Saturday, April 13, 2019
Wednesday, April 10, 2019
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
காலம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.
தினம் ஒரு செய்தி.
மகிழ்ச்சி ,திகைப்பு என்று போகிறது.
அதை எல்லாம் சொல்வதற்கும், விவரமாகப்
பேசவும் நம் நட்புகள் இருக்கிறார்கள்.
ஒரு பிறந்த நாள் என்றால் எல்லோரும்
ஒன்று கூடுகிறோம் .
ஒருவருக்கு உடல் நலம் சரி இல்லையானால் அனைவருக்கும் கவலை.
எத்தனை பெரிய குடும்பம் எனக்கு,நமக்கு கிடைத்திருக்கிறது.
இனி துன்பமில்லை ஒரு சோகநிலை இனி என்றும் இல்லை.
இது எனக்கு நானே சொல்லிக் கொள்வது.
அனைவருக்கும் என் நன்றி.
இந்தப் பாசத்துக்குப் பதிலே கிடையாது.
மனம் நிறை நன்றி.

Wednesday, April 03, 2019
அன்னை பராசக்தி காத்தாள்
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
அடுத்த நாள் ஸ்ரீரங்கம், சமயபுரம் சென்று தரிசனம் செய்துவிட்டு
மாமா அன்புடன் வாங்கிக் கொடுத்த கொசுவலை, மின் விசிறி,
குடை மேஜை விளக்கு எல்லாம் எடுத்துப் பத்திரப் படுத்தினாள்
லலிதா.
சாந்தாவின் கடுமையான பேச்சு அவளை மேலும் உறுதிப்
படுத்தியது. அக்கா வசந்தாவின் திடீர் வருகை
மனதை அமைதிப் படுத்தியது.
மாமாவுக்கு ,தன் அக்காவின் செல்வங்களைச் சேர்த்துப் பார்த்ததில்
அளவிட முடியாத சந்தோஷம்.
சனிக்கிழமை தன் விடுதிக்குக் கிளம்புவதாக இருந்த
லலிதா ஞாயிறு காலை கிளம்பினாள்.
மாமி அழகம்மை அவளுக்குப் பிடித்த வகைப் பலகாரங்களைச் செய்து
டப்பாவில் அடைத்துக்
கொடுத்தாள். சிறிது கூச்சத்துடனே வாங்கிக் கொண்ட லலிதா,
இரண்டு பெரிய பெட்டிகளுடன் வண்டியில் ஏறினாள்.
கிளம்புவதற்கு முன் அண்ணன் சரவணன் ,அவளிடம் வந்து
தான் அங்கு வந்து பார்ப்பதாகச் சொன்னான்.
முதல் மாதம் தன் வேலைகள் அதிகமாக இருக்கும் என்று அவனைச்
சமாதானம் செய்து, அடுத்த மாதம் இரண்டாம் வார இறுதியில்
சந்திக்கலாம். மாமா,மாமியை அழைத்து வா என்றபடிக்
கிளம்பிவிட்டாள்.
அக்காவும் மாமாவும் வந்து அவள் அறையில் எல்லாப் பொருட்களையும் சீர் செய்து வைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.
கண்டிப்புக்குப் பெயர் போன அந்தப் பள்ளியில்
அதற்கு மேல் யாரும் தங்கக் கூடாது.
வெறிச்சோடிக் கிடந்த தங்கையின் முகத்தைப் பார்த்து
வசந்தாவுக்கும், மருமகளின் தனிமை மாமாவுக்கும்
துன்பம் கொடுத்தன.
சமீபத்திய நிகழ்வுகள் லலிதாவை உறுதிப் படுத்திவிட்டன.
தனியே வாழப்,படிப்பும், கையில் பணமும்,
தொலைபேசியிலாவது அன்பைத்தர அண்ணா,அக்கா,மாமா ,மாமி என்று
உறவுகள் இருக்கத் தான் வருந்துவதில் பொருள் இல்லை
என்ற தீர்மானம் உறுதியாகப் படிந்தது அவள் மனத்தில்.
ஆறு மாதங்களில் எத்தனையோ மாற்றங்கள்.
அண்ணனுக்கு மகன் பிறந்தான்.
அத்தை சீராக லலிதா,குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்
பார்க்க வந்த அண்ணனிடம் கொடுத்தாள்.
நேரில் போய் யாரையும் துன்புறுத்த அவளுக்கு விருப்பம் இல்லை.
மனமுடைந்து வருந்திய அண்ணனையும்,மாமாவையும் தேற்றினாள்.
இருமாதங்களுக்கு ஒரு முறை, அக்காவும் அவள் மகனும்
அவளைப் பார்க்க வந்தனர்.
ஓய்வு நேரம் அவளுக்குக் குறைவாகவே கிடைத்தது. தன் சக
மாணவிகளுடன் சுற்றி இருக்கும் ஆதாரப் பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்பும்,
அந்தக் குழந்தைகளுடன்
கல்வி போதிக்கும் சந்தர்ப்பங்களூம்,
அவளது மனபாரத்தை வெகுவாகக் குறைந்தன.
பள்ளியில் சேர்ந்த எட்டு மாதங்களில் ஃபின்லாந்திலிருந்து
ந்து வந்த ஆசிரியப் பயிற்சிக் குழுவினர்
லலிதாவின் உழைப்பைக் கண்டு வெகுவாகப் பாராட்டித் தங்கள்
வருமாறு அழைப்பும் விடுத்தனர்.
இந்த யோசனை மிகவும் பிடித்தது லலிதாவுக்கு.
அடுத்த வாரம் பார்க்க வந்த மாமாவிடம் தன் தீர்மானத்தைச் சொன்னாள்.
அங்கும் பயிற்சி பெற்றால், என் எதிர்காலத்துக்கு நன்மை மாமா.
அந்த நாட்டுக் கல்வி முறை பற்றி நூலகத்தில் படித்தேன்.
குழந்தைகளை நண்பர்களாக மதித்து நடத்துகிறார்கள்.
இரண்டு வருடங்கள் நிமிடமாகப் பறந்துவிடும்.
எனக்கும் மாறுதல் கிடைக்கும் என்று சொன்னவளைக்
கவலையுடன் நோக்கினார் மாமா.
அவ்வளவு தூரம் செல்லும்படி எங்களைக் கண்டால்
பிடிக்காமல் போய்விட்டதா அம்மா என்று கல்ங்கினார்.
சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் மாமா. ஒருவர் வாழ்விலும்
குறுக்கிட விரும்பவில்லை.கல்விதான் கண்களைத் திறக்கும்.
ஏன் நீங்கள் கூட மாமியை அழைத்துக் கொண்டு இரண்டாவது தேன் நிலவு அங்கே
வரலாமே என்று குறும்பாகச் சிரித்த மருமகளை ஆற்றாமையுடன்
அணைத்துக் கொண்டார் மாமா.
ஜூன் மாதமும் வந்தது.
சென்னையை விட்டு வந்து சரியாகப் பதின்மூன்று
மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை வந்தடைந்தாள்.
மாமா,மாமியை விட்டுப் பிரிவதுதான் மிக வேதனை
கொடுத்தது.
சரவணன்,சாந்தா அவர்கள் குழந்தை ஷண்முகப்ரியன்
அனைவரையும் சந்தித்து சுருக்கமாகப் பேசி விடை பெற்றாள்.
குழந்தையை அள்ளிக் கொள்ள ஆசை இருந்தும் கட்டுப் படுத்திக் கொண்டு
சிரித்தபடியே வெளியே வந்து விட்டாள்.
சென்னை வீட்டை வாடகைக்கு விட ஏற்பாடு செய்திருந்தார் அக்காவின்
கணவர்.
சென்னையில் இறங்கியதும் அண்ணா நகருக்குச்
சென்று வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்துமுக்கியமான் பொருட்களை மாடி அறையில் பந்தோபஸ்து
செய்துவிட்டு அக்கா வீட்டுக்கு வந்துவிட்டாள்.
ஒரு வினாடி கூடத் தேங்கி நிற்காமல் வேலை செய்வதில் ஏதோ
நிம்மதி.
இனி அந்த வீடு தனக்கு வேண்டாம் என்று தோன்றியது.
ராமன் நினைவிலிருந்து சிறிதாவது விடுபட்டு அழுகையும் துன்பமும் இல்லாத
வாழ்க்கை நோக்கித் தன்னைச் செலுத்த விரும்பினாள்.
ஜூன் மாதக் கடைசியில் பம்பாய்க்கு விமானம் ஏறினாள். அங்கிருந்து
ஹெல்சிங்கிக்குப் பயணம் பத்து மணி நேரம்.
இனி எதிர்காலத்தில் அவள் துணை தேடிகொள்ளலாம். இல்லையென்றால்
தனியாகவும் இருக்கலாம்.
பொதுவில் அவள் தேர்ந்தெடுத்த சுதந்திர வாழ்க்கை நிம்மதியாக
இருக்க வேண்டும்.
இந்தக் கதையில் வந்த லலிதா உண்மை.
நிஜக்கதையில் கணவனின் சந்தேகம் தாங்காமல்
விலகிச் சென்றாள்..
சந்தேகம் நுழைந்த வாழ்க்கையில் நிம்மதி ஏது.
கூட வந்த அனைவருக்கும் நன்றி. இரண்டு நாட்கள்
காய்ச்சலில் படுத்ததால் உடனே முடிக்க முடியவில்லை.
வாழ்கவளமுடன்.

Monday, April 01, 2019
அன்னையைச் சரண் புகுந்தால் அதிக வரம் 5
வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
மாமா மாமி முகத்தைப் பார்த்ததும் லலிதாவுக்கு வேறு கவலை வந்து
விட்டது.
வண்டியை அனுப்பிவிட்டு வாங்கிய பொருட்களைக்
கொண்டு வந்தவள், ஏன் இத்தனை கவலையோடு இருக்கிறீர்கள்,
சாந்தா நலமா என்றதும்,
மாமி , உன்னைப் பற்றித்தானம்மா கவலை. நாலு மணி நேரமாகக் காணமே என்று
மாமா யோசித்துக் கொண்டிருந்தார். ஏன் மா இவ்வளவு நேரம்
என்றதும் மனம் தெளிந்தவளாக மாமி அழகம்மாவிடம்
கோவில் குங்கும பிரசாதத்தைக் கொடுத்தபடி
அகிலாண்டேஸ்வரியின் கோவிலில் சிறிது நேரம் தியானம் செய்தேன் மா. மன்னிக்கணும்,
இனித் தாமதமாக எதுவும் செய்ய மாட்டேன் என்றாள்.
வா வா, இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்.
உனக்கு வேண்டும் என்பது கிடைத்ததா என்றதும்
தான் வாங்கி வந்த பயிற்சிக்கான உபகரணங்களைக்
காண்பித்தாள்.
இதை எல்லாம் செய்ய வேண்டுமா நீ என்று மாமா விசாரித்தார்.
இப்போதே இல்லை மாமா இரண்டு மாதங்கள் கழித்து வரைவது ,சிறிய மாடல்களை உருவாக்குவது என்று பல வேலைகள் செய்ய வேண்டி இருக்கும்.
அங்கேயே தங்குவதால் ,எனக்கு நேரம் நிறையக் கிடைக்கும்.
நீங்கள் கூட வந்து பார்க்கலாம் என்று மலர்ந்த முகத்தோடு
அவள் பேசுவதைக் கண்ட சோமு மாமாவுக்குத் தன் அக்காள்
நினைவே வந்தது. அவளுக்கும் விதவிதமான கைவேலைகள் மிகப்
பிடிக்கும்.
நன்றாக இரு அம்மா. இப்பொழுது உள்ளே வா.
திருச்சி வெய்யில் உனக்குப் பழக்கம் இல்லை,
குடையில்லாமல் எங்கும் வெளியே வரக்கூடாது.
நாளைக்கு என்னுடன் வா ,தேவையானதை நான் வாங்கித் தருகிறேன்
என்ற மாமாவை அன்புடன் பார்த்த லலிதா உடனே மறுப்பு சொல்லவில்லை.
கட்டாயம் போகலாம், மாமியும் கூட வரட்டும் என்றபடி உள்ளே நுழைந்தாள்.
உள்ளே இருந்து சினிமா இசை வந்தது.
அண்ணா ,சாந்தா இருவரும் டாக்டரைப் பார்த்துவிட்டு வந்தார்களா
மாமி என்று கேட்டபடி தன் அறையில் நுழைந்தவளிடம்,
இல்லை அம்மா,நீ அந்தப் பக்கம் போனே இந்தப் பக்கம்
மனதை மாற்றிக் கொண்டு விட்டாள் சாந்தா.
உலாவச் சென்று திரும்பி வந்தார்கள்.,என்று பெருமூச்சுடன்
சொன்ன மாமி, நீ அவளைத் தவறாக நினைக்காதே, சுபாவத்தில் நல்லவள் தான்,
இப்போது இந்த நிலையில் மனத்தை விட்டுவிடுகிறாள்.
குழந்தை பிறந்தால் மாறிவிடும்//என்ற மாமியைப் பார்த்துப்
புன்னகைத்த லலிதா, பாவம்மா, அவளுக்கு அண்ணாவின் அருகாமை அவசியம்,
நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் வருந்தாதீர்கள்.
எல்லாம் சரியாகிவிடும். நான் நாளை சாயந்திரமே ஹாஸ்டலுக்குப் போகிறேன்.
ஒரு மாத முடிவில் வந்து உங்களைப் பார்க்கிறேன்.
என்றப்படி கைகால் கழுவப் போனாள்.
சந்தடி கேட்டு வெளியே வந்தான் சரவணன். என்ன லல்லி,
அகிலாண்டேஸ்வரி என்ன சொன்னா. என்று புன்னகைத்தவனிடம்
உங்க அண்ணானுக்கு நானே வந்து பிறக்கிறேன்னு சொல்லிட்டா.
எதுக்கும் வைரத்தோடு 20 ஆயிரத்துக்கு செஞ்சு வச்சுக்கோ.
மாப்பிள்ளை வீட்டில் போடச்சொல்லுவாங்க
என்று விளையாட்டாகப் பரிகாசம் செய்தாள்.
ஏன் பையனாப் பொறந்தா அடுக்காதா உனக்கு. அந்த ஈஸ்வரி
தபசு செய்யற மாதிரி என் பொண்ணும் தவமிருக்கணுமா
என்று பட்டென்று குரல் வந்தது சாந்தாவிடமிருந்து.
வாயடைத்துப் போனாள் லலிதா.
சோமு மாமா ஒரு சத்தம் போட்டாரே பார்க்கணும். உனக்குக் கூடத்தான்
சாந்தம்மைன்னு பேர் வச்சேன் ,நீ பேசற பேச்சு பெண்ணா லட்சணமா இல்லையே.
நிதானமா இருந்துக்க. அம்மா நல்லதா நினைச்சா வர பிள்ளையும் நல்லா இருக்கும் என்று
வெளி வராந்தாவுக்குப் போய்விட்டார்.
பாத்தியாம்மா. அப்பா ஒரு நாள் என்னை ஏசி இருப்பாரா
இவளைக் கண்டதும் அவமேலப் பாசம் கூடிப் போச்சோ
என்று அழுதபடி தன் அறைக்குள் சென்றவளைப்
பின்தொடர்ந்தான் சரவணன். அடுத்த பதிவில் பூர்த்தியாகும்.

Friday, March 29, 2019
அன்னையின் வழி என்றும் நலம்.4
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
லலிதாவுக்கு அந்தப் பள்ளியின் சூழ்நிலையும்
தலைமைப் பொறுப்பில் அப்போது இருந்த சகோதரியையும் மிகவும் பிடித்து விட்டது.
எல்லோருக்கும் அன்னையாக இருந்த மதர் சுப்பிரியர் அவளை அன்புடன் ஆசீர்வதித்தார்.
மகளே , உன் வாழ்வு சீரடையும். கடவுளிடம் ஈடுபாடும் கற்கும் கல்வியில் முயற்சியும் இருந்து வெற்றி பெறுவாய். உலகத்தின் உன்னதத் தொழில் கல்வி கொடுப்பது.
மென்மேலும் அபிவிருத்தி கிடைக்கும் .வாழ்வு உயர்ச்சி அடையும். வெகு நாட்களுக்குப் பிறகு மனம் லேசாவதை உணர்ந்தாள் லலிதா.
வீட்டுக்குத் திரும்பும்போது சாந்தாவின் அலட்சியம் மனதை உறுத்தினாலும் மாமா,மாமியின் அன்பும் அண்ணாவின் ஆதரவும் எப்பொழுதும் உண்டு என்பது சிறிது ஆறுதல் அளித்தது.
அங்கே சாந்தா அன்னையைச் சொல்லால் பொரிந்து கொண்டிருந்தாள்.
கணவனை இழந்த ஒரு மாதத்தில் கருத்தரித்திருக்கும் என்னைப் பார்க்க எப்படி இங்கு வருவாள்.
சென்னையில் இல்லாத கல்லூரியா.
அவள் முன் நானும் என் கணவரும் எப்படி முன் போல்
சகஜமாக இருப்பது.
அவருக்கும் தங்கையைப் பார்த்து வருத்தம் வருமே. என் குழந்தை நன்றாக வளர வேண்டாமா.
இன்னும் என்னென்னவோ சொல்லி அன்னையைத் திகைக்க வைத்தாள் .
அழகம்மா இத்தனை வேதனைப் படாதே. உன் உடல் நிலைக்குச் சரி வராது. பெண்ணுக்குப் பெண்ணே இவ்வளவு பேதம் பார்க்கலாமா. அவளுக்கும் இப்போதுதான் 32 வயதாகிறது. நீயும் அவளுடன் வளர்ந்தவள் தானே.
சென்னையில் இருக்க முடியாமல் இங்கே வந்திருக்கிறாள் .
விடுதியில் தங்கப் போகிறாள்
உன் நிம்மதிக்கு ஒரு கெடுதியும் வராது
சரவணன் நிலையை நினைத்துப் பார். தங்கைக்காக எவ்வளவு வருந்தினான்.
நல்ல பெண்டாட்டியாக இருக்க முயற்சி செய் குடும்பம் தழைக்கும்.
லலிதா மேன்மையான பெண்.
யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டாள். என்று சொல்லி முடித்தாள்.
உபதேசம் செய்யாதேமா. திருமணம் ஆனதும் தனியாகச் சென்றிருக்கணும்.
அப்பா சொல் பேச்சு கேட்டு இங்கே தங்கினேன்.
எனக்குப் பிடிக்கவில்லை என்று தன் அறைக்குள்
போய்விட்டாள் .
நல்லதையே நினைக்கும் அழகம்மையின் மனம் வருந்தியது.
வாயிலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டு
சரவணன். என்ன அத்தை, லல்லி வந்து விட்டாளா. எப்படி இருக்கிறாள்.
என்று ஆவலோடு கேட்டவனை
உள்ள வாப்பா. லல்லி சுகமாக வந்தாள் . ஹோலிகிராஸுக்கு மாமாவும் அவளும் போயிருக்கிறார்கள். இதோ வந்து விடுவார்கள் என்று அவனுக்கு காபி பலகாரம் எடுத்துவைக்க உள்ளே விரைந்தாள்.
அவள் வெளியே வந்த பொது சிந்தனை தோய்ந்த முகத்துடன் சரவணன் அறையிலிருந்து வெளிப்பட்டான்.
கேள்விக்குறியோடு அத்தையை நோக்கினவனுக்குக் குழப்பம் தான் அதிகரித்தது.
சைகையால் அவனை அமைதி படுத்திய அழகம்மை,
கணவரையும் ,லல்லியையும் உள்ளே வரவேற்றாள்.
அண்ணா எப்ப வந்த என்று அழைத்தபடி உள்ளே வந்தவள், அமைதியாக அருகில் சென்று அணைத்துக் கொண்டாள்.
சரவணனின் கண்கள் நிரம்பியது.
சமாளித்துக் கொண்டு போன காரியம் வெற்றி போல, என்ன டீச்சரம்மா என்று சிரித்தான். ஒரே மாதத்தில் இளைத்த உருவமும்,இறுகிய முகமும் வேறு ஒரு பெண்ணைப் பார்ப்பது போல் இருந்தது.
மாமாவை நோக்கி அவர்கள் லல்லிக்கு அட்மிஷன் கொடுத்துவிட்டார்களா என்றான்.
பின்ன என்னன்னு நினைச்ச என் மருமகளை.
திங்களன்று பள்ளியில் சேரனும். ஞாயிறன்று விடுதியில் சேரனும்.
பணம் எல்லாம் ரெடியாகக் கொண்டு வந்திருக்கிறாள் உன் தங்கை.
எனக்கு ஒரு பைசா செலவில்லை என்று சிரித்தார் சோமு மாமா.
நீங்கள் இருப்பதால் தான் மாமா வந்தேன்.
உங்கள் உதவி இல்லாமல் என் வாழ்வு எப்படி இந்தப் பாக்கியத்தைப் பெறு ம் என்று மாமியையும் மாமாவையும் நிற்க வைத்து வணங்கினாள் .
அதற்குள் அறையிலிருந்து சாந்தாவின் குரல் கேட்டது. சரூ ..... எனக்கு மீண்டும் தலை சுற்றுகிறது.
இன்று டாக்டரை ச் சந்திக்கலாமா என்று கேட்டது.
ஓ போகலாம் மா. இங்கே வாயேன். எல்லோரும் வராந்தாவில் உட்கார்ந்து பேசலாம்
என்று அழைத்தான்.
பதிலில்லை.
லல்லி,,,,, மாமா என்னுடைகளைச் சீர் செய்து கொள்கிறேன். இன்னும் சில தேவையான பொருள்களையும் வாங்கி கொள்கிறேன்.
முக்கியமாக திருவானைக் காவல் போய் வர வேண்டும்.
அவள் அனுமதியோடு என் பயிற்சி ஆரம்பிக்கட்டும் என்றாள் .
நான் உன்னை அழைத்துச் செல்கிறேன் லல்லி.இப்பொழுது ஒய்வு எடுத்துக் கொள் லிஸ்ட் தயார் செய். மதியத்துக்கு மேல் போகலாம் என்றான்.
சரியண்ணா என்ற படி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் லல்லி.
அவள் எதிர்பார்த்தபடி சரவணனால் வரமுடியவில்லை.
தானே ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு, கையில் தயாராய் இருந்த, பயிற்சிக்கான உபகரணங்கள் கொண்ட லிஸ்டும், இரு சேலைகள், தன் குளியல் சாதனங்கள் என்று வாங்கி கொண்டு
திருவானைக் காவலும் போய்விட்டு வீடு நோக்கி வந்த பொது மணி இரவு ஏழாகி இருந்தது.
எதிர் நோக்கி ,முகத்தில் கவலையோடு அமர்ந்திருந்தனர் மாமாவும் மாமியும்.
.

Wednesday, March 27, 2019
அன்னை காட்டும் வழி...3
வல்லிசிம்ஹன்,
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
அன்று இரவு தூங்கப் போவதற்கு முன் லலிதா ஹோலிகிராஸ் ஆசிரிய பயிற்சிப் பள்ளியில் சேருவதாக முடிவெடுக்கப் பட்டது. அடுத்த நாள் காலை மாமாவும் லலிதாவும், அங்கே சென்று பார்க்க ஏற்பாடுகளை மாமா செய்துவிட்டே படுத்துக் கொண்டார்.
அடுத்த நாள் விடிந்தது. இரவு படுக்கப்போகும் முன் தன் கணவனை நினைத்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவள் அக்கா சொன்ன அறிவுரை நினைவுக்கு வர
தேற்றிக் கொண்டாள் . அம்மா எப்பொழுதும் வணங்கும் திருவானைக்காவல் அகிலாண்டேச்வரித்தாயை
மனமார நினைத்து உறங்கி விட்டாள் .
காலையில் மனம் சோர்வடையாமல் முகம் ,கழுவிக் குளித்துவிட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய நல்ல வங்காளக் காட்டன் புடவையை ,மடிப்புக் கலையாமல் கட்டிக்க கொண்டு, பூஜை மணி ஓசை வரும் திசையில் நடந்து தெய்வப் படங்கள் மாட்டி இருக்கும் அறைக்கு வந்தாள் .
அமைதியுடன் உட்கார்ந்திருந்த அழகம்மா அவளைக் கைப்பிடித்து உட்கார வைத்து நெற்றியில் திருநீறு அணிவித்தாள் .
சிறிது யோசனைக்குப் பிறகு விளக்கில் நுனியில் ஒட்டி இருக்கும் கரையிலிருந்து குழைத்து ஒரு கறுப்புப் பொட்டையும் நெற்றியிலிட்டாள் .
மீண்டும் எட்டிப்பார்க்க நினைத்த கண்ணீரை விழுங்கியபடி மாமியையும் மாமாவையும் வணங்கினாள் லலிதா
எதுவுமே தப்பில்லை லல்லி, மனம் நேராக இருந்தால் போதும். நீ போய் உன் காலை பலகாரத்தை முடித்துக் கொள் . நாம் கிளம்பவேண்டும்.
அறையை விட்டுத் தெளிந்த மனத்தோடு வந்த லலிதா, சாப்பிடும் அறைக்குச் சென்று ,சமையல் செய்யும் சீதை அம்மாவையும் சந்தித்தாள் . வெகு நாட்களாகப் பணிபுரியும்
அந்த அம்மாவும் லலிதாவை அன்புடன் தழுவி கன்னத்தில் முத்தமிட்டார்.
பாப்பா நல்லா சாப்பிடு. அப்பத்தான் தெம்பு வரும் ,என்று சொல்லி நிமிர்ந்தவள் உள்ளே வந்து கொண்டிருந்த , சாந்தாவை அழைத்து, லல்லி பாப்பா வந்திருக்கு கண்ணு. நீயும் வா என்றாள் .
உள்ளே வந்த சாந்தாவைக் கண்டு மகிழ்ச்சிப் புன்முறுவல் பூத்தாள் லல்லி.
ஸீதாம்மா எனக்கு தலை சுற்றலாக இருக்கிறது நான் என் அறையில் இருக்கிறேன், நீங்கள் ஹார்லிக்ஸ் மட்டும் கொண்டு வாருங்கள் என்றபடி லல்லியிடம் வா லல்லி என்று ஒரு சொல்லோடு வெளியே போய்விட்டாள்.
பாவம் மசக்கை இன்னும் விடவில்லை நீ சாப்பிடம்மா என்று,மணக்க,மணக்க இட்டிலி, மிளகாய்ப் போடி,சட்டினி இவைகளை மேஜையில் வைத்து லல்லியை அமரவைத்து சாப்பிடம்மா. இதோ வரேன் என்று வெளியே போனார்.
அந்நேரம் மாமா,மாமி வரவும் தன திகைப்பை மறைத்துக் கொண்டு சாப்பிடத் துவங்கினாள் லல்லி.
சாந்தாவைப் பாத்தியாம்மா என்ற மாமாவிடம் பார்த்தேன் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக், கை கழுவ எழுந்தாள்.
நீ உன் கல்லூரி சான்றிதழ்களைத் தயாராக வைத்திரு அம்மா.
அங்கிருக்கும் மதர் சுப்பிரியர் எனக்கு மிக வேண்டப்பட்டவர்.
அங்கு சேருவதில் பிரச்சினை இருக்காது.
வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிடலாம். தைரியமாக இரு. ஒரு வருடம் ஓடிவிடும்.
பிறகு எங்க லலித்தாக்குட்டி 6ஆம் வகுப்பு ஆசிரியை ஆகிவிடுவாள் . சரிதானே அம்மா என்றார் மாமா.
ஆமாம் மாமா, என் முழு முயற்சியும் இந்தப் படிப்பில் செலுத்துவேன் .இனி என் ஆதாரம் கல்வி ஒன்றே என்றாள்
லலிதா.
சரியாக ஒன்பது மணி அளவில் ஹோலிகிராஸ் பயிற்சிக்கூட வாசலில் நின்றார்கள் மாமாவும் மருமகளும்.

Tuesday, March 26, 2019
துணிவும் நம்பிக்கையும் தருவாள் பராசக்தி,,,,,,2
லலிதா விமானத்தில் ஏறியதும் கிளம்பிச் சென்ற அக்கா வசந்தா , திருச்சிக்கு தொலைபேசினாள் .
//மாமா, மிக மனம் உடைந்து லலிதா வருகிறாள். அவளைத் தேற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு என்று தழுதழுக்கும் குரலில் சொன்னவளையும்
ஆறுதல் கூ றித் தேற்றினார் சோமு மாமா..
நான் பார்த்துக் கொள்கிறேன் மா. நீ கவலையை விடு
என்றார்.
அருகில் வந்த மனைவி அழகம்மையிடமும் சொல்லி இருவரும் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தனர்.
45 நிமிடங்களில் திருச்சி வந்து சேர்ந்த விமானத்தில் இருந்து இறங்கி மெதுவே நிலைய வாசலை அடைந்த
லலிதா அங்கு நின்ற சிறிய கூட்டத்தில் மாமாவைக் கண்டு கொண்டாள் .
மீண்டும் ஒரு புது சோகம் அவளை ஆக்கிரமித்தது.
ஒரு புரியாத திகில் சூழ்ந்தது.
என்ன செய்யப் போகிறோம்...இனி இவர்கள் எல்லோரையும் சார்ந்தே வாழ்க்கை அமையுமா.
என் ராமன் ஏன் மறைந்தார். என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன.
அதற்குள் மாமி அருகில் வந்து அவளை அனைத்துக் கொண்டார்.
மாமா முதுகில் தட்டிக் கொடுத்தார்.
எல்லாம் சரி செய்யலாம் அம்மா. கலக்கத்துக்கு இடம் கொடுக்காதே.
தைரியம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். நீ படிக்கப் போகும் படிப்பு எத்தனை குழந்தைகளின் வாழ்வை வளம் செய்யப் போகிறது பார்//என்று அவள்கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
அண்ணா வரலியா மாமா என்று கேட்டதும், அவன் மதுரைக்கு வியாபார சம்பந்தமாகப் போயிருக்கிறான் அம்மா, இரண்டு நாட்களில் வருவான். உன் அண்ணி இருக்கிறாள்.
நாம் போகலாம் வா என்று காத்திருந்த வண்டியில் அவளை இருக்க வைத்து வண்டி ஓட்ட ஆரம்பித்தார்.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்திருந்த பழைய காலத்து வீடு. முன்னாள் ஆங்கிலேயர் காலத்து முறையில் வராந்தாவும், கூடங்களும், மாடிப்படிகளும் ,பின்புறம் அமைந்த சமையல் அறையும் ,அதன் பிறகு முற்றம், தோட்டம் என்று விசாலமாக இருந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் 2 லலிதா.
வெகு நாட்களாகப் பழகிய இடம் அவளுக்கு நிழல் தந்தது.
மகளைத் தேடிய அழகம்மை , பணிசெய்பவரிடம் விசாரித்த பொது சின்னம்மா ஓய்வெடுக்கச் சென்று விட்டதாகச் சொன்னார்.
உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன் லல்லிமா, உங்க அண்ணிக்கு இன்னும் ஐந்து மாதத்தில் பாக்கியம் கிடைக்கப் போகிறது. நீ அத்தையாகப் போகிறாய் என்றதும், மனம் பூரித்தது லலிதாவுக்கு.
வந்ததுமே நல்ல செய்தி சொல்கிறீர்கள் மாமி என்று அணைத்துக்கொண்டாள் லலிதா.
நீ கீழே எங்கள் அறைக்குப் பக்கத்திலேயே இருந்து கொள்ளம்மா. வா சாப்பிடலாம். இரவாகிவிட்டது பார் என்று அருமையுடன் அழைத்துச் சென்றார் மாமா.
Subscribe to:
Posts (Atom)
சுதந்திரம் அடைய என்ன தேவை?
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...