Sunday, March 24, 2019

துணிவும் நம்பிக்கையும் வேண்டும் பராசக்தி

வல்லிசிம்ஹன்,

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம்.1977.

கையில்  ஒரு சிறு பெட்டியுடன்  நின்று கொண்டிருந்தாள்
லலிதா. அவளை  வழி அனுப்ப வந்த அக்கா வசந்தா,
பயப்படாமல் போ.
உன் கல்வி உன்னை எப்போதும் கைவிடாது.

ராமனைப் பற்றிய நினைவுகளை மறக்கச் சொல்லவில்லை. அதை ஒரு துணையாக எடுத்துக்கொள்.
முன்னே போக வேண்டிய பாதைக்கு விளக்காக வைத்துக்கொள்.
திரும்பிப் பார்க்காமல் முன்னேறும் வழியைப் பார்.

கடவுள் முகத்தை முன் பக்கமாகப்
  பார்க்கத்தானே வைத்திருக்கிறார்.

அக்காவின்  வார்த்தைகளை  ஜீரணிக்க முயன்றாள்
லலிதா.
ஒரு மாதமே கடந்திருந்தது, கணவனின்  மறைவு நிகழ்ந்து.
நாற்பது வயது மனிதன் அப்படித் திடீ ரென்று மறைய முடியுமா.
நினைத்ததும் கண்ணில் துளிர்த்தது நீர்.

சமாளித்த வண்ணம்  திருச்சிக்குச் செல்லும் விமான
அறிவிப்பை  எதிர்பார்த்தாள் .




துள்ளித் திரிந்ததொரு  காலம் 
திருச்சியில்  ஆசிரியைகளுக்கான பயிற்சி  எடுத்துக் கொள்ளப் 

 போய்க் கொண்டிருந்தாள்.
மாமாவீட்டுக்கு   முதலில் சென்று அங்கிருந்து 
அவள் படிக்க வேண்டிய  பள்ளியின் விடுதியில் சேருவதாக ஏற்பாடு.

தாய் மாமன் சோமு ,  ,திருச்சி மெயின் கார்டு கேட்டில்  ஒரு பெரிய ஆயத்த உடைகள்  மற்றும் சூரத் சில்க் புடவைகள் விற்கும்   கடை ஒன்றை நடத்தி வந்தார்.
 இரண்டு  வருடங்களுக்கு  முன்  தன்  தமக்கை  முதுமையின் காரணமாக மறைந்ததும்  அவள்  பெற்ற  செல்வங்களை 
தனதாகவே நினைத்து அரவணைத்துக் கொண்ட வர் .
அவர் மனைவியும் இசைந்த வாறு  நடந்தது அவருக்கு இடையூறு  இல்லாமல் தன்  வழி நடக்க  முடிந்தது.

 லலிதாவிற்கு ஒரு சகோதரனும் , ஒரு சகோதரியும்.

அண்ணனுக்கு நல்ல வேலை  செய்து வைத்தவரும் மாமா தான்.

அவனும் மாமன் மகளை நேசித்து மணம் முடித்தான். 
அக்கா  வசந்தா   பெற்றோர் பார்த்து வைத்த  சண்முகத்தை 
திருமணம்  செய்தாள் .

லலிதாவின் திருமணம்  காதலித்துச்  செய்து கொண்டது.

ராமனின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாமல் நடந்தது.

குழந்தைகளும்  பிறக்கவில்லை.பத்து வருட  தாம்பத்யம் 

இனிதாகத்  தான் நடந்தது.
ராமனின்  அகால மரணம்  அவன் பெற்றோர்களுக்கு 
அதிர்ச்சி . ஜாதகம் பார்க்காமல் மணமுடித்தது.
தான்  இவ்வாறு நடக்கக் கரணம். லலிதாவுக்கு 
அதிர்ஷ்டம் போதாது என்று தீர்மானம்.

எதிர்காலத்தைப் பற்றி  முடிவெடுத்து  அழைத்தது  மாமா 
சோமு  தான். பட்டம் மட்டும் பெற்றிருந்த  32 வயது லலிதாவின் எதிர்காலம்  இனி பார்க்கலாம்.





Friday, March 22, 2019

ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளியல்

வல்லிசிம்ஹன்

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி,
சன் தொலைக்காட்சியில் நான் கண்ட இரு மனிதர்களை இங்கே பதிவிடுகிறேன்.
இருவரும் தண்ணீரைக் காப்பாற்ற எடுத்து வரும் முயற்சிகள் அற்புதம். தமிழ் நாட்டில் இருப்பவர்கள் ஏற்கனவே கண்டிருப்பீ ர்கள் .
இந்த   ஒளி பரப்பு என்னை மிகவும் பாதித்தது.
தண்ணீர் பலவித்தையிலும் ஏராளமாகச் செலவாகும் இந்த நாட்டில் வளங்களும் அதிகம்.
இவர்களுக்கும் தண்ணீர் பற்றி நம்மளவு கவலை இருக்குமோ எனக்குத் தெரியவில்லை.
 நன் நாட்டு இளைஞர்கள் எடுத்திருக்கும் இம்முயற்சிகள் வளர்ந்து தண்ணீர்ப் பஞ்சம் ஒழிய வேண்டும்.
இறைவனிடம்  பிரார்த்திக்கிறேன்.

Saturday, March 16, 2019

நியூ ஸீலாந்து பயங்கர தீவிர வாதத்தால் அமைதிஇழந்த நாள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
நியூ ஸீலாந்து   ,மார்ச் 15 பயங்கர தீவிர வாதத்தால் அமைதி  இழந்த நாள் ,.
நம் பதிவர் துளசி கோபால் அங்கு வசிப்பதால் இந்த பயங்கரம்  உடனே தெரிய வந்தது.

சக மனிதர்களை அழிக்கும் இந்த வெறியை என்னவென்று
சொல்வது.
எனக்குத் தெரிந்த வரையில் மிக்க அமைதி விரும்பும்
மக்களே அங்கே இருக்கிறார்கள்.

இயற்கையிலே  மெதுவாக,அன்புடன் பேசும் மக்கள்.
கோவையில் நாங்கள் இருக்கும் போது ஒரு தம்பதி அங்கே வசித்து வந்தனர்.

என்னுடைய அவசர  மொழிப்  பரிமாற்றத்தை அவர்களால்
புரிந்து கொள்ளவே  முடியாது. .
இருந்தும் ஆறு மாதங்களுக்கு  பக்கத்துப் பக்கத்து வீட்டில் இருந்தோம்.
அவர்களுக்குப் பிடித்த காரம் இல்லாத உணவுகளை ஏற்றுக் கொண்டார்கள்.
பதிலுக்கு  மகளுக்கு ஒரு  பச்சை நிற கவுன் ,
பெரியவனுக்கு நல்லதொரு கிரிக்கெட் மட்டை எல்லாம் பரிசாகக் கொடுத்துத் தங்கள் ஊருக்கு கிளம்பினார்கள்.
சின்னவன் அப்போது பிறக்கவில்லை.

இத்தனை சாந்தமான மனிதர்களை பார்த்ததே இல்லை என்று நானும் கணவரும் பேசிக் கொள்வோம்.

அவர்கள் ஊரில் இந்தக் கோரமான நிகழ்வு.
அனைவரும் அதிர்ந்து போயிருப்பார்கள்  என்பதில் ஆச்சரியமென்ன.
கொலை செய்த அந்த வெறியன், ஒரு பயத்தை விதித்துவிட்டான்.
ஆங்காங்கே போலீஸ் காவலோடு மதம் சார்ந்த
அமைப்புகளின்   வாயிலில் நிற்கின்றனர்.

பயம் என்பது என்னவென்றே அறியாத  மக்களிடையே
இது நடந்ததுதான் கொடுரம்.

உலக முழுவதும்  சூறாவளியாகச் சுற்றி வரும் இந்த அராஜகம்.
முடிய வேண்டும் என்று பிரார்த்தனைகளை செலுத்தியபடி அனைவரும் வளமுடன் வாழ இறைவன்  அருள வேண்டிக் கொள்ளலாம்.



Wednesday, March 13, 2019

பாதுகாப்பு

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் .

பெண்களின்  வாழ்வு முறைகளை பேணிக் காத்த பெற்றோரிடமிருந்து

முறையாக மணந்த கணவனின்  வீட்டில்  மகிழ்ந்திருந்த காலம் மாறிப்  பெண்கள் அவர்களுக்கென ஒரு சுதந்திரம் கிடைத்திருப்பது இந்தக் காலம்.

யாரும் விதி முறைகளை மீறாமல் பழகி வரும் வரை பாதகம் இல்லை.
இப்பொழுது நடந்திருக்கும் விபரீதம் பற்றிப் படிக்கவே பதட்டமாக இருக்கிறது.
நிலைமை இவ்வளவு சீரழிய யார் காரணம் என்று பேசி பெண்களைக்  குற்றம் சொல்வதில் லாபம் இல்லை.
எப்பொழுதும் பாதிக்கப் படுவது அவர்கள் தான்.

இவ்வளவு முதுமையிலும் நானே இங்கே வர பயப்பட்டுக் கிடந்தது  இந்தப் பத்து   நாட்களாகக்  கண்கூடாகப்
பாதிக்கப் பட்ட  விஷயம்.
இப்பொழுதும் அந்த ஆபத்து விலகி விட்டதா என்று பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும். அனைவருக்கும்
காரடை நோன்பு நல்வாழ்த்துக்கள்.

Wednesday, March 06, 2019

நினைவுகளின் நிழல்கள்

வல்லிசிம்ஹன்  நினைவுகளின் நிழல்கள்
with his best friend my brother Murali.
His last picture.
சில நினைவுப் படங்கள் . நெல்லைத்தமிழன், கீதா ரங்கன்.

Monday, March 04, 2019

சிங்கம் 70 , 2010

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

2010 ஆம் வருடம்  இவருக்கு 70 வயது பூர்த்திக்கு,
எல்லோரும் பீம ரத  சாந்தி செய்ய வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தினார்கள். பையன்கள்  இருவரும் ,துபாய் மருமகள் பேத்தி வந்தாச்சு.

இவர் அசைந்து கொடுத்தால் தானே.
வேண்டாம்மா
இதெல்லாம் அனாவசியம்.னு மறு த்துக் கொண்டே இருந்தார்.
 அவருடைய ஜிம்  தோழர்கள் ஆன்ட்டி , அங்கிளுக்கு  ஒரு பார்ட்டியாவது நீங்க கொடுக்கணும் என்று ஒரே வற்புறுத்தல் . அத்தனை பேருக்கும் வீட்டில் இடம் செய்ய முடியாது.
நம் வீட்டில்  இடம் போதாது . யோசித்துப் பார்த்ததில், நம் வீட்டுத் திருமணங்கள்  சில நடந்த வுட்லன்ட்ஸ் நினைவுக்கு வந்தது.
உறவுகள்,நண்பர்கள் அனைவர்களுக்கும் பிருந்தாவன்  ஹால் இடம் கொடுக்கும் என்று தீர்மானித்து  உடனே சென்று பதிவு செய்துவிட்டேன். ஒரு அறுபது பேருக்கு மத்திய உணவு மெனு தயாரானது.
அது மட்டும் போதாது என்று தோன்றவே, என் நல்ல தோழரான ஸ்ரீராம் டிராவல்ஸ்  ஷங்கரிடம், ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் சர்க்கரைப் பொங்கலுக்கு ஏற்பாடு செய்ய உதவி கேட்டேன்.

அவரும் அங்கு தொடர்பு கொண்டு,அவர்களிடம் நான் வருவத்தைச் சொன்னார்.
அப்படியே மூலவருக்கு  தோளிலிருந்து தரை வரை தொங்கும் நிலமாலையும்   சொல்லிவிட்டேன்.
திருக்கோவிலுக்குச் சென்று  பணம் கட்டிவிட்டு வந்ததும்தான் நிம்மதி.

நம் துளசியும் கோபாலும் அப்போது சென்னையில் இருந்தார்கள்.
அவர்களையும் சேர்த்துக் கொண்டேன், தம்பி,அவன் குடும்பம், நாத்தனார்கள்  அவர்கள் குடும்பம், நண்பர்கள் அவர்கள் குடும்பம் என்று அவருக்கு மனதுக்கு  இனியவர் சேர்ந்ததும் தான் ஐயா முகத்தில் சிரிப்பு  வந்தது.
மாலை போடக்கூடாது என்று கண்டிப்பாக ஆர்டர்.

எனக்கு எவ்வளவு இதெல்லாம் பிடிக்குமோ  அதற்கு ஜஸ்ட் எதிர்  இவர்.

நான் நிறைய புடவைகள் வாங்கி கொண்டேன். 😃?😃😃😃😃😃😃😃

நல்ல படியாக 70 ஜக் கண்டோம். இறைவனுக்கு நன்றி.

Sunday, March 03, 2019

ஒரு நல்ல ஆத்மாவுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

என் மாமனார்,மாமியாருக்கு முயன்று பெண்கள் பிறந்த பொது,
மகன் இல்லையே என்ற  கவலை அதிகரித்தது.
தாத்தாவின் சொல்படி  சேது, ராமேஸ்வரம்
சென்று பிள்ளை வரம் கேட்டுவாங்கி    பிறந்த மகன்தான் என் கணவர்.
ஒரு மாசி மாதம்  உத்திராட நக்ஷத்திரமும் சேர்ந்த நாள்.
மார்ச் 5 ஆம் தேதி.

எங்களையும் அரவணைத்துக் கொண்ட அன்பு மாமியாரும் மாமனாரும்.

தேடிக் கண்டு பிடித்து என்னையும்  மருமகளாக ஏற்றுக் கொண்ட பண்பு.

பல பாடங்களைக் கற்றுக் கொடுத்த வாழ்க்கைக்கு காரணமாயிருந்த கூட்டுக குடும்பம்.
இன்னும் அன்பு செலுத்தும்  சகோதரிகளும் ,அவர்கள் குழந்தைகளும். இறைவனுக்கு நன்றி.

என் அருமை சிங்கத்துக்கு இனிய வாழ்த்துக்கள்.

சுதந்திரம் அடைய என்ன தேவை?

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...