Blog Archive

Tuesday, January 14, 2020

ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 
முந்தைய பதிவு  வழக்கப் படி எழுத்துக்கள் மறைந்து 
பாசுரம் மட்டும் இருந்தது.

உலக நாயகி ஸ்ரீ கோதையின் விருப்பம் அதுவென்றால் 
இந்தப் பதிவிலும் வழக்கமாகி சேவிக்கும் பாடலையும் 
பதிகிறேன் .
அவள் சரணே திண்  சரண்.

9 comments:

ஸ்ரீராம். said...

/முந்தைய பதிவு  வழக்கப் படி எழுத்துக்கள் மறைந்து  பாசுரம் மட்டும் இருந்தது.//

ஏன் அப்படி ஆகிறது?

இன்றைய பதிவைக் கேட்டேன் ரசித்தேன்.

Geetha Sambasivam said...

இந்தப் பாடல் பலஸ்ருதி என நேற்றுத்தான் ஒருத்தர் எழுதி இருந்தது படிச்சேன். அருமையான மார்கழி மாதம் சீக்கிரமாய் முடிஞ்சாச்சு! பொங்கலும் இதோ வந்தாச்சு. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai said...

காணொளி கேட்டேன் அம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, அது பலஸ்ருதி தான்.
தினமுமே சொல்லுவார் பாட்டி.
ஆமாம் மார்கழி ஓடிவிட்டது.

மாதங்கள் ,வருடம் ஓடி அடுத்த மார்கழிக்கும் மாலை வழிபட அவன் தாள் துணை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,இது ப்ளாகருக்கு வந்த நோய்.
கண்டு பிடித்து சரி செய்ய எனக்குத் தெரியவில்லை.

பாடல் போட்ட அடுத்த நொடி முன்பு எழுதியது மறைந்து விட்டது.
பரவாயில்லை. கீதா என்னை விட அழகாக எழுதுகிறார்.
அதை ரசித்தால் மார்கழி முடிந்தது. தொடர்ந்து படித்ததற்கு மிகவும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி.
அன்பு தேவகோட்டைஜி.
பொங்கல் நாள் சிறக்க சங்கடங்கள்
பனி போல் மறைய இறைவன் அருளுவான்.

கோமதி அரசு said...

வ்சந்தகுமாரி அவர்களின் பாடலை தினம் கேட்டு மகிழ்ந்தேன்.
இன்றும்.
அடுத்த வருடமும் திருப்பாவை பதிவுகள் இட இறைவன் அருள்புரிவான்.கோவிந்தன் அருள் புரிவான்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.

வெங்கட் நாகராஜ் said...

மறையும் எழுத்துகள்... :( சில சமயம் இப்படித்தான் மா. என்ன நடக்கிறது/செய்கிறீர்கள் என்பதை பார்த்தால் தான் சரி செய்ய முடியும்.

வரிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காணொளி வழி கேட்டு ரசிக்க முடிந்தது என்பதில் மகிழ்ச்சி மா...

பலஸ்ருதி பாடலும் கேட்டு ரசித்தேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்