Saturday, May 26, 2018

வாழ்க்கையின் குரல் 7

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 சந்திராவுக்கு வக்கீல் வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை.
தந்தை
 காலத்திலிருந்தே பழகிய பெரியவர்.
அவர் மனைவி கற்பகமும் மிக நல்ல மனுஷி.
 வேளை கெட்ட வேளையில் டாக்சியில் வந்திறங்கிய
சந்திராவின் முகத்தைப் பார்த்துக் கலங்கினார்.

விஷயங்கள் கொஞ்சம் தெரிந்திருந்தாலும் அந்தப்
பெண்ணைத் தொந்தரவு செய்ய மனமில்லை.

குழந்தைகள் மிதிலா,மைதிலி இருவரையும்
உள்ளே அழைத்துச் சென்று அவர்கள் அறையில்
அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்.

வக்கீல் மாமாவைப் பார்த்ததும் தந்தை நினைவு
வர மீண்டும் கலங்கினாள் சந்திரா. நடந்த விவரங்களைச் சொல்லி
வீட்டைப் பத்திரப் படுத்த வேண்டிய அவசியத்தை
அவரிடம் விசாரித்தாள்.

நீ ஏன் மா கவலைப்படறே. உன் நிலத்தை விற்றுதானே
வங்கிக்கடன் அடை பட்டது. அப்போதே உன்பெற்றோர்,
சுந்தரம் எல்லாரும் சேர்ந்து உன் பெயருக்கு
மாற்றிவிட்டோமே.
அவனுக்கு அதில் பாத்தியதை இல்லைமா.
அவனுக்குத் தெரியுமே என்றார்.

அதிர்ச்சியில் ஒன்றுமே தோன்றவில்லை சந்திராவுக்கு.
நீ பட்டாவைப் பிரித்துப் பார்க்கவில்லையா.

அம்மா அப்பா உன்னிடம் சொல்லவில்லையா
என்ன அதிசயமாக இருக்கு. என்று வியந்து போனார்.

நீ எதற்கும் இப்போ பயப்பட வேண்டாம்.நிதானமா யோசி.
அவன் ஒரு தெளிவுக்கு வரட்டும். குழந்தைகள்
 இங்கிருந்து பள்ளிக்குப் போகட்டும்.
தேர்வுகள் இரண்டு வாரங்களில் முடிந்துவிடும்.

நிதானமாக இரு.உனக்கு வேண்டிய பணத்தை நான் வங்கியிலிருந்து எடுத்து வருகிறேன்.
என்று நீண்ட பேச்சை முடித்தார்.
இன்னும் தெளிவில்லாத மனமுடன் படுக்கச் சென்றாள் சந்திரா.
என்ன அனியாயம்.    தெரிந்தும் நம்மைப் படுத்தினானே.
அத்தனை முட்டாளா நான்.
இன்னிக்கு அங்க என்ன நடந்திருக்கும். நினைக்கும் போதே உடல் நடுங்கியது அவளுக்கு.
 இல்லை இந்த சங்கடங்களிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும்.

அவனுக்குப் பணம் பெரிதாகிவிட்டது. அவன் பெற்றோர் பணத்தில் பாதி ஐதர் ஆர் சர்வைவர்
அக்கவுண்டில் அவன் பேரில்
எடுக்க முடியாத விதத்தில் டெபாசிட் செய்துவிடுகிறேன்.
மாத வட்டி வரட்டும். தன்னைத் தானே கவனித்துக் கொள்ளட்டும்.

நான் கோழையாக இருக்க மாட்டேன். அவனிடம் எனக்குப் பரிதாபம் தான் வருகிறது.
எப்போதோ இருந்த காதல் எங்கோ போய்விட்டது.

 களைப்பில் கண்ணசந்தாள்.
காலை வந்தது. சுந்தரத்துக்கு தூக்கத்தில் கடன் கொடுத்தவர்கள் துரத்துவது
போல கனவு. தூக்கி வாரிப் போட்டது போல எழுந்தவன், குளியலறைக்குப் போய்
முகம் கழுவித் தன்னைத் தானே பார்த்துக் கொண்டான்.
பெற்றோர் முன் தன்னை நிற்க வைத்தது விதி என்று நொந்து கொண்டான்
. கூடவே சந்திராவையும் தண்டிக்க வேண்டும் என்ற கோபம் எழுந்தது. என்னால் வந்த வாழ்வு அவளுக்கு. என்னவெல்லாமோ மனம் நினைத்தது.
தன் தவற்றை உணரவில்லை.
 அறையை விட்டு வெளியே வந்தவனை வரவேற்றது கூடத்தில் இருந்த பயணப் பெட்டிகள்.
 அவன் அப்பா நிதானமாகக் காப்பி அருந்திக் கொண்டிருந்தார்.
சமையலுக்கு வரும் உதவியாள் சமைத்துக் கொண்டிருந்தான்.

அம்மா பூஜை அறையில் இருந்தார்.
காப்பி சாப்பிடுகிறாயா  என்று கேட்டவர்,
இந்தா இந்த செக் பத்தாயிரம் ரூபாய்க்கு இருக்கிறது வண்டியைச் சரி செய்துகொள்.
இன்னும் இரண்டு மாதங்களுக்கு இங்கே இருக்க மாட்டோம்.
வட இந்தியப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

எங்கள் பக்தி குழுமத்துடன் செல்கிறோம்.
இனி உன் வாழ்வு உன் கையில்.
சந்திராவைப் பற்றித் தெரிந்தால் என் நண்பர் சந்திர சேகரிடம் சொல்லு.
அவரிடமும் பணம் கேட்டுவிடாதே. அவர் தர மாட்டார்.

அம்மா கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டவனுக்குத்
தன்னைச் சுற்றி இருந்த கதவுகள் படபட வென்று மூடுவது போலத் தோன்றியது.

பத்தாயிரம் எந்த மூலைக்கு. நாலாபக்கமும் கடன்.
பாதி சம்பளமும் கிடைக்க இன்னும் 15 நாட்களாகும்.
அடுத்த வாரம் இன்னோரு பத்தாயிரம் உன் வங்கிக் கணக்கில்  சேரும்.
நீ கிளம்புகிறாயா. சாப்பாடு வேண்டுமானால் ,நம் வீட்டு வாட்ச் மேன்
தினம் இரவு உனக்கு கொண்டு வந்து கொடுப்பான்.

நீ உன் வழியை மாற்றிக் கொள். கடவுள் விருப்பப்படி நாம் சந்திக்கலாம்.
என்று எழுந்தார். சுந்தரத்தின் அம்மாவின் கண்கள் கலங்கி இருந்தன.

நீ புத்திசாலி. நல்வழியில போ. என்று கூடை நிறையப் பழங்களை
 அவன் கைகளில் கொடுத்தார்.
 படுவேகமாக வீட்டைக் காபந்து செய்யும் வேலைகள் நடந்தன.
நாங்கள் கிளம்புகிறோம் என்று அவர்களும் காத்திருந்த வண்டியில் ஏறிக் கொண்டனர்.
பிரமை பிடித்தவனாக நின்றவனை காவல்காரன் அணுகினான். ஐயா வீட்டைப் பூட்ட வேண்டும்.
உங்கள் வண்டியை நான் இரவே சரி செய்துவிட்டேன்.
பெட்ரோலும் போட்டுவிட்டேன் என்றான் மரியாதையாக.

சுந்தரமும் கிளம்பினான். மீண்டும் தொடரும்.

10 comments:

ஸ்ரீராம். said...

சினிமாவில் நடப்பது போல காட்சிகள் விரைவாக, புத்திசாலித்தனமாக நடக்கின்றன. முக்கியமாக சுந்தரத்தைத் திருத்தும் முயற்சி தெரிகிறது.

Geetha Sambasivam said...

கடவுளே, மனதே கலங்கிப் போய் விட்டது. சுந்தரத்துக்கு நல்வழி பிறக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அவன் மனமும் மாற வேண்டும். எனக்குத் தெரிந்தவர்கள் சொத்தையே இப்படித் தான் இழந்தார்கள். :(

நெ.த. said...

இவ்வளவு மெச்சூர்டான பெற்றோரா சுந்தரத்துக்கு. ஆச்சர்யம்தான். என்ன செய்ய முடியும் பிள்ளை தவறான வழியில் சென்றால்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
சுந்தரத்தின் அப்பா ,நந்தம்பாக்கம் மிலிட்டரி காலனியில் நான் பார்த்த ப்ரிகேடியர் ஒருவரின்
வடிவம். ஒரே பெண் அவர்களுக்கு.

கேரள ஐய்யர். ரொம்ப ரொம்ப கண்டிப்பு.
72 வயசில் பிரமாதமா இருப்பார். மாமியும் ரொம்ப நிதானம்.
பெருந்தன்மையான மனிதர்கள்.
அவர்கள் வாழ்வில் பெண்ணிடம் காட்டிய கண்டிப்பு நினைவுக்கு வந்தது.

தவறாக நடப்பவர்களுக்கு தயவு காட்ட மாட்டார்.

வல்லிசிம்ஹன் said...

அச்சோ கீதா. பயப்படாதீங்கோ எல்லாம் நன்றாகவே நடந்தது.
என்னால் முழுவதும் சொல்லாமல் முடிக்க முடியவில்லை.
நான் பார்த்த வரையில் நன்றாகத்தான் இருக்கிறான் . ரொம்பவே மாறிய சுந்தரம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் நெ.த.
அவர் ஆர்மிலேருந்து ரிடயரான மனுஷர்.
அவருக்கே குடிக்கும் பழக்கம் உண்டு. ஒரு நாள் சாயந்திரம், ஒரு ட்ரிங்க். அப்புறம் தூக்கம் என்று இன்னும் ஆரோக்கியத்தோடு இருப்பவர்.
கண்டிப்பான மனுஷன். எங்க எஜமானர் அவர் வண்டியைச் சரி செய்து கொண்டுத்தார்.
அப்போது பழக்கம். எல்லாம் நல்லதுக்குத்தான்.

கோமதி அரசு said...

எப்படியோ சந்திரா, சுந்திரம், குழந்தைகள் நலமாய் இருந்தால் சரிதான்,
பொறுபில்லா மனிதரை திருத்த அவர்கள் எடுத்த முடிவுதான் நல்ல வழி.

Thulasidharan V Thillaiakathu said...

சுந்தரம் திருந்திவிடுகிறார் என்றே தோன்றுகிறது. நல்லதே நடக்கட்டும் வல்லிம்மா...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி அனைவருக்கும் பொருந்தும்படி
வாழ்வு நடக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

பார்க்கலாம். கீதா. சமபங்கு சமாதானம் கிடைக்கட்டும்.