வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
உலகநீதி கதை 3.
//சினம் தேடி அல்லலையும் தேடவேண்டாம்
சினந்திருந்தார் வாசல் வழி சேர வேண்டாம்
தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்//
குழந்தைகளுக்குப் பள்ளியிலிருந்து வரும்போதே
பசி.
அவர்கள் அம்மாவும் வேலையிலிருந்து வரவில்லை.
கையில் தான் அலைபேசி இருக்கிறதே.
என்ன செய்வது என்று அறிவுரை கேட்டுக் கொண்டார்கள்.
அவர்களுக்குப் பிடித்த உணவை செய்து தரட்டுமா என்று
கேட்டதற்கு மறுத்துவிட்டார்கள். ஐந்து நிமிடத்தில்
வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது.
அவசரத் தேவைக்குப் பாலைக் கொடுத்துவிட்டு
இருபக்க விவாதத்தைக் கேட்டு முடிப்பதற்கும்
அவர்கள் அம்மா, பிடித்த பலகாரத்தை வாங்கி
வருவதற்கும் சரியாக இருந்தது.
அவர்களுக்கு அதுதான் தேவையாக இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும், கோபம் தீர்ந்ததா என்றதும் சிரிக்கிறார்கள்..
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று
அவர்களை அழைத்து உட்கார வைத்தேன்.
ஸாரி , பாட்டி , நாங்க ரொம்ப சத்தம் போட்டுவிட்டோம் என்று
கேட்ட குழந்தைகள் மீது என்ன சொல்வது என்றே
தெரியவில்லை.
அதற்குத்தான் இந்தப் பாடலைச் சொல்ல நினைத்தேன்.
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம் .
இது என்ன சொல்லு என்றேன்.
பேத்திக்குப் புரிந்தது.
தானம் செய்ய வேண்டும் என்றாள் .
அடுத்து சினம் கொள்ள வேண்டாம். வேறு யாராவது கோபப்பட்டால் அந்த இடத்தில் இருந்து விலகிவிட வேண்டும். என்று சொன்னதும்.
அது முடியுமா பாட்டி.
முடியும். கண்ணா.
கொஞ்ச நேரம் முன்னால் ஒரு பெரியவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்.
ராமர் கதை தெரியுமா என்றேன். என்ன பாட்டி,
நன்றாகத் தெரியும் என்கிறார்கள்.
அதில ஹனுமான் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றதும்.
நல்ல புத்திசாலி,பலவான், மெதுவாகப் பேசுவார், தைரியம் அதிகம்.
வீர தீர பராக்கிரமசாலி என்று அனுமன் சாலிசா
போல சொல்ல ஆரம்பித்தனர்.:)
"அவர் ஒரு தடவை நல்ல சிக்கலில் மாட்டிக்
கொள்ள நேர்ந்தது. அவரின் அளவில்லாத
பாசத்துக்கு ஆட்பட்டிருந்த ராமருக்கும் சுக்ரீவனுக்கு கருத்து பேதம் "
என்று விபீஷண சரணாகதி பற்றி சொல்ல ஆரம்பித்தேன்.
விபீஷணன், அண்ணன் ராவணனை விட்டுவிட்டு ராமனிடம் அடைக்கலம் கேட்கும் போது,
சுக்ரீவன் மறுக்க,
கருணாசாகரனான ராகவன் , தன்னைச் சரணமடைந்தவனைக் காக்க வேண்டும் என்கிறார்.
சுக்ரீவனோ விபீஷணனை நம்பக்கூடாது. அவன் உங்களைக் கொன்றாலும் கொல்லுவான்
என்று சொன்னதும் ராமர் மனம் வாடுகிறது.
இது வரை சும்மா இருந்த அனுமன்,
சுக்ரீவனிடம் சென்று அவனிடம் சினத்தை அகற்றி நிதானமாக இருக்கச் சொல்கிறார்.
உனக்கு ராமர் உயிர் மேல் எவ்வளவு அக்கறையோ அதே போல அவர் தம் சரணாகதித் தத்துவத்தின் மீது
உயிர் வைத்திருக்கிறார்.
நீ விபீஷணனை வேண்டாம் என்றால் அவர் உயிரை விடுவது நிச்சயம்.
உனக்கு அது தர்மமாகப் படுகிறதா "
என்றதும் சுக்ரீவனின் சினம் சட்டென்று தணிந்தது.
என் மேலும் ராமருடைய இரக்கத்தின் மேலும் நம்பிக்கை வை.
இரு உயிரைக் காப்பாற்றுவாய் என்கிறார்.
பிரச்சினை தீர்ந்தது என்றேன்.
நீ கோபம் இருக்கும் இடத்தில் இருக்கக் கூடாது என்றல்லவா சொன்னாய் என்று சமயோசிதமாகக் கேட்டான் சின்னவன்.
உண்மைதான் பா. அனுமனால் கோபத்தை விரட்ட முடிந்தது.
நிதானமாக யோசித்துப் பேச முடிந்தது.
எல்லோரும் கோபம் கொண்டால் ஒரு காரியமும் நடக்காது.
நல்ல வேலையும் நின்று போய்விடும்.
இருவரும் யோசித்தார்கள்.
பசி வரும்போது பேசாமல் இருக்கணுமா ?
நிதானமா இருக்கணும் என்றேன்.
கொஞ்சம் கஷ்டம் பாட்டி.!
ஆமாம் பா. இப்போதிலிருந்தே பழக ஆரம்பிக்கலாம்.
இன்னும் கொஞ்சம் வயதானால் தெரியும் என்றேன்.
உனக்கு கோபம் வராதா என்றாள் பேத்தி. வரும்பா .
இப்பதான் பேசுவதைக் குறைத்து வருகிறேன் என்றேன்.
ஓஹோ. அப்பா எங்களுக்கும் நிறைய நாள் ஆகும் என்றான் சின்னவன்:)