எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்.1977.
கையில் ஒரு சிறு பெட்டியுடன் நின்று கொண்டிருந்தாள்
லலிதா. அவளை வழி அனுப்ப வந்த அக்கா வசந்தா,
பயப்படாமல் போ.
உன் கல்வி உன்னை எப்போதும் கைவிடாது.
ராமனைப் பற்றிய நினைவுகளை மறக்கச் சொல்லவில்லை. அதை ஒரு துணையாக எடுத்துக்கொள்.
முன்னே போக வேண்டிய பாதைக்கு விளக்காக வைத்துக்கொள்.
திரும்பிப் பார்க்காமல் முன்னேறும் வழியைப் பார்.
கடவுள் முகத்தை முன் பக்கமாகப்
பார்க்கத்தானே வைத்திருக்கிறார்.
அக்காவின் வார்த்தைகளை ஜீரணிக்க முயன்றாள்
லலிதா.
ஒரு மாதமே கடந்திருந்தது, கணவனின் மறைவு நிகழ்ந்து.
நாற்பது வயது மனிதன் அப்படித் திடீ ரென்று மறைய முடியுமா.
நினைத்ததும் கண்ணில் துளிர்த்தது நீர்.
சமாளித்த வண்ணம் திருச்சிக்குச் செல்லும் விமான
அறிவிப்பை எதிர்பார்த்தாள் .
துள்ளித் திரிந்ததொரு காலம் |
போய்க் கொண்டிருந்தாள்.
மாமாவீட்டுக்கு முதலில் சென்று அங்கிருந்து
அவள் படிக்க வேண்டிய பள்ளியின் விடுதியில் சேருவதாக ஏற்பாடு.
தாய் மாமன் சோமு , ,திருச்சி மெயின் கார்டு கேட்டில் ஒரு பெரிய ஆயத்த உடைகள் மற்றும் சூரத் சில்க் புடவைகள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன் தன் தமக்கை முதுமையின் காரணமாக மறைந்ததும் அவள் பெற்ற செல்வங்களை
தனதாகவே நினைத்து அரவணைத்துக் கொண்ட வர் .
அவர் மனைவியும் இசைந்த வாறு நடந்தது அவருக்கு இடையூறு இல்லாமல் தன் வழி நடக்க முடிந்தது.
லலிதாவிற்கு ஒரு சகோதரனும் , ஒரு சகோதரியும்.
அண்ணனுக்கு நல்ல வேலை செய்து வைத்தவரும் மாமா தான்.
அவனும் மாமன் மகளை நேசித்து மணம் முடித்தான்.
அக்கா வசந்தா பெற்றோர் பார்த்து வைத்த சண்முகத்தை
திருமணம் செய்தாள் .
லலிதாவின் திருமணம் காதலித்துச் செய்து கொண்டது.
ராமனின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாமல் நடந்தது.
குழந்தைகளும் பிறக்கவில்லை.பத்து வருட தாம்பத்யம்
இனிதாகத் தான் நடந்தது.
ராமனின் அகால மரணம் அவன் பெற்றோர்களுக்கு
அதிர்ச்சி . ஜாதகம் பார்க்காமல் மணமுடித்தது.
தான் இவ்வாறு நடக்கக் கரணம். லலிதாவுக்கு
அதிர்ஷ்டம் போதாது என்று தீர்மானம்.
எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுத்து அழைத்தது மாமா
சோமு தான். பட்டம் மட்டும் பெற்றிருந்த 32 வயது லலிதாவின் எதிர்காலம் இனி பார்க்கலாம்.
12 comments:
லலிதாவின் எரிர்காலம் நல்லதாகவே இருக்கட்டும்...
மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
சேர்த்த பாடல் சிறப்பு.
தொடரக் காத்திருக்கிறேன் அம்மா.
கதைக்குப் பொருத்தமான பாடலை இணைத்திருக்கிறீர்கள். இதில் இன்னொரு பொருத்தம் என்ன என்றால் நேற்று டி எம் எஸ் அவர்களின் பிறந்த தினம். சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் மறைந்த தினமும் கூட.
லலிதா அவர்களின் எதிர்காலம் மகிழ்வுடனே செல்லவேண்டுமென்று எதிர்பார்த்து தொடர்கிறேன் அம்மா...
அன்பு வெங்கட் ,இனிய காலை வணக்கம் மா. லலிதாவின் எதிர்காலம் நல்லதாகவே இருக்கும்மா.
டி எம் எஸ் அவர்களின் பாடல்கள் எப்பொழுதும் பிடிக்கும். கீழே ஸ்ரீராம் சொல்லி இருப்பதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
நம்பிக்கையே வாழ்வு. மிக நன்றி ராஜா.
அன்பு ஸ்ரீராம்,
சீர்காழியின் பாடலை அடுத்த பதிவில் இணைத்து விடுகிறேன்.
என்ன பொருத்தம் இந்த தினம்.
லலிதாவின் வாழ்வு சிறப்பாகவே இருக்கும்மா.
துன்பப் படுவதே வாழ்க்கை என்று இருக்கக் கூடாது இல்லையா.
நன்றி மா. இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.
அன்பு தேவகோட்டை ஜி. நாம் நல்லதே நினைத்து நம்பிக்கையுடன் இருப்போம். லலிதா மகிழ்ச்சி பெறட்டும்.இனிய நாளுக்கான வாழ்த்துகள் மா.
நல்லதே நடக்கும்...
அழகான ஆரம்பம். லலிதாவின் வாழ்வு நல்லபடியாகத் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. அன்பான மாமா, மாமி கிடைக்க எத்தனைபேருக்கு பாக்கியம் இருக்கும்?!!
பொருத்தமான பாடல் தேர்வு!
அடுத்து என்ன என்பதை அறிய ஆவலுடன் தொடர்கிறோம் அம்மா
துளசிதரன், கீதா
உண்மையே. அன்பு தனபாலன்.எங்கும் நன்மை
துலங்க நாம் நம்பிக்கை வைப்போம்.
அன்பு துளசிதரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
லலிதாவின் வாழ்க்கை வெற்றியை நோக்கி நகரத் தொடங்குகிறது.
அன்பு கீதா.
துள்ளித் திரிந்ததொரு காலம் படம் நன்றாக இருக்கிறது.லலிதாவின் வாழ்வு நல்லபடியாக தொடர வேண்டும்.
லலிதாவின் கல்வி காப்பாற்றும் அவர் அக்கா வசந்தா சொன்னது போல் என்று நினைக்கிறேன்.
லலிதாவின் எதிர்காலம் நல்லபடியாக அமையப் பிரார்த்தனைகள். பாடல் இப்போது கேட்க முடியவில்லை.
Post a Comment