எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
காகிதப் பூக்கள்.
கதை படிப்பவர்கள் மனதில் எழும் கேள்வி, நல்ல பெற்றோருக்கு ஏன் இது போல ஒரு பிள்ளை.
தந்தை ராணுவத்தில் பெரிய பதவி வகித்தவர். பையனையும் அதே போல கண்டிப்புடன் வளர்த்தார். பிடிவாதம் பிடித்து
ராணுவப் பள்ளியிலிருந்து விலகி
சென்னைக்கு வந்து தன அம்மாவின் பிறந்தவீட்டில் தாங்கிப் படித்தவனைக் கண்டிக்க ஆளில்லை .
கெட்டிக்காரன் ஆகையால் வாழ்வில் முன்னுக்கு வரத் தெரிந்தவனுக்கு,
முகஸ்துதி செய்பவர்கள் செய்யும் தோழர் பட்டாளமே அதிகம்.
அவனது பல தவறுகளைத்
தந்தை சுட்டிக் காட்டும்போது
கோபம் கொள்வான். வெளியில் காண்பிக்க மாட்டான்.
மீண்டும் தன் வழியே செல்வான்.
பட்ட மேல் படிப்புக்கு வெளி நாடு செல்ல ஆசைப் பட்டவனைத் தந்தை
அனுமதிக்கவில்லை. அந்தக் கோபம் வேறு.
நல்ல வேளை யாகச் சந்திராவைச் சந்தித்தான். அவர்கள் வீட்டு சாத்விகம் அவனுக்குப் பிடித்து இருந்தது.
சந்திராவுக்கு அவனுடைய முரட்டுக் குணமும் அவளைக் கவர ஒரு காரணம்.
22 வயதுக்கு உண்டான இனக்கவர்ச்சியில் இருவரும் காதலித்தனர்.
மெய்யான அன்பும் சேர்ந்த போது மணம் முடித்தனர்.
கை நிறைய சம்பளம், சிறிய குடும்பம், சேர்த்து வைத்த பணத்தில் வீடு கட்டிய பெருமை
எல்லாம் சுந்தரத்தின் தலைக்கேறியது.
தந்தைக்கு முன்னால் தான் வெற்றி யை க் காண்பித்து விட்ட
கர்வம்.
இந்த நிலையில் கூடா நட்பு சேர , அவன் தவறான பாதையில் இறங்கி விட்டான்.
எப்போதுமே செய்யாதே என்ற வார்த்தை அவனை மேலும் தவறுகளை செய்ய வைக்கும்.
சந்திராவின் பொறுமைக் குணம் அவனை மேலும்
தீவிரமாக்கியது. மெல்லத்தான் திருந்துவான்.
|
14 comments:
சுந்தரத்தின் குண இயல்புகளைக் கோடிட்டுக் காட்டி விட்டீர்கள். ஒரு ஐடியா கிடைக்கிறது.
கூடா நட்பு கேடு தரும் என்று முதலில் புரிவதில்லை.
அன்பு ஸ்ரீராம்,
ஆப்பொசிட்ஸ் அட்ராக்ட் என்கிற மொழி தெரியும்
இல்லையா.
காதலிப்பது பெரிதில்லை அதைத் தக்க வைப்பதே அரிது.
அனேகமாக இராணுவக் கட்டுப்பாடு பழக்க வழக்கங்களில் வளர்ந்தவர்களில்
சிட்டிசன் எனப்படும் நம்முடன் சம்பந்தம் செய்வது
அவ்வளவு பழகின விஷயம் இல்லை. என் அம்மாவின் மாமாக்கள் இருவர் பட்டாளத்தில்
பெரிய பதவி வகித்து ரிட்டயரான பிறகும்
கண்டிப்புக் காட்டுவார்கள். அவர்கள் குழந்தைகள் மற்ற ராணுவக் குடும்பங்களிலேயே
மணம் செய்தனர். நன்றாகவே இருக்கிறார்கள். மிக நன்றி மா.
அன்பு வெங்கட், வருகைக்கு மிக நன்றி மா.
ஆமாம் இந்த ஊரிலும் குழந்தைகள் விஷயத்தில் எத்தனையோ
கவனமாக இருந்தும் வழிதவறிவிடுகிறார்கள்.
நல்ல தோழர்களைத் தேர்வு செய்வதில் ஏகப்பட்ட குழப்பம். எல்லோருக்கும்.
நலமுடன் வாழ இறைவன் தான் அருளணும்.
அருமை
சில குழந்தைகளுக்கு ஓவர் கண்டிப்பு காட்டும் போது அது நலல்தாகவெ இருந்தாலும் பெரியோரிடம் ஒரு கசப்புணர்வு வரும். அந்த வயதில் இயல்பு. அப்புறம் அது மாறுவதும் மாறாததும் சூழலைப் பொருத்தது. டீன் ஏஜ் பொருத்து...புரிந்து கொள்ளும் வயது வரும் போது எல்லாமே சில சமயம் தூரத்திற்குப் போய்விடும்...காலம் கடந்துவிடும்...
சுந்தரத்தின் இயல்புகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. காரணம் உட்பட....
கீதா
வணக்கம் நாகேந்திர பாரதி. கருத்துக்கு மிகவும் நன்றி.
உண்மைதான் கீதாமா. அளவுக்கு மீறிய கண்டிப்பு ,சங்கடம்.தான் தரும்.
அதுவும் அம்மாவின் செல்லம் இருக்கும் போது,
அப்பாவிடம் வெறுப்பு ஆரம்பித்தது.
மகனைத் தட்டிக் கொடுத்து வளர்க்காத தந்தையின்
குரலுக்கு மதிப்பில்லாமல் போனது. தனக்கு வரவேண்டிய சொத்தும் இல்லை என்று சொன்னது அவனுடைய தன்மானத்தைச் சிறுமைப் படுத்தியது.
அதற்காக அவ்ன் தவறான வழியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
காரணங்களை எழுத வேண்டும் என்று தோன்றியது மா. நன்றி.
சிலரால் என்னிக்கும் மாற முடியாது. சுந்தரம் மாறினால் நன்மையே!
சுந்தரத்தின் குண இயல்புகள் அறிந்து கொண்டேன்.
சுந்தரம் தன்னை உணர்வார் என்று நினைக்கிறேன்.
சிலருக்கு பல விசயங்கள் சில நேரங்களில் புரிவதில்லை.
ஆமாம். கீதாமா. காலம் தான் சொல்லவேணும்.தனக்குக் குடும்பம் தான் முக்கியம் என்று என்னிக்கு உணருகிறானோ அன்று தான் விடிவு.
உண்மையே கோமதி. நாள் பிடித்தாலும்
குடும்பத்தோடு சேரணும். நன்றாக வாழ வேண்டும்.
ஆமாம். தேவகோட்டை ஜி.புரிந்து விட்டால் பிரச்சினையே இல்லையே.
Post a Comment