Wednesday, May 09, 2018

ஜானா வேணு கதை 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

பாட்டிக்கு வலிக்குமா தாத்தா என்று கண்ணில் நீரோடு
தன்னைப் பார்க்கும் நவியை அணைத்துக் கொண்டார். கொஞ்சம் வலிக்கும்மா. சரியாகிடும். இதோ வந்துடுவாளே பாட்டி, என்று சொல்லித் தன்னையும் ஆறுதல செய்து கொண்டார்.
நேரம் தான் ஆச்சு. போனவர்களைக் காணவில்லை.
 வாசல் கராஜ் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும்
தன்னைச் சமாளித்துக் கொண்டு மகனை உள்ளே அழைக்கக் கதவைத் திறந்தார்.
அம்மா நல்ல காப்பி கொடும்மா என்றபடி உள்ளே நுழைந்த
கிருஷ்ணன், மகளைப் பார்த்ததும் திகைத்தான்.
இன்னிக்கு அவள் பாட்டு வகுப்பு செல்லணுமே
ஏன் பா போகவில்லை.

அம்மா எங்கே என்று கேள்வியை அடுக்கினவுடன், உட்கார வைத்துக்
காப்பி போட்டுக் கொடுத்தார்.
அம்மாவுக்கு லேசா கையில ஃப்ராக்ச்சர் இருக்கும் போல
இருக்கும் பா.
ஸ்கூலில் இருந்து வரும்போது தடுக்கி விழுந்துவிட்டாள்.
லீலா நாயர் டாக்டர் ரிச்சர்ட்ஸ் ஈ ஆருக்கு அழைத்துப் போயிருக்கிறாள்.

இதோ வந்துவிடுவார்கள்.
கையிலயா அடி. வேலை எல்லாம் யார் செய்வது.
இதோ ராத்திரி டின்னர் .செய்யணுமே.
ஏண்பா இப்படி கேர்லெசா  அம்மா இருக்கா என்று
படபடத்தான்.
மீண்டும் கராஜ் கதவு திறக்கும் சப்தம் கேட்டது.
 மருமகள் லதா வந்தாள்.
ஆர் யு ஷௌட்டிங்க் பை எனி சான்ஸ் க்ரிஷ்
என்றபடி நுழைந்த மருமகளைப் பார்த்து ஆறுதல் அடைந்தார்.

லீலா நாயர் எனக்கு ஃபோன் செய்தா அப்பா.
பயப்படதீங்கோ.
 சுலபமான காஸ்ட் தான் போட்டிருக்கிறார்கள்.
ஸ்கான் எல்லாம் செய்தாச்சு.
ரத்த அழுத்தம் அதிகமா இருக்கிறதுனால அம்மா
அங்கே இன்று இரவு அங்கே இருக்கட்டும்.
நாளை நானே அழைத்து வருகிறேன் என்று முடித்தாள்.

அப்பா, அம்மாவோடு பேசுங்கள். லீலாவின் மொபைலில் பேசலாம்.
 நீங்களும் இரவு அங்கே தங்கலாம். சாப்பிட்டுவிட்டுக் கிளம்புங்கள்.
நான் இங்கே பார்த்துக் கொள்கிறேன்.
இனி அம்மா உங்கள் பொறுப்பில்.
அண்ட் க்ரிஷ், டின்னர் பிரச்சினை இல்லை.
நீங்கள் பதட்டப் படவேண்டாம்.
 நாளையிலிருந்து எனக்கு ஒரு வாரம் வொர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நவி ,பள்ளி,பாட்டு, ஜிம்,டான்ஸ் எல்லா வகுப்புக்கும் நீங்கள்
அழைத்துப் போகிறிர்கள்.
இந்த ஊரில் சாப்பாடு பெரிய கஷ்டம் இல்லை. காலைப் பொழுதில் வந்து சமையல் செய்ய குஜராத்தி அம்மாவை ஏற்பாடு செய்யலாம்.

அவர் தேவையானதைச் சமைத்து வைத்துவிடுவார்.

குட்டி நவி இங்க வா செல்லம். பயந்துட்டியா.
பாட்டி பாரு. இன்னும் நிறைய கதை சொல்வா. உனக்கென்ன
ஜாலிதான் என்று சொன்னதும் குழந்தையின் முகம் மலர்ந்தது.

அப்பா என் ப்ரியஸை  எடுத்துக் கொள்ளுங்கள்.
 உங்க பொறுப்பு.
க்ரிஷ் நாம் மூவரும் போய்  இரவு சாப்பாடு வாங்கி வரலாம். அப்படியே அம்மவுக்கும் கொடுத்துவிட்டு வரலாம்.
பாவம் வலது மணிக்கட்டு எவ்வளவு வலிக்கிறதொ
என்று சொன்னவளின் முகம் சிவந்தது.
க்ரிஷ்ணனுக்கு  யாராவது தன்னைப் பளார் என்று அறைந்தால் கூடத் தேவலை  என்று தோன்றியது.
வந்த மருமகளுக்கு இருக்கும் வாத்சல்யம் தனக்கு இல்லையே
  என்று வெட்கப்பட்டான்.
வேணு நல்ல காப்பி போட்டு எடுத்துக் கொண்டார். ப்ரியஸ் கார் சாவியை எடுத்துக் கொண்டு ,மருமகள் அருகில் வந்து அவளை மிருதுவாக அணைத்துக் கொண்டார்.
 அடுத்த சில நொடிகளில் வண்டி புறப்படும் சத்தம் கேட்டது.

மருமகளின் அன்பு கவனிப்பில்  இரண்டு வாரங்களில்
கட்டு நீங்கி பழைய நிலைமைக்கு வந்து விட்டாள்  ஜானா.
இனி  எல்லாம் சுபமே.💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
கூகிள்  உபயம்  திருக்குறுங்குடி வீதி 💕💕💕💕

13 comments:

Geetha Sambasivam said...

சற்றும் எதிர்பார்க்காத முடிவு. விரைவில் குணம் அடைந்ததுக்கு இறைவனுக்கு நன்றி. சுயநலமே உருவான மகன். நல்லவேளையாய் மருமகள் அருமை!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

கோமதி அரசு said...

அனபை கொடுத்தால் அன்பு கிடைக்கும், நல்ல மாமியார், நல்ல மருமகள்.
அருமையான கதை. மகனுக்கு புரியவில்லை , ஆனால் மருமகளுக்கு புரிந்து விட்டதே.
மாமியார் இல்லாமல் வேலைகளை எப்படி செய்வது என்றும் தீர்வு கண்டு விட்டார் மருமகள்.

ஸ்ரீராம். said...

மருமகள் லதாவின் அப்ரோச் அழகு. வீட்டுத் தலைவிகள் வீட்டுப் பிரச்னைகளைக் கையாளும் அழகே தனி.

Anuprem said...

,மருமகள் அருகில் வந்து அவளை மிருதுவாக அணைத்துக் கொண்டார்...


மிக அருமை அம்மா... மருமகள் பாசத்தில் மனம் மகிழ்கிறது..

KILLERGEE Devakottai said...

எல்லா வீட்டிலும் இப்படி மாமியார்-மருமகள் இருந்தால் ?

நாடும், வீடும் நலமாகும்.

நெல்லைத் தமிழன் said...

//வந்த மருமகளுக்கு இருக்கும் வாத்சல்யம் தனக்கு இல்லையே என்று வெட்கப்பட்டான்// - மருமகள் அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.

திருக்குறுங்குடியை மிகவும் ஞாபகப்படுத்துகிறீர்கள். விரைவில் அந்த ஊருக்கு முதல் முறையா செல்லணும். ரவிவர்மா ஓவியம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதாமா.
அவனுக்கு இரத்த அழுத்த பிரச்சினை
இருந்ததால் தான் இவர்கள் இங்கு வரச் சம்மதித்தார்கள்.

மருமகளுக்கு அவர்களின் அன்பும் ஆதரவும் மிகவும்
வேண்டி இருந்தது. இயல்பாகவே பொறுப்புள்ள மனுஷி ஜானா.

எனக்கு அவளைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.
ஒரே மகனாகப் போனதில் எப்படியாவது அவன் குடும்பம்
செழிப்பாக இருக்க வேண்டும் என்பதிலும் அக்கறை. எல்லாம் ஒன்று சேர்ந்தது
மா.
அவனுடைய வேலைப் பளு அவனை முற்றும் மாற்றிவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி ஜெயக்குமார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
லதாவும் இயல்பில் நல்ல பெண்.
வாழ்வில் இறுக்கம் வந்தது கணவனது வேலைப் பிரச்சினையாலும்,அவனது
இரத்த அழுத்தத்தினாலும் தான்.

அவளும் பொறுப்புள்ள வேலையில் தான் இருக்கிறாள்.
அவளது குணமும் மாமியார் குணமும் ஒத்துப் போனது அவர்கள் பாக்கியம்.

உங்களை மாதிரி என்று சொல்வோமா.
நியுஜெர்சியில் சாப்பாட்டு விஷயத்தில் யாரும் கவலைப் படவேண்டாம்.

என் உறவினர்கள் அங்கே பலர் இருக்கிறார்கள்.
சுத்தமான இந்திய சூழ்னிலையை அங்கே பார்க்க முடிந்தது.
பதட்டம் விட்டால் பாதி வேலை முடிந்து விடும்.
வாழ்க வளமுடன் கோமதி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுராதா ப்ரேம்குமார்,

அபூர்வமாக அமையும் உறவு இது.

ஜானாவும் வேணுவும் பெரிய குடும்பத்தில் அடி பட்டவர்கள்.
வாக்குவாதத்திலிருந்து விலகுவதே உத்தமம் என்று நினைப்பவர்கள். அவர்களைப் புரிந்த மருமகள் வாய்த்ததே பகவான் செய்த நன்மை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஹூஊஊஊஊஊஊம். அன்பு தேவகோட்டையாரே.

நூற்றில் ஒருத்தர் இது போல அமைகிறோம்.

எத்தனையோ நல்ல எண்ணங்கள் நிறைவேறுவதில்லை.
அதற்காக சம்சாரத்தை விட்டு விலக முடியுமா பெண்களால்.

அடுத்து தீர்மானிக்கும் வாழ்க்கை இதைவிட நல்லதாக இருக்கும் என்று
என்ன காரண்டி.
எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை. உண்மையே நல்ல மருமகள் ஒரு வரம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி,
ரொம்ப அபூர்வமாக நடந்த விஷயம். அதனால் தான் எழுதினென்.
90 உம் எண்பதுமாக இருவரும் நன்றாக இருக்கிறர்கள்.

திருக்குறுங்குடி அடுத்த ட்ரிப் போய்வாருங்கள்.
இனிமையான இடம்,. டிவிஎஸ் பராமரிப்பில்
நன்றாகவே இருப்பதாகத் தம்பி சொல்லி இருக்கிறான்.
அந்த ரவி வர்மா படம் என் அம்மாவின் களங்கமில்லாத முகமாகத் தெரிகிறது.