Blog Archive

Tuesday, March 26, 2019

துணிவும் நம்பிக்கையும் தருவாள் பராசக்தி,,,,,,2

வல்லிசிம்ஹன்

லலிதா  விமானத்தில் ஏறியதும் கிளம்பிச் சென்ற  அக்கா வசந்தா   , திருச்சிக்கு தொலைபேசினாள் .
//மாமா, மிக மனம் உடைந்து லலிதா வருகிறாள். அவளைத் தேற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு என்று தழுதழுக்கும் குரலில்  சொன்னவளையும்
ஆறுதல்  கூ றித் தேற்றினார் சோமு மாமா..
நான் பார்த்துக் கொள்கிறேன் மா. நீ  கவலையை விடு
என்றார்.
அருகில்  வந்த மனைவி அழகம்மையிடமும்  சொல்லி இருவரும் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர்.

45 நிமிடங்களில் திருச்சி வந்து சேர்ந்த விமானத்தில் இருந்து இறங்கி மெதுவே நிலைய வாசலை அடைந்த
லலிதா அங்கு நின்ற சிறிய  கூட்டத்தில் மாமாவைக் கண்டு கொண்டாள் .

மீண்டும் ஒரு புது சோகம் அவளை ஆக்கிரமித்தது.
ஒரு புரியாத திகில் சூழ்ந்தது.

என்ன செய்யப் போகிறோம்...இனி இவர்கள் எல்லோரையும் சார்ந்தே வாழ்க்கை அமையுமா.

என் ராமன் ஏன்  மறைந்தார். என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன.

அதற்குள்  மாமி அருகில் வந்து அவளை அனைத்துக் கொண்டார்.
மாமா முதுகில் தட்டிக் கொடுத்தார்.
எல்லாம் சரி செய்யலாம் அம்மா. கலக்கத்துக்கு இடம் கொடுக்காதே.

தைரியம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். நீ படிக்கப் போகும் படிப்பு எத்தனை குழந்தைகளின்  வாழ்வை வளம் செய்யப் போகிறது பார்//என்று அவள்கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றார்.

அண்ணா வரலியா மாமா என்று கேட்டதும், அவன் மதுரைக்கு வியாபார சம்பந்தமாகப் போயிருக்கிறான் அம்மா, இரண்டு நாட்களில் வருவான். உன் அண்ணி இருக்கிறாள்.

நாம் போகலாம் வா என்று காத்திருந்த வண்டியில் அவளை இருக்க வைத்து வண்டி ஓட்ட ஆரம்பித்தார்.

திருச்சி  கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்திருந்த பழைய காலத்து வீடு. முன்னாள்  ஆங்கிலேயர் காலத்து முறையில் வராந்தாவும், கூடங்களும், மாடிப்படிகளும் ,பின்புறம் அமைந்த சமையல் அறையும் ,அதன் பிறகு முற்றம், தோட்டம் என்று  விசாலமாக இருந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் 2 லலிதா.
வெகு நாட்களாகப் பழகிய இடம் அவளுக்கு நிழல் தந்தது.

மகளைத் தேடிய அழகம்மை , பணிசெய்பவரிடம் விசாரித்த பொது சின்னம்மா ஓய்வெடுக்கச் சென்று விட்டதாகச் சொன்னார்.

உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன் லல்லிமா, உங்க அண்ணிக்கு  இன்னும் ஐந்து மாதத்தில்  பாக்கியம் கிடைக்கப்  போகிறது. நீ அத்தையாகப் போகிறாய் என்றதும், மனம் பூரித்தது லலிதாவுக்கு.
வந்ததுமே நல்ல செய்தி சொல்கிறீர்கள் மாமி என்று அணைத்துக்கொண்டாள்  லலிதா.
நீ கீழே எங்கள் அறைக்குப் பக்கத்திலேயே இருந்து கொள்ளம்மா. வா சாப்பிடலாம். இரவாகிவிட்டது பார் என்று அருமையுடன் அழைத்துச் சென்றார் மாமா.







18 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரியாரே

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா லலிதா மாமாவின் வீட்டிற்கு வந்தாச்சு இனி அவர்கள் வழிகாட்டலில் நல்லதே நடக்கட்டும். அந்த வீட்டில் ஒரு குழந்தையும் வரப் போகிறது!!! நல்லதே நடக்கும்.. தொடர்கிறோம்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பாடல்கள்!! மிகவும் பிடித்த பாடல்கள் அம்மா! என்ன கணீர் குரல்...தமிழ் உச்சரிப்பு!

கீதா

KILLERGEE Devakottai said...

வாழ்க்கையின் மறுபக்க ஓட்டம் நலமாக அமையட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல் அம்மா...

கோமதி அரசு said...

கதை அருமையாக போகிறது.
ஆடி பெருக்கு பாடல் அருமை.
நடந்தாய் வாழி பாடல் அருமை.

லலிதாவிற்கு ஆறுதல் தரும், குழந்தையின் மழலை மன மாற்றத்தை தரும்.

Geetha Sambasivam said...

நல்ல ஓட்டம். அருமையாகப் போகிறது. அண்ணியும் நாத்தனாரை வரவேற்பவளாக அமையணும்! பிறக்கப் போகும் குழந்தை லலிதாவின் துயரத்தைக் குறைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தையாருக்கு வணக்கம். காவிரி வந்து வறட்சி போகட்டும் என்றே பாடல்களை வைத்தேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. நல்லவர்களிடம் இருக்கும் போது நன்மையே எதிர்பார்க்கலாம்.
லலிதாவின் வாழ்வும் செழிக்கத்தான் போகிறது.நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி.

என்னாளும் எல்லோருக்கும் நலம் பெருகட்டும் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. இந்தப் படத்தை 1963இல் திண்டுக்கல்லில்
இருக்கும் போது ஒரு ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கன்று
பார்த்தேன். அப்போது மனதில் படிந்த பாடல். சீர்காழியின் தமிழுக்கும் குரல் வளத்துக்கும் கோடி கொடுத்தாலும் போதாது.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், நமக்குத் தேவையான தண்ணீர் ஆதாரம்
இந்தக் காவிரித்தாய் கொண்டு வரட்டும்.
சீர்காழியின் தமிழ் மனதுக்கு வலிமை தரும். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, இசை நம் வாழ்வுக்கு ஆதாரம்.
அதுவும் நல்ல பாடல்கள் வளம் கொடுக்கும். லலிதாவின்
வாழ்வும் நலமடையட்டும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா. என்னதான் மாமாவின் வீடு என்றாலும் அங்கிருப்பவள்
ஆதரவும் கட்டாயம் வேண்டும். அது லலிதாவுக்குக் கிடைக்க வேண்டும்.

எது வந்தாலும் எதிர்கொள்ளும் திறன் பெண்களுக்கு இயற்கையாக அமைவது தானே.
அதன்படி வாழ்க்கை.
குழந்தையின் வரவு அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம். மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

​நல்ல மனிதர்கள் நடுவே வந்துவிட்டால் போதும். உறவுகளிலும் உண்மையானவர்கள் அமையவேண்டுமே...

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் வெங்கட். நன்மையை நாடியே செல்வோம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் . உண்மை உறவுகள் எப்பொழுதும் தேவை.
நாம் நன்மையைத் தேடுவோம்.