Saturday, August 15, 2009

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்
அனைவருக்கும் இனிய சுதந்திரத்திருநாள்
வாழ்த்துகள்
வளமே பெறுவோம் .
வாழ்க பாரதத் திருநாடு .

Thursday, August 13, 2009

குருவாயூரப்பனும் நாராயண பட்டத்ரியும்

















அட்டமி தினமான
இன்று எல்லோர் மனத்திலும் ஆடும் கண்ணன் எப்போதும்
நின்றாட நம் துதிகள் அவனை எட்டட்டும்.
அவன் குழலோசை எப்போதும் நம் மனம் நிறைந்து அமைதி
கொடுக்கட்டும்.
நாராயணீயத்தில் பட்டத்ரி கண்ணனை அடிக்கடி சந்தேகம் கேட்பாராம்.
''கண்ணா, உனக்கு ஐந்து வயதாயிருக்கும் போது எப்படி காளிங்கன் தலைமீது தலை வைத்து ஆடினாய்.சிறிய குழந்தை அல்லவா நீ என்றாராம்
குருவாயூரப்பன் உடனே நேரிலேயே அவர் முன்னால் ஆடிக்கட்டினாராம்.!!!
அதே போல அவ்வளவு வெண்ணெயுமா சாப்பிட்டாய் என்று
அதிசயப்பட்டபோது,
அவர் முன்னாலேயே சாப்பிட்டுக் காட்டினானாம்
அந்த மாயக்காரன்.
இப்படி ஒவ்வொரு கட்டத்திலேயும் அவரோட சந்தேகங்கள் அனைத்துக்கும்,சரியான திருப்தியான பதில்களைக் கொடுத்து அவரிடம் நாராயணீயம் எழுதி வாங்கி,அவருக்கு இருந்து நோயையும் போக்கினான் நம் கண்ணன்.
இன்று எங்கு பார்க்கிலும் கண்ணன்.
எல்லாச் சானல்களிலும் வலம் வருகிறான்.
குழந்தைகளுக்குக் கண்ணன் அருள் புரிந்து, இப்போது பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்,
முற்றும் நம்மை விட்டு விலகக் காவலிருக்க வேண்டும்.
காத்து இருப்பான் கமலக் கண்ணன்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
முதல் பிறந்த நாள் வாழ்த்துகள் இந்தவருடத்துக்கு இன்று!!!
இரண்டாவது பிறந்தநாள் செப்டம்பர் 12ம் வருகிறது.
ருக்மணிக்காக ஒருதடவையும்,
சத்யபாமைக்கு மனக்களிப்பு தர இன்னோரு தடவையும் வருகிறானோ:))
 

எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, August 10, 2009

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே













குழந்தையும் தெய்வமும் கொண்டாடப்படும் இடமாக 60 நாட்கள் ஓடிவிட்டது.
மழலை அள்ளித் தெளித்து,
பாட்டுகளும் பாடி,
அம்மா கொஞ்சம் கோபித்தால் ''ஏம்மா காரமாப்
பேசறேன்னு'' கேட்டு அசத்தின உழக்குப் பையன்
 
நீயும் என்னோட வரியான்னு கேட்டு விட்டு, அப்பாவைப் பார்த்துட்டு உனக்கு கம்ப்யூட்டர்ல ஹலோ சொல்றேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
என்றபடி
திறந்த கதவு வழி குழந்தைகளும் மகளும் விரைந்து விட்டனர்.
என்னைச் சுற்றி நிற்பவர்களைப் பார்த்தேன் . சில பேர் கண்களில் கலக்கம். கண்ணீர்.(நானும்தான்)
சில கண்களில் பெருமிதம்.
நல்லபடியாப் போய்விட்டு வாம்மா.
பத்திரமாக இருங்க.
விமானத்தில ஓட வேண்டாம்.
பப்பிள் கம் தொண்டையில் மாட்டிக்கும் எடுத்துடு.
பாட்டி நீ அடுத்த வருஷம் வரயா.
சுதந்திரதினத்தை ஒட்டி செய்திருந்த பாதுகாப்புச் சட்டத்தை மீறி உள்ளே செல்ல முடியவில்லை.
கண்ணாடி வழி கூட உணர்ச்சிகள்
போய்ச் சேரும் என்பதை கிட்டத்தட்ட 600 அடிகள் தொலைவிலிருந்து என் பெண் கண்ணில் பார்த்தேன்.
அவரவருக்கு வாய்த்த இடத்தில் சீரும் சிறப்புமாக இருக்கத்தானே நாம் இவர்களை பெற்று வளர்த்தோம்!!
மீண்டும் ஒரு வசந்தம் வரும். காத்திருக்கலாம்.:)







எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Tuesday, August 04, 2009

உங்கள் எழுத்து சுவாரஸ்யமானது



வலையில் வலம் வந்து கொண்டிருக்கும் எண்ணில்லாத விருதுகள்,
வலைத்தளம் எவ்வளவு மாறிவிட்டது என்று பறை சாற்றுகிறது.
 
முன்பு விளையாடிய,ஆறு,எட்டு,பத்து எண்கள் தொடர் ஒரு பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி நம்மை,
நாமே சுய சிந்தனைக்குள் மூழ்க வைத்துக் கொண்டு அலசி எடுத்த சில பார்வைகளை,
மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுத்தோம்.
இப்போது பல இளைஞர்களும்,கணினித் துறை சேர்ந்த தேர்ந்த எழுத்தாளர்களும்
தமிழ்மணத்தில் சூறவளி வேகத்தில் எண்ணங்களையும், தொழில் நுட்பங்களையும் பகிர்ந்து கொடு வருகிறார்கள்,
கவிநயா எனக்கு அன்புடன் வழங்கிய இந்த சுவாரஸ்யம் மிகுந்த விருதை எனக்குத் தெரிந்த சில என்னை விட சுவாரஸ்யமாக படைப்புகளை அளித்து வரும்
சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
 
 
உஷா ராமச்சந்திரன்....நுனிப்புல் பதிவு
**********************************************************
நல்ல தெளிவான சிந்தனைக்கு உரியவர்.
சமுதாய நலனில்,அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில்
மிகவும் கவனம் வைத்து எழுதுபவர்.
***********************************************************

மதுமிதா.
******************
காற்றுவெளிக்குச் சொந்தமானவர். கவிதாயினி,சமூகப் பொறுப்பு மிக்கவர்.
பல தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து சேவை செய்பவர்.
நல்ல எழுத்துக்கும் , பல புத்தககங்களை வெளியிட்ட பெருமைக்கும் உரியவர்.
****************************************************************************

ஒலிக்கும் கணங்களுக்குச் சொந்தமான நிர்மலா.

***************************************************************************
மிகத் திறமைசாலி.முற்போக்குச் சிந்தனையாளர்.
நல்ல படிப்பாளி.
பதிவுலகில் மீண்டும் அவர் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்
என்பதே என் ஆவல்.

அருணா ஸ்ரீனிவாசன்
*********************************

அலைகள் தளத்துக்குச் சொந்தமானவர்.
பொருளாதாரத்தில் பெரிய அளவில் படித்தவர்.
இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்பவர். அடக்கம் அவரது முதல் பண்பு. அவருக்கும் இந்த விருது
மிகப் பொருந்தும்.
**************************************************************

துளசி கோபால்.

**************************
துளசிதளத்துக்குச் சொந்தக்காரர்.
இவருக்கு எல்லாம் அறிமுகம் தர நமக்கு ஞானம் போதாது.
வலையுலக வரலாற்று ஆசிரியை.
தொடாத சப்ஜெக்ட் கிடையாது.
தெரியாத விஷயம் கிடையாது.
இவரைவிடச் சுவாரஸ்யமானவர் யாரும் இருக்க முடியாது என்றே எனக்குத் தோன்றும்.

ஆறாவதாக நான் விருது கொடுக்க நினைப்பவர் நானானி.

***************************************************************************************
நைன்வெஸ்ட் தளத்துக்குச் சொந்தக்காரர்.
யாராவது இவருக்கு இதற்குள் இந்த விருதை அளித்திருப்பார்கள்.
இருந்தாலும் நானும் பகிர்ந்து கொண்டேன் என்கிற பெருமை வேண்டுமே.:)
சகலகலாவல்லியான நானானிக்கும் இந்த விருதைப்
பங்கிட்டுக் கொள்கிறேன்.
நீங்களும் உங்களுக்குச் சுவாரஸ்யமாகப் படும் ஆறு நபர்களுடன் விருதுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற'வேண்டுகோளோடு
என் நீண்ட பதிவை முடித்துக் கொள்கிறேன்:)
 





எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

வாழ்வின் ருசி சுவாரஸ்யமாகிறது


நன்றி கவிநயா. எதிர்பார்க்கவில்லை. அதனால் இனிக்கிறது. மிகவும் நன்றி.
இதை எப்படி என் பதிவில போட்டுக்கறதுனு யோசிக்கிறேன்.:)




மீண்டும் கவிநயாவுக்கு நன்றி


போட்டிருக்கிறேன்.
சரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள்:)
சுவாரஸ்யமான பாட்டின்னு பேர் எடுத்தாச்சு.
பதிவுக்கும் சுவாரஸ்யம் கூட்டும் இந்த அவார்ட்
உண்மையிலியே க்ரேட்!!


எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

Friday, July 31, 2009

நேயர் விருப்பம்

m

அலைமகள் வெள்ளி.





























































அலைகள் ஆடும் பீச்சுக்குப் போனால் மனித ஆட்டம் அதிகமிருந்தது:)
அலைகளை மட்டும் படம் எடுத்து விட்டு,
இன்று வீட்டுக்குப் புதிதாய் வந்த மகாலட்சுமியைப் படமெடுத்துப் பதிந்து விட்டேன்.
தாயாருக்குப் புடவை உபயம் பெண்.:)






எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.

ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...