Blog Archive

Monday, April 01, 2019

அன்னையைச் சரண் புகுந்தால் அதிக வரம் 5

வல்லிசிம்ஹன்








 எல்லோரும்   நலமாக வாழ வேண்டும்.

 மாமா மாமி முகத்தைப் பார்த்ததும் லலிதாவுக்கு வேறு கவலை வந்து
விட்டது.
வண்டியை அனுப்பிவிட்டு வாங்கிய பொருட்களைக்
கொண்டு வந்தவள், ஏன் இத்தனை கவலையோடு இருக்கிறீர்கள்,
சாந்தா நலமா என்றதும்,
மாமி , உன்னைப் பற்றித்தானம்மா கவலை. நாலு மணி நேரமாகக் காணமே என்று
மாமா யோசித்துக் கொண்டிருந்தார். ஏன் மா இவ்வளவு நேரம்
என்றதும் மனம் தெளிந்தவளாக மாமி அழகம்மாவிடம்
கோவில் குங்கும பிரசாதத்தைக் கொடுத்தபடி
அகிலாண்டேஸ்வரியின் கோவிலில் சிறிது நேரம் தியானம் செய்தேன் மா. மன்னிக்கணும்,
இனித் தாமதமாக எதுவும் செய்ய மாட்டேன் என்றாள்.
வா வா, இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்.
உனக்கு வேண்டும் என்பது கிடைத்ததா என்றதும்
தான் வாங்கி வந்த பயிற்சிக்கான உபகரணங்களைக்
காண்பித்தாள்.
இதை எல்லாம் செய்ய வேண்டுமா நீ என்று மாமா விசாரித்தார்.
இப்போதே இல்லை மாமா இரண்டு மாதங்கள் கழித்து வரைவது ,சிறிய மாடல்களை உருவாக்குவது என்று பல வேலைகள்  செய்ய வேண்டி இருக்கும்.

அங்கேயே தங்குவதால் ,எனக்கு நேரம் நிறையக் கிடைக்கும்.
நீங்கள் கூட வந்து பார்க்கலாம்  என்று மலர்ந்த முகத்தோடு
அவள் பேசுவதைக் கண்ட சோமு மாமாவுக்குத் தன் அக்காள்
நினைவே வந்தது. அவளுக்கும் விதவிதமான கைவேலைகள் மிகப்
பிடிக்கும்.

நன்றாக இரு அம்மா. இப்பொழுது உள்ளே வா.
திருச்சி வெய்யில் உனக்குப் பழக்கம் இல்லை,
குடையில்லாமல் எங்கும் வெளியே வரக்கூடாது.
நாளைக்கு என்னுடன் வா  ,தேவையானதை நான் வாங்கித் தருகிறேன்
என்ற மாமாவை அன்புடன் பார்த்த லலிதா உடனே மறுப்பு சொல்லவில்லை.

கட்டாயம் போகலாம், மாமியும் கூட வரட்டும் என்றபடி உள்ளே நுழைந்தாள்.
உள்ளே இருந்து சினிமா இசை வந்தது.
அண்ணா ,சாந்தா இருவரும் டாக்டரைப் பார்த்துவிட்டு வந்தார்களா
மாமி என்று கேட்டபடி தன் அறையில் நுழைந்தவளிடம்,
இல்லை அம்மா,நீ அந்தப் பக்கம் போனே இந்தப் பக்கம்
மனதை மாற்றிக் கொண்டு விட்டாள் சாந்தா.

உலாவச் சென்று திரும்பி வந்தார்கள்.,என்று பெருமூச்சுடன்
சொன்ன மாமி, நீ அவளைத் தவறாக நினைக்காதே, சுபாவத்தில் நல்லவள் தான்,
இப்போது இந்த நிலையில் மனத்தை விட்டுவிடுகிறாள்.
குழந்தை பிறந்தால் மாறிவிடும்//என்ற மாமியைப் பார்த்துப்
புன்னகைத்த லலிதா, பாவம்மா, அவளுக்கு அண்ணாவின் அருகாமை அவசியம்,
நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் வருந்தாதீர்கள்.

எல்லாம் சரியாகிவிடும். நான் நாளை சாயந்திரமே ஹாஸ்டலுக்குப் போகிறேன்.

ஒரு மாத முடிவில் வந்து உங்களைப் பார்க்கிறேன்.
என்றப்படி கைகால் கழுவப் போனாள்.

சந்தடி கேட்டு வெளியே வந்தான் சரவணன். என்ன லல்லி,
அகிலாண்டேஸ்வரி என்ன சொன்னா. என்று புன்னகைத்தவனிடம்
உங்க அண்ணானுக்கு நானே வந்து பிறக்கிறேன்னு சொல்லிட்டா.
எதுக்கும் வைரத்தோடு 20 ஆயிரத்துக்கு செஞ்சு வச்சுக்கோ.
மாப்பிள்ளை வீட்டில் போடச்சொல்லுவாங்க
என்று விளையாட்டாகப் பரிகாசம் செய்தாள்.

ஏன் பையனாப் பொறந்தா அடுக்காதா உனக்கு. அந்த ஈஸ்வரி
தபசு செய்யற மாதிரி என் பொண்ணும் தவமிருக்கணுமா
என்று பட்டென்று குரல் வந்தது சாந்தாவிடமிருந்து.

வாயடைத்துப் போனாள் லலிதா.
சோமு மாமா ஒரு சத்தம் போட்டாரே பார்க்கணும். உனக்குக் கூடத்தான்
 சாந்தம்மைன்னு பேர் வச்சேன் ,நீ பேசற பேச்சு பெண்ணா லட்சணமா இல்லையே.
நிதானமா இருந்துக்க. அம்மா நல்லதா நினைச்சா வர பிள்ளையும் நல்லா இருக்கும் என்று
வெளி வராந்தாவுக்குப் போய்விட்டார்.

பாத்தியாம்மா. அப்பா ஒரு நாள் என்னை ஏசி இருப்பாரா
இவளைக் கண்டதும் அவமேலப் பாசம் கூடிப் போச்சோ
என்று அழுதபடி தன் அறைக்குள் சென்றவளைப்
பின்தொடர்ந்தான் சரவணன். அடுத்த பதிவில் பூர்த்தியாகும்.

17 comments:

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம் வல்லிம்மா....

அடுத்த பகுதியில் முடிவு.... காத்திருக்கிறேன் மா....

சிலர் இப்படித்தான் எதையாவது பேசி விடுகிறார்கள் - அடுத்தவர்கள் மனம் நோகும்படிச் செய்து விடுகிறார்கள். என்ன செய்ய. மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

அன்பினால் விளையும் பொறாமை. மேலும் கர்ப்ப காலா குழப்பங்கள்.. சாந்தாவும் சரியாகியிருப்பார்.

ஸ்ரீராம். said...

நான் ரோபாட் இல்லை என்று டிக் செய்ததும் சில சமயங்களில் படங்களைக் காட்டி எல்லாம் பரீட்சை வைக்கிறது உங்கள் பின்னூட்டப்பெட்டி. கொஞ்சம் சொல்லி வையுங்கள் அம்மா. இதில் எல்லாம் நான் கொஞ்சம் வீக்!!!

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட்.
மாறினால் நல்லது நடக்கும். கர்ப்பகாலக் கோப தாபங்கள் மறைந்துவிடும்.
கருத்துக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இனிய நற்காலை வணக்கம் ஸ்ரீராம். அதை எடுத்து விடுகிறேன் மா.

நீங்கள் சொல்வது உண்மையே கர்ப்ப காலத் தவிப்புகளில் இந்த பொறுமை இன்மையும் ஒன்று.
எல்லாம் மாறும். கருத்துக்கு நன்றி மா.

Geetha Sambasivam said...

எத்தனை வருஷங்கள் ஆனாலும் சிலர் மாற மாட்டார்கள். சாந்தாவும் அவர்களில் ஒருத்தியோ? என்னவோ மனம் பதைக்கிறது இத்தகைய கடுஞ்சொற்களால்! எல்லாம் நல்லபடி முடியட்டும். சாந்தா சாந்தமாக ஆகட்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

அடுத்தவர் மனம் வருந்தும்படி பேசுதல் சிலருக்குப் வாடிக்கை

KILLERGEE Devakottai said...

அடுத்த பதிவில் எல்லாம் நலமாகும்...

கோமதி அரசு said...

சிலருக்கு கடுமையான வார்த்தை பேசி பேசியே பழக்கம்.எதிராளி பதில் கொடுக்கவில்லை என்றால் மேலும் பேசுவார்கள் மகிழ்ச்சியாக.

இந்த குணம் பிறவிகுணமாக இல்லாமல் இருந்தால் நலம்.
சாந்தாவிற்கு குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் இல்லையென்றால் அந்த பழியும் லல்லி மேல் வந்து விழும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதே நடக்கட்டும் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. நாம் எல்லாம் கேட்காத வார்த்தைகளா.
ஆனாலும் எல்லாமே நலமாகத்தான் நடந்திருக்கிறது. மனம் பிழன்ற
நிலையில் அந்தப் பெண் எதோ உளறுகிறது என்பது வரை
லலிதா உணர்ந்து கொண்டாள்.
அது அவளது உறுதியை மேம் படுத்தியது.
நல் வழிப் படுத்தியது. நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு கரந்தையாரே..காலம் மாறும்.
சொன்ன வார்த்தைகளையும் மறக்க வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி, அதுதான் உலகம்.
வார்த்தை நல்லதானால் உலகம் செழிக்கும்.
நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், எல்லாம் சரியாகிவிடும். முள் விலகினால் உள்ளம் சுகம் பெறும்.
மனம் பக்குவப் பட்டால் மகிழ்ச்சி விளையும்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.,
நல்ல பெண்தான் அவள்.அவள் வரவேற்காதது
லலிதாவின் வருகையே.
அதனால் வீட்டுக்குத் துன்பம் வரும் என்கிற பேதமை உணர்வினால் அப்படிப் பேசிவிட்டாள்.

இனி எல்லாம் சரியாகிவிடும்.நன்றி மா.வாழ்க வளமுடன்.

Thulasidharan V Thillaiakathu said...

சாந்தா மனம் மாறுவாள். பேறுகாலத்தில் சிலருக்கு இப்படியும் மனசு கொஞ்சம் வீக் ஆகும். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நினைக்கிறோம் அம்மா

துளசிதரன், கீதா

(துளசிதரன்: நான் தொடர்ந்து வாசித்துவிட்டேன்.)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, அன்பு துளசி,
சங்கடம் எல்லாம் தீரும். கர்ப்ப காலச் சங்கடங்களும், கணவன் மேல் அபரிமிதமான
பிடிப்பும் எல்லாம் காரணமாகிறது.
நன்றி கண்ணா. இரண்டு நாட்களாக ஸ்ப்ரிங்க் ஃபீவர் படுத்துகிறது.
எப்படியாவது முடித்துவிடுகிறேன்.