Tuesday, May 15, 2018

திருமண வைபவம் 1978 May 14.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 மே 12  ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகாபலிபுரத்தில் பந்தக்கால் நடவேண்டும்
என்று அப்பாவுக்கு ஆசை.
பெண்ணகத்தில் தானே இதை செய்வார்கள் அப்பா என்று கேட்டால்
அதெல்லாம் பரவாயில்லை. உன்  கல்யாணத்துக்குச் சத்திரத்துக்குப் போய்விட்டொம். இங்கே
பந்தல் போடவேண்டும்
என்று ரங்கனை அழைத்தார்.
அவனும்
அம்மாவுடைய  மிளகாய்ப் பொடி இடிக்கும்
உலக்கையைக் கொண்டு வந்தான்.

சிங்கமும் அவனும் ஒன்று சேர்ந்து நிமிஷத்தில் வாழைமரம்
 கட்டிப் பந்தல் போட்டு விட்டார்கள்.
அன்று அம்மா மங்கலிப் பொண்டுகள் செய்யவேண்டும் என்று அக்கம்பக்கத்தில் தெரிந்த ஐந்து பெண்களைக் கூப்பிட்டிருந்தார்.

இது முதல் பிரார்த்தனை என்று என்னிடம் சொன்னார்.
அன்று எனக்குத் திருமணத்துக்கான பட்டுப் புடவையை பவேற்றிலை மஞ்சள் குங்குமம் வைத்துக் கொடுத்து, பேத்திக்குப் பட்டுப் பாவாடையும் கொடுத்தார்.

அடுத்த நாள் எல்லோரும் டாக்சி எடுத்துக் கொண்டு சென்னைக்குக் கிளம்பினோம்.
அம்மாவுக்கு நல்ல தலைவலி.
எல்லாவற்றுக்கும் பயந்து நயந்து காரியம் செய்யும் அம்மா,
அப்பாவின் உடல் நிலையை மன்சில் கொண்டு சிந்தித்திருப்பார் என்று இப்போது தோன்றுகிறது.

திருவிடந்தை கோவில் வந்ததும், அந்த வராஹ பகவானையும்
சேவித்துவிட்டு மதியம் , திருமலை திர்மணக்கூடத்துக்கு வந்தோம்.
நல்ல பெரிய இடமாக இருந்தது.
 மிக உத்சாகமாக வரவேற்பு.
என் மகள் மாமாவை விட்டு நகரவே இல்லை.
திருமணக் கூடமெங்கும்  பெரிய பெரிய கோலங்கள். மணம்கள் வசந்தியின் தங்கை
ஜெயந்தி போட்டது.

அந்தப் பெண்ணைச் சென்று பார்த்து பாராட்டினேன்.
அந்தக் குடும்பத்தில் மூன்று சகோதரர்களும் நான்கு  சகோதரிகளும்.
நிறைவாகச் செய்தார்கள் திருமணத்தை.
நாத்தனாராக நானும் என் பங்குக்கு,  புடவை, ஹாண்ட்பாக், அலங்காரப் பொருட்கள்
வாங்கி வைத்திருந்தேன்.
சர்க்கரையில் ராகவன் வெட்ஸ் வசந்தி எழுதியது இப்பொழுதும் நினைவில் இருக்கிறது.
எங்கள் வீட்டிலிருந்து நாத்தனார்களும் அவர்களது கணவ்ர்களும்
வந்து சிறப்பித்தனர்.
அப்பாவின் நண்பர்கள், மாமாக்கள் அவர்களது குடும்பம்,
அத்தை, எங்கள் பாட்டி என்று உற்சாகமாகச் சென்றது நேரம்.

திருமணம் முடிந்த கையோடு மணப் பெண்ணை அழைத்துக் கொண்டு
மஹாபலிபுரம் வந்துவிட்டோம்.
அவர்கள் இருவருக்கும் தனி வீடு ஒதுக்கிக் கொடுத்தார் அப்பா.

மாமியின் அழகில் மயங்கி அவளையே சுற்றி வந்தாள் பெண்.
ஐந்து நாட்கள் சென்று நாங்கள் கிளம்பினோம்.
 அடுத்த ஐந்து நாட்களில் அப்பா அம்மா துணையோடு கல்கத்தா குடித்தனத்துக்கு முரளியும் வசந்தியும்
புறப்பட்டார்கள். சுபம்.

4 comments:

கோமதி அரசு said...

இன்று 'உலக குடும்பதினம்' வாழ்த்துக்கள்.

திருமணம் இனிதே நிறைவு பெற்றது மகிழ்ச்சி.
சொல்லிய விதம் அழகு.

ஸ்ரீராம். said...

சுபம். இனிய நினைவுகளின் ஊர்கோலம்.

Thulasidharan V Thillaiakathu said...

நல்லதொரு நினைவுப்ப் பந்தல் தோரணங்களுடன் அணி வகுத்து சுபத்துடன் முடிந்திருக்கிறது. அருமை...

துளசி. கீதா

கீதா: வல்லிம்மா இப்ப புரியறது உங்கள் முகப்புப் படத்தின் அர்த்தம்!!!! வாவ்!! பாருங்க மக்கு நான் சரியான ட்யூப் லைட் அன்று உரைத்தது இருந்தாலும் இன்றுதான் சொல்கிறேன் பாருங்க...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
மிக நன்றி. நல்ல தம்பதிப் பொருத்தம்.
மிகப் பிரியமாக வசந்தி அவனைக் கவனித்துக் கொள்வாள்.
அவனும் எங்கு வெளியே சென்றாலும்
அவளுக்குப் புடவை,செண்ட் என்று வாங்கி வருவான். எப்பவும் சிரிப்புதான்.
நல்ல மனங்கள் வாழ்க.