive

Friday, March 22, 2019

ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளியல்

வல்லிசிம்ஹன்

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி,
சன் தொலைக்காட்சியில் நான் கண்ட இரு மனிதர்களை இங்கே பதிவிடுகிறேன்.
இருவரும் தண்ணீரைக் காப்பாற்ற எடுத்து வரும் முயற்சிகள் அற்புதம். தமிழ் நாட்டில் இருப்பவர்கள் ஏற்கனவே கண்டிருப்பீ ர்கள் .
இந்த   ஒளி பரப்பு என்னை மிகவும் பாதித்தது.
தண்ணீர் பலவித்தையிலும் ஏராளமாகச் செலவாகும் இந்த நாட்டில் வளங்களும் அதிகம்.
இவர்களுக்கும் தண்ணீர் பற்றி நம்மளவு கவலை இருக்குமோ எனக்குத் தெரியவில்லை.
 நன் நாட்டு இளைஞர்கள் எடுத்திருக்கும் இம்முயற்சிகள் வளர்ந்து தண்ணீர்ப் பஞ்சம் ஒழிய வேண்டும்.
இறைவனிடம்  பிரார்த்திக்கிறேன்.

12 comments:

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா இனிய காலை வணக்கம்!!!

ஆமாம் தமிழ்நாட்டில் தண்ணீர் கண்டிப்பாகச் சேமிக்க வேண்டும்.

நீங்கள் பார்த்திருப்பீர்கள் தென்னாப்பிரிக்கா கேப் டவுனில் தண்ணீர் ஒரு சில பாட்டில்கள்தான் அதாவது ரேஷனிங்க். அங்கு தண்ணீர் சுத்தமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. மிகவும் கடினமான நாட்களாம்...

அமெரிக்காவிலும் தண்ணீர் சேமிப்பு பற்றிச் சொல்லப்படுவதுண்டு. கலிஃபோர்னியாவில் தண்ணீர் சேமிப்பு பற்றி வாசகங்கள் உண்டு. மட்டுமில்லை அங்கு அபார்ட்மென்ட்களில் தண்ணீரை ரீசைக்கிள் செய்து அதைத்தான் புற்கள், கார்டன் எல்லாவற்றிற்கும் விடுவார்கள் அதுவும் ஸ்ப்ரிங்க் ஃபௌன்டெய்ன், ட்ரிட் இரிகேஷன் மெத்தடில் தான்...அது போல ஸ்னோ இடங்களிலும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். மகன் இருக்கும் இடத்திலும் கூட தண்ணீர் நிறைய இருக்கு என்பதற்காக அதிகமாகச் செலவழிக்காதீர்கள் என்றும் அவர்கள் கல்லூரியில் சொல்லுவதுண்டாம்..

கண்டிப்பாகத் தங்கம் சேமிப்போ இல்லையோ தண்ணீர் சேமிப்பு மிக மிக அவசியம். என் மாமியாரின் அப்பா சொல்லுவாராம் அந்தக் காலத்திலேயே.....தண்ணீரை மட்டா செலவழிக்கணும். அது தங்கம் போலத்தான். கண்டிப்பா எதிர்காலத்துல தண்ணீர் தங்கத்தின் விலையை விட அதிகமாகும் என்று.

கீதா

கோமதி அரசு said...

அருமையான காலத்துக்கு ஏற்ற பதிவு அக்கா, உங்கள் பகிர்வு.
நான் இரவு வைப்பதால் பார்ப்பது இல்லை, ஆனால் இணையத்தில் இடை இடையே இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பேன்.
1,1/2 லிட்டர் தண்ணீரில் சோப் தேய்த்து குளிக்கும் போது ஒரு பக்கெட் தண்ணீர் போதும் தான். ஆனால் மடார் மடார் என்று கப்பால் எடுத்து எடுத்து கொட்டி குளிக்கிறார்கள்.
விழிப்புணர்வு பதிவுதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, இங்கேயும் சில இடங்களில் பார்க்கிறேன். வீடுகளில் தண்ணீர் பில்
அதிகமானால் கௌண்டியிலிருந்து கேட்பார்கள். உங்க பக்கத்து வீட்டுக்காரர்கள் பில்லை விட உங்களுக்கு அதிகமாகிறது என்று.
நம் வழி முறையும் அவர்கள் வழி முறையும் வேறில்லையா.
பாத்திரம் தேய்த்தே தண்ணீர் செலவு அதிகமாகிவிடும்.
எனக்கும் தண்ணீரை வீணாக்க மனசாகாது.
சுற்றி வர இருக்கும் வயல்வெளிகளை அழித்து வீடுகள் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு மாவட்டத்துக்கு ஐந்து பள்ளிகள் என்றால் அத்தனை பள்ளிகளும் நிரம்பி
வழியும்.
நான் இருபது வருடங்களுக்கு முன் பார்த்த அமெரிக்கா இப்போது இல்லை.
நம் ஊரில் நினைக்கவே வருத்தமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,இனிய காலை வணக்கம். அங்கே மதுரையில் தண்ணீர் நிலமை எப்படி இருக்கிறது. வெய்யில் ஆரம்பித்திருக்கும். உண்மையே. ஒரு பக்கெட் தண்ணீர் போதும்.
குவளையில் முகர்ந்து குளித்தால் சிக்கனம் செய்யலாம். ஷவர் தண்ணீர் தேவையில்லாமல் கொட்டிக் கொண்டிருக்கும்.மழை பெய்து நம்மூர் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும். நன்றி மா. வாழ்க வளமுடன்.

ஸ்ரீராம். said...

தண்ணீர் நிலையை நினைத்தாலே மனம் பதறுகிறது. சென்னையை அபாய லிஸ்ட்டில் வைத்து சில வருடங்கள் ஆகின்றன. வீணாகும் தண்ணீரைச் சேமிக்கவேண்டும், சிக்கனமாக இருக்கவேண்டும் என்கிற எண்ணம் இன்னும் பெரும்பான்மை மக்களுக்கு வரவில்லை.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ஸ்ரீராம் , எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் தண்ணீர் வாங்குவதாகச் சொன்னார்கள். நாங்கள் 2017இல் இந்தக் கஷ்டத்தை அனுபவித்தோம்.

அந்த டாங்க் தண்ணீர் அனேகமாக இரவு 12 மணிக்கு மேல் தான் வரும்.
நாம் எழுந்து கதவைத் திறக்காவிடில் வேறு யாருக்காவது விற்றுவிடுவார்.


உண்மையில் நடுக்கமாகத் தான் இருக்கிறது மா.

வெங்கட் நாகராஜ் said...

நீரின்றி அமையாது இவ்வுலகு....

தண்ணீருக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் மக்கள். இராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதி பாலைவனங்களில் இப்படி தண்ணீருக்காக நீண்ட தூரம் நடக்கும் மனிதர்களைப் பார்த்ததுண்டு. இன்னமும் பல கிராமங்களில் சில கிலோமீட்டர்கள் நடந்து சென்று தண்ணீர் சுமந்து வரும் நிலை தான்...

சிக்கனமாக பயன்படுத்துவது தான் சாலச் சிறந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

நிகழ்ச்சியில் அந்தப் பையன் அழுது கொண்டே பேசினது இன்னும் கண்களை விட்டு மறையவில்லை...

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு வெங்கட். ராஜஸ்தான் போன்ற மானிலங்களை நினைக்கும் போது
மனம் மிகப் பதறும். தண்ணீருக்காக அலையும் பெண்கள்.அதல பாதாளத்தில் மண் சரியச் சரிய
நீர் இறைக்கும் கொடுமை. அந்த வெய்யில் எல்லாமே கொடுமை.


கிட்டத்தட்ட அந்தப் பாலைவனத்தின் நிலைமையை சென்னைக்குக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது இந்தத் தண்ணீர் விற்பவர்கள்.
நிலைமை மாறவேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், உண்மையே. அவரின் குழந்தை முகம்
கண்ணில் நிற்கிறது.
எவ்வளவு மனம் நொந்திருக்க வேண்டும்.
இவ்வளவு நேர்மையான முகத்தைப் பார்த்துத்தான் எவ்வளவு நாட்களாகிறது.

அந்தப் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும். புராணங்களில் குற்றமே அறியாத ஒரு பிள்ளைக்காக மழை பெய்தது என்று கதை வரும்.
இந்தக் குழந்தைப் பையனுக்காகவாவது மழை பெய்ய வேண்டும். மிக நன்றி மா.

Bhanumathy Venkateswaran said...

தண்ணீர் சிக்கனம் என்பது நம்மில் பலருக்கும் தெரியாதது. ரயில் பயணங்களில் இதைப் பார்த்தால் மனம் பதறும். நேற்று கோவிலுக்குக் சென்றிருந்தோம் அங்கு சிறிய தொன்னையில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட ஒரு பெண் கை அலம்ப குழாயைத் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக திறந்து விட்டு, தண்ணீரை வீணாக்கினார். என்ன செய்வது?

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா.,சென்னையில் தண்ணீருக்காகப் பட்ட பாடு மறக்கவே இல்லை. இங்கேயும் நான் கட்டுப்பாடாகத்தான் இருக்கிறேன்.

எல்லோருக்கும் கை துடைக்க டிஷ்யு கொடுத்தால் தேவலை.
பேருக்குக் கைகளைக் கழுவி அதில் துடைத்துக் கொள்ளலாம்.

நமக்குப் பிறகு வரும் தலைமுறைக்குத் தண்ணீர் வளம் வேண்டும். பகவான் அருளட்டும் பானு மா.