எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
சுந்தரம் வீட்டை அடைந்ததும், நல்லசிவம் கேட்டைத் திறந்தார்.
சீக்கிரம் வந்துவிட்டீர்களே என்றவனிடம்,
அம்மா சொல்லிவிட்டாங்க பக்கத்து வீட்டுக்கு
ஃபோன் வந்தது. அங்கே காவலிருக்க என் தம்பியைப் போகச் சொல்லிவிட்டேன்.
இங்கே வீட்டைச் சுத்தம் செய்ய ,துணிகளைக் கவனிக்க,
இங்கேயே சமைத்துக் கொடுத்துக் காவல் இருக்கச் சொன்னார்கள்.
என் மனைவி இங்கு வந்து சமைத்துக் கொடுப்பாள்.
தம்பிக்குக் கவலையில்லாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
சுந்தரத்துக்குக் கண்ணில் நீர் துளித்தது. நல்லசிவம் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்த உதவிக்கு என்ன கைமாறு செய்ய முடியும்.
சரி உங்கமனைவியை அழைத்து வாருங்கள், நான் வெளியே
போய் வரேன் என்றான்.
சரஸ்வதி என்று குரல் கொடுத்தார் நல்லசிவம்.
வாசலில் நின்ற அவர் மனைவி உள்ளே வந்தார்.
ஐயா வணக்கம் .நீங்க கிளம்புங்கோ வந்து சாப்பிடலாம்
என்று சொன்னாள்.
சுந்தரத்துக்கு தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை.
வெகு தெளிவான மன நிலையில் அப்பாவின் சினேகிதரைக் காணச் சென்றான்.
எதுவானாலும் நேர்கொள்ளத் தயாராக இருந்தான்.
செய்த தவறுகளுக்குத் தான் பதில் சொல்லியாக வேண்டும்
என்பது மனமூலையில் உறுத்தியது.
சந்திரசேகர மாமா , வரவேற்று அமர வைத்தார்.
சந்திராவின் வக்கீல் தன்னிடம் பேசின விவரங்களைச் சொல்லி,
அவனுடைய கடன் களை அடைப்பதே சந்திராவின் நோக்கம்.
அதற்கு அவன் தந்தை கொடுத்த பணத்திலிருந்தே
அவள் கொடுப்பதாகவும் பவர் ஆஃப் அட்டர்னி தன்னிடம் கொடுத்திருப்பதாகவும் சொன்னார்.
ஒரு கணம் சுந்தரத்துக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.
இதை அவன் எதிர்பார்க்கவில்லை.
இது எல்லாம் உங்களிடம் அவள் பேசினாளா என்றதும். ஆமாம் ஏதோ ஒரு ஊரிலிருந்து
வேலைகளுக்கு நடுவில் , என்னிடம் பேசினாள்.
பணம் ஏற்கனவே என் அக்கவுண்டில் வந்துவிட்டது.
நீ உன் கடன் விவரம் சொன்னால்,
அவர்களை நேரில் சந்தித்து ,நானும் நீயும் நம் வக்கீலுமாகச் சென்று
சரி செய்து விடலாம்.
உன் உத்தேசத்தைச் சொல் என்றார்.
அப்பாவிடம் சம்மதம் வாங்கி விட்டாளா என்று கேட்டான்.
அதெல்லாம் நேற்றே முடிந்தது.
உன் சௌகர்யத்தைச் சொல்.சுருக்க முடித்துவிடலாம்.
எனக்குப் புரியவில்லை. எப்படி இந்த மாற்றம்.
I am not in anybodys good books, எத்ற்கு இந்த ஏற்பாடு.
அப்பாவின் இராணுவ நண்பர் ஒருவர் , நீ போன வாரம்,
நடு சாலையில் வாய்ச்சொல் முற்றி அடிதடி நடந்ததைப் பார்த்திருக்கிறார்.
அப்பாவும் சந்திராவும் உன் செயல்களைத்தான் வெறுத்த்தார்கள்
உன்னை வெறுக்கவில்லை. இத்தனை நாட்கள் மரியாதை கௌரவத்தோடு இருந்த குடும்பம் இது
போல அவமானப் படுவதை விரும்பவில்லை.
சந்திரா யோசித்து எடுத்த முடிவிது.
உன் விருப்பப்படி செய்யலாம் என்றதும் எழுந்துவிட்டான்.
அவன் முகம் சிவந்திருந்தது.
மிக நன்றி. நான் யோசித்துதான் முடிவெடுக்கவேண்டும்.
அந்த வீட்டில் எனக்கும் உரிமை உண்டு.
பத்திரத்தைக் காண்வில்லை என்று குரல் உயர்த்தினவனிடம்
சேகர் மாமா அமைதியாகச் சொன்னார்.
அந்தக் கடனை அடைத்தது சந்திராவின் பெற்றோர்.
நீ தாலுக்கா ஆபீஸ் வந்து உன் உரிமையை
விட்டுக் கொடுப்பதாக ஐந்து வருடங்கள் முன் எழுதிக் கொடுத்ததை
மறந்துவிட்டாய். உன் பழக்க வழக்கங்கள் உன் புத்தியை
மழுங்கடிக்க வைத்திருக்கிறது.
நீ நல்ல வழியில் திரும்ப இது உனக்கு சந்தர்ப்பம்.
ஒரு நாள் எடுத்துக் கொள். புதன் கிழமை உன் பதிலை எதிர்பார்க்கிறேன்
என்று முடித்தார்.
முடிந்தவரையில் சினத்தை அடக்கிக் கொண்டு வெளியே விரைந்தான்.
உடலெல்லாம் படபடத்தது.
இந்த தானமாகப் பெற்ற பணமா என்னைக் காப்பாற்ற வேண்டும்
.
என் வேலையை விட்டு விடுகிறேன்.
ப்ராவிடெண்ட் பணமாகக் கிடைப்பதை வைத்தே
என் கடனை அடைத்துவிட்டு
இந்த ஊரைவிட்டுப் போகிறேன். எல்லாரும் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்
என்று மனதிற்குள் குமுறியபடி வீட்டுக்குள் நுழைந்தவனை
வரவேற்றான் காசிவிஸ்வனாதன். நாளைக்குள்
உன் கடன் தொகை வந்து சேர வேண்டும்.
நீ விளையாடுவதையும் நிறுத்திவிட்டாய்.
தயாராக இரு என்று சொல்லித் தன் கூட வந்தவர்களையும் அழைத்துக் கொண்டு
வண்டியில் கிளம்பிச் சென்றான். சுபமாக முடித்துவிடலாம்.
என்னால் சுருக்கி எழுத முடியவில்லை.

Add caption |
4 comments:
விபரமாகவே எழுதுங்கள். அடுத்ததுக்குக் காத்திருக்கேன். சுந்தரத்துக்கு இன்னமும் "தான்" என்னும் அகம்பாவம் விலகவில்லை! :(
நீங்கள் கதை எப்படியோ அப்படியே எழுதுங்கள் . படிக்கிறோம்.
சுந்தரம் வக்கீல் இடம் தன் சம்மதம் தெரிவித்துவிட வேண்டிய நிலைதான்.
காசிவிஸ்வநாதன் நெருக்கடி கொடுக்கிறார் வேறு வழி இல்லை.
இன்று எழுதப் பார்க்கிறேன் கீதாமா.
இவை எல்லாம் நடந்த போதே சங்கடமாக இருந்தது. மீண்டும்
இதை எழுதும் போது கொஞ்சம் டென்ஷனாகிறது.
அதனால் நாயர் புலிவால் மாதிரி சுத்தி வந்து முடித்துக் கொள்கிறேன்.
உண்மைதான் கோமதி. நடந்ததை எழுதி முடிக்கிறேன்.
மிக நன்றி மா. யாராவது படிக்கிறார்கள் என்பதே
மனதுக்கு இதம்.
Post a Comment