Saturday, May 19, 2018

வாழ்க்கையின் குரல் 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


........................................................
25 வருடங்களுக்கு முன் நடந்தது சந்திராவின் திருமணம்.
கல்லூரியில் பார்த்துக் காதலித்து
பெரியவர்கள்  அந்தஸ்து பார்த்து மறுத்தாலும், இருவரின்

அன்பின் தீவிரம் அவர்களை சம்மதிக்க வைத்தது,.
சந்திராவும் சுந்தரமும் ஒரு பெரிய நிறுவனத்தில் வேறு வேறு பிரிவில் ஒரே சம்பளத்தில் வேலையில் இருந்தார்கள்.

எளிமையாகத் திருமணத்தை முடித்துக் கொண்டார்கள்.
 பத்தாண்டு கால வாழ்க்கை சந்தோஷமாகவே சென்றது.

இரு பெண் குழந்தைகள் பிறந்து நல்ல பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.

என்ன அலுப்போ சுந்தரத்துக்கு தெரியவில்லை.
திடீரென  சூதாட்டத்தில் மனம் சென்றது.
தினம் அலுவலகம் விட்டதும் நண்பர்களுடன்
கிளப்பில் பணம்வைத்து சூதாடப் பழகிக் கொண்டான்.
சும்மா ஒரு மணி நேரம் என்று உல்லாசமாக ஆரம்பித்தது, இரவு

12 வரை நீடிக்க ஆரம்பித்தது.
வங்கியில் கடன் வாங்கிக் கட்டிய வீட்டுக்கு
மாதா மாதம் பணம் கட்ட வேண்டிய நிலையில், சந்திராவின்
சம்பளமும் போதவில்லை.

பெண்கள் படிக்கும் பள்ளி உயர்மட்டம். கட்டணமும் அதே.

சந்திராவின் பெற்றோர்களுக்குத் தெரிய வந்து
அவள் மேலிருக்கும் பாசத்தில் ,சிறிய உதவிகள் செய்தாலும் போதவில்லை.

அவள் பெயரில்   இருந்த சோமங்கலம் கிராமத்து வளமான நிலத்தை விற்று,
வங்கிக் கடனை அடைத்தனர்.
கடன் அடைந்தாலும் அதிலிருந்து வந்து கொண்டிருந்த
பலன்களும் நின்றன.

பெண்ணின்  தவிப்பு தந்தையைத் தாக்கியது.
அம்மா,அப்பா இருவரும் தொடர்ந்து சுந்தரகாண்ட பாராயணம் செய்தபடியே
இறைவனை அடைந்துவிட்டனர்.

மாமனாரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள  வந்த சுந்தரத்துக்கு
நல்ல வரவேற்பில்லை. அவனும் கண்டு கொள்ளவில்லை.
பத்து  நாட்கள் விடுமுறையில் குற்றாலம் சென்றுவிட்டான்.
அங்கே சீட்டுக் கச்சேரி பிரபலமாம்.
சந்திராவின் அண்ணனுக்கு இரண்டு மகன்கள். நல்ல வாட்டசாட்டமாக்ப் பார்க்கக் கண்ணுக்கு
உகந்த தோற்றம்.
அத்தையின் மேல் மிகப் பிரியம்.

அண்ணா முகுந்தனுக்குத்தான் அவர்கள் அத்தையுடன் ஒட்டுவது பிடிக்கவில்லை.
அப்பாவும் அம்மாவும் சந்திராவுக்காகச் செய்த தியாகங்கள்
அவனை  அன்னியனாக்கியது,.
தந்தை கொடுக்கச் சொல்லி இருந்த பணமும் தீர்ந்த நிலையில் தான் மேற்படி
பேச்சு வந்தது.

ஆபீஸ் நேரத்தில் சீட்டு விளையாடியதை மேலதிகாரி பார்த்துவிட்டதால்
சஸ்பென்ஷன் ஆர்டர் வந்துவிட்டது.
அவன் சகாக்கள்  சாமர்த்தியக்காரர்கள்.
எப்படியோ அங்கே இங்கே ஆள் பிடித்து மீண்டும் வேலையில் சேர்ந்தனர்.
சுந்தரத்துக்கு வறட்டு ஜம்பம்.

தன் தாய் தந்தையர் பணம் எல்லாம் தனக்குத்தான் என்று நினைத்திருந்தவன்
கணக்கும் தப்பியது.  மகனின் போக்கைப் பார்த்து ,அவர்கள் உயில் எழுதிவிட்டார்கள். வீடு அவர்கள் பெண்ணின் பேரிலும்
வங்கியில் இருக்கும் பணம் மகன் வயிற்றுப் பேத்திகளுக்கும் அவர்கள்
இறப்பிற்குப் பின் சேர வழி செய்துவிட்டனர்.

கிணற்றின் அடியைத் தொட்டால் தான் உந்தி மேலே வரமுடியும்.
You have to hit the bottom if you have to come up.  தொடரலாம்
Add caption

11 comments:

ஸ்ரீராம். said...

எவ்வளவு கடுமையான அனுபவங்கள்... தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். கேட்ட அனுபவம். உலகம் சுழலுது பணத்திலே.
அதுவும் மறையுது சூதிலே என்று சொல்லலாமா.

Geetha Sambasivam said...

என் நெருங்கிய உறவினர் ஒருவர் வாழ்க்கை நினைவில் வருகிறது. குழந்தைகள் இப்போது எல்லோரும் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் அவர்கள் இருந்த இருப்பை நேரில் பார்த்ததால் சமயங்களில் நெஞ்சை அடைத்துக் கொள்ளும். :(

கோமதி அரசு said...

உண்மை கதையா?
அந்தக் கால சினிமா போல் இருக்கிறது.
எத்தனை பட்டாலும், படித்தாலும், பார்த்தாலும் சிலர் அவர்கள் மனம் சொல்வதையே கேட்கிறார்கள். நாம் இவற்றை பார்த்தும் படித்தும் கேட்டும் மனம் வருந்துகிறோம்.அவர்களுக்கு நல் வாழ்க்கை கொடுக்க சொல்லி இறைவனிடம் வேண்டுகிறோம்.

Ramani S said...

இறுதிவரி கவித்துவமாய்.தொடர வாழ்த்துக்களுடன்

நெ.த. said...

என் பசங்களுக்கும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன். சூதாட்டம், ஷேர் பிசினெஸ், லாட்டரி, கடன் கொடுப்பது, அளவுக்கு மிஞ்சிய பண ஆசை.... இவைகள் வாழ்க்கையை அழித்துவிடும் என்று.

பாவம்... சூதாட்டத்தில் சிக்கி வாழ்க்கையை இழப்பவர்கள். அனுபவத்தைத் தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா.
அதுதான் இதில் கஷ்டம். பெரியவர்கள் இழைக்கும் பிழைக்குப் பிள்ளைகள் பலியாவது.

நல்ல சகவாசம் இல்லாவிட்டால் கெடும் குடித்தனங்கள் எத்தனை.
இத்தனைக்கும் வட இந்திய பிரபல எஞ்சினீயரிங்க்
வளாகத்தில் படித்தவர்கள்.

பெற்றவர்களும் நல்லவர்கள் தான்.மகனுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்ததை விட வேறு தப்பு செய்யவில்லை.

விதி கண்ணை மறைக்க,வேறு எதை நோவது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. உங்களை வருத்தி விட்டேனா.
மன்னிக்கணும் மா. பொறுமையும் ,தைரியமும் இருந்தால் பெண்ணால் ஜெயிக்க முடியும்
என்பதற்காகவே எழுதுகிறேன் மா, வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு திரு ரமணி.
தொடர்ந்து படித்து நல் வார்த்தை சொன்னதற்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெ.த,
சொல்லிக் கொண்டே இருங்கள். வேறு வழி இல்லை. அடிக்க அடிக்க
அம்மிக்கல் நகரும் என்பார்கள் இல்லையா. குழந்தைகள் மனம் மாறாமல் இருக்குப் பெற்றோர்களே வழி காட்டி.
மிருதுவான வார்த்தைகள் பேசி ,நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
பகவத் சங்கல்பத்தில் உங்கள் குடும்பம் அமோகமா இருக்கணும்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: பெண்களுக்குத்தான் எத்தனை கஷ்டங்கள். கணவன் மார்களால். சில ஆண்ககள் பொறுப்பில்லாமல் இப்படித்தான். தொடர்கிறோம்

கீதா: வல்லிம்மா கதை மனதை என்னவோ செய்துவிட்டது. சில ஆண்கள் சூதாட்டம், குடி என்று கெட்ட பழக்கம் இல்லை என்றாலும் அறிவு ஜீவிகளாக இருந்தாலும் கூட அவர்களுக்கு வேறு விதமான மூளை செயல் இது போன்ற கஷ்டம் வரத்தான் செய்யும் என்பதையும் இந்த உலகம் சொல்லுகிறது.