Blog Archive

Thursday, May 31, 2018

வாழ்க்கையின் குரல் கதை வந்த விதம் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  வாழ்க்கையின் குரல் கதை வந்த விதம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  உண்மையில் நடந்த சம்பவம் ,சில நாட்களாக
இல்லை இல்லை பல நாட்களாக
உறுத்திய சின்னமுள்.
பலவீனமாக மதிக்கப் பட்ட பெண், பலம் உள்ளவனாக உணரப்பட்ட ஆண்,
 இருவரில் உண்மையில் யாருக்கு மன் உறுதி இருந்தததோ அவர்கள்
வளைந்து கொடுக்க, அதற்குப் பிறகு மனம் திருந்திய கணவன்.

இந்தக் கதையை முக நூலில் பதியவில்லை.
அந்த அளவு பொறுமை அங்கே படிப்பவர்களுக்கு இருக்குமா
என்று சோதிக்க எனக்குத் தெம்பில்லை.

மகள் இடைவிடாது கணினி முன் உட்கார்ந்திருப்பதைக்
கண்டிக்க ஆரம்பித்துவிட்டாள்.
இத்தனைக்கும்  6 மணி நேரம் சேர்ந்தாற் போல் இங்கே உட்காருவதில்லை.

படித்துக் கருத்து சொல்பவர்கள் அத்தியந்த நட்புகளே.
நான் ஒருவரது பதிவுக்கும் போவதில்லை. பின் அவர்கள் எப்படி
 இங்கு வருவார்கள் ஹாஹா.
இல்லை இதை எழுத வேண்டிய அவசியம் அதைத் தாண்டியது.
 இந்தக் கதையின் நாயகனும் நாயகியும் இப்போது
ஒன்று சேர்ந்துவிட்டார்கள். கிட்டத்தட்ட ஆறு வருடப் பிரிவு.
கடல் கடந்து சென்ற கதையின் நாயகன், பொருள் ஈட்டிய பிறகே
 மீண்டும் வந்தான். முற்றும் திருந்தியவனாக
மனதில் அன்பு நிறைந்தவனாக மூத்த மகளுக்குத் திருமணம் செய்யும் தகுதியோடு
வந்துவிட்டான்.
அந்தத் திருமணப் பத்திரிகை, இந்தக் கதையைத் தைரியமாக
எழுதலாம் என்று அச்சாரம் கொடுத்தது.

கடைசி முடிச்சுகள் அடுத்த அத்தியாயத்தில் அவிழ்ந்துவிடும்.
 இது அல்லாமல், சூதிலோ,குடியிலோ , பெண்மோகத்திலோ
ஆட்பட்ட  குடும்பங்கள் எத்தனையோ. முன்பே சொல்லி இருப்பேன். ஒரு டி அடிக்ஷன் செண்டரில் சில காலம் ஒரு மனோ வைத்திய நிபுணருக்கு
பார்ட் டைம்  உதவியாளராகச் சில மாதங்கள்
வால்ண்டியராக இருந்த  நிகழ்வைப் பற்றி.
 கேட்கவே குலை நடுங்கும் அந்தக் குமுறல்கள்.
தாங்கிக் கொள்ள சக்தி இல்லாதததால் வெளி வந்து விட்டேன்.
1981 அந்த வருடம். இன்னும் மறக்க முடியவில்லை.
இந்தக் கதை அதன் வடிகால். இனி எல்லாம் சுபமே.
Add caption

வாழ்க்கையின் குரல் 10

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   சுந்தரம் வீட்டை அடைந்ததும், நல்லசிவம் கேட்டைத் திறந்தார்.
சீக்கிரம் வந்துவிட்டீர்களே என்றவனிடம்,
அம்மா சொல்லிவிட்டாங்க பக்கத்து வீட்டுக்கு
ஃபோன் வந்தது. அங்கே காவலிருக்க என் தம்பியைப் போகச் சொல்லிவிட்டேன்.

இங்கே வீட்டைச் சுத்தம் செய்ய ,துணிகளைக் கவனிக்க,
இங்கேயே  சமைத்துக் கொடுத்துக் காவல் இருக்கச் சொன்னார்கள்.
என் மனைவி இங்கு வந்து சமைத்துக் கொடுப்பாள்.
தம்பிக்குக் கவலையில்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

சுந்தரத்துக்குக் கண்ணில் நீர் துளித்தது. நல்லசிவம் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்த உதவிக்கு என்ன கைமாறு செய்ய முடியும்.
சரி உங்கமனைவியை அழைத்து வாருங்கள், நான் வெளியே
போய் வரேன் என்றான்.
சரஸ்வதி என்று குரல் கொடுத்தார் நல்லசிவம்.
வாசலில் நின்ற அவர் மனைவி உள்ளே வந்தார்.
ஐயா வணக்கம் .நீங்க கிளம்புங்கோ வந்து சாப்பிடலாம்
என்று சொன்னாள்.
சுந்தரத்துக்கு தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை.
வெகு தெளிவான மன நிலையில் அப்பாவின் சினேகிதரைக் காணச் சென்றான்.

எதுவானாலும் நேர்கொள்ளத் தயாராக இருந்தான்.
செய்த தவறுகளுக்குத் தான் பதில் சொல்லியாக வேண்டும்
என்பது மனமூலையில் உறுத்தியது.

சந்திரசேகர மாமா , வரவேற்று அமர வைத்தார்.
 சந்திராவின் வக்கீல் தன்னிடம் பேசின விவரங்களைச் சொல்லி,
அவனுடைய கடன் களை அடைப்பதே சந்திராவின் நோக்கம்.
அதற்கு அவன் தந்தை கொடுத்த பணத்திலிருந்தே

அவள் கொடுப்பதாகவும் பவர் ஆஃப் அட்டர்னி தன்னிடம் கொடுத்திருப்பதாகவும் சொன்னார்.
ஒரு கணம் சுந்தரத்துக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.
இதை அவன் எதிர்பார்க்கவில்லை.

இது எல்லாம் உங்களிடம் அவள் பேசினாளா என்றதும். ஆமாம் ஏதோ ஒரு ஊரிலிருந்து
 வேலைகளுக்கு நடுவில் , என்னிடம் பேசினாள்.
பணம் ஏற்கனவே என் அக்கவுண்டில் வந்துவிட்டது.
நீ உன் கடன் விவரம் சொன்னால்,
அவர்களை நேரில் சந்தித்து ,நானும் நீயும் நம் வக்கீலுமாகச் சென்று
 சரி செய்து விடலாம்.
உன் உத்தேசத்தைச் சொல் என்றார்.

அப்பாவிடம் சம்மதம் வாங்கி விட்டாளா என்று கேட்டான்.
அதெல்லாம் நேற்றே முடிந்தது.

உன் சௌகர்யத்தைச் சொல்.சுருக்க முடித்துவிடலாம்.

எனக்குப் புரியவில்லை. எப்படி இந்த மாற்றம்.
I am not in anybodys good books, எத்ற்கு இந்த ஏற்பாடு.
 அப்பாவின்  இராணுவ நண்பர் ஒருவர் , நீ போன வாரம்,
நடு சாலையில் வாய்ச்சொல் முற்றி அடிதடி நடந்ததைப் பார்த்திருக்கிறார்.
அப்பாவும் சந்திராவும் உன் செயல்களைத்தான் வெறுத்த்தார்கள்
உன்னை வெறுக்கவில்லை. இத்தனை நாட்கள் மரியாதை கௌரவத்தோடு இருந்த குடும்பம் இது
போல அவமானப் படுவதை விரும்பவில்லை.
சந்திரா யோசித்து எடுத்த முடிவிது.
உன் விருப்பப்படி செய்யலாம் என்றதும் எழுந்துவிட்டான்.
அவன் முகம் சிவந்திருந்தது.
மிக நன்றி. நான் யோசித்துதான் முடிவெடுக்கவேண்டும்.
அந்த வீட்டில் எனக்கும் உரிமை உண்டு.
பத்திரத்தைக் காண்வில்லை என்று குரல் உயர்த்தினவனிடம்
சேகர் மாமா அமைதியாகச் சொன்னார்.
அந்தக் கடனை அடைத்தது சந்திராவின் பெற்றோர்.
நீ தாலுக்கா ஆபீஸ் வந்து உன் உரிமையை
விட்டுக் கொடுப்பதாக ஐந்து வருடங்கள் முன் எழுதிக் கொடுத்ததை
மறந்துவிட்டாய். உன் பழக்க வழக்கங்கள் உன் புத்தியை
மழுங்கடிக்க வைத்திருக்கிறது.
நீ நல்ல வழியில் திரும்ப இது உனக்கு சந்தர்ப்பம்.
ஒரு நாள் எடுத்துக் கொள். புதன் கிழமை உன் பதிலை எதிர்பார்க்கிறேன்
என்று முடித்தார்.
முடிந்தவரையில் சினத்தை அடக்கிக் கொண்டு வெளியே விரைந்தான்.
உடலெல்லாம் படபடத்தது.
இந்த தானமாகப் பெற்ற பணமா என்னைக் காப்பாற்ற வேண்டும்
.
என் வேலையை விட்டு விடுகிறேன்.
ப்ராவிடெண்ட் பணமாகக் கிடைப்பதை வைத்தே
என் கடனை அடைத்துவிட்டு
இந்த ஊரைவிட்டுப் போகிறேன். எல்லாரும் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்
என்று மனதிற்குள் குமுறியபடி வீட்டுக்குள் நுழைந்தவனை
வரவேற்றான் காசிவிஸ்வனாதன். நாளைக்குள்
 உன் கடன் தொகை வந்து சேர வேண்டும்.
நீ விளையாடுவதையும் நிறுத்திவிட்டாய்.
 தயாராக இரு என்று சொல்லித் தன் கூட வந்தவர்களையும் அழைத்துக் கொண்டு
வண்டியில் கிளம்பிச் சென்றான். சுபமாக முடித்துவிடலாம்.
என்னால் சுருக்கி எழுத முடியவில்லை.
Add caption

Wednesday, May 30, 2018

வாழ்க்கையின் குரல் 9 ஆம் பாகம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   அப்பா பாவம் மா.
ரொம்பக் கஷ்டமாப் போயிடுத்து
பேசியபடி தன்னைப் பார்க்கும் பெண்களை ஆராய்ந்தாள்.
 என்ன சொன்னார் மா.
நாங்க தான் அவரை கோபித்துக் கொண்டோம்..சொன்ன பேச்சுகளை அப்படியே மீண்டும்

அம்மாவிடம் சொன்னார்கள்.
சந்திராவுக்கே அதிர்ச்சி யாக இருந்தது.
ஒன்றும் சொல்லவில்லை. சரி உங்கள் தேர்வுக்குப் படியுங்கள்.
நான் மீனாக்ஷியிடம் பேசணூம். தாத்தா பாட்டியிடமும் கேட்கணும்
என்றவாறு நகர்ந்துவிட்டாள்.
மீனாக்ஷிக்கு உண்மையிலேயே வெளியூர் வேலை இருந்தது.
தனது உதவியாளர்களுடன் ஒரு கணினி பிரச்சினையை சமாளித்துச் சரிப்படுத்த
வேண்டி இருந்தது.
சந்திரா, தனக்கு சென்னையிலிருந்து மாற்றம் கிடைக்குமா என்று உதவி கேட்டாள்.

மீனாக்ஷி தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகச் சொல்லி
ஃபோனை வைத்து விட்டாள்.
 அடுத்ததாக மாமனார் ,மாமியார்க்கு  அவர்கள் சென்றிருக்கும்
மெர்க்காரா பண்ணை வீட்டுக்குப் பேசி விவரங்கள்
கேட்டுக் கொண்டாள். அவர்கள்  பகிர்ந்த கொண்ட
விஷயமும்  அவளைப் பாதித்தது,.
இப்போது சுந்தரம் உண்மையிலேயே தனிமைப்
படுத்தப் பட்டுவிட்டான்.  தன்னை சீரமைத்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம்.
அதைச் செய்வானா என்பதுதான் தெரியாது...

பேசி முடித்து விட்டு, வக்கீல் மாமாவிடம் தன் யோசனையைச் சொன்னாள்.
பணத்தைச் சுந்தரம் பேரில் போடுவதற்குப் பதிலாக
அவன் யாரிடம் கடன் பட்டிருக்கிறானோ அவர்களுக்குக்
கொடுத்து அவனை அந்தத் தொந்தரவிலிருந்து விடுவிக்கலாமே.
என்ற யோசனையைச் சொன்னார்.
மாமனாரின் தோழர் சந்திர சேகர் கிட்டே சொன்னால், அவர் சுந்தரத்திடம்
பேசி விவரங்கள் அறியலாம் என்றாள் சந்திரா.
இதை எல்லாம் செய்தால் அவன் திருந்திவிடுவானாம்மா
என்றார்.
அதை நான் எதிர்பார்க்கவில்லை மாமா. ஆனால் நல்ல
இக்கட்டில் மாட்டி இருக்கிறார் என்பது தெரிகிறது.
அவ்ருடைய தந்தையின் பணம் ,இதற்கு வழி செய்யட்டும்.
அதுதான் தர்மமும் கூட. நான் பிரிந்து செல்வதானாலும் ,
மனம் நிம்மதியுடன் இருக்க இதைச்
செய்யவேண்டும். சொல்லிவிட்டுப் பெண்களுக்கு
 இரவு சாப்பாடு கொடுத்துவிட்டுப்
ஓய்வெடுக்கச் சென்றாள்.

அந்த வாரம் முழுவதும், சுந்தரம் தன் மகள்களைப்
பார்க்கத் தினம் பள்ளிக்கு வந்தான்.
 அவர்களுக்குப் பிடித்த சாக்கலேட் பாக்கெட்கள்
அவனுடன் வந்தன. நிறையப் பேசவில்லை. சற்று நேரம் உட்கார்ந்துவிட்டுப்

போவதை வழக்கமாக்கிக் கொண்டான்.
அவன் வேலையில் மீண்டும் சேர வேண்டிய நாளும் வந்தது.
அவன் அப்பாவின் சினேகிதரிடமிருந்து தன்னை வந்து பார்க்கும் படி அழைப்பு
வந்தது.
முதலில் பயமாக இருந்தாலும் வேலை முடிந்ததும் வருவதாகச் சொன்னான்.
மதியம் தன்னுடன் வழக்கமாக  சீட்டு விளையாடும்
நாகராஜனிடம், தன்னால் வரமுடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டான்.

நீ நிறைய பேருக்குக் கடன் பட்டிருக்கிறாய் மறக்காதே
எங்கு சென்றாலும் விட மாட்டார்கள். தயாராக இருந்து கொள் என்று கேலியாகப்
பேசிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

எப்படி அடைக்கப் போகிறேன் ,ஏன் இந்தப் பழக்கத்தில் விழுந்தேன்
என்று முதன்முறையாகக் கலங்கினான் சுந்தரம்.
தன் வேலை நேரம் முடிந்ததும், தன் கடன் விவரத்தைப் பட்டியலிட்டான்.
கிட்டத்தட்ட 60 ஆயிரத்துக்கு கணக்கு வந்தது.

காசியிடமே கடன் வாங்கி மற்றவர்களைச் சமாளிக்கலாமா என்ற யோசனை வந்ததும்
ஒதுக்கிவிட்டான். தினம் வட்டியே  ஆயிரத்துப் பக்கம் போய்விடும்.
யோசித்தபடி  அடையாரில் இருந்த  சந்திரசேகர் மாமாவின் வீட்டை அடைந்தான்.

Monday, May 28, 2018

சுந்தரத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. 1

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
காகிதப் பூக்கள்.

கதை படிப்பவர்கள் மனதில் எழும் கேள்வி,  நல்ல பெற்றோருக்கு ஏன் இது போல ஒரு பிள்ளை.

தந்தை  ராணுவத்தில் பெரிய பதவி வகித்தவர். பையனையும் அதே போல கண்டிப்புடன்  வளர்த்தார். பிடிவாதம் பிடித்து
ராணுவப் பள்ளியிலிருந்து விலகி

சென்னைக்கு வந்து தன அம்மாவின்  பிறந்தவீட்டில் தாங்கிப் படித்தவனைக் கண்டிக்க ஆளில்லை .
கெட்டிக்காரன் ஆகையால் வாழ்வில் முன்னுக்கு வரத்  தெரிந்தவனுக்கு,
முகஸ்துதி செய்பவர்கள் செய்யும் தோழர் பட்டாளமே அதிகம்.

அவனது பல தவறுகளைத்
 தந்தை சுட்டிக் காட்டும்போது
கோபம் கொள்வான். வெளியில் காண்பிக்க மாட்டான்.

மீண்டும் தன்  வழியே செல்வான்.

பட்ட மேல் படிப்புக்கு வெளி நாடு செல்ல  ஆசைப் பட்டவனைத் தந்தை
அனுமதிக்கவில்லை. அந்தக் கோபம் வேறு.
நல்ல வேளை யாகச் சந்திராவைச் சந்தித்தான். அவர்கள் வீட்டு சாத்விகம் அவனுக்குப் பிடித்து இருந்தது.
சந்திராவுக்கு அவனுடைய முரட்டுக் குணமும்  அவளைக் கவர ஒரு காரணம்.

22  வயதுக்கு  உண்டான இனக்கவர்ச்சியில் இருவரும் காதலித்தனர்.
மெய்யான அன்பும் சேர்ந்த போது  மணம் முடித்தனர்.

கை  நிறைய சம்பளம், சிறிய குடும்பம், சேர்த்து வைத்த பணத்தில் வீடு கட்டிய பெருமை
எல்லாம் சுந்தரத்தின் தலைக்கேறியது.

தந்தைக்கு முன்னால்  தான் வெற்றி யை க் காண்பித்து விட்ட
கர்வம்.

இந்த நிலையில்  கூடா நட்பு சேர , அவன் தவறான  பாதையில் இறங்கி விட்டான்.
எப்போதுமே செய்யாதே என்ற வார்த்தை அவனை மேலும் தவறுகளை செய்ய வைக்கும்.
சந்திராவின் பொறுமைக் குணம்  அவனை மேலும்
தீவிரமாக்கியது. மெல்லத்தான் திருந்துவான்.



வாழ்க்கையின் குரல் 8

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 சுந்தரம் பைக்கை உதைத்து வீட்டுக்கு வந்து, உடை மாற்றி
வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்துக் கொண்டான்.

 கிளப்பிற்குச் செல்லக் கால்கள் துடித்தாலும்
நிதானிக்க ஆசைப்பட்டான்.
12 மணி வரை காத்திருந்து ,பள்ளிக்கூடத்துக்கு
விரைந்தான்.
மதிய உணவு இடைவேலைக்காக வந்த பெண்களை, வாசல் காவலாளியின்
அனுமதியுடன் சந்திக்க விரைந்தான்.

அங்கே சந்தோஷமாக இருக்கும் பல குழந்தைகளின் நடுவே, பலத்த
சிந்தனையோடு சாப்பிடாமல் இருக்கும் தன் மகள்களையும் பார்த்தான்.
எப்போது இவ்வளவு பெரியவர்கள் ஆனார்கள்.
மிதிலா அப்படியே சந்திரா மாதிரியே இருந்தாள்.
மைதிலியின் பிடிவாத முகத்தில் தன்னையே கண்டான்.
தயங்கித் தயங்கி அவர்கள் அருகில் அவன் போன போது
அவர்கள் மிரண்டதைக் கண்டு மனம்  சலனப்பட்டது.

அப்பா, எங்களிடம் பணம் இல்லை. எதற்காக வந்தீர்கள்.
என்ற வார்த்தைகளைக் கேட்டதும் இன்னும் நொந்தான்.
வீட்டில் நீங்கள் இல்லையே
எங்கே இருக்கிறீர்கள் என்றான். எங்கள் தோழி நிகிலா சங்கர் வீட்டில்
அம்மா விட்டு விட்டுத்தான் போனார் என்றாள் மைதிலி.

அம்மா எப்போது வருவாள் என்று கேட்டதும்
இரண்டு வாரங்கள் ஆகும் அப்பா. அங்கேயே
வேலை தேடிக் கொள்வதாகச் சொன்னார்.
அப்படிக் கிடைத்தால் நாங்களும் அங்கே போய்விடுவோம்.
வீட்டில்  நிம்மதியாகப் படிக்க முடியவில்லை.
அம்மா வருத்தப் படுவதைப் பார்க்கவும் பிடிக்கவில்லை.
அன்று சாயந்திரம் வந்த காசி என்கிற ஆளைப் பார்த்து அம்மா
பயந்தவிதமும் எங்களுக்குப் பிடிக்கவில்லை.

எதற்காக அப்பா நாங்கள் சிரமப் படவேண்டும்.
நீங்கள் செய்யும் தப்பிற்கு நாங்கள் பலியாக முடியாது.
அம்மா உங்களிடம் சொல்வாரோ மாட்டாரோ
உங்கள்  நடத்தை மாறவில்லையானால்
வாழ்க்கை நடக்கும் என்று தோன்றவில்லை.
 இதுதான் முதல் தடவை எங்களை நேருக்கு நேர்
பார்க்கிறீர்கள். இனி நீங்கள் தான் சொல்லவேண்டும் என்று
முடித்தாள் மிதிலா.
சிலை போலக் கேட்டுக் கொண்டிருந்தான் சுந்தரம்.
திடீரென்று அங்கேயே உடைந்து அழுதுவிடுவோமோ
என்று பயம் தோன்றியது.

என்னால் உங்களுக்குத் தொந்தரவு வராது அம்மா.மீண்டும் பார்க்கலாம்
என்று  அவர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டு
கிளம்பினான்.
விக்கித்து நின்ற பெண்கள் இருவருக்கும்
கண்ணில் நீர் நிறைந்தது..
அடுத்த நாள் தேர்வு ஆரம்பம் .மனபாரத்தை க் குறைத்துக் கொள்ள
அம்மாவுக்கு ஃபோன் செய்தார்கள்.

சந்திரா எதிர்பார்த்த நிகழ்வுதான். குழந்தைகளுக்கு ஆதரவு சொல்லித்
தான் வந்து அழைத்துக் கொள்வதாகச் சொன்னாள்.
அவர்கள் மறுத்தனர்.
நீ வெளியே வரவேண்டாம் அம்மா என்று சொல்லிவிட்டு
,முகம் கழுவிக் கொண்டு வகுப்பறைகளுக்குச் சென்றனர்.




Saturday, May 26, 2018

வாழ்க்கையின் குரல் 7

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 சந்திராவுக்கு வக்கீல் வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை.
தந்தை
 காலத்திலிருந்தே பழகிய பெரியவர்.
அவர் மனைவி கற்பகமும் மிக நல்ல மனுஷி.
 வேளை கெட்ட வேளையில் டாக்சியில் வந்திறங்கிய
சந்திராவின் முகத்தைப் பார்த்துக் கலங்கினார்.

விஷயங்கள் கொஞ்சம் தெரிந்திருந்தாலும் அந்தப்
பெண்ணைத் தொந்தரவு செய்ய மனமில்லை.

குழந்தைகள் மிதிலா,மைதிலி இருவரையும்
உள்ளே அழைத்துச் சென்று அவர்கள் அறையில்
அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்.

வக்கீல் மாமாவைப் பார்த்ததும் தந்தை நினைவு
வர மீண்டும் கலங்கினாள் சந்திரா. நடந்த விவரங்களைச் சொல்லி
வீட்டைப் பத்திரப் படுத்த வேண்டிய அவசியத்தை
அவரிடம் விசாரித்தாள்.

நீ ஏன் மா கவலைப்படறே. உன் நிலத்தை விற்றுதானே
வங்கிக்கடன் அடை பட்டது. அப்போதே உன்பெற்றோர்,
சுந்தரம் எல்லாரும் சேர்ந்து உன் பெயருக்கு
மாற்றிவிட்டோமே.
அவனுக்கு அதில் பாத்தியதை இல்லைமா.
அவனுக்குத் தெரியுமே என்றார்.

அதிர்ச்சியில் ஒன்றுமே தோன்றவில்லை சந்திராவுக்கு.
நீ பட்டாவைப் பிரித்துப் பார்க்கவில்லையா.

அம்மா அப்பா உன்னிடம் சொல்லவில்லையா
என்ன அதிசயமாக இருக்கு. என்று வியந்து போனார்.

நீ எதற்கும் இப்போ பயப்பட வேண்டாம்.நிதானமா யோசி.
அவன் ஒரு தெளிவுக்கு வரட்டும். குழந்தைகள்
 இங்கிருந்து பள்ளிக்குப் போகட்டும்.
தேர்வுகள் இரண்டு வாரங்களில் முடிந்துவிடும்.

நிதானமாக இரு.உனக்கு வேண்டிய பணத்தை நான் வங்கியிலிருந்து எடுத்து வருகிறேன்.
என்று நீண்ட பேச்சை முடித்தார்.
இன்னும் தெளிவில்லாத மனமுடன் படுக்கச் சென்றாள் சந்திரா.
என்ன அனியாயம்.    தெரிந்தும் நம்மைப் படுத்தினானே.
அத்தனை முட்டாளா நான்.
இன்னிக்கு அங்க என்ன நடந்திருக்கும். நினைக்கும் போதே உடல் நடுங்கியது அவளுக்கு.
 இல்லை இந்த சங்கடங்களிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும்.

அவனுக்குப் பணம் பெரிதாகிவிட்டது. அவன் பெற்றோர் பணத்தில் பாதி ஐதர் ஆர் சர்வைவர்
அக்கவுண்டில் அவன் பேரில்
எடுக்க முடியாத விதத்தில் டெபாசிட் செய்துவிடுகிறேன்.
மாத வட்டி வரட்டும். தன்னைத் தானே கவனித்துக் கொள்ளட்டும்.

நான் கோழையாக இருக்க மாட்டேன். அவனிடம் எனக்குப் பரிதாபம் தான் வருகிறது.
எப்போதோ இருந்த காதல் எங்கோ போய்விட்டது.

 களைப்பில் கண்ணசந்தாள்.
காலை வந்தது. சுந்தரத்துக்கு தூக்கத்தில் கடன் கொடுத்தவர்கள் துரத்துவது
போல கனவு. தூக்கி வாரிப் போட்டது போல எழுந்தவன், குளியலறைக்குப் போய்
முகம் கழுவித் தன்னைத் தானே பார்த்துக் கொண்டான்.
பெற்றோர் முன் தன்னை நிற்க வைத்தது விதி என்று நொந்து கொண்டான்
. கூடவே சந்திராவையும் தண்டிக்க வேண்டும் என்ற கோபம் எழுந்தது. என்னால் வந்த வாழ்வு அவளுக்கு. என்னவெல்லாமோ மனம் நினைத்தது.
தன் தவற்றை உணரவில்லை.
 அறையை விட்டு வெளியே வந்தவனை வரவேற்றது கூடத்தில் இருந்த பயணப் பெட்டிகள்.
 அவன் அப்பா நிதானமாகக் காப்பி அருந்திக் கொண்டிருந்தார்.
சமையலுக்கு வரும் உதவியாள் சமைத்துக் கொண்டிருந்தான்.

அம்மா பூஜை அறையில் இருந்தார்.
காப்பி சாப்பிடுகிறாயா  என்று கேட்டவர்,
இந்தா இந்த செக் பத்தாயிரம் ரூபாய்க்கு இருக்கிறது வண்டியைச் சரி செய்துகொள்.
இன்னும் இரண்டு மாதங்களுக்கு இங்கே இருக்க மாட்டோம்.
வட இந்தியப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

எங்கள் பக்தி குழுமத்துடன் செல்கிறோம்.
இனி உன் வாழ்வு உன் கையில்.
சந்திராவைப் பற்றித் தெரிந்தால் என் நண்பர் சந்திர சேகரிடம் சொல்லு.
அவரிடமும் பணம் கேட்டுவிடாதே. அவர் தர மாட்டார்.

அம்மா கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டவனுக்குத்
தன்னைச் சுற்றி இருந்த கதவுகள் படபட வென்று மூடுவது போலத் தோன்றியது.

பத்தாயிரம் எந்த மூலைக்கு. நாலாபக்கமும் கடன்.
பாதி சம்பளமும் கிடைக்க இன்னும் 15 நாட்களாகும்.
அடுத்த வாரம் இன்னோரு பத்தாயிரம் உன் வங்கிக் கணக்கில்  சேரும்.
நீ கிளம்புகிறாயா. சாப்பாடு வேண்டுமானால் ,நம் வீட்டு வாட்ச் மேன்
தினம் இரவு உனக்கு கொண்டு வந்து கொடுப்பான்.

நீ உன் வழியை மாற்றிக் கொள். கடவுள் விருப்பப்படி நாம் சந்திக்கலாம்.
என்று எழுந்தார். சுந்தரத்தின் அம்மாவின் கண்கள் கலங்கி இருந்தன.

நீ புத்திசாலி. நல்வழியில போ. என்று கூடை நிறையப் பழங்களை
 அவன் கைகளில் கொடுத்தார்.
 படுவேகமாக வீட்டைக் காபந்து செய்யும் வேலைகள் நடந்தன.
நாங்கள் கிளம்புகிறோம் என்று அவர்களும் காத்திருந்த வண்டியில் ஏறிக் கொண்டனர்.
பிரமை பிடித்தவனாக நின்றவனை காவல்காரன் அணுகினான். ஐயா வீட்டைப் பூட்ட வேண்டும்.
உங்கள் வண்டியை நான் இரவே சரி செய்துவிட்டேன்.
பெட்ரோலும் போட்டுவிட்டேன் என்றான் மரியாதையாக.

சுந்தரமும் கிளம்பினான். மீண்டும் தொடரும்.

Friday, May 25, 2018

வாழ்க்கையின் குரல் 6

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


   சந்திரா கிளம்பின  அரைமணி நேரத்தில் சுந்தரம் அங்கு
வந்தான்.  பூட்டியிருந்த வீடு அவனைக் குழப்பியது.

அவனது மோட்டர் பைக் சப்தம் கேட்டுப் பக்கத்து வீட்டு
சுப்ரமணியம் வெளியே வந்தார்.

 சந்திரா  ,இப்போ ஒரு அரை மணி முன்னதாகக் கிளம்பினாள். திடீரென்று
 அலுவலக விஷயமாக ஹைதராபாத் போவதாகச் சொன்னாள்.
குழந்தைகள் எங்கே என்பதற்குள்

 கிளம்பி விட்டாள்.  உங்களிடம் கொடுக்கச் சொல்லி சாவியைக் கொடுத்தாள் என்றவரிடமிருந்து இயந்திரத்தனத்துடன்  சாவியை வாங்கி வீட்டைத் திறந்தான்.

காலையில் ஏற்றிவைத்த அகர்பத்தி மணமும் , தொங்க விட்டிருக்கும்
மணிச்சரங்களின் ஒலியும் அவனை வரவேற்றன.
எனக்குத் தெரியாமல் இது என்ன பயணம். என்று நினைத்தபடி தொலைபேசியைக் கையில் எடுத்தான்.

சந்திராவின் மானேஜர் மீனாக்ஷிக்குப்  பேசத் தொடர்பு கொடுக்கக் கேட்டுக் கொண்டான்.
 ஆபரேட்டரின் குரல் தான் பதில் சொன்னது.
மீனாக்ஷி தன் குழுவுடன் ஹைதராபாத் செல்வதாகவும்,
ஒரு அவசர அஸைன்மெண்ட் முடித்து வர 2 வாரமாவது ஆகும் என்றாள்.

உடனே தன் செக்ஷனில் இருக்கும் , பாலச்சந்திரனுக்குத் தொலைபேசினான்.
சந்திராவின் குழு வெளியூர் போன விஷயம் தெரியுமா என்று கேட்டதற்கு,
 தனக்கு முழு விவரம் தெரியாது,ஆனால் அவர்கள் அலுவலகத்தில் இல்லை
என்றான்.
எரிச்சல் மிகுதியாகத் தந்தை வீட்டுக்குப் ஃபோன் செய்தான்.
மகள்கள் அங்கே வந்திருக்கிறார்களா என்ன விஷயம் என்று கேட்ட போது,
 தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று மறுத்தனர்.

கோபம் தலைக்கேற சாவியை எடுத்து காட்ரேஜ் பீரோவைத் திறந்தான்.
நல்ல சமயம், வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்று விடலாம்
என்ற நினைப்பு.
அவனுக்கு.
சில போலி நகைகளைத் தவிர , வீட்டுப் பத்திரமோ,வழக்கமாகச்
 சந்திரா வைக்கும் உண்டியல் பணமோ ஒன்றும் இல்லை.
சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்ட பாண்ட் சட்டைகள், சில புடவைகள்,
மகள்களின் பட்டுப் பாவாடைகள் மட்டும் இருந்தன.

பணம் தேவை அவனுக்கு. காசி , வளையல்களை விற்றுக் கிடைத்த
பணத்தில் பத்தாயிரம் அவனிடம் கொடுத்திருந்தான்.
மழுங்கின  மூளை வேலை செய்யாத நிலையில் அவன் ஆடிய
சீட்டாட்டம்  தோல்வியில் முடிந்தது.

கைகள் பரபரக்க, வயிற்றில் பசி கிள்ள
அடுத்த கட்டமாகப் பெற்றோர் வீட்டுக்கு விரைந்தான்.
கவனிக்கப் படாத ,ப்ராமரிக்கப் படாத மோட்டர் பைக்கும்
 நடு வழியில் நின்றது.
தள்ளிக் கொண்டே பெற்றோரின் வீட்டுக்கு வந்தான்.
 போர்டிகோ விளக்கு பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தது.
மணியை அழுத்த அப்பா ,வந்து கதவைத் திறந்தார்.
மகனின் கோலம்  அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியது.
என்னப்பா இந்த இரவு வேளையில் என்றபடி ,மனைவியை அழைத்தார்.

உள்ளே சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்த அவன் அம்மாவும் வந்தார்.
சலனம் ஏதும் காட்டாமல் என்ன விஷயம் அப்பா,
சந்திரா,குழந்தைகள் வந்திருக்கிறார்களா என்று அவனுக்குப் பின்னால் பார்த்தார்.

இதென்ன நாடகம். ஒருவரையும் காணோம். வீட்டுப் பத்திரம் உங்களிடம் இருக்கிறதா என்று
கோபத்துடன் கேட்டான்.

எங்களுக்கு இது சாப்பாட்டு நேரம். நீயும் சாப்பிட வருவதானால் வா. கைகால் சுத்தம் செய்து கொண்டு வா
பேசலாம் என்று அவன் தந்தை உள்ளே நகர்ந்தார்.
வேறு வழி இல்லாமல் உள்ளே வந்து அமர்ந்தவனுக்கு சாப்பாடு பரிமாறினார் அம்மா.
அவசர அவசரமாக அள்ளிச் சாப்பிடும் மகனைக் கண்டு
கண்களில் நீர் வந்தது அம்மாவுக்கு.
என்ன ஆச்சு உங்கள் இருவருக்கும்.
எங்கே போனாள் சந்திரா. குழந்தைகள் எங்கே. இரண்டு வாரம் முன்பு பேசினோம்
உன் நடவடிக்கைகள் பற்றிச் சொன்னாள்.

மணமுறிவு  செய்து கொள்ளலாமா என்று யோசனை வருவதாகச் சொன்னாள்.
வீட்டைவிட்டுப் போகும் அளவுக்கு என்ன நடந்தது என்ற அம்மாவை வெறித்துப் பார்த்தான்
சுந்தரம். ஓஹோ அந்த அளவுக்கு யோசனை போய்விட்டதா.
காதல் திருமணம் ,பணம் கேட்டதும் கசந்து விட்டதோ.

ஊரில் அவனவன் எத்தனை சீர் கெட்டு இருக்கிறான்.
நான் குடிக்கிறேனா, வேறு யாரையாவது காதலிக்கிறேனா.

வெறும் சீட்டு............. எனக்கு வாழ்க்கை அலுத்துவிட்டதால்
 பொழுது போக்க ஆடுகிறேன்.
அவள் தான் ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கிறாளே .
ஏதோ கொஞ்சம் அவளிடம் பணம் கேட்டது நிஜம் தான்.
அதற்காக விவாகரத்தா..
நான் சரி சொல்ல மாட்டேன். வீட்டில் சம உரிமை  எனக்கு உண்டு.
என் பாதியைக் காசாகக் கொடுக்கச் சொல்லுங்கள்.
எங்கே வேணுமானாலும் போகட்டும்.
இப்போது நீங்கள் தந்தால் பணம் வாங்கிக் கொள்கிறேன்.
வீட்டுப் பணத்தில் திருப்பிக் கொடுக்கிறேன்.
இன்னும் ஒரு வாரத்தில் வேலைக்குத் திரும்பி விடுவேன்.
 என்று உச்சக் குரலில் பேசும் மகனை வேதனையோடு பார்த்தார்
அப்பா.
இன்று ஒரு நாள் இங்கே தங்கு.
காலையில் இதற்கெல்லாம் தீர்வு காணலாம்.
நாங்கள் பணம் வீட்டில் வைத்துக் கொள்வதில்லை.
உன் இஷ்டம் போல் செய்.வெளியே போக வேண்டுமென்றாலும் சரி எங்களுக்குத்
 தூங்கும் நேரம் வந்துவிட்டது. என்றபடி எழுந்தார்.

வெகு தள்ளாமையோடு எழுந்திருக்கும் பெற்றோரைப் பார்த்து மனதில்
சுருக்கென்று பட்டது.
என் பைக் நின்று விட்டது. அதனால் இன்றிரவு தங்குகிறேன்.
காலையில் பணம் கொடுத்தால் தான் கிளம்ப முடியும் என்று
அங்கேயே அமர்ந்தான். உன் அறையில் படுத்துக் கொள்ளலாம்.
என்றபடி அவர்கள் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டனர் அவன் பெற்றோர்.
சுற்றுமுற்றும் பார்த்தபடி இருந்த சுந்தரத்தை வாட்ச்மென் குரல் எழுப்பியது.
ஐயா,வாசல் கதவைத் தாளிடுகிறேன் என்று சாத்தினான்.
 வேறு வழி இல்லாமல், எழுந்தவன் தன் அறை நோக்கி நடந்தான்.
அடுத்த பதிவில் முடித்து விடுகிறேன் சுபம்.

Wednesday, May 23, 2018

வாழ்க்கையின் குரல் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 மணி 10 ஆகிவிட்டது.
இன்னும் சுந்தரத்தைக் காணவில்லை.

கவலைப் படத் தெம்பில்லை சந்திராவுக்கு.
வாயில் கதவைப் பூட்டிவிட்டு உள்ளே வந்து
மாமனாரைத் தொலைபேசியில்  அழைத்தாள்.

அவர்களுக்கு செய்திகள் பார்க்கும் வழக்கம் உண்டு. 11 மணிக்கே

படுக்கச் செல்வார்கள்.

சுருக்கமாக நடந்த விவரங்களைச் சொன்னாள்.
விஸ்வனாதனைத் தொடர்ந்து இன்னும் எத்தனை நபர்கள் வீட்டுக்கு வருவார்கள்
என்று தெரியாத காரணத்தால்,
தான்  அவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு
கோபாலபுரம் பள்ளி அருகில் தங்கள் லாயரின் வீட்டுக்கு அருகில்
அப்பார்ட்மெண்ட் செல்வதாகச் சொன்னாள்.

தான் கிளம்புமுன் அவர்களிடம் இந்த வீட்டுப் பத்திரத்தை க்
கொடுப்பதாகவும்,வீட்டின் மேல் கடன் வாங்கச் சொல்லி சுந்தரம் வற்புறுத்துவதாகவும்
விளக்கினாள்.

எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர் அவளது மாமியாரும் மாமனாரும்.
உன் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதம்மா.
நன்றாக யோசித்து முடிவெடு.
பேத்திகள் மிதிலா மைதிலியின் எதிர்காலம் மிக முக்கியம்.
பத்தாம் ஆண்டும் ,ப்ளஸ் ஒன்றும் படிக்கிறார்கள் அல்லவா.

நீ உன் பட்டுப் புடவைகள் நகைகள், தவிர ஒன்றும் எடுக்க வேண்டாம்.
வெள்ளி எல்லாம் ஏற்கனவே வெளியே போய்விட்டது தெரியும்.

நீ இல்லாவிட்டால் எங்களைத்தான் தேடி வருவான்.
நாங்கள் தயார். நீ நிம்மதியாகப் போ என்று தொலைபேசியை வைத்தார்.

அடுத்த நாளும் விடிந்தது. பெண்கள் பள்ளீக்குக் கிளம்புமுன்
தன் முடிவைச் சொன்னாள்,.
அவர்களும் தீர்மானமாக , எங்களூக்கூப் படிப்பு முக்கியம் அம்மா
இந்த வெள்ளி கிளம்பிடலாம்.

அப்பா தெளிவுடன் இருக்கும் போது
நல்வழி பிறக்கட்டும். என்றபடி பள்ளிக்கூட பஸ் நிற்கும் இடத்திற்கு விரைந்தார்கள்.

பஸ் பள்ளிக்குத் திரும்பும் முனையில் தந்தையை சிகரெட் கடை வாசலில்
யாருடனோ உத்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பதைக்
கண்டதும்,பயமும் வருத்தமும் ஏற்பட்டது அவர்களுக்கு.

படிப்பில் மனம் ஓடாமல், மதியம் மூன்று வரை இருந்துவிட்டு
அடையாறுக்குப் பஸ் ஏறித் தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

தாத்தா பாட்டியைப் பார்த்ததும் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் கண்ணீராய் வழிந்தது.
பாட்டி அவர்களுக்கு முதலில் சாப்பிடக் கொடுத்தார்.

என்ன செய்யப் போகிறோம் பாட்டி. அப்பாவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது.
அம்மா பணம் தரவில்லை என்று அடிக்கக் கூட செய்துவிட்டார்.
என்றவர்களைச் சமாதானப் படுத்தி, சந்திராவுக்குப் போன் செய்தார் தாத்தா.

கவலைப் படாதேம்மா , குழந்தைகள் இங்கிருக்கிறார்கள்.
நீயும் வா. அவசரம் இல்லாமல் நிதானமாகச் செயல் படு,
நீ குடிபோகும் வீட்டுக்கு வேண்டிய பொருட்கள், காஸ் அடுப்பு முதல்
அங்கு வந்து சேரும். கவலை வேண்டாம் என்று போனை வைத்தார்.
இத்தனை அன்பான பெற்றோருக்காத் தன் கணவன் பிறந்தான் என்று
மனம் பொங்க அழுதாள். ஏற்கனவே அடுக்கிவைத்திருந்த பொருட்களோடு

தான் நம்பி வணங்கும் கடவுளரின் சிறு படங்களை ஒரு தனிப் பையில் போட்டுக் கொண்டு தெரு முனை
 டாக்சிக்குத் தொடர்பு கொண்டாள்.
வீட்டுச் சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்துத் தான் அலுவலக வேலையாக
ஹைதிராபாத் கிளம்புவதாகவும், கண்வன் வந்தால் சாவியைக் கொடுக்கும்
 படியும் சொல்லிவிட்டு மறு கேள்விக்கு நிற்காமல் விரைந்து வெளியே வந்த,


அரைமணி நேரத்தில் தான் வாழ்ந்த இடத்தை விட்டுக் கிளம்பிவிட்டாள் சந்திரா.

வாழ்க்கையின் குரல் 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

உள்ளே வந்து உட்கார்ந்த விஸ்வனாதன் தான் காசி என்பதை உணர்ந்ததும் ,சந்திரா கலங்கினாலும்.
நீயும் இந்த சீட்டாட்ட கும்பலில் ஒருவனா என்றாள் கோபத்தோடு.
நான் ஒருவனில்லை. அந்த கிளப்பின் உரிமையாளர்.
என்றான்.

நீயா சுந்தரத்தை இத்தனை இழிந்த நிலைக்குக் கொண்டு வந்தாய் என்று
ஆத்திரத்தில் சத்தமெழுப்பினாள்.

ஏன் உனக்கு இத்தனை கோபம் . சுந்தரம் சின்னக் குழந்தை இல்லையே.
அவனே சூதாடித்தோற்றான். நான் மேற்பார்வையாளர்  மட்டுமே.
நான் சீட்டு விளையாடுவதில்லை.

அது இருக்கட்டும். இப்போது அவனைப் பார்த்தாயா.
கூட விளையாடினவனைத் தாக்கிவிட்டான். தானும்
காயப்பட்டான்.
எங்கள் கணக்கில் இருபதாயிரம் வர வேண்டி இருக்கிறது. நீ
கொடுப்பாய் என்றதால் இங்கே வந்தேன்.
 இல்லாவிட்டால் எங்கள் நடை முறையே வேறு என்றவனை உறுத்து விழித்தாள்.

உன்னுடைய அறிவு இந்த வழியில் இறங்கிவிட்ட பிறகு உன் கிட்ட
நற்குணத்தை எதிர்பார்ப்பது என் முட்டாள் தனம்.
இதோ வருகிறேன் என்று உள்ளே சென்றவள்
 ஸ்வாமி சன்னிதியில் கைவளைகளைக் கழற்றினாள்.

இரண்டு வளைகளைத் தனியாக அவற்றின் மதிப்பு, பதிந்த தங்கமாளிகை ரசீதுடன்
 காகிதத்தில் பொதிந்து , ஹால் ,டீப்பாய் மேல் வைத்தாள்.

என்னைப் பொற்கொல்லனாக்கப் பார்க்கிறாயே.
இது ஒரிஜினல் என்று நான் எப்படி நம்புவது.
என்றதும்,
கண்ணைத் திறந்து அந்தக் காகிதத்தைப் பார். இப்போதைய விலை 30 ஆயிரத்துக்கு இருக்கும்.
நீ இனி இங்கே வரக்கூடாது.
அவர்  விளையாட்டுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை.

படிக்காத குடிசைப் பெண்களிடம் உன்  சின்னத்தனத்தை வைத்துக் கொள்.

மீறி என்னை மிரட்டினால் மேற்கொண்டு யாரை அணுகுவது என்று எனக்குத்தெரியும்.
தனியாக இருக்கும் பெண்ணைத் துன்புறுத்தினால்
நடக்கும் விபரீதம் உனக்கும் புரிந்திருக்கும்
என்றவள் வாயிலை நோக்கி நடந்தாள். நீ போகலாம்.

அவருக்கு நான் பிணை இல்லை. இது என் வீடு.என் சம்பாத்தியம்.
மீண்டும் சொல்கிறேன்.
இவ்வளவையும் கேட்டு அசராமல் வெளியே சென்றன் விஸ்வனாதன் என்ற காசி.

மிக சிரமப்பட்டுத் தன் பதற்றத்தை மறைத்துக் கொண்டு
தன் பெண்களை அழைத்துக் கொண்டாள்.
 ஏம்மா,என்ன ஆச்சு, யார் வந்தது.
அம்மா உன் கை வளையல் எங்கே.
 சந்திரா நிதானமானாள்.
இன்னும் இரண்டு நாட்களில் நான் சொல்கிறேன்.
உங்கள் வருடமுடிவுத் தேர்வு எப்போது வருகிறது என்று கேட்டாள்.

இன்னும் இரண்டு நாட்களில் என்றதும்,
சரி நீங்கள் படியுங்கள்.
இரவுக்கான தேங்காய் சாதமும் அப்பளமும்  வைத்திருக்கிறேன்.
 என் அலுவலகப் போன் கால்களை முடித்து வருகிறேன்,
என்று தன் அறையில் புகுந்தாள்.
  தன் மேலதிகாரியான மீனாக்ஷியிடம் தன் நிலைமையை விளக்கி
  இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வாங்கிக்கொண்டாள். எமெர்ஜென்சி
என்றதால் அவளும் சம்மத்தித்தாள்.

இனி என்ன நடக்க வேண்டும் என்பதை யோசித்து முடிவெடுத்து
சுந்தரத்தின் வரவுக்காகக் காத்திருந்தாள்.



Tuesday, May 22, 2018

MAY 22, JAKARTA.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மே 22. ஜகார்த்தா.
சாதாரணமாக எப்பவும் போல் ஆரம்பித்தது.
பேத்தி மகன் அனைவரும் கிளம்பி வேலைக்கும் பள்ளிக்கும் போயாச்சு.
9 மணி வாக்கில் மகன் உள்ளே நுழிகிறான்.
சடார் என்று பதட்டம் சூழ்கிறது.
உடம்பு சரியில்லையாடா.
என்ன ஆச்சு. ஏண்டா கோட் எல்லாம் கழட்டறே.

ஜுரம் வந்துவிட்டுதா என்று அடுக்குகிறேன். 
நிதானமாக பக்கத்தில் வந்து என்னை அணைத்துக் கொள்கிறான்.

ஆஹா பெரியதாக ஏதோ நடந்துவிட்டது.

யாருக்காவது உடம்பு முடியலைய இந்தியால.
இல்லைம்மா
யாருடான்னு பெயர்களை அடுக்குகிறேன்.
இல்லைம்மா.
 முரளியாடா.
ஆமாம்மா.
இருக்கானா 
ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கான் மா.

என் படபடப்பு அதிகரிக்க சூன்யத்துக்குப் போய்விட்டேன்.
பகவானே அந்தக் குழந்தை ஒரு பாவமும் அறியாதது.
அதைக்காப்பாத்து  எனக்கு இந்த சோதனை வேண்டாம்.

எழுந்து போய் என் மருந்து மாத்திரைகளைக் கொண்டுவருகிறான் மகன்.
 ஸாரிமா  ஹி இஸ் நோமோர்.

அவ்வளவுதானா. ........இனி அவனும் எனக்கில்லையா.

உடம்பெல்லாம் பதறுகிறது. மகன் சொல்வது எதுவும் காதில் விழவில்லை

முதல் நாள் அவனுடன் வாட்ஸாப்பில் செய்திகள் பரிமாற்றம்.
யாரையும்  ஒதுக்க வேண்டாம். மனசை சுத்தமா வச்சிக்கோ.
சர்வம் நாராயணன் செயல்.
போயிட்டு வாடா என் அருமைத்தம்பி. 
உன்னை வந்து பார்க்க எனக்கு மனத்தெம்பில்லை. 
நான் முயன்று வந்தாலும் பத்துமணிக்குத் தான் இந்தியாவில் இருப்பேன்.

மீண்டும் சந்திப்போம்.

Monday, May 21, 2018

வாழ்க்கையின் குரல் 3

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 பணம் தீரத் தீர ,சுந்தரத்தின்  மன நிலை கோபத்திற்கு மாறியது.
மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது.

சந்திராவை நச்சரித்துப் பணம் கேட்ட நிலையில் அண்ணனை அணுகினாள்.

அண்ணனின் கோபத்துக்கும் அண்ணியின்
ஏளனப் பார்வைக்கும் ஆளானதுதான் மிச்சம்.
 திரும்பும்போதும்  வீடு கையில் நிற்குமா
இல்லை அதையும் விற்று விடுவானா என்கிற அச்சம் , குழம்பி இருந்த மன நிலையில் தோன்றியது.
பசுமை சூழ இருந்த வயல் வெளிகளில் பெற்றோருடனும்
  அண்ணனுடனும்  சென்று மகிழ்ந்த நாட்கள்
நினைவில் வந்து போயின.

அண்ணா மிக நல்லவன் தான். அவனிடமும் சுந்தரம்  கடன் எக்கச்சக்கமாக வாங்கித்
திருப்பிக் கொடுக்கவில்லை. யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும்.

வீட்டுக்குத் திரும்பியதும், சந்திரா செய்த முதல் வேலை, பீரோ லாக்கரைத் திறந்து
வீட்டுப் பட்டாவை எடுத்தது தான்.
 இருவர் பெயரிலும் இருந்த அந்த பத்திரத்தை
உடனடியாகப்  பக்கதிலிருந்த தோழியின் வீட்டுக்குக் கொண்டு போய்
வைத்ததும் மனம் நிம்மதி பெற்றது.
அடுத்த நாள் வேலைக்குச் செல்ல எல்லா ஏற்பாடுகளையும்,
பெண்களின் உடைகளைச் சீர் செய்வதிலும் மாலை
நேரம் வரை சென்றது.

எங்கோ சுற்றிப் பணமும் கிடைக்காமல் திரும்பினான் சுந்தரம்.

களையாகக் கம்பீரமாக இருந்த கணவ்னின் முகம் இப்படி வெறி
பிடித்துக் காட்சி அளிக்கும் கோலம் அவளை  வருத்தியது.
 காப்பி, டிபன் சாப்பிடுகிறீர்களா என்று மென்மையாகக் கேட்டாள்.

திரும்பியவனின் முகத்தில் தெரிந்த ரத்தக் காயம்  அவளைத் திடுக்கிட வைத்தது.
என்ன ஆச்சு ,காயம் பட்டிருக்கிறதே சுந்தரம்
என்று பக்கத்தில் நெருங்கியவளைப் பார்வையாலெயே
நிறுத்தினான்.
காசில்லாமல் கடனுக்கு சீட்டாடினால், இதுதான் கிடைக்கும்.

இதோ அந்தக் காசி இங்கே வரப் போகிறான். இருபதாயிரத்துக்கு
வழி செய்து கொள். இல்லை என்ன பதில் சொல்வியோ உன் சாமர்த்தியம் என்ற படி
அப்படியே விரைந்து வெளியேறினான்.

சந்திராவுக்குத் தலை சுற்றியது. வீடு வரை வந்துவிட்டதா இந்தப் பாவம்.
புதிதாக ரௌடிகள் கூட்டம் எல்லாம் வீட்டிற்கு
வரப் போகிறதா என்றெல்லாம் எண்ணங்கள் ஓடின.

பெண்கள் இருவரையும் அழைத்து , பக்கத்து வீட்டில் இருக்கும்படிச் சொல்லி அனுப்பி வைத்தாள்.
உள்ளே சுவாமி சன்னிதிக்குச் சென்று விளக்கேற்றி
தைரியமும் நிதானமும் கொடுக்க வேண்டினாள்.

ஏழு மணி போல வாசல் மணி ஒலித்தது.
 தன்னைச் சீர் செய்து கொண்டு நிதானமாகக் கதவைத் திறந்து
அங்கு  நின்ற உருவத்தைப் பார்த்தாள்.
 நினைத்த மாதிரி ரௌடி யாரும் அங்கு நிற்கவில்லை.
 வெகு கச்சிதமாக உடை அணிந்த உருவம் தான் தெரிந்தது.
யார் என்ன வேண்டும் என்று கேட்டவளைப்
புன்னகையோடு பார்த்த அந்த மனிதனைக் குழப்பமாகப் பார்த்தாள்.

விஸ்வனாதன். கல்லூரித் தோழன். அடடா உள்ள வா. எங்கே
இப்படி .உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு.

என்றவளைப் பின் தொடர்ந்து  சோஃபாவில் உட்கார்ந்து
 சுந்தரம் எங்கே என்று கேட்டான்.
வெளிவேலையாகப் போயிருக்கிறார்.  நீ ஏதாவது பழச்சாறு ஏதாவது
சாப்பிடுகிறாயா. எப்போது சென்னை வந்தாய்.
ஜம்ஷெட்பூரில் இருந்தாய் இல்லையா.

ஒருமணி நேரத்துக்கு
முன்னால் கிளப்பில் பார்த்தேனே, பணம் எடுத்துண்டு
வரேன்னு கிளம்பி வந்தானே. உன் கிட்ட கொடுத்துட்டுப் போனானா.

கலக்கம் குடி கொண்டது சந்திராவின் முகத்தில். தொடருவோம் நல்லதை
நோக்கி நகருவோம்.
Add caption

Saturday, May 19, 2018

இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

அண்மையில் வீட்டுக்கு என்னைப் பார்த்து பேசிப்போக வந்த தம்பதியினர் 4 நபர்கள்.
  ஒரு மனைவிக்கும் கணவனுக்கும் வாக்குவாதம்.

மாமியார் செய்த தவறுகளை வந்த இடம் என்று கூடப் பார்க்காமல்
சொல்லிக் கொண்டிருந்தார். சீனியர் சிடிசன்  களைப் பார்த்துக் கொள்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.
எங்கே விழுவார்களோ,
அதிகமாகத் தூங்குகிறார்களே என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் கவலைப் பட வேண்டி இருக்கு.
இதே  இறந்து போன மாமனார் நிறையக் கட்டுப்பாட்டோடு இருந்தார்.
சட்டென்று போய்விட்டார்.

இப்பொழுது எங்கள் முறை. 4 மாதமாவது வைத்துக் கொள்ளவேண்டும்.
 அவள் கணவரின் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை.

இன்னோரு பெண்ணின் கணவர் விட்ட இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
 என் மாமனார் பிள்ளைகளே பெரிசு என்று இருந்தார். இதோ இவள் பெயரில்
ஒரு சொத்தும் இல்லை. ஆனால் மாமியாரைப் பார்த்துக் கொள்ளும் கடமை மட்டும் வந்திருக்கிறது.
இது எந்த விதத்தில் நியாயம்.++++++++++++++++++++

அவர்களுக்கு நானும் ஒரு சீனியர் சிடிசன் தான் என்பதே
மறந்து விட்டது.
என் மகளும் மாப்பிள்ளையும் வேறு பேச்சு பேசி ,சூழ்னிலையைக் கலகலப்பாக்கினார்கள்.

அம்மா நீ தப்பா எடுத்துக்காதே. படபடவென்று பேசுவார்கள். மற்றபடி நல்லவர்கள்.
இந்த ஊர் டென்ஷன் அதுபோல என்று  சொல்லி சமாதானப் படுத்த ஆரம்பித்தாள்.

நாங்களும் இதை எல்லாம் தாண்டி தான் வந்திருக்கிறோம்.
ஆனால் இன்னோரு இடத்தில்  போய் இறந்தவர்களை
இழிந்து பேசியதில்லை.
முதல் கடமை  தப்போ தவறோ, முன்னோர்களை
மரியாதையோடுதான் அணுகவேண்டும்.
அவர்களைக் குற்றம் சொன்னால் எழுந்து வந்து
பதில் சொல்லும் நிலையிலா இருக்கிறார்கள்.

ஏதோ ஒரு பதிவு இறந்த நடிகையைப் பற்றிப் படித்தேன். படம் கூட வந்திருக்கிறது.
மனசு கஷ்டப் படத்தான் செய்தது.
இதோ இவர்களும் பேசுகிறார்கள்.
Let the dead remain dead.






வாழ்க்கையின் குரல் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


........................................................
25 வருடங்களுக்கு முன் நடந்தது சந்திராவின் திருமணம்.
கல்லூரியில் பார்த்துக் காதலித்து
பெரியவர்கள்  அந்தஸ்து பார்த்து மறுத்தாலும், இருவரின்

அன்பின் தீவிரம் அவர்களை சம்மதிக்க வைத்தது,.
சந்திராவும் சுந்தரமும் ஒரு பெரிய நிறுவனத்தில் வேறு வேறு பிரிவில் ஒரே சம்பளத்தில் வேலையில் இருந்தார்கள்.

எளிமையாகத் திருமணத்தை முடித்துக் கொண்டார்கள்.
 பத்தாண்டு கால வாழ்க்கை சந்தோஷமாகவே சென்றது.

இரு பெண் குழந்தைகள் பிறந்து நல்ல பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.

என்ன அலுப்போ சுந்தரத்துக்கு தெரியவில்லை.
திடீரென  சூதாட்டத்தில் மனம் சென்றது.
தினம் அலுவலகம் விட்டதும் நண்பர்களுடன்
கிளப்பில் பணம்வைத்து சூதாடப் பழகிக் கொண்டான்.
சும்மா ஒரு மணி நேரம் என்று உல்லாசமாக ஆரம்பித்தது, இரவு

12 வரை நீடிக்க ஆரம்பித்தது.
வங்கியில் கடன் வாங்கிக் கட்டிய வீட்டுக்கு
மாதா மாதம் பணம் கட்ட வேண்டிய நிலையில், சந்திராவின்
சம்பளமும் போதவில்லை.

பெண்கள் படிக்கும் பள்ளி உயர்மட்டம். கட்டணமும் அதே.

சந்திராவின் பெற்றோர்களுக்குத் தெரிய வந்து
அவள் மேலிருக்கும் பாசத்தில் ,சிறிய உதவிகள் செய்தாலும் போதவில்லை.

அவள் பெயரில்   இருந்த சோமங்கலம் கிராமத்து வளமான நிலத்தை விற்று,
வங்கிக் கடனை அடைத்தனர்.
கடன் அடைந்தாலும் அதிலிருந்து வந்து கொண்டிருந்த
பலன்களும் நின்றன.

பெண்ணின்  தவிப்பு தந்தையைத் தாக்கியது.
அம்மா,அப்பா இருவரும் தொடர்ந்து சுந்தரகாண்ட பாராயணம் செய்தபடியே
இறைவனை அடைந்துவிட்டனர்.

மாமனாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள  வந்த சுந்தரத்துக்கு
நல்ல வரவேற்பில்லை. அவனும் கண்டு கொள்ளவில்லை.
பத்து  நாட்கள் விடுமுறையில் குற்றாலம் சென்றுவிட்டான்.
அங்கே சீட்டுக் கச்சேரி பிரபலமாம்.
சந்திராவின் அண்ணனுக்கு இரண்டு மகன்கள். நல்ல வாட்டசாட்டமாக்ப் பார்க்கக் கண்ணுக்கு
உகந்த தோற்றம்.
அத்தையின் மேல் மிகப் பிரியம்.

அண்ணா முகுந்தனுக்குத்தான் அவர்கள் அத்தையுடன் ஒட்டுவது பிடிக்கவில்லை.
அப்பாவும் அம்மாவும் சந்திராவுக்காகச் செய்த தியாகங்கள்
அவனை  அன்னியனாக்கியது,.
தந்தை கொடுக்கச் சொல்லி இருந்த பணமும் தீர்ந்த நிலையில் தான் மேற்படி
பேச்சு வந்தது.

ஆபீஸ் நேரத்தில் சீட்டு விளையாடியதை மேலதிகாரி பார்த்துவிட்டதால்
சஸ்பென்ஷன் ஆர்டர் வந்துவிட்டது.
அவன் சகாக்கள்  சாமர்த்தியக்காரர்கள்.
எப்படியோ அங்கே இங்கே ஆள் பிடித்து மீண்டும் வேலையில் சேர்ந்தனர்.
சுந்தரத்துக்கு வறட்டு ஜம்பம்.

தன் தாய் தந்தையர் பணம் எல்லாம் தனக்குத்தான் என்று நினைத்திருந்தவன்
கணக்கும் தப்பியது.  மகனின் போக்கைப் பார்த்து ,அவர்கள் உயில் எழுதிவிட்டார்கள். வீடு அவர்கள் பெண்ணின் பேரிலும்
வங்கியில் இருக்கும் பணம் மகன் வயிற்றுப் பேத்திகளுக்கும் அவர்கள்
இறப்பிற்குப் பின் சேர வழி செய்துவிட்டனர்.

கிணற்றின் அடியைத் தொட்டால் தான் உந்தி மேலே வரமுடியும்.
You have to hit the bottom if you have to come up.  தொடரலாம்
Add caption

Friday, May 18, 2018

1373 , வாழ்க்கையின் குரல்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தப்பும் தவறு மாக வாழ்க்கையைத் தொலைத்து விட்டு
இந்த ஐம்பது வயதில்  ,எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்.

கேள்வி கேட்கும் அண்ணனை ,மனம் பதைக்கப் பார்த்தாள்  சந்திரா.
என்ன செய்யட்டும் அண்ணா.
நிலைமை இவ்வளவு முத்திப் போனதும்
எங்களை அழைக்கிறாய். உன் குழந்தைகள் வளர்ந்தாச்சு.

இப்ப சொல்லு உங்கள் இருவரையும் பிரித்து விடலாம்.
அவந்தான் பணத்தில் கொழிக்கிறானே.
உனக்கு ஜீவனாம்சம் கொடுக்காமல் ஓடிவிடுவானா.
இல்லை உன் மாமியாரைத்தான் கேட்காமல் விடுவோமா.

பல வருட உழைப்பில் முன்னுக்கு வந்துவிட்ட
அண்ணனின் ஆணித்தரமான கேள்விகளுக்குப்
பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.

அவர்களும் எத்தனை நாட்கள் தன் குடும்பத்தைத் தாங்குவார்கள்.
நல்ல தங்காள் மாதிரி கிணற்றில் தள்ளி
 சாகடிக்கும்  சந்தர்ப்பம் இப்போது இல்லை.
கல்லூரிக்குச் செல்லும் வயதில் இருந்தார்கள்
இரு மகள்களும்.
 நல்ல அழகும் ,அடக்கமும் உள்ளவர்கள்.
தந்தையை மதிப்பவர்கள்.
அப்பா,பணம் கொடுக்காவிட்டால் என்னம்மா,நாங்கள் சம்பாதித்து
 உன்னைக் காப்பாற்றுகிறோம்.

இப்போதையத் தேவைக்காக உன் அண்ணனை அணுகாதே.
 அவனுக்குத் தனிக் குடும்பம்
வந்துவிட்டது. பிள்ளைகளும் வளர்ந்து அவர்கள்
வெளினாட்டுப் படிப்பு செலவு வேறு மாமாவுக்கு
இருக்கிறது.
 தாத்தா பாட்டி இருந்த வரை உனக்கு
நிலத்தில் விளைந்ததெல்லாம் வந்தது.
  இப்போது நிலங்களையும் வித்தாச்சு. மேற்கொண்டு
நம் காலில் நிற்க நாம் பழக வேண்டும். நீ உதவி கேட்டதேல்லாம் போறும் அம்மா.

வீட்டுக்கு வந்த  சந்திரா மகளின் கூர்மையான பேச்சைக் கேட்டுப் பிரமித்தாள்.
தனக்கு ஏன் இந்த வலிமை இல்லை. ஏன் தழைந்து போனோம்.

ஏன் பேச்சு கேட்டோம்.
கண்மூடித்தனமான கணவன் பக்தியா. என்றோ ஆரம்பித்த காதலா.
அவன் செய்யும் தவறுகளை ஈடு கட்ட மற்றவர்களிடம் இறைஞ்ச வைத்தது எது.

குழப்பத்துக்கு விடை பார்க்கலாம். எதை விதைக்கிறோமோ அதையே
அறுக்கிறோம்.

Tuesday, May 15, 2018

ENGAL BLOG, எங்கள் Blog படத்துக்கான கதை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஈரோடுக்குக் கிளம்பணும்னு தவிப்பு பெரியவர் சர்மாவுக்கு.
கணேச சர்மா. மகன் வீட்டில் திருச்சியில் இருக்கிறார்.
அவருக்குச் செய்ய வேண்டிய கர்மா ஒன்று ஈரோடு,பெருந்துறையில்
காத்திருந்தது.

64 வயதில் மிக ஆரோக்கியமாகவே இருந்தார்.
நல்ல பழக்க வழக்கங்கள். கட்டுப்பாடான
சாப்பாடு.
தேகப் பயிற்சி எல்லாம் இன்னும் கை கொடுத்தன.

தன்னுடைய 26 வயதில் இணைந்த மனவி  கோமளா வும் வைதீக ஆச்சார முறைகளைக் கைவிடாதவள்.
திருமணத்தின் போது கணேசனின் காதைக் கடித்தவள்
அக்கா விலாசினி.
இந்த உழக்கை எப்படிடா ஆண்டு குழந்த பெறப் போகிறாய்.
 மரப்பாச்சி போல இருக்காளே என்றதும்
அக்காவை முறைத்த நினைவு இப்போது வந்தது.

பெண் பார்க்க வந்த போது, அரியமங்கலம் கிராமத்தில்
சிட்டுப் போலத் திரிந்தவள் 17 வயது கோமளா. அம்மா அப்பா இல்லாமல்
பாட்டியின் கவனிப்பில் செழிப்பாக வளர்ந்தவள் தான். உயரம் தான் குறைவு.
 அவள் ,ஒரு நொடியில் அவரைப் பார்த்துத் தலை குனிந்து கொண்டாள்.
இவர்தான் அந்த முக அழகைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.  சின்ன முகத்தில் அரக்குக் குங்குமம்.
வைர மூக்குத்தி,சிகப்புக்கல் பதித்த தோடு,கழுத்தில் இறுகப் பிடித்த கெம்பு அட்டிகை.
சத்தமில்லாத வளையல்கள்.
சற்றே தூக்கிக் கட்டி இருந்த புடவைக்குக் கீழ் தெரிந்த வெள்ளைப் பாதங்களும் கொலுசும்
அவர் மனதில் அப்படியே பதிந்தன.
 அந்த வயதில், அவர்  PWD OFFICER ஆக இருந்தார்.


பெண் உள்ளே போன பிறகு தாத்தா பாட்டி , கணேசனின் அம்மா அப்பாவைப் பார்த்தார்கள்.
கொஞ்சம் குள்ளமோடா கணேசா என்றாள்  அம்மா.
லக்ஷணமா இருக்கா என்றார் அப்பா.

கணேசன் தலை நிமிர்ந்து. சீக்கிரம் திருமணம் முடிக்க வேண்டும்
அப்பா. எனக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் வருகிறது.

என்றபடி எழுந்து விட்டான்.

ஒரே கண்ணோட்டத்தில்  கூடத்துக் கதவின் பின் நின்ற கோமளா வையும்
பார்த்து நான் வருகிறேன் என்று சொல்லி
அவன் வெளியே சென்றான்.
உள்ளே பேச்சு வார்த்தை நடந்து முடிந்ததும் பெற்றோரும் அத்தையும்
வெளியே வந்தார்கள்.

அவர்கள் வாயைத்  திறப்பதற்கு முன்பே,
உங்களை அலட்சியப் படுத்தி ஒன்றும் செய்யவில்லை அப்பா.
எனக்கு இந்தப் பெண் தான் சரி. என் இஷ்டத்துக்கு மதிப்புக் கொடுங்கள்.

தை மாதம் பார்த்த பெண்ணைப் பங்குனியில் மணம் முடித்தான் கணேசன்.
வழிபட வேண்டிய திருத்தலங்களுக்கெல்லாம் சென்று விட்டு
சென்னையில் பார்த்து வைத்திருந்த வீட்டுக்குக் குடிவைக்க
அவன் பெற்றோர்கள் வந்தார்கள்.
 கோமளாவை அவர்களுக்கும் பிடித்துவிட்டது
அவள் சீர் செனத்தியோடு வந்ததும் பிடித்தது.

 அந்தச் சின்ன வீடு, செழித்தது கோமளாவின் கைவண்ணத்தில்.
திரைச்சீலைகள், தையல் மெஷின்  மூலம் செய்த எம்ப்ராய்டரி
குஷன்கள். என்று வீடே பளபளா என்றிருந்தது.

அடுத்து வந்த பத்து வருடங்களில் ஐந்து குழந்தைகள்.
இரண்டு பெண்களும் மூன்று ஆண்களுமாக.

உதவிக்கு பாட்டி தாத்தா  வந்தார்கள்.
மாப்பிள்ளையின் அன்பும் ஆதரவும் அவர்களுக்கு அபரிமிதமாகக்
கிடைத்தன. கணேசனின் உத்தியோகம் உயர்ந்தது.
கைகளில் பணம் சேர்ந்ததும் அவர் கொடுத்து வைப்பது கோமளாவிடம் தான்.

அடுத்த பத்துவருடங்களில் பிள்ளைகள் வளர்ந்து கல்லூரி சேர்ந்தனர்.பெண்களுக்கு வேண்டும் என்கிற பாத்திர பண்டங்கள்,நகைகள் எல்லாம்  கோமளவின் முயற்சி.
அவருக்கு ஒரு கவலை இல்லாமல் வாழ்க்கை ஓடியது.

அடுத்த பத்து வருடங்களில் திருமணங்களும் முடிந்தன.

அத்தனையும் கோமளாவின் சாமர்த்தியம்.

திருச்சியில்
.
புதுவீடும் கட்டி கிரஹப்  பிரவேசம் நடத்தினார்கள்.
பெண்கள்,அவர்களின் பிரசவங்கள் எல்லாவற்றையும்
அலுக்காமல் செய்து கொண்டாடினாள் .
முதல் மகனுடன் திருச்சியில்  குடும்பம் தொடர்ந்தது.

யாரையும் கடிந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டாள்.
அவரது   அறுபதாவது வயதில் ரிட்டையரான கையோடு ஷஷ்டி அப்த பூர்த்தி ஆனது.

குடும்ப வழக்கப்படி அனைவரும் திருப்பதி
சென்று   வந்தவளுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி .

பொறுக்க முடியாத நிலையில்
ஆஸ்ப்பிட்டலுக்குப் போக வேண்டி வந்தது.

டாக்டர் கொடுத்த இன்ஜெக்ஷனில் கொஞ்சம் தூங்கினால்.
கணேசனைப் பயம் சூழ்ந்தது.

ஒரு விதத்திலும் முகம் சுளிக்காதவள், இப்படி த்தவித்துப் போகிறாளே  என்ற யோசனையில் இரவு கழிந்தது,.

இரண்டு நாட்கள் பூரண பரிசோதனை செய்ததில்
வயிற்றில் டியூமர் இருப்பது தெரிந்தது.
அடுத்தது பயாப்சி.

அவர்கள் நினைத்திராத வகையில் தீர்ப்பு.
புற்று நோய்.
இரண்டாவது ஸ்டேஜ்.
கீமோ  உதவலாம். போகப் போகத்தெரியும்.
கோமளம் இதை எல்லாம்   கண்டு அதைரியப் படவில்லை.

வியாதி வரும், போகும். எல்லாம் சரியாகிடும் பாருங்கள் என்று வீடு திரும்பிவிட்டாள் .

உடம்பு இழைத்தது.
இருந்தும் தன வழக்கமான வேலைகளை செய்து
கொண்டிருந்தாள்.
 முடியாத பொது படுத்துக் கொள்வாள்




இரண்டு வருடங்கள் போராடினாள் .
 சிரிப்பு மாறத முகத்தோடு,
மிகவும் முடியாத நிலையில்
தன்னிடம் இருந்த நகைகள் ,சிறந்த பட்டுப் புடவைகளை மனதார
பெண்களுக்கும் மருமகள்களுக்கும் பிரித்துக் கொடுத்தாள்.
 அதே பச்சைப் புடவை,சிகப்பு ரவிக்கையுடன்
 துளிக்கூடக் கறுக்காத தலைமுடி காற்றிலாடிக் கணேச சர்மாவைக்
கலக்கத்தில் ஆழ்த்த ,
மருமகள்  வாயில் ஊற்றிய கங்கை ஜலம் கடைவாயில் வழிய
 இறைவனை நோக்கிப் பயணித்து விட்டாள்.

ஒரே ஒரு ஆசை அவள் பட்டது, இந்த ஈரோடு பெருந்துறைக் குளியல்.
குடும்பம் ,குடும்பம் என்று யந்திரமாக, மகிழ்ச்சியான யந்திரமாகச் செயல் பட்டாலும்,
அவள் ஆசைப் பட்டது இந்தக் குளியலுக்கும், திருக்கடவூர் அபிராமி தரிசனத்துக்கும் தான்.

நிறைவேற்ற முடியாமல் எது தன்னைத் தடுத்தது என்று
யோசித்துப் பார்த்தார் சர்மா.
 ஒரு நிமிடத்தில்  நினைத்து,அடுத்த நிமிடத்தில் எல்லோரும் எங்கே எல்லாமோ போகிறார்களே.
தனக்கு ஏன் அவள் தாபம் புரியவில்லை.
   அவள் ஏன் என்னை வற்புறுத்தவில்லை. ஏன் இப்படி அடங்கீப்
போனாள். இன்னோரு ஜன்மம் அவளைப் போலக் கிடைக்குமா.
நாற்பது வருட வாழ்வில் ,ஒரு  நாள் கூட அலு த்தது கிடையாது.
ஒரு மனஸ்தாபம்  கிடையாது.

  எனக்காகத் தன் வாழ்க்கை முழுவதும் அர்ப்பணித்தாளே.
 குள்ள உருவமானத் தன்னைக் கம்பீர புருஷன் வரித்ததாலா.
 குழந்தைச் செல்வங்களும், மாடும் மனையும் கிடைத்ததாலா.

இப்போது இந்தக் கலசத்தில் அடங்கி விட்டாளே.
  இனியாவது அவள் இந்தக் காவிரித் திரிவேணியில் சங்கமிக்கட்டும் என்று
புதல்வர்களின்  உதவியோடு கண்ணில் பொங்கும் பிரவாகத்தோடு
//போய் வா கோமளி,
 அடுத்த ஜன்மம் உனக்கும் எனக்கும் உண்டு.
அனைத்துப் புண்ணியத் தலங்களுக்கும் போவோம்// என்று
நா குழறச் சொல்லியபடி படித்துறையில் அமர்ந்தார்.

மனமாரப் பழைய நினைவுகளில்  மூழ்கக் கைகளால் கண்களை மூடிக் கொண்டார்.
கால்களை மெல்லத்தடவியபடி காவிரி ஓடினாள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



Add caption

திருமண வைபவம் 1978 May 14.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 மே 12  ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகாபலிபுரத்தில் பந்தக்கால் நடவேண்டும்
என்று அப்பாவுக்கு ஆசை.
பெண்ணகத்தில் தானே இதை செய்வார்கள் அப்பா என்று கேட்டால்
அதெல்லாம் பரவாயில்லை. உன்  கல்யாணத்துக்குச் சத்திரத்துக்குப் போய்விட்டொம். இங்கே
பந்தல் போடவேண்டும்
என்று ரங்கனை அழைத்தார்.
அவனும்
அம்மாவுடைய  மிளகாய்ப் பொடி இடிக்கும்
உலக்கையைக் கொண்டு வந்தான்.

சிங்கமும் அவனும் ஒன்று சேர்ந்து நிமிஷத்தில் வாழைமரம்
 கட்டிப் பந்தல் போட்டு விட்டார்கள்.
அன்று அம்மா மங்கலிப் பொண்டுகள் செய்யவேண்டும் என்று அக்கம்பக்கத்தில் தெரிந்த ஐந்து பெண்களைக் கூப்பிட்டிருந்தார்.

இது முதல் பிரார்த்தனை என்று என்னிடம் சொன்னார்.
அன்று எனக்குத் திருமணத்துக்கான பட்டுப் புடவையை பவேற்றிலை மஞ்சள் குங்குமம் வைத்துக் கொடுத்து, பேத்திக்குப் பட்டுப் பாவாடையும் கொடுத்தார்.

அடுத்த நாள் எல்லோரும் டாக்சி எடுத்துக் கொண்டு சென்னைக்குக் கிளம்பினோம்.
அம்மாவுக்கு நல்ல தலைவலி.
எல்லாவற்றுக்கும் பயந்து நயந்து காரியம் செய்யும் அம்மா,
அப்பாவின் உடல் நிலையை மன்சில் கொண்டு சிந்தித்திருப்பார் என்று இப்போது தோன்றுகிறது.

திருவிடந்தை கோவில் வந்ததும், அந்த வராஹ பகவானையும்
சேவித்துவிட்டு மதியம் , திருமலை திர்மணக்கூடத்துக்கு வந்தோம்.
நல்ல பெரிய இடமாக இருந்தது.
 மிக உத்சாகமாக வரவேற்பு.
என் மகள் மாமாவை விட்டு நகரவே இல்லை.
திருமணக் கூடமெங்கும்  பெரிய பெரிய கோலங்கள். மணம்கள் வசந்தியின் தங்கை
ஜெயந்தி போட்டது.

அந்தப் பெண்ணைச் சென்று பார்த்து பாராட்டினேன்.
அந்தக் குடும்பத்தில் மூன்று சகோதரர்களும் நான்கு  சகோதரிகளும்.
நிறைவாகச் செய்தார்கள் திருமணத்தை.
நாத்தனாராக நானும் என் பங்குக்கு,  புடவை, ஹாண்ட்பாக், அலங்காரப் பொருட்கள்
வாங்கி வைத்திருந்தேன்.
சர்க்கரையில் ராகவன் வெட்ஸ் வசந்தி எழுதியது இப்பொழுதும் நினைவில் இருக்கிறது.
எங்கள் வீட்டிலிருந்து நாத்தனார்களும் அவர்களது கணவ்ர்களும்
வந்து சிறப்பித்தனர்.
அப்பாவின் நண்பர்கள், மாமாக்கள் அவர்களது குடும்பம்,
அத்தை, எங்கள் பாட்டி என்று உற்சாகமாகச் சென்றது நேரம்.

திருமணம் முடிந்த கையோடு மணப் பெண்ணை அழைத்துக் கொண்டு
மஹாபலிபுரம் வந்துவிட்டோம்.
அவர்கள் இருவருக்கும் தனி வீடு ஒதுக்கிக் கொடுத்தார் அப்பா.

மாமியின் அழகில் மயங்கி அவளையே சுற்றி வந்தாள் பெண்.
ஐந்து நாட்கள் சென்று நாங்கள் கிளம்பினோம்.
 அடுத்த ஐந்து நாட்களில் அப்பா அம்மா துணையோடு கல்கத்தா குடித்தனத்துக்கு முரளியும் வசந்தியும்
புறப்பட்டார்கள். சுபம்.

Monday, May 14, 2018

Posts and Post office kids

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 My entire intro to Western music (1966-the year of my entry to IIT) was courtesy Simmu and his great collection of LPs that were unique, starting with Cliff Richard, Inglebert Humpherdink.the one and only Tom Jones, not to leave out the Jazz and trumphet master (Eddie Calvert?), and of course Dean Jones.

Every time I used to be asked by Thatha to escort Rev (from Karaikudi)  to drop her at Pudukkottai, my fascination to his music collection used to become an obsession. ...   . After getting hooked to his music collection, the first item that I bought from my first salary in Bata in Calcutta (1971) was an HMV stereo system (I think I had to save  a few months' salary to be able to purchase this...Coming to think of it, this obviously was not the first essential article that I needed, but at 21, I must have been wet behind the ears) ..I also bought a few Tom Jones LPs and Quincy Jones soul music. But in my mind, Simmu's collection was a rare one of its kind.

.affly..Murali 

Hi Murali,  you left out Roberta flock,The ventures,Inxs,  hey Jude., IIT fame Mrs Robinson,  Goodtimes.Goodmusic was enough to make us happy.You brought out the new music. we had the old ones. Rangan liked all the drum beats  like Teqila and La bomba..He wanted to become Banjos player.

It was Dean martin dear brother. Dean Jones  cricket. :))))
affly,
rev. 

Yes,of course, can not forget "The Graduate"movie, and Scarborugh affair, & the one and only Mrs Robinson, those were IIT songs, and we saw the movie in the Open air theatre, with all the whistling and howling typical of student crowd. Roberta Flack was another, and The Beatles,..and ""To Sir with Love "" the variety was endless. What is between Martin and Jones? But u are right, That was the craze of music of those times. You used to listen to Radio Kuwait for western music, is itn't?..Murali 






 hi Goodevening Murali. yes  In chennai  it was voice of America..Then in Trichy it was Kuwait,Ceylon  and BBC.THen back to Madras B for western music. I borrowed The Graduate from the library ,but  could not get to see  it. Was listening to radio australia for sometime. Crazy times..But thanks for reminding me. Martins is dead and Jones is back to his farming days.thats the difference:)

தம்பி முரளியின் திருமண நாள் இன்று. 1978

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 ஐஐடியின் 4
 வருடங்களும் மெதுவாகவே நகர்ந்தன.
எனக்கும் மூன்று முழந்தைகள் பிறந்தன.
ஒவ்வரு குழந்தை பிறக்கும் போது இரண்டே நாட்கள்
வந்து பார்த்து விட்டுப் போவான்.

அவன் தேர்வு முட்யும் போதே அவன் புகழ் பெற்ற
பாட்டா கம்பெனியில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பட்டான்.
அப்பா அம்மாவுக்குக் கவலைதான்

முதலில் பயிற்சி ஃபரீடாபாடில்.
ஆறுமாதங்கள் முடிந்ததும்  கல்கத்தாவில் வேலை ஆனது. அவனுக்கு மிகப்ப் பிடித்துவிட்டது
கல்கத்தா.
ஆறுமாதங்களுக்கு ஒரு முறை வந்துவிடுவான்.
கல்கத்தவில் என்ன எல்லாம் கிடைக்குமோ,
அத்தனையும் பெட்டிரில் வந்து விடும்,
குழந்தைகள் கால் அளவு வருடா வருடம் எடுத்துப் போய் எக்ஸ்போர்ட்
 தரத்தில் பூஜா ஹாலிடேஸ்  போது வந்துவிடும்.

பெண்களுக்கு வேண்டிய அத்தனையும் புடவையோ இன்னும் என்னவோ
எல்லாம் ,முர்ஷிதபாத் பட்டு முதல் கொண்டு வாங்கி வந்துவிடுவான்.
திருச்சி வீடே அல்லோலகல்லப் படும்.
 புதுப்புடவை ,செருப்பு சகிதம் ஹோட்டல் சங்கம் சென்று
 இரவு சாப்பாடு முடித்து வருவோம். நான்கைந்து.
நாட்கள் கழிந்ததும் கல்பாக்கம் செல்வான்.

எனக்கோ அவன் சென்னைக்கு மாற்றி வந்துவிடமாட்டானா
என்று இருக்கும்.
இதற்கிடையில் ரங்கனுக்கு சென்ட்ரல் எக்ஸைசில் வேலை கிடைத்தது.
முரளிக்கு 27 வயதாகியது. பெண் பார்க்க வேண்டியதுதன் என்று
அம்மா அப்பா தீர்மானித்தார்கள்.
 அவனுடைய ஜாதகத்துக்குப் பொருத்தமான பெண் பாட்டி
வீட்டுக்குப் பக்கத்திலியே இருந்தாள்.
குடும்பம் பெரியது.
எங்களுக்குப் பார்த்துப் பிடித்துவிட்டதுடா நீ வா என்று தொலைபேசியில் சொன்னோஓம்.
அவனுக்கு என் மேல் அத்தனை நம்பிக்கை.
ஒரு பெண் தான் பார்ப்பேன். அவளையே தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று
என்னிடம்  முதலிலேயே சொல்லி இருந்தான்.
 பெண் வசந்தி பார்த்ததுமே மனதை ஆட்கொள்ளூம் இனிய குணம் அழகு,அடக்கம்
எல்லாம் கொண்ட பெண்ணாக இருந்தது தான் அமைப்பு.
திருமணத்தேதி நிச்சயம் செய்து விட்டு, அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு
கல்கத்தா சென்றுவிட்டான்.
அம்மா அப்பாவுக்கு இனிய பயணமாக் அமைந்தது.
அங்கிருந்தே புபனேஸ்வர், ஆக்ரா,என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்றான்.

பெட்டி நிறையத் திருமணத்துக்குத் தேவையான சின்ன பொருட்களை
வாங்கி வந்தனர்.
மே 14 ஆம் தேதிக்கு முஹூர்த்தம்.
பத்தாம் தேதியே மாப்பிள்ளை வந்துவிட்டார். எல்லொரும்
திருமணத்துக்கு வருமாறு அக்கா அழைக்கிறேன்.

Sunday, May 13, 2018

என் அம்மா...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

1964  இல் ஒரு நாள்.
ஒரு வாரமாக இருப்புக் கொள்ளவில்லை. அப்பாவின் கடிதம்
பார்த்ததிலிருந்து, தோழிகளிடம் சொல்லி சரிப்பா போறும். உங்க
அம்மா க்ரேட் தான். நாங்க வந்து பார்க்கிறோம்
என்று விட்டனர்.
 அந்த நாளும் வந்தது.
எக்மோர் ஸ்டேஷன். புகை,காலைப் பனி என்று ஒரே புத்துணர்ச்சியான சூழ்னிலை. மாமா
என்னை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.
ரயிலும் வந்தது
அம்மா முகம் தேடிக் கண்டு பிடித்தாச்சு.

ரிப்பன் கட்டாத பின்னலை, முன்னால்
போட்டுக் கொண்டு, வெளையில் சாம்பல் வண்ண பூக்கள் தூவின
கடாவ் புடவை, அதே சாம்பல் கலர் ரவிக்கை.
ஒரு கை வளையல் ஒரு கை வாட்ச், காதிலதொங்கும் வட்ட ரிங்க்,
காத்தில பறக்காத மேலாக்கு.
அப்படியே அம்மாவை அசத்தணும் என்கிற நினைப்பு
என் முகத்தில் தெரிந்து இருக்க வேண்டும்.
முகம் கொள்ளாத புன்னகையோடு இறங்கி வந்து
கைகளைப் பிடித்துக் கொண்டார்.

அவரது குறும்பான சிரிப்பு இன்னும் நினைவில் இருக்கு.
ஆளே மாறிட்டாப்பல இருக்கு, நம்மா ஆண்டாள் தானா இது
என்று இருவரும் கை கோர்த்தபடி,
நான் பேச அவர் கேட்க
புரசவாக்கம் வந்து சேர்ந்தோம். என் அம்மாவும் நானும்.
அனைத்து அன்பு அன்னையருக்கும் வாழ்த்துகள். என் படம் என் அம்மாவுக்காக.










Saturday, May 12, 2018

அன்பு முரளி இரண்டாம் பாகம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

          தம்பி முரளியும் அவன் வெள்ளை சட்டையும்
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 திருமங்கலம் 1956.

நானும் தம்பி முரளியும் முறையே மூன்றாம், இரண்டாம்
வகுப்பில் ,கஸ்தூரிபாய் காந்தி ஆதாரப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம்.

சலவைத் தொழிலாளி வீட்டுக்கு வந்து அப்பாவின் வேட்டிகள்,சட்டைகள், படுக்கை விரிப்புகளை மட்டும் எடுத்துப் போவார். ஒரே ஒரு தடவை தம்பியின்
வெள்ளை சட்டையை ,ஏதோ கறை நீக்க அவ்ரிடம் அம்மா
கொடுத்துவிட்டார்.
தம்பிக்கு மிகப் பிடித்த சட்டை.
சட்டை வந்துடுத்தாம்மான்னு கேட்டுக் கொண்டே இருப்பான்.

ஒரு வாரத்தில் கொடுப்பார்.அதில அழகா ஓரமா புள்ளி வச்சிருக்கும் பாரு
என்று சமாதானப் படுத்துவார் அம்மா.
அடுத்த நாள், அவனுடைய தோழனே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டுவந்தான்.
அவ்வளவுதான் இவனுக்கு ஒரே கலக்கம். என் சட்டையைக் கொடு  என்று அவன் பின்னாலியே சுத்தவும், பள்ளியை விட்டு ஓட ஆரம்பித்துவிட்டான் அவன்.
அவன் ஓட ,இவன் ஓட, இவன் பின்னால் நான் ஓட
 ஒரே குழப்பம். முரளி அந்தப் பையனை விடுவதாக இல்லை.
இரண்டு பர்லாங்க் போயிருப்போம். அங்கே போய் நின்ற பையனின்
வீட்டிலிருந்து வெளியே வந்தார் நம் சலவை செய்பவர்.
என்ன சாமி இங்க வந்திருக்கீங்க என்று வாஞ்சையோடு கேட்டவர்
தன் மகனையும் பார்த்தார். புரிந்துவிட்டது.

அடிக்கப் போனவரிடம் ,மனைவி வந்து தடுத்தார்.
நான் தான் போட்டுவிட்டேன். நீ அவனை அடிக்காதே.
என்றதும் அவர்,
என்னிடம்  நீங்க போங்க சாமி, நான் சட்டையைத் தோய்ச்சுக் கொண்டு வரேன்,
என்றார்.
இவனோ நகர மாட்டேன் என்கிறான். நல்ல வேளையக அங்கே எங்கள் தெருவிற்குத் தேங்காய் மிட்டாய்  கொண்டு வருபவர்
பஞ்சு மிட்டாய்க் கொண்டு வரவும்,
அம்மா கொடுத்த பத்து பைசா..என்னிடம் இருந்ததனால் ,ஒரு குச்சி வாங்கி இவன் கையில்
கொடுத்துக் கவனத்தைத் திருப்பி
வீட்டிற்கு அழைத்து வந்தேன்.
அம்மாவுக்கு ஒரே பெருமையும் சிரிப்பும்.
எனக்கு கோபம். அப்படியே ஓடறான் மா தெருவில. மாட்டு வண்டி வந்தால் என்ன செய்யறது.
பஞ்சு மிட்டாயை அவனுக்குக் கொடுத்துட்டேன்.
எனக்கும் வேணும்மா என்றதும் அம்மா சமாதானப் படுத்தினார். வாங்கிக் கொடுத்தார்.

 மிகவும் மன்னிப்புக் கேட்டபடி வந்த சலவைக்காரரிடம்
சட்டையை வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு,
முரளிக்கு வேற ஒரு வெள்ளை புஷ் ஷர்ட் வாங்கினது இன்னோரு கதை.

அப்பா எனக்கும் அவனுக்கும் ட்ராக்கர்ஸ் என்று பெயர் வைத்தார்.

1992 ல  42 வயதில் அவன் பைபாஸ் செய்து கொண்ட போது அவனை சிரிக்க வைக்க நான்
 சொன்ன சம்பவங்களில் இதுவும் ஒன்று

என் முதல் தம்பி முரளி 1950 /2017

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

   அழகிய கண்ணனாக முரளி பிறந்தது 1950 ஜூன் 10 ஆம் தேதி.
இரண்டு வருடங்கள் இளையவன் எனக்கு.

அப்போதிலிருந்து அடுத்த தம்பி பிறந்தும் எங்கள் தோழமை
    நெருக்கமாகத் தான் வளர்ந்தது.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவன் தங்க மகன்.

இருந்த அசட்டுத்தனத்துக்கெல்லாம் நான் வாரிசு என்றால்,
அவன் சமத்துக் குழந்தையாகவே வளர்ந்தான்.
சின்னவன்  விஷமம் சொல்லி முடியாது.

படிப்பில் முரளி முதல், ஒரு நாள் லீவு போடமாட்டான்.
முதல் வகுப்பிலிருந்து 11 ஆம வகுப்பு வரை முதலிடத்தை விடவே இல்லை.

நான் அப்படி இல்லை. சின்னவன் படிப்பிலும் சுட்டிதான்.
என் திருமணமும் ,முரளியின் ஐ ஐடி படிப்பும் 1966இல் ஆரம்பித்தது.
மதுரையிலிருந்து வந்த 16 வயதுப் பாலகன் முகம் இன்னும் நான் மறக்கவில்லை.

 ஐஐடி ஹாஸ்டல்.படிப்பு கற்றுத்தரும் முறை எல்லாம்
பழகவே அவனுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தது.
வேறு வேறு மொழி பேசும் மாணவர்கள்.
 அதிருப்தியே காட்ட மாட்டான். தங்கியிருந்த
அறையில் பாம்பு பார்த்ததும் தான் பயந்துவிட்டான்.

நல்ல வேளை எங்கள் அம்மாவின் அம்மா,மாமாக்கள்
சென்னையிலிருந்ததால், மாதம் ஒரு முறை
 மேற்கு மாம்பலம் சென்று வந்து விடுவான்.
நான் எங்கே இருக்கிறேனோ அங்கே லீவு நாட்களைக் கழிக்க வருவான்.
பிறகுதான்  மதுரை. இன்னும்  நான்கு பகுதிகள் அவனைப் பற்றி எழுதி முடித்து விடுகிறேன்.
67 பாகங்கள் எழுத விஷயங்கள் இருக்கின்றது. என் மன நிம்மதிக்காக எழுதுகிறேன்.

letters from the past.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Dear Rev
Your analysis is not far off the mark. Professional life does have an impact on the way men-folk behave with family (me not excluded). Decisions are made in business-like manner. A good understanding wife (home-maker) used to compensate for some of the always-busy, somewhat aloof  outlook of the husbands. But now things are different.
 Cheer up, try and not analyse matters too much.
 . ..affly..murali


Raghavan Narayanan
5/20/14
to me
Dear Rev
The more I think the more I feel that we should in some way be able to influence the next generation in our family to develop care, compassion and empathy..to their families, and also aim for some noble objectives in life. It can be charity in the conventional sense,  gratitude to the Lord for having blessed us this far or other similar things. Importantly they should develop a strong sense of detatchment to money, and look at life in simplistic earthly terms.That is how our parents conducted their lives and we should learn from them, and slowly start practising them. I know that I may be sounding weird when I say this, and will be strongly challenged on this notion, but that should not stop us from sharing our thoughts, ..It may ring a bell one day ..affly..Murali.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
revathi narasimhan
5/19/14
to Raghavan
Dear Murali,
After I reach madras one of the important work is to safe guard all the letters. They have aged a lot.  bagavath sangalpam.   When you read Amma.s  lettes  you will find mild emotion in control, never a strong word,even if she had to write about appa.s  ulcer  she will put it so mildly  after he has recovered. even then it used to jolt me.
 Wonderful souls. Viju   knows  more of Paatti^s   grand attitudes. she will tell me offhandedly   about my  drawbacks   compared to her.
well liffe can bless you   in oneway.We were blessed  with  love and affection   unlimited freedom   and    unconditional     support.

romba puNNiyam paNNi irukkom  pona janmaththil.
Thank you Murali.
+++++++++++++++++++++++++++++++++++++++++++


Raghavan Narayanan
5/19/14
to me
Dear Rev
Very sensitive touch from Amma as always, super intelligent comments from a loving mother on her innocent daughter. You have to wonder where she learnt to communicate so powerfully in such a crisp language.
Thank you dear Rev for bringing out the Amma and Appa that we did not know enough! At least I did n't. Pray God and our parents give us their anugraham to develop at least a fraction of their character and sensitivity
 so we can be of some use to others for the reminder of our current lives..affly..Murali 

++++++++++++++++++++++++++
Dear rev
Sajjan and myself visited Mylapore home today (Next to our home (and our office), this is the place we have visited most number of times and more frequently ).  The lawn looked neat without any litter and looked well watered too. The watchman and his wife were there and were quite cheerful. He said that the house inside was probably cleaned thrice so far. The person who is supposed to tend the lawns did not turn up and the watchman's son is going to cut the excess growth on the plants above the parapet wall tomorrow. He also said that he will ask his son to pluck the mangoes (I did not see too many) tomorrow, and I can collect them. Let me know to whom this is to be sent. shall I ask him to take these to Patha's place?. The walk area around the house also looked neat. Sorry, forgot to take the camera and so could not take pictures. My eyesight is still good, so you can trust my story!

Wednesday, May 09, 2018

ஜானா வேணு கதை 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பாட்டிக்கு வலிக்குமா தாத்தா என்று கண்ணில் நீரோடு
தன்னைப் பார்க்கும் நவியை அணைத்துக் கொண்டார். கொஞ்சம் வலிக்கும்மா. சரியாகிடும். இதோ வந்துடுவாளே பாட்டி, என்று சொல்லித் தன்னையும் ஆறுதல செய்து கொண்டார்.
நேரம் தான் ஆச்சு. போனவர்களைக் காணவில்லை.
 வாசல் கராஜ் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும்
தன்னைச் சமாளித்துக் கொண்டு மகனை உள்ளே அழைக்கக் கதவைத் திறந்தார்.
அம்மா நல்ல காப்பி கொடும்மா என்றபடி உள்ளே நுழைந்த
கிருஷ்ணன், மகளைப் பார்த்ததும் திகைத்தான்.
இன்னிக்கு அவள் பாட்டு வகுப்பு செல்லணுமே
ஏன் பா போகவில்லை.

அம்மா எங்கே என்று கேள்வியை அடுக்கினவுடன், உட்கார வைத்துக்
காப்பி போட்டுக் கொடுத்தார்.
அம்மாவுக்கு லேசா கையில ஃப்ராக்ச்சர் இருக்கும் போல
இருக்கும் பா.
ஸ்கூலில் இருந்து வரும்போது தடுக்கி விழுந்துவிட்டாள்.
லீலா நாயர் டாக்டர் ரிச்சர்ட்ஸ் ஈ ஆருக்கு அழைத்துப் போயிருக்கிறாள்.

இதோ வந்துவிடுவார்கள்.
கையிலயா அடி. வேலை எல்லாம் யார் செய்வது.
இதோ ராத்திரி டின்னர் .செய்யணுமே.
ஏண்பா இப்படி கேர்லெசா  அம்மா இருக்கா என்று
படபடத்தான்.
மீண்டும் கராஜ் கதவு திறக்கும் சப்தம் கேட்டது.
 மருமகள் லதா வந்தாள்.
ஆர் யு ஷௌட்டிங்க் பை எனி சான்ஸ் க்ரிஷ்
என்றபடி நுழைந்த மருமகளைப் பார்த்து ஆறுதல் அடைந்தார்.

லீலா நாயர் எனக்கு ஃபோன் செய்தா அப்பா.
பயப்படதீங்கோ.
 சுலபமான காஸ்ட் தான் போட்டிருக்கிறார்கள்.
ஸ்கான் எல்லாம் செய்தாச்சு.
ரத்த அழுத்தம் அதிகமா இருக்கிறதுனால அம்மா
அங்கே இன்று இரவு அங்கே இருக்கட்டும்.
நாளை நானே அழைத்து வருகிறேன் என்று முடித்தாள்.

அப்பா, அம்மாவோடு பேசுங்கள். லீலாவின் மொபைலில் பேசலாம்.
 நீங்களும் இரவு அங்கே தங்கலாம். சாப்பிட்டுவிட்டுக் கிளம்புங்கள்.
நான் இங்கே பார்த்துக் கொள்கிறேன்.
இனி அம்மா உங்கள் பொறுப்பில்.
அண்ட் க்ரிஷ், டின்னர் பிரச்சினை இல்லை.
நீங்கள் பதட்டப் படவேண்டாம்.
 நாளையிலிருந்து எனக்கு ஒரு வாரம் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நவி ,பள்ளி,பாட்டு, ஜிம்,டான்ஸ் எல்லா வகுப்புக்கும் நீங்கள்
அழைத்துப் போகிறிர்கள்.
இந்த ஊரில் சாப்பாடு பெரிய கஷ்டம் இல்லை. காலைப் பொழுதில் வந்து சமையல் செய்ய குஜராத்தி அம்மாவை ஏற்பாடு செய்யலாம்.

அவர் தேவையானதைச் சமைத்து வைத்துவிடுவார்.

குட்டி நவி இங்க வா செல்லம். பயந்துட்டியா.
பாட்டி பாரு. இன்னும் நிறைய கதை சொல்வா. உனக்கென்ன
ஜாலிதான் என்று சொன்னதும் குழந்தையின் முகம் மலர்ந்தது.

அப்பா என் ப்ரியஸை  எடுத்துக் கொள்ளுங்கள்.
 உங்க பொறுப்பு.
க்ரிஷ் நாம் மூவரும் போய்  இரவு சாப்பாடு வாங்கி வரலாம். அப்படியே அம்மவுக்கும் கொடுத்துவிட்டு வரலாம்.
பாவம் வலது மணிக்கட்டு எவ்வளவு வலிக்கிறதொ
என்று சொன்னவளின் முகம் சிவந்தது.
க்ரிஷ்ணனுக்கு  யாராவது தன்னைப் பளார் என்று அறைந்தால் கூடத் தேவலை  என்று தோன்றியது.
வந்த மருமகளுக்கு இருக்கும் வாத்சல்யம் தனக்கு இல்லையே
  என்று வெட்கப்பட்டான்.
வேணு நல்ல காப்பி போட்டு எடுத்துக் கொண்டார். ப்ரியஸ் கார் சாவியை எடுத்துக் கொண்டு ,மருமகள் அருகில் வந்து அவளை மிருதுவாக அணைத்துக் கொண்டார்.
 அடுத்த சில நொடிகளில் வண்டி புறப்படும் சத்தம் கேட்டது.

மருமகளின் அன்பு கவனிப்பில்  இரண்டு வாரங்களில்
கட்டு நீங்கி பழைய நிலைமைக்கு வந்து விட்டாள்  ஜானா.
இனி  எல்லாம் சுபமே.💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
கூகிள்  உபயம்  திருக்குறுங்குடி வீதி 💕💕💕💕

மதுரையில் ஒரு சித்திரை தங்கல் 6

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

    அன்று மதியம் தாத்தா காப்பி குடித்துவிட்டு, எங்கள் இருவருக்கும் பிஸ்கட்
,பேரீச்சம்பழம் கொடுத்துவிட்டு,
 நிமிரவும்,
வண்டி ஓட்டி மாயாண்டி, ஐயா கார் கொண்டு வந்துவிட்டேன் என்று பணிவாகச்
சொல்லவும் சரியாக இருந்தது.

இதோ வரேன் என்று ,சட்டை போட்டுக் கொண்டு, உத்தரீயத்தையும்
அழகாகப் போட்டுக் கொண்டார்.
பாட்டி தயங்கித் தயங்கி அருகே போனார்.
அக்காவிடம் நான் யாருக்கும் சிபாரிசு செய்யப் போவதில்லை.
என்று பட்டென்று சொன்னார் தாத்தா.
இல்லை, ரங்கத்தின் கடைசிப் பையன் படித்து முடித்து
விட்டான். அவனுக்கும் மதுரையில் வேலை கொடுத்துவிட்டால்
அவன் வழியைப் பார்த்துக் கொள்வான்.
என்று பாட்டி முடித்தார்.

யாராவது மானேஜர் கண்ணில் பட்டால் சொல்கிறேன் . அவர்களுக்கு வாக்குக் கொடுத்துடாதே
என்று கறாராகச் சொல்லிவிட்டு
முரளியை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

ஊரார் வீட்டுப் பிள்ளையை வளர்த்தால் நம் குழந்தைகள் நன்றாக இருக்கும்னு சொல்வார்கள்
என்று முணுமுணுத்தபடி என்னை பின் கட்டுக்கு அழைத்துச் சென்றார்.
உரலை முதலிலேயே அலம்பி வைத்திருந்தேன்.
பாட்டி வந்து குழவியை அல்ம்பி முதலில் ,உளுந்தைக் களைந்து போட்டார்.
அரிசி போடலையான்னு நான் கேட்டதுக்கு,
இதுதான் நன்னா அரை படணும் ஆண்டா. இட்லி மெத்துனு இருக்கணும் இல்லையா
என்று திருக்குறுங்குடி கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

எப்படித் தன் தந்தை வயலில் பாடுபடுவார். பாட்டியும் தன் தங்கைகளும், தங்கள்  அம்மாவுக்கு ,
அந்தப் பாட்டிக்கு  தலைசுத்தல் வருமாம்
உடனே இஞ்சியை அம்மியில் படபடவென்று  தட்டி த் தலையில்  தடவிக் கொள்வார் என்று  செய்து காண்பித்தார்

சமையல் உதவி அப்பளம் இடுவது எல்லாம் சொன்னார்.
மகேந்திர மலையிலிருந்து  எப்படி  அனுமார்  ஸ்ரீலங்காவுக்குத் தாவிச் சென்று சீதையைப் பார்த்தார்,
எப்படி தென் கோடியில் இருக்கும் திருக்குறுங்குடியில் பேசினால் சித்ர குப்தனுக்குக்
கேட்கும்.
   அதனால் எப்பொழுதும் நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும் என்றும்
அறிவுரை சொல்லி முடிக்கவும், உளுந்து அரைபட்டுப்
பந்து போல உருண்டு வரவும் சரியாக இருந்தது.
அந்த உருண்டு வந்த மாவில்  பபிள் வரதான்னு பாருன்னு அன்று சொன்னதை நான் இன்னும்
மறக்கவில்லை.

தாத்தாவும் முரளியும் வரும்போது  சாயந்திரம் ஆகி இருந்தது.
முரளி கையில் பெரிய பிஸ்கட் டப்பா.
அவன் கண்களில் அதீதப் பிரகாசம் தான் பார்த்து வந்த
அதிசயங்களை என்னிடம் விவரித்தான்.
அது பெரிய பங்களாவாம். எல்லா இடமும் வெள்ளை வேளேர்னு இருந்ததாம்.
வீட்டுக்கு முன்னால் ஒரு குட்டிக் குளமாம்.
அதில் தங்க வர்ண மீன் களாம்.

தாத்தாவோட அக்கா  செக்கச் செவேல்னு எப்பவும் சிரித்தபடி இருந்தாராம்.

தாத்தாவுக்குத் தன் பேரனின் சமர்த்துப் பேச்சைக் கேட்டு
ஒரே மகிழ்ச்சி. ஜயாவும், நாராயணனும் நன்றாக வளர்க்கிறார்கள்.
சொன்ன இடத்தில் அசையாமல் உட்கார்ந்து இருந்தான்.

அடுத்த இரண்டு நாட்கள் சீக்கிரம் சென்று விட்டன.
 நானும் பாட்டியும் மீண்டும் டவுனுக்குப் போய் வந்தோம்.
வெள்ளி  சாயந்திரம் வந்த அப்பாவிடம் சொல்ல நிறைய விஷயங்கள்
இருந்தன.  பாட்டி,நார்த்தங்காய், சுண்டைக்காய்,மணத்தக்காளி  எல்லாம் காகிதத்தில் வைத்து கயிறு கட்டிக்க கொடுத்தார்.
கசப்பு சமாசாரம்டா நாராயணா .  இரண்டணா  கொடுத்துட்டு  வாங்கிக்கோ
 என்று சிரித்தார்.
அடுத்த நாள் எனக்குக் கிடைத்த தாழம்பூவையும், மணி மாலைகள்
பட்டுப் பாவாடை எல்லாம் வைக்க ஒரு பெரிய பையும் கிடைத்தது.

மனசில்லாமல் தாத்தா பாட்டியிடம் விடை பெற்றுக் கொண்டு
,திருமங்கலம் வந்து சேர்ந்தோம்.
சித்தப்பா ஜீப்பில் கொண்டு விடுவதாகச் சொன்னதை அப்பா ஏற்கவில்லை.
வாரம் பூராவும் உழைக்கிறாய். ஓய்வு எடுத்துக்கோ.
லக்ஷ்மி அக்கா வந்த பிறகு பார்க்கலாம்.

இதுகளும் அதற்குள் மதராசுக்குச் சென்று வந்துவிடும் என்றதும் எங்களுக்குப்
பழைய மகிழ்ச்சி தொத்திக் கொண்டது. ஆஹா இன்னோரு பயணம்.
 சுபம். கூடத் தொடர்ந்து
வந்த அனைவருக்கும் நன்றி.
தாத்தா