Saturday, June 27, 2026

குடும்பம் 1997


வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமுடன் வாழ வேண்டும்.

1996இல்   அப்பாவின் முயற்சியால்  மகள் திருமணம் ஒரே நாளில்
தீர்மானம் ஆகி 
அடுத்த 15 நாட்களில்  நாளும் குறிக்கப் பட்டது.
தம்பிகள் இருவரும் மாவிலைத் தோரணம்   தயார் செய்கிறார்கள்
எப்போதுமே சிரித்த முகத்துடன் அம்மா.
ஆரத்தி எடுக்கும்  என் சின்ன மாமியார்
பந்தக்கால் நடப்படுகிறது
அம்மாவும் தம்பி  குடும்பம்  இன்னோரு உறவினரும்
ஒரு  சரித்திரம் படைத்தவர்கள் தம்பிகளும், அப்பாவும் அம்மாவும்.
வம்பு பேச மாட்டார்கள். நாள் முழுவதும் கடும் உழைப்பைக் கொடுக்க அஞ்சாதவர்கள். உண்மை மட்டுமே பேசுவது என்று அப்பா சொல்லிக் கொடுத்ததால் பல ஏணிகளில் ஏற முடியாமல்
விட்டவர்கள்.   அதனால் தான் என் கணவருடன் அத்தனை அன்பு பாராட்டினார்கள்.
மேல் கோட்டே   திரு நாராயணன், யோக நரசிம்ஹன் பயணம். தம்பிகளுக்கும், தந்தைக்கும்   அஞ்சலிகள்.

5 comments:

ஸ்ரீராம். said...

உங்கள் அப்பா போல என் தாத்தா.  திடீரென முடிவு செய்து என் அக்காவுக்கும் அவர் மகனுக்கும் திருமணம் பேசி உடனடியாக முடித்தார்.    வீட்டில் ஏகப்பட்ட மகன் மகள் இருந்தும் அவர் சாட் சட்டென அவரவர்கள் கல்யாணங்களை முடித்தார்.  எல்லாம் பொருத்தமான நல்ல இடங்கள்.  சில சொந்ததத்திலேயே....

ஸ்ரீராம். said...

தம்பிகள், அப்பா அம்மா பற்றிச் சொல்லி இருப்பது நெகிழ்த்துகிறது.  தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று இருந்திருக்கிறார்கள் என்பதோடு நேர்மை மாறாமல் இருந்திருக்கிறார்கள்.

ஸ்ரீராம். said...


குடும்பத்தோடு புகைபபடம் எடுத்துக் கொண்ட அந்த தருணம்..  எல்லோரும் அருகில் இருந்தார்கள்.  அப்போது சாதாரணமானது தோன்றும் அந்த புகைப்படங்களுக்குதான் அப்புறம் எவ்வளவு மதிப்பு வருகிறது....

வெங்கட் நாகராஜ் said...

இனிய குடும்பம்...

காலை வேளையில் சிறந்த பகிர்வு. நன்றிம்மா.

நல்லதே நடக்கட்டும்.

கோமதி அரசு said...

நல்ல நினைவுகளை தந்த அருமையான படங்கள்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...