Blog Archive

Wednesday, January 29, 2020

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்

வல்லிசிம்ஹன் 
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++


பாடல் : 1    உலகநீதி .

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

+++++++++++++++++++++++++++++++++++++++++++



குழந்தைகளே ,



பாட்டி ஏன் கடமை என்கிற வார்த்தையை  அடிக்கடி உபயோகப் படுத்துகிறாள்னு பார்க்கிறீர்களா. அம்மாவிடம் அப்பாவிடம் ராமரும் அவர் சகோதரர்களும் இருந்த மாதிரி,

பாண்டவர்களும் அவர்கள் அன்னையிடம் மிகப்

பாசம் காட்டிப் பணிவும் காட்டுவார்கள்.



அம்மாவிடம் இயல்பாகவே நாம் பாசமாகத் தானே இருப்போம். 

அம்மாவை விட்டால் நம்மிடம் வேறு யார் இத்தனை அன்பாக இருப்பார்கள்?



அதனால நாம் அவளிடம் அன்பாக இருப்பது 

,கடமை என்று சொல்லக் கூடாதே. அது தானாக 

இருக்க வேண்டியதுதானே என்று நினைக்கிறீர்கள் இல்லையா.







இப்போ ஒரு குட்டியா ஒரு கதை சொல்கிறேன்.



ஒரு சின்ன கிராமத்தில் இரண்டு வீடுகள். இரண்டு வீட்டிலும் குழந்தைகள் உண்டு. அதில் பெரிய பையன்கள் இருவரும் ,

பெண்கள் இருவரும் நெருங்கிய தோழர்களாக வளர்ந்தார்கள்.

பையன்கள் பள்ளிக்குக் கிளம்பும்போது அம்மா' போய்விட்டு வரேன் னு சொல்லிட்டு ஓடி விடுவார்கள். பெண்கள் இருவரும் தங்களுக்கு உண்டான வேலைகளை முடித்து விட்டு, தாய்கள் தங்கள் தலையில்



சூட்டும் பூக்களையும் வைத்துக் கொண்டு



அன்போடு அம்மாவைக் கட்டியணைத்து போய்விட்டு வரேன் மா'ன்னு சொல்லிக் கிளம்புவார்கள்.



அதன் பின் இரு தாய்மார்களும் சிறிது நேரம் பேசிவிட்டுத் தங்கள் வேலைகளைப் பார்க்கச் செல்வார்கள்..

இயல்பாகவே பெண்களுக்கு அம்மாவிடம் அன்பைக் காண்பிப்பது வழக்கம் இருக்கும். பசங்களுக்கு



(எல்லாப் பசங்களையும் சொல்லவில்லை. சில பையன்களுக்கு மட்டும் சொல்கிறேன்.:) )



அந்த மாதிரி அன்பை வெளிக்காட்டுவது வழக்கத்துக்கே வருவது இல்லை.



இது ஒரு சின்னப் பயிற்சிதான்.



காலங்கார்த்தால எழுந்திருக்கும் போதே குழந்தைகளே நீங்கள் உங்கள் பற்களைத் துலக்குவது,பால் சாப்பிடுவது,பாடப்



புத்தகங்களை எடுத்துவைப்பது என்று வழக்கம் செய்து கொள்வது போல



ஸ்வாமி சந்நிதியில் கைகூப்பி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த



சாமி பாட்டுகளையோ ஸ்லோகங்களையோ சொல்லுங்கள்.



அந்த நாள் பூராவும் எப்பவுமே கடவுள் உங்களுடன் இருப்பதாக நம்புங்கள். அவர் இருப்பார்.



அந்த நம்பிக்கையோடயே அம்மாவையும் அப்பாவையும்



வணங்குவதையும் வழக்கமாக இன்றிலிருந்து ஆரம்பியுங்கள்.



இந்த வழக்கம் உங்களிடம் இருக்கும் வரை



பணிவும் அடக்கமும் உள்ள பிள்ளைகளாக நீங்கள் வளருவீர்கள்.



அம்மாவும் அப்பாவும் எத்தனையோ கடமைகளை உங்களுக்காக அன்போடு செய்கிறார்கள்.



அவர்களைத் தினம் வணங்குவதை உங்கள் கடமையாக எடுத்துக் கொள்ளுங்கள்.



முதலில் சிலசமயம் மறக்கும். பரவாயில்லை. அதற்குப் பின் பழகிவிடும்.



கடவுள் போலவே அம்மாவின் அன்பும் உங்களைக் காக்கும்.



சரியா குழந்தைகளே.



அன்புடன் வல்லிப் பாட்டி.

Image result for அன்னையும் குழந்தைகளும்



இதையே அந்தக் குழந்தைகளும்,அதாவது 

கதையில் வந்த பையன்களும் ஆரம்பித்துவிட்டதாகச் சொன்னார்கள். 

சந்தோஷமாக இருக்கிறது,. இன்றையக் குழந்தைகள் நாளைய பெரியவர்கள்

தங்கள் குழந்தைகளுக்கும் இந்தப் பாடத்தைச் சொல்லித்தரட்டும்.



ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

+++++++++++++++++++++++++++++++++++++++++++







குழந்தைகளே ,  நலமோடு இருங்கள் 



13 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்னையும் குழந்தைகளும்
இந்தப் பதிவில வண்ணங்கள் ஏன் மாறின என்று தெரியவில்லை.
எடிட் செய்தாலும் மாற மறுக்கிறது. மன்னிக்கணும்.

கோமதி அரசு said...

ரோஸ் கலரில் உள்ளதை மட்டும் படிக்க முடிகிறது . கீழே உள்ளதை மட்டும் படிக்கவில்லை.
இன்றைய குழந்தைகள் நாளைய பெரியவர்கள் வாழையடி வாழையாக தொடரட்டும்.

Unknown said...

If you blockit like you do to copy,it will change colour and then you can read with more visibility,I think.

K.Srinivasan

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
இது எப்படி ஆனது என்று தெரியவில்லை.
அடுத்த பதிவாவது நேரே வரணும். இங்கே குழந்தைகள்
சொல்லும் கதையை கேட்கிறார்கள்.
அதனால் உலக நீதியைச் சொல்லிக் கொடுக்க ஆவல்.
பார்க்கலாம். எவ்வளவு தூரம் செல்கிறது என்று.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீனிவாசன்,
மிக நன்றி,
எனக்குக் கணினி இலக்கணம் அவ்வளாவாகத் தெரியாது.
நீங்கள் சொன்னபடி செய்து பார்க்கிறேன்.
மிகமிக நன்றி மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

மிக அழகாக உலக நீதிகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். "மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்". மிக அழகிய கதை. பெண் குழந்தைகள் எப்போதுமே வெளிப்படையாக அன்பை காண்பித்து விடுவார்கள். ஆண் பிள்ளைகளுக்கு உள்ளுக்குள் வைத்திருக்கும் அன்பை அவ்வளவாக வெளிக்காட்ட தெரியாது. நீறு பூத்த நெருப்பாக அவை உள்ளுக்குள் எப்போதும் கனன்று கொண்டே இருக்கும்.பதிவு அருமை.

இன்றைய குழந்தைகளுக்கு நல்ல அறிவுரையாக தங்கள் அன்பான இந்தப் பதிவு, ஒரு அம்மாவின் அன்பை போல இருந்து தொடர்ந்து காக்க வேண்டும்.

பத்து மதங்கள் வயிற்றில் சுமந்து, நாள்தோறும் நெஞ்சில் சுமந்து நம்மை காக்கும் அம்மாவிடம் அன்பு செலுத்துவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செயல் அல்லவா! அன்பான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Geetha Sambasivam said...

படிக்க முடியலை. அப்புறமா எல்லாத்தையும் காப்பி, பேஸ்ட் பண்ணுவதற்குத் தேர்ந்தெடுப்பது போல் தேர்வு செய்துவிட்டுப் படித்தேன். நீங்கள் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை. இந்தக் காலக் குழந்தைகள் புரிஞ்சுப்பாங்கனு நம்பறேன்.

ஸ்ரீராம். said...

நல்ல அறிவுரைகள்.  கீதா அக்கா சொல்லி  இருப்பது போல செலெக்ட் செய்து படித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலா, தங்கள் எழுத்துவன்மை
அதிசயிக்க வைக்கிறது.
அத்தனையிலும் நன்மை காணுமழகு அருமை. நன்றி மா. ஆண்குழந்தைகளுக்கு
அவ்வளவு வெளிப்படையாகக் காண்பித்துக்கொள்ளத் தெரிவதில்லை.
உண்மைதான். எங்கள் பெரிய மகன்
எத்தனையோ சவால்களைக் கடந்து வந்திருப்பவன். அதிகம் பேச மாட்டான்.
ஆனால்.தந்தை திடீரென மறைந்தது
அப்போது அவன் கதறியது இன்னும் காதில்.
சின்னவனும் அப்படித்தான். நற்குழந்தைகளைப் பெற்ற அன்னையர்
அனைவரும் மிகுந்த பாக்கியசாலிகள். நன்றி சகோதரி.

வல்லிசிம்ஹன் said...

அட ராமா கீதாமா. ஆமாம் கண்ணில் பட்டால் தானே
படிக்க முடியும். இந்த வண்ண மாற்றம் நான் விரும்பி செய்ததில்லை.

படித்துக் கருத்தும் சொன்னதற்கு மிகமிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், சிரமம் கொடுத்துவிட்டேன்.
இன்று எழுதும் கதை எப்படி வருகிறது என்று பார்க்கலாம்.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வும்மா...

வண்ணம் - தேர்ந்தெடுத்து படிக்க முடிகிறது. வண்ணங்கள் சில சமயங்களில் தொந்தரவு தான்.

மாதேவி said...

குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகள்.