எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
முந்தைய பதிவு வழக்கப் படி எழுத்துக்கள் மறைந்து
பாசுரம் மட்டும் இருந்தது.
உலக நாயகி ஸ்ரீ கோதையின் விருப்பம் அதுவென்றால்
இந்தப் பதிவிலும் வழக்கமாகி சேவிக்கும் பாடலையும்
பதிகிறேன் .
அவள் சரணே திண் சரண்.
பாசுரங்களை ச் சொல்லிபூர்த்தி செய்ததும்
கீழ்வரும் பாடலையும் சேவிக்கும் வழக்கம்.
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதுர்
மாமுனிக்குப் பின்னானாள் வாழியே/
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கேற்கண்ணி உகந்துரைத்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளனாடு வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.//
ஸ்ரீ ரங்கமன்னார் கோதை திருவடிகளே சரணம்.
ஸ்ரீராமானுஜர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் திருவடிகளே சரணம்.
சகல ஆச்சார்யர்கள் திருவடிகளுக்கும் சரணம்
சொல்லி இம்மார்கழி இனிதே நிறைவேற வைத்த
கோதை நாச்சியாருக்குப் பல்லாண்டு சொல்கிறேன்.
சரணம் சரணம் சரணம்.
9 comments:
/முந்தைய பதிவு வழக்கப் படி எழுத்துக்கள் மறைந்து பாசுரம் மட்டும் இருந்தது.//
ஏன் அப்படி ஆகிறது?
இன்றைய பதிவைக் கேட்டேன் ரசித்தேன்.
இந்தப் பாடல் பலஸ்ருதி என நேற்றுத்தான் ஒருத்தர் எழுதி இருந்தது படிச்சேன். அருமையான மார்கழி மாதம் சீக்கிரமாய் முடிஞ்சாச்சு! பொங்கலும் இதோ வந்தாச்சு. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
காணொளி கேட்டேன் அம்மா
அன்பு கீதாமா, அது பலஸ்ருதி தான்.
தினமுமே சொல்லுவார் பாட்டி.
ஆமாம் மார்கழி ஓடிவிட்டது.
மாதங்கள் ,வருடம் ஓடி அடுத்த மார்கழிக்கும் மாலை வழிபட அவன் தாள் துணை.
நன்றி மா.
அன்பு ஸ்ரீராம் ,இது ப்ளாகருக்கு வந்த நோய்.
கண்டு பிடித்து சரி செய்ய எனக்குத் தெரியவில்லை.
பாடல் போட்ட அடுத்த நொடி முன்பு எழுதியது மறைந்து விட்டது.
பரவாயில்லை. கீதா என்னை விட அழகாக எழுதுகிறார்.
அதை ரசித்தால் மார்கழி முடிந்தது. தொடர்ந்து படித்ததற்கு மிகவும் நன்றி மா.
நன்றி.
அன்பு தேவகோட்டைஜி.
பொங்கல் நாள் சிறக்க சங்கடங்கள்
பனி போல் மறைய இறைவன் அருளுவான்.
வ்சந்தகுமாரி அவர்களின் பாடலை தினம் கேட்டு மகிழ்ந்தேன்.
இன்றும்.
அடுத்த வருடமும் திருப்பாவை பதிவுகள் இட இறைவன் அருள்புரிவான்.கோவிந்தன் அருள் புரிவான்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
மறையும் எழுத்துகள்... :( சில சமயம் இப்படித்தான் மா. என்ன நடக்கிறது/செய்கிறீர்கள் என்பதை பார்த்தால் தான் சரி செய்ய முடியும்.
வரிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காணொளி வழி கேட்டு ரசிக்க முடிந்தது என்பதில் மகிழ்ச்சி மா...
பலஸ்ருதி பாடலும் கேட்டு ரசித்தேன்.
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்
Post a Comment