Blog Archive

Wednesday, March 27, 2019

அன்னை காட்டும் வழி...3

வல்லிசிம்ஹன்,
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

அன்று இரவு தூங்கப் போவதற்கு முன் லலிதா ஹோலிகிராஸ்  ஆசிரிய பயிற்சிப் பள்ளியில்  சேருவதாக  முடிவெடுக்கப் பட்டது. அடுத்த நாள் காலை மாமாவும் லலிதாவும், அங்கே சென்று பார்க்க ஏற்பாடுகளை மாமா செய்துவிட்டே  படுத்துக் கொண்டார்.





அடுத்த நாள்  விடிந்தது. இரவு படுக்கப்போகும் முன் தன்  கணவனை நினைத்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவள்  அக்கா சொன்ன அறிவுரை நினைவுக்கு வர
தேற்றிக் கொண்டாள் . அம்மா எப்பொழுதும் வணங்கும் திருவானைக்காவல் அகிலாண்டேச்வரித்தாயை
 மனமார  நினைத்து உறங்கி விட்டாள் .

காலையில்  மனம் சோர்வடையாமல் முகம் ,கழுவிக் குளித்துவிட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய நல்ல வங்காளக் காட்டன் புடவையை ,மடிப்புக் கலையாமல் கட்டிக்க கொண்டு, பூஜை மணி ஓசை வரும் திசையில் நடந்து தெய்வப் படங்கள் மாட்டி இருக்கும் அறைக்கு வந்தாள் .
அமைதியுடன் உட்கார்ந்திருந்த அழகம்மா அவளைக் கைப்பிடித்து உட்கார வைத்து நெற்றியில் திருநீறு அணிவித்தாள் .

சிறிது யோசனைக்குப் பிறகு  விளக்கில் நுனியில் ஒட்டி இருக்கும்  கரையிலிருந்து குழைத்து ஒரு கறுப்புப் பொட்டையும் நெற்றியிலிட்டாள் .

மீண்டும் எட்டிப்பார்க்க நினைத்த கண்ணீரை விழுங்கியபடி மாமியையும் மாமாவையும் வணங்கினாள்  லலிதா
எதுவுமே தப்பில்லை லல்லி, மனம் நேராக இருந்தால்  போதும். நீ போய் உன் காலை  பலகாரத்தை முடித்துக் கொள்  . நாம் கிளம்பவேண்டும்.

அறையை விட்டுத் தெளிந்த மனத்தோடு வந்த லலிதா, சாப்பிடும் அறைக்குச் சென்று ,சமையல் செய்யும் சீதை அம்மாவையும்  சந்தித்தாள் . வெகு நாட்களாகப் பணிபுரியும்
அந்த அம்மாவும் லலிதாவை அன்புடன் தழுவி கன்னத்தில் முத்தமிட்டார்.
பாப்பா நல்லா சாப்பிடு. அப்பத்தான் தெம்பு வரும் ,என்று சொல்லி நிமிர்ந்தவள் உள்ளே வந்து கொண்டிருந்த , சாந்தாவை அழைத்து, லல்லி பாப்பா வந்திருக்கு கண்ணு. நீயும் வா என்றாள் .


உள்ளே வந்த சாந்தாவைக் கண்டு மகிழ்ச்சிப் புன்முறுவல் பூத்தாள் லல்லி.

ஸீதாம்மா எனக்கு தலை சுற்றலாக இருக்கிறது நான் என் அறையில் இருக்கிறேன், நீங்கள் ஹார்லிக்ஸ் மட்டும் கொண்டு வாருங்கள் என்றபடி லல்லியிடம் வா லல்லி என்று ஒரு சொல்லோடு வெளியே போய்விட்டாள்.


பாவம் மசக்கை இன்னும் விடவில்லை நீ சாப்பிடம்மா என்று,மணக்க,மணக்க இட்டிலி, மிளகாய்ப் போடி,சட்டினி இவைகளை  மேஜையில் வைத்து லல்லியை அமரவைத்து சாப்பிடம்மா. இதோ வரேன் என்று வெளியே போனார்.

அந்நேரம் மாமா,மாமி வரவும்  தன திகைப்பை மறைத்துக் கொண்டு  சாப்பிடத்  துவங்கினாள்  லல்லி.

சாந்தாவைப் பாத்தியாம்மா என்ற மாமாவிடம் பார்த்தேன் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக், கை  கழுவ எழுந்தாள்.

நீ உன் கல்லூரி  சான்றிதழ்களைத் தயாராக வைத்திரு அம்மா.
அங்கிருக்கும் மதர் சுப்பிரியர் எனக்கு மிக வேண்டப்பட்டவர்.
அங்கு சேருவதில் பிரச்சினை இருக்காது.

வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிடலாம். தைரியமாக இரு. ஒரு வருடம் ஓடிவிடும்.
பிறகு எங்க லலித்தாக்குட்டி 6ஆம் வகுப்பு ஆசிரியை ஆகிவிடுவாள் . சரிதானே  அம்மா  என்றார் மாமா.

ஆமாம் மாமா, என் முழு முயற்சியும் இந்தப் படிப்பில் செலுத்துவேன் .இனி என் ஆதாரம்  கல்வி ஒன்றே என்றாள்
லலிதா.

சரியாக ஒன்பது மணி அளவில் ஹோலிகிராஸ்  பயிற்சிக்கூட வாசலில் நின்றார்கள் மாமாவும் மருமகளும்.







16 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதே நடக்கட்டும்....

ஸ்ரீராம். said...

வேலை கிடைக்கட்டும். மனம் வேறு விஷயங்களில் பரவட்டும். எம் கே டி பாடல் அருமையான பாடல்.

கோமதி அரசு said...

அருமையான பாட்டு.
அழகான நடையில் கதை.
லலிதாவிற்கு நல்லது நடக்க வேண்டும்.
சாந்தாவிற்கு லலிதாவின் வரவு பிடிக்கவில்லையோ?

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லது நடக்கட்டும்
அருமையான பாடல்
நன்றி சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் said...

கல்வி நல்லதொரு நம்பிக்கை கொடுக்கும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசிக்கும்படியான பாடல்.

Thulasidharan V Thillaiakathu said...

சாந்தாவிற்கு ஏதோ விருப்பமில்லை போலும்...சரி என்ன காரணம்? லலிதாவின் வரவு? அவளது பெற்றோர் வீடுதானே?! எதுவாக இருந்தாலும் நல்லதே நடக்கும். குடும்பம் என்று இருந்தால் அப்படியும் இப்படிய்ம்தானே இருக்கும்..

கீதா

Geetha Sambasivam said...

சாந்தா தான் தொல்லை கொடுப்பாள் என எதிர்பார்த்தேன். போகட்டும். லலிதாவின் சகோதரனாவது ஆதரவாக இருப்பான் என நம்புவோம். சாந்தாவின் பெற்றோராக இருந்தாலும் மாமன், மாமியின் பரிவு நெஞ்சைத் தொடுகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் , வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி.
நல்லவையே எதிர்பார்ப்போம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு ஸ்ரீராம். திட மனம் கொண்டவள் தான் லலிதா.
ஆசிரியர் பயிற்சியில் மனம் சென்றால்
அதுவும் அந்த மாதிரி கண்டிப்பான சூழ்னிலையில் அவள் மேலும் திடம் பெறுவாள். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

வாழ்க வளமுடன் கோமதி. லலிதாவுக்கு மன திடம் உண்டு.
அவளுக்கு நலங்களை அளிக்கக் கடவுள் நம்பிக்கை இருந்தது. இப்போது சாந்தாவிடமிருந்து வரும் எதிர்ப்பையும் அவள்
சமாளிக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

நம் நம்பிக்கையே நம்மை வாழவைக்கும் அன்பு கரந்தையாரே. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், அதுதான் நமக்குப் பெருமை. நம் அறிவுக்கண்ணைத் திறந்து விடும் கல்வியே என்றும் ஆதாரம். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் முனைவர் ஐயா. அந்தக் குரலும் அதில் இழைந்தோடும் பக்தியும் நம் வாழ்வின் ஆதாரம். நன்றி ஐயா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, சாந்தாவின் பெற்றோருக்கு அவள் ஓரே பெண்.
இப்பொழுது பங்கு போட இவள் லலிதா,அதுவும் கணவன் இழந்தவளாக
வந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை அம்மா. வருத்தம் தரும் விஷயம் தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
எல்லாக் குடும்பங்களிலும் துக்கம் வேறு வேறு அவதாரம் எடுக்கிறது. சாந்தாவுக்கு ,லலிதா இங்கேயே தங்கப் போகிறாள் என்ற நினைப்பு அவ்வளவு உகப்பாக இல்லை.
பார்க்கலாம். லலிதா எப்படி மீள்கிறாள் என்று.