Blog Archive

Monday, January 27, 2020

தவம் 5 ... பாகம். கதை 2020 ஜனவரி

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

தவம் 5 ...இறுதி பாகம். கதை 2020 ஜனவரி 

Image result for south Indian tamil mother and son
இந்த நாள்  இனிய நாளாக   இருக்க வேண்டும் என்று 
வேண்டியபடி, குளித்து  முடித்து , மணியை ப் பார்த்துக் கொண்டு 
ஆறு  ஆனதும் ,மகனை  அழைத்தாள் .

குட் மார்னிங் மா. 6 மணிக்கு நீ அழைப்பாய் என்று தெரியும்.
அம்மா இன்று முதல் வகுப்பே ,
மிக சுவாரஸ்யமாக இறுக்கப் போகிறது.
உடல் உறுப்புகள்   எல்லாம் அறிமுகப்படுத்துகிறார்கள்.

கொஞ்சம்  கை  நடுங்காமல்  வகுப்பை அணுக வேண்டும்.
என்று சிரித்த வண்ணம் பேசும் மகனின் குரல் ,மகிழ்ச்சியில் ஆழ்த்த, நடப்பதெல்லாம்  நன்மைக்கே என்று நினைத்தபடி,
வசந்த், 

ஒரு அலுவலக வேலையாக தஞ்சாவூர் 
வந்திருக்கிறேன். 
ஒரு இன்வெஸ்டிகேஷன். நான் மட்டும்   வரவேண்டும் என்று நேற்று 
இரவு சொல்லி   உடனே கிளம்பினேன்.

உனக்குப் படிப்பு இங்கே என்றால்  ,எனக்கு வேலை 
இங்கே வந்துவிட்டது. உன்னை மதியம் பார்க்க முடியுமா என்று கேட்டாள் .
அம்மா, நிஜமாவா   , என்னம்மா நீ முன்புதான் இது மாதிரி  ஊருக்கு கிளம்புவாய்.
இப்போது இங்கே வந்திருக்கியா..Image result for south Indian tamil mother and son
!!!!!!!!
   ஒரு மணிக்கு   கல்லூரியில் வரவேற்பறைக்கு வாம்மா. நான் அங்கே வருகிறேன்  .  ஒரு பத்து  நிமிடங்கள்  தாமதமாகலாம். 
சிறு  குழந்தை போல மகிழும் மகனின் குரல் அவளை நெகிழ்த்தியது.
சரிப்பா, நீ  காலை உணவு முடித்து 
வகுப்புக்கு கிளம்பு.

நான் வந்ததும்  உன்னை அழைக்கிறேன்.
கவனம் சிதறாமல் படிப்பில் மனம் செலுத்துப்பா.
என்று உரையாடலை முடித்தாள்.
உடனே  அண்ணாவின் அழைப்பு  வருவதைக் கண்டு 
படபடக்கும் இதயத்துடன்," அண்ணா,  எல்லாம் சரியாக இருக்கா"
என்றாள் .

நீ காலை உணவை முடித்து  அறையில் இரும்மா. நான் பத்துமணி அளவில் வந்துவிடுவேன்.
விமான வழிப் பயணம். எட்டு மணிக்கு 
திருச்சியில் இருப்பேன் . அடுத்த ஒரு மணி நேரத்தில் தஞ்சாவூர்.

குமரன் வெறும்  எண்ணத்தோடு நிற்கப் போவதில்லை மா.

நீ  அங்கே சென்றது  நன்மைக்கே.
மகன் பாசம் அவனை வரவழைக்கவில்லை.

தந்தையின் சொத்துக்கு  ஆசைப்பட்டு  வந்திருக்கிறான்.
நீ கவலைப் படாதே. நான் வக்கீல்  வேல்முருகனோடு 
வருகிறேன் " என்று சொன்னான்.

"அட இதுவா விஷயம். சரிண்ணா , நீ கவலைப் படாதே 
நாம் எதையும் சமாளிக்கலாம்" 
என்று  முடித்து வைத்தாள் .

ஐந்து வருடங்கள்  முன்பு நடந்த  ,சொத்துப் பிரிவு நினைவுக்கு வந்தது.
 இளைய மகனிடம் நம்பிக்கை இழந்த  மாமனார்,
 தன பரம்பரை சொத்தை    மூத்த மகன் ,ஒரு பாதி , மறுபாதி 
பேரன் வசந்த்க்கு   என்று பிரித்து விட்டார்.
நிலபுலன் மட்டும் தான் இருக்கும் வரை 
அனுபவிக்கும் படியும், அதன் பின் மருமகள் 
மாலதியைச் சேரும்படி   வக்கீல் ஞானசம்பந்தனைக்  கலந்து உரையாடி 

வக்கீலின் மகன் வேல்முருகன் ,மற்றும் 
இரு மூத்த உறவினர்கள், சாட்சி  கையெழுத்துப் போட 
உயில் எழுதப் பட்டு வாங்கி லாக்கரில் வைக்கப் பட்டது.

இந்த செய்தி  ,குமரனுக்கும்  ரெஜிஸ்டர்ட்  தபால் வழியே அனுப்பப் பட்டது.
கேட்டதும்  ,சினம் கொண்டு அப்பாவிடம்  வாக்குவாதம் செய்தவன்,
எதிர்காலத்தில்  தான்  எதிர் வழக்கை  இட்டு 
வாதாடப் போவதாக வும் எச்சரித்திருந்தான் .

அவன் தந்தை   அசைந்து கொடுக்கவில்லை.
மகன்  நிறைய பணம் சேர்த்து வைத்திருப்பதையும்,
கொடைக்கானலில் வீடு வாங்கி இருப்பதையும் 
அவர்  அறிவார் .
ஒரு பெண்ணின் பாவத்தைத் தேடிக் கொண்டவனுக்கு தன்  சொத்து போவதை அவர் விரும்பவில்லை.

பெரிய வக்கீலும்   குமரன்  வழி தொந்தரவு 
வராகி சந்தர்ப்பம் இல்லை என்றும். அவனால் 
எதிர்க்க முடியாது என்றும் வலியுறுத்திச் சொன்னார்.


காலை உணவை  முடித்துக் கொண்டு 
தஞ்சைப் பெருங்கோயிலுக்கு மெல்ல நடந்தாள்  மாலதி.
இந்தத் தடையைத் தாண்ட  பெருவுடையாரே 
உதவ வேண்டும் என்று பிரார்த்தித்தாள் கொண்டால்.
சட்டம் தன்  பக்கம் என்றாலும் 
கணவனாயிருந்தவனின் துர்க்குணத்தை  அறிந்தவள் ஆனதால் கொஞ்சமே பயந்தாள்.

அண்ணனின்  அழைப்பு  கேட்டதும் நிம்மதி  பெருமூச்சு விட்டபடி 
பேசினாள் .
நாம் சாப்பிட்டுவிட்டுக்  கல்லூரிக்குப்  போகலாம்.
அவனும் வருகிறான் மா. கவலைப் படாதே.

நாம் முதலில் கல்லூரிக்குப்  போய் விடலாம்.
 வசந்த்  குழம்ப மாட்டான்.
இந்தப் பதினெட்டு வயதுக்குள்  இந்தக் குழந்தைக்கு  எத்தனை சோதனை அம்மா. என்ற அண்ணனின் குரல் கரகரத்தது.

நாம் இதையும் கிடப்போம். குழந்தை  மனம் 
நோகாமல்  பார்த்துக் கொள்வோம் 
என்று சொன்னவள் ,வண்டி ஒட்டி செல்வத்திடம் 
கல்லூரிக்குப் போகச்  சொன்னாள் .
அவள் மனம் இருந்த  நிலையில்   உணவு தொண்டையில் 
இறங்க   மறுத்தது .
அவளும்  அண்ணன்  செந்திலும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய 
அங்கு வரவேற்பு  அறையில்   குமரன் நிற்பதையும் 
வசந்தைப் பற்றி விசாரிப்பதையும் கண்டு 

மாலதியின் உடலே  பற்றி எரிவது போல 
இருந்தது.  தன்னை  நிதானப் படுத்திக் கொண்டு 
அறையின் வாயிலில் வசந்தைச் சந்திக்க நின்று கொண்டாள் .

வசந்தும் வந்தான். 
அம்மாவின் அருகே வந்தவன், அவளின் பதட்டத்தை ஒரு நொடியில் 
புரிந்து கொண்டான்.
அவள் கைகளை பற்றிக் கொண்டு அம்மா,என்றவனைத் தீர்க்கமாய்ப் பார்த்தவள்  ,
கண்ணா, நாம் போய் சாப்பிடலாம் வா என்று 
கல்லூரி விடுதி சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று அவனிடம் 
தந்தை வந்திருப்பதையும், அவரின்  எதிர்பார்ப்பையும் சொன்னாள்.
கண்ணா 
அவர் உன்னிடம்  ,தாத்தா கொடுத்த சொத்தை 
 தன்னுடன்  பகிந்து கொள்ளும்படிக் கையெழுத்து வாங்க வந்திருக்கிறார் .
உனக்குப் பதினெட்டு  வயதில்  அப்பா கொடுக்கும் பரிசு என்றாள் .

நிதானமாக வசந்த் சொன்னான்.
பங்கு வேண்டாம் அம்மா. முழுவதுமே கொடுத்து விடுகிறேன்.

எனக்கு அவரைப் பார்க்க வேண்டாம்.
நீயே சொல்லிவிடு.     

வக்கீல் சாரிடம் சொல்லி  தேவையான பத்திரங்களைத் தயார் செய்து கொடு அம்மா.
21 வயதில் தான்  எனக்கு அனுபவப் பாத்தியதை வரும்.
அதுவரை நீதான்    அந்த சொத்துக்குப் பொறுப்பாளி.

நான்  யாரையும் சந்திக்க விரும்பவில்லை.
என்று சொல்லும்  மகனைக் கண்டு 
அதிசயித்துப் போனாள்  மாலதி.

நான்தான் இவனைப் பெற்றவள் .
என்னையே மிஞ்சி விட்டான் என் மகன்.என்றபடி அவனை கட்டி
 அணைத்துக்  கொண்டாள் .

பக்கத்தில் நிழலாடுவதைக் கண்டு  நிமிர்ந்தவள் 
அண்ணன்  செந்திலைப் பார்த்துப் புன்னகைத்தாள் .

அவனிடம் விவரத்தைச் சொன்னவள் ,

என் மகன் மிகப் பெரியவனாகி விட்டான்.
யாரையும் கண்டு நான்  அஞ்சவேண்டாம் .
அவன்  தன்னைக் கவனித்துக் கொள்வான்.
எனக்குக்   கவலை இனி இல்லை  என்றவள்.
நீ சாப்பிடுப்பா.   மாலை வருகிறோம்.
என்று  சொல்லிவிட்டு மீண்டும் அவனைஅணைத்துக் கொண்டாள் .

வனவாசத்திலிருந்து மீண்ட ராமனாகத் தன்  மகனைக் கண்ட 
பெருமை. அவள் முகத்தில் ஒளிவிட்டது.

அண்ணா நீயும் வக்கீல் வேல்முருகனும் அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான்  கொஞ்ச நேரம் உறங்கப் போகிறேன் என்று அந்த இடத்தை விட்டு அகன்றாள் .

சுபம்.

















10 comments:

Geetha Sambasivam said...

இதற்கும் மேல் வளர்த்தாலும் நன்றாக இருக்காது. ஆகவே இதுவே சரியான முடிவு. நல்ல தைரியமான முடிவு எடுத்திருக்கிறான் வசந்த். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.

கோமதி அரசு said...

நல்ல முடிவு .
வசந்த் தாயின் உணர்வுகளை அறிவான்.
குமரன் சொத்துக்கு மட்டுமே வந்து இருக்கும் போது அவனை என்ன பார்ப்பது?

இனி எல்லாம் சுகமே !

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா. இன்னும் நீட்டிக்க வேறு ஒன்றும் நடக்கவில்லை.
நன்றாகத்தான் வாழ்கிறார்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கோமதிமா. தன்னையே உதறியவனின்
சொத்து மட்டும் எதற்கு.
தாயின் மனதை வருந்த வைக்க
வசந்திற்கு எண்ணம் இல்லை.
மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா..பழமொழி.
அந்தப் பக்கமே செல்ல வேண்டாம் என்று
முடிவெடுத்து விட்டான் அந்த நல்ல மகன்.

மாதேவி said...

தாயின் மனதை நன்கு உணர்ந்த மகன்.

வாழ்துவோம் நலமே.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே மாதேவி. பெற்ற தாயைப் போற்றுபவன் நல்ல மனிதனாக வருவான்.

ஸ்ரீராம். said...

மகனின் மனம் பிரமிக்க வைக்கிறது.  என்றாலும் சுயநலக்கார தந்தைக்கு அப்படி சொத்து, அதுவும் அவ்வளவு சுலபமாகச் செல்வதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.  தந்தை எதை இழக்கிறான் என்பது ரொம்பப்பின்னால் அவனுக்குப் புரிய வரலாம். எனினும் மாமனார் தன்மகனுக்கு அந்த சொத்து சேரக்கூடாது என்று விரும்பியது உண்மைதானே?  

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
வாழ்க வளமுடன்.
அந்த இளமைக்கே உண்டான கர்வம் அவனிடம் இருக்கும் அல்லவா.
மேலும் , தகப்பன் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்வான். அம்மாவால்
கோர்ட், கேஸ் என்று அலைய வைப்பதில் அவனுக்கு விருப்பமோ
நேரமோ இல்லை.
தாத்தாவிடம் பிறகு மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.

அவர் அவனுக்குக் கொடுக்க இருந்த வீட்டையெ
விற்று மருமகள் பெயரிலேயே வங்கியில் போட்டுவிட்டார்.
எல்லாம் குமரன் சென்னை திரும்பு முன்னமே
நடந்து விட்டன.
மேற்கொண்டு அவனைப் பார்க்க விரும்பவில்லை
என்று தன் வக்கீலிடம் உறுதியாகச் சொல்லி விட்டார்.
தன்மானம் மிகப் பெரியது இல்லையாப்பா.
நன்றி ராஜா.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு முடிவும்மா....

எத்தனை சுயநலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள் சில மனிதர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், ஆமாம்.
தந்தையிடம் இருந்து இன்னும்
தொந்தரவுகளை வசந்த் விரும்பவில்லை.
அதுதான் இந்த முடிவை எடுத்தான்.
சண்டையை விட அன்னையின் பாதுகாப்புக்காக்வே செய்தான்.