Blog Archive

Tuesday, May 22, 2018

MAY 22, JAKARTA.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மே 22. ஜகார்த்தா.
சாதாரணமாக எப்பவும் போல் ஆரம்பித்தது.
பேத்தி மகன் அனைவரும் கிளம்பி வேலைக்கும் பள்ளிக்கும் போயாச்சு.
9 மணி வாக்கில் மகன் உள்ளே நுழிகிறான்.
சடார் என்று பதட்டம் சூழ்கிறது.
உடம்பு சரியில்லையாடா.
என்ன ஆச்சு. ஏண்டா கோட் எல்லாம் கழட்டறே.

ஜுரம் வந்துவிட்டுதா என்று அடுக்குகிறேன். 
நிதானமாக பக்கத்தில் வந்து என்னை அணைத்துக் கொள்கிறான்.

ஆஹா பெரியதாக ஏதோ நடந்துவிட்டது.

யாருக்காவது உடம்பு முடியலைய இந்தியால.
இல்லைம்மா
யாருடான்னு பெயர்களை அடுக்குகிறேன்.
இல்லைம்மா.
 முரளியாடா.
ஆமாம்மா.
இருக்கானா 
ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கான் மா.

என் படபடப்பு அதிகரிக்க சூன்யத்துக்குப் போய்விட்டேன்.
பகவானே அந்தக் குழந்தை ஒரு பாவமும் அறியாதது.
அதைக்காப்பாத்து  எனக்கு இந்த சோதனை வேண்டாம்.

எழுந்து போய் என் மருந்து மாத்திரைகளைக் கொண்டுவருகிறான் மகன்.
 ஸாரிமா  ஹி இஸ் நோமோர்.

அவ்வளவுதானா. ........இனி அவனும் எனக்கில்லையா.

உடம்பெல்லாம் பதறுகிறது. மகன் சொல்வது எதுவும் காதில் விழவில்லை

முதல் நாள் அவனுடன் வாட்ஸாப்பில் செய்திகள் பரிமாற்றம்.
யாரையும்  ஒதுக்க வேண்டாம். மனசை சுத்தமா வச்சிக்கோ.
சர்வம் நாராயணன் செயல்.
போயிட்டு வாடா என் அருமைத்தம்பி. 
உன்னை வந்து பார்க்க எனக்கு மனத்தெம்பில்லை. 
நான் முயன்று வந்தாலும் பத்துமணிக்குத் தான் இந்தியாவில் இருப்பேன்.

மீண்டும் சந்திப்போம்.

8 comments:

நெல்லைத் தமிழன் said...

உங்கள் நினைவலைகள்- எதற்கு கஷ்டகாலங்களை நினைக்கிறீர்கள்?

வல்லிம்மா... எழுதியது உங்கள் தம்பியைப் பற்றி. சொல்வது உங்கள் மகன். “ஆஸ்பத்திரிக்கு போயிருக்கான்” என்று எப்படி வந்துள்ளது?

வல்லிசிம்ஹன் said...

மகனுக்கு சட்டென்று ,
என் தம்பி உயிரோடில்லை என்று சொல்ல பயமாக
இருந்திருக்க வேண்டும்.

நெல்லைத் தமிழன்,
உகப்பாக இருப்பதை மட்டுமே எழுத
நான் அவனை மறக்க வேண்டும்.

என்னால் அது முடியவில்லை.

ஸ்ரீராம். said...

அந்த செய்தியைக் கேள்விப்படும் முதல் கணங்களை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதுதான்.

கோமதி அரசு said...

எனக்கும், அப்பா, அக்கா, அண்ணன் பற்றி நினைவுகள் வந்து போனது அந்த கணங்கள் யார் வாழ்விலும் அது போல் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்வேன்.
மூவரும் சிறு வயது. ஸ்ரீராம் சொல்வது போல் அந்த கணங்களை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது.

உங்களுக்கு தம்பி இல்லையா எப்படி மறக்கமுடியும்?காலம் முழுவதும் நினைவில் வாழ்வார்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.
திரும்பிப் பார்க்காதே என்று யாரோ சொன்னார்கள்.

கூடவே வந்தவனை , எத்தனையோ சந்தர்ப்பங்களில்
உறுதுணையாக இருந்தவனை எப்படி மறக்க முடியும்.

அவன் சிரமப்படாமல் சென்றுவிட்டான். அது ஒன்றே நிம்மதி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி இந்தப் புரிதல் எனக்கு நிம்மதியாக இருக்கிறது.

ஏதோ பூர்வ ஜன்ம புண்ணியத்தில் நீங்கள் எல்லோரும் நண்பர்களாகக்
கிடைத்திருக்கிறீர்கள்.

யாருமே சுலபத்தில் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.

என்னை முற்றும் அறிந்தவர் என் கணவர் ஒருவரே.
வாழ்க வளமுடன்.
இனி சிந்திப்பதிலும் சொல்வதிலும்
எழுதுவதிலும் கவனம் செலுத்தி வேறு எண்ணங்களைக் கொண்டு வருகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஓ. மாமாவை ஒருமையில் அழைத்ததைச் சொல்கிறீர்களா நெ.த. அவன் ஆங்கிலத்தில்
he has gone to the hospital என்று சொன்னதைத் தமிழில் அப்படி எழுதிவிட்டேன்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: வல்லிம்மா நம் மனதிற்கு நெருக்கமானவர்களின் மறைவு மிகவும் வேதனை அளிக்கக் கூடியதுதான். இறைவன் தங்களுக்கு இதிலிருந்து மீள அருள் புரியட்டும் அம்மா.

கீதா: உங்கள் அருமை தம்பி. எத்தனை லெட்டர்கள் உரையாடல்கள் பரிமாறிக் கொண்டிருந்திருப்பீர்கள் இல்லையா...அதனால் புரிந்து கொள்ள முடிகிறது வல்லிம்மா..

வல்லிம்மா என் அம்மாவின் மறைவு இப்போது நினைத்தாலும் மனதிற்கு வேதனையாக இருக்கும். 51 வது வயதில் அது போல என் அத்தை 53 வது வயதில் போய்விட்டார் இந்த இரு நிகழ்வுகளும் எனக்கு எப்போதும் மனக்கண்ணில்...அதனாலேயே யாருக்கும் இப்படி நேரக் கூடாது என்று வேண்டுவதுண்டு..