Blog Archive

Sunday, September 29, 2019

இனி எல்லாம் சுகமே 12

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  இனிமையாக வாழவேண்டும்.

இனி எல்லாம் சுகமே 12
++++++++++++++++++++++++++++
அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள். தேவிகளின் கருணையால் நம் வாழ்வில் மங்கலங்கள் பெருகட்டும்.

மாதவன் எடுத்த முடிவு பெற்றோரை மீறி எடுத்ததாக நினைக்கவில்லை.
மாலாவின் இனிய அமைதி. சிறு வயதில்ரிந்தே அவனைக் கவர்ந்திருந்தது.
வளர்ந்த பிறகு அவளது ஒத்துப் போகும் சுபாவமும், கலகலப்பாகப் பேசும் திறமையும்
வடிவான அழகும் அவனை ஈர்த்ததில் வியப்பில்லை.

இந்த நட்சத்திரப் பிரச்சினையை சரியான முறையில் அணுக
வேண்டும்.
யாரையும் வருந்த வைக்கக் கூடாது.
அம்மாவையோ அத்தையையோ கலங்க வைக்கக் கூடாது.
முதலில் அவன் எடுத்த அடி காவிசேரி மாமாவீட்டுக்குத்தான்.

படிப்பை விட்டு வந்திருக்கிறோம் என்ற நினைவு
அவனுக்கு இருந்தது. அடுத்த நாள் அவனுக்குப் பயணம். 
மாலாவும் கிளம்ப வேண்டும்.

காவிசேரி அவனை எதிர்பார்த்தது போலக் காத்திருந்தார்.
தீர்மானம் செய்தாச்சா என்றார். ஆமாம் மாமா.
நீங்கள் தான் இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும்.

சரி இதோ பார் உன் அப்பா ஜாதகம் ,வைதேகி அவனுக்கு ஏற்றவள் என்று சொன்னதே 
நாந்தான். அவள் ஜாதகத்திலும் பலமில்லாத கிரகங்கள் இருந்தாலும்
கோவிந்தனின் பலம் இருவரையும் சேர்ந்து வாழவைக்கும் என்றே, கோவில்களுக்கு செல்ல வைத்து
அவர்கள் நம்பிக்கையை வளர்த்தேன்.

விஞ்ஞானப்படி நட்சத்திரங்கள் அவைகளின் குணங்களையே கொண்டிருக்கும்.
யாரையும் அழிக்காது.
பிறந்த போது என்ன விதி எழுதப் பட்டதோ அதன் படி நடக்கும்.
அந்தவிதத்தில் உங்க அப்பாவுக்கு நீண்ட ஆயுள்பாவம் உண்டு.
வைதேகிக்கு சஞ்சலம் ஏற்படுவது சகஜமே. அதை நீயும் உன் அப்பாவும் சரிப்படுத்தணும்.

இதோ உன் ஜாதகம். நீ அவர்களுக்கு ஒரே மகன்.
உன் ஜாதகத்தைப் பார். மகனுக்கு ஓரிடத்தில்  தந்தைக்கான
சடங்குகள் செய்ய வேண்டிய காலம் வரும்.
உனக்கு உன் வாழ்க்கையை வரைந்து காட்டுகிறேன்.
படித்து முடித்து,வேலையில் அமர்ந்து இதே மாலாவை மணமுடிப்பாய். உன்னுடைய
பீமரதி ஷாந்தி வரை அப்பாவின் ஆயுள் நீடிக்கிறது.அதற்கப்புறமும் இருப்பார்.

இதோ மாலாவின் சுத்த ஜாதகம். அப்பழுக்கில்லாத பலன்.
கள்.
அவளால் ஈ,எறும்புக்குக் கூடத் தீங்கு விளையாது.
உன் குணத்திற்கேற்ற குணவதி. 
இதோ சோழி உருட்டுகிறேன் பார் என்றார்.
ஒன்றும் புரியாவிட்டாலும் அவை மலர்ந்து அவனைப் பார்த்து சிரிப்பது போல 
இருந்தது.
சர்வமும் மங்களம். இதை எழுதிக் கொடுக்கிறேன்.
அப்படியே எடுத்துக் கொண்டு போய் சபையில் பொதுவாக வை.
உன் தீர்மானத்தையும் சொல்லிவிடு.
பாட்டி மீண்டு வந்துவிடுவாள். 60 வயது ஒன்றும் பெரிய வயதில்லை.
அவளை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.

அவர்களுக்குக் கொஞ்சம் யோசிக்க நேரம் கொடு.
நீ சந்தோஷமாகக் கிளம்பு. கண்ணன் உன்னுடன்."

 என்று சாய்ந்து உட்கார்ந்தார்................

அவரை நமஸ்கரித்து வீட்டுக்கு விரைந்தான்.
மாலா பாட்டியுடன் இருந்தாள்.

அத்தை,அத்திம்பேர்,அம்மா,அப்பா இருவரையும்
ஒன்றாக உட்காரவைத்து அவர்களிடம் தான் மாமாவைச் சந்தித்த
விவரத்தையும்
அவர் எழுதித் தந்ததையும் கொடுத்தான்.
நீங்கள் அவசரமில்லாமல் முடிவெடுங்கள் .ஆனால் என்னைப் 
பொறுத்தவரை மாலா தான் என் துணைவி.



சில வருடங்கள் அதாவது மூன்று வருடங்கள்
பொறுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
இந்த இடத்தில் பொன்னா தலை நிமிர்த்தினாள். 
மாலாவுக்கும் இது தெரியுமா என்று கேட்டாள்.
அவள் சம்மதித்த பிறகே இந்த வேலையில்
பிரவேசித்தேன்.
இனி உங்கள் கையில். 
இன்னோரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய ,பிரசாத் வீட்டுக்குப் போக வேண்டும்
என்று கிளம்பினான்.

பெரியவர்கள் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள நாட்கள் எடுத்தன.
பாட்டிம்மா வீட்டுக்கு வந்து விட்டார்.
டாக்டர் அனுமதித்த பிறகு மதுரைக்குக்
கிளம்பினாள்.

ஆறு மாதங்களில் அவள் உடல் தேறியது. மனமும் தான்.
வாரத்துக்கு ஒரு முறை பேரனும் பேத்தியும் பேசும்போது இவளுக்கும் இரண்டு வரிகள் சொல்ல அனுமதி உண்டு.:)

தை மாதம் மூன்று நாட்கள் விடுமுறையில் வந்த மாதவன், பிரசாதுக்கும், மாலா,கோகிலாவுக்கும் நிச்சயதார்த்தம் நிறைவேறியது.

அதுவே வெகு கலகலப்பாகப் பாதி கல்யாணம் போல்
நடந்தது.

மாலா,கோகிலாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தினம் தினம் ,மாமாவின் உடல் நலத்துக்காக்த் தனியே தீபம்
ஏற்றினாள்.
அந்த வருடக் கோடை விடுமுறைக்கு இரண்டு குடும்பமும்
 கொடைக்கானலுக்குச் சென்றனர். பிரசாதின் பெற்றோரும் மகிழ்ச்சியுடன்
கலந்து  கொண்டனர்.

1967 ஆம் வருடம் ஜனவரி 18 முதல் 27 வரை  மெட்ராஸே 
கலகலப்பானது. ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில்  ஒரு
திருமணமும், ஆபட்ஸ்பரியில் ஒரு திருமணமும்
நடந்தது.
பாலகிருஷ்ண சாஸ்திரிகள் இரு திருமணங்களுக்கும் வந்து சீதாராம திருமண
காலாட்சேபம் நடத்தினார்.
 பாட்டிம்மாவும், காவிசேரி மாமாவும் சுறுப்பாக இயங்கி அனைத்து வேலைகளையும் மேற்பார்வை பார்த்தார்கள்.   பிறகென்ன  காதல் வைபோகம் கல்யாணத்தில்
சுபமாகப் பூர்த்தியானது.

கூடவந்து நல்வார்த்தைகளைப் பின்னூட்டமாகச் சொல்லி உற்சாகப் படுத்தியவர்களுக்கு மனம் நிறை நன்றி. அனைவரும் வாழ்க வளமுடன்.






Saturday, September 28, 2019

எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
எதிர்பாராமல்  நடந்தால் இன்பமே.11
++++++++++++++++++++++++++++++++++++++++++

 சனிக்கிழமை ,வார இறுதி, மாணவர்கள் அறைகளில் தான் இருப்பார்கள் என்ற உறுதியோடு
கோகிலா, பெற்றோர் வெளியே சென்ற சமயம்,அஹமதாபாதுக்கு ட்ரங்க் கால் புக் செய்தாள்.
மாலவுக்கு உடல் எல்லாம் நடுங்கியது. ஆனந்தமா துக்கமா என்று படபடப்பாக இருந்தது.

ஒரு மணி நேரத்தில் லைன் கிடைத்தது. ஏதோ வேற்று கிரகத்திலிருந்து கேட்பது போல்
பிரசாதின் குரல் கேட்டது.
என்ன விஷயம் என்று கேட்டான். கோகிலா,நிலைமையைச் சொன்னதும்,
மாதவன் நேற்றே கிளம்பிப் போய்விட்டான்.
மாலாவும் நீயும் பயப்பட வேண்டாம் என்றான். மூன்று நிமிடங்கள் ஓவர்
என்றதும் வைத்துவிட்டார்கள்.
கோகிக்கி கையெல்லாம் வேர்த்திருந்தது.

மாலாவுக்கு உயிரெல்லாம் மெட்ராசுக்குப்
பறந்து விட்டது. பாட்டி பாட்டி என்று மனம் அரற்றியது.



ஆணாக இருப்பது எவ்வள்வு சௌகர்யம் பார்த்தியா.
விமானம் ஏறினால் பாட்டியைப் பார்க்க வந்துவிடலாம்.
நமக்கு எல்லாம் தனி ரூல். என்று பொருமினாள்.

அதை எல்லாம் யோசனை பண்ணாதே. இப்போது
அம்மாவுக்கு ஃபோன் போடு,
விவரம் கேட்டுக்கோ என்றாள்.
நல்ல தோழிடி நீ என்று அவளை அணைத்துக் கொண்டு
 தொலைபேசி அருகே செல்லவும்,அத்தை அத்திம்பேரும் வந்து விட்டார்கள்.
மெட்ராசுக்கு போன் செய்கிறொம்மா என்றாள்
கோகிலா.
மாலா முகத்தைப் பார்த்த இருவரும் சம்மதித்தார்கள்.

அதற்குள். மெட்ராசிலிருந்து ட்ரங்க் கால் வருவதாக
தொலைபேசி கூவியது.
பயத்தில் உறைந்தாள் மாலா. அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள் அத்தை.

பொன்னா தான் பேசினாள்.  பாட்டி நலமாக இருப்பதாகவும் , மாலா சனிக்கிழமை புறப்பட்டு வரும்படியும்,திங்கள் திரும்பி விடலாம் என்றும் சொன்னாள்.
அத்தையிடம் விஷயத்தைக் கிரஹித்துக் கொண்ட மாலா
 பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.
  சாயந்திரம் கிளம்பினால் காலை அங்கே இருக்கலாம்.
கவலைப் படாதேமா என்று ஆதரவு சொன்னாள்.
அத்தைக்கும் ,மாலாவுக்கும் முதல் வகுப்பு டிக்கெட்டுக்கு
தொலைபேசினார் அத்திம்பேர்.
 அருகிலிருந்த பிள்ளையார் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விட்டுக் கிளம்பினார்கள் இருவரும்.

அதிகாலை,  மெட்றாஸ்  வந்த ரயிலுக்காக காத்திருந்தான் மாதவன்.
பாட்டியின் பலவீன நிலை அவனை வருத்தியது. அப்பாவோடு பேசியதில் ஒருவாறு புரிந்து கொண்டான் 
ரயிலை விட்டு இறங்கிய மாலாவை பார்த்து வருத்தம் மேலும் கூடியது.
அத்தைக்கு வணக்கம் சொல்லிவிட்டு அழுத்த கண்களுடன்  இருந்த மாலாவை சமாதானப் படுத்தினான். 
இப்படி வேதனையோடு பாட்டியைப் பார்க்கக் கூடாது. எப்பவும் போலாகி கலகலப்பாக இரு  என்றான். சரி என்று தலை ஆட்டினாள் அவள்.


வீடு சென்று, தயாராகி மருத்துவ மனைக்கு வந்தார்கள் .
பாட்டிக்குத் தெளிவு வந்திருந்தாலும் பலனாட்கள் வாழ்ந்து களைத்தது
போல் காணப்பட்டாள்.
மாது சொன்னதைக் கடைப் பிடித்து பாட்டியின் கைகளைப்
பிடித்துக் கொண்ட மாலா,
"இங்கே வந்து ஜாலியா இருக்கலாம்னு நினைச்சியா.
ஒழுங்கா முறையா எழுந்து என்னோட மதுரைக்கு வா'"
என்று முகம் மலரச் சொன்னாள்.
பாட்டியின் முகத்தில் முதல் தடவையாகப் புன்னகை.
அவள் பின்னால் நின்ற மாதுவைப் பார்த்ததும் இன்னும் சந்தோஷம்.
"கண்ணா  இவர்களைச் சேர்த்துவை.
எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்" என்று நினைத்தவள் கண்களில்
மீண்டும் நீர்.




அந்த சமயம் பார்த்து அங்கு வந்த டாக்டர் ,ஓஹோ!!!!!!!!!!
இவர்கள் தான் பாட்டிம்மாவுக்கு மருந்தா.
இனி கவலை இல்லை."  பசங்களா வெளியே இருங்கள்
பாட்டிக்கு ரத்த அழுத்தம் ,நாடித்துடிப்பு எல்லாம்
பார்க்கணும்'' என்று வெளியேற்றினார்.

அங்கிருந்த பல மருத்துவ சாதனங்களைப் பார்த் து பயந்தாள்
மாலா.
அறையை விட்டு வந்ததும் அம்மாவும் மாமி,மாமா அப்பா அனைவரையும்
பார்த்ததும் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.

பயமா இருக்குமா. பாட்டிக்கு என்ன என்று கேட்டாள்.
மாதவன் ,என்னோடு வா மாலா இங்கிருக்கும் கிருஷ்ணர் கோவிலுக்குப் போகலாம்
எல்லாம் சரியாகும் என்றான்.
அம்மாவைப் பார்த்த மாலா,அவனோடு கிளம்பினாள்.

கிருஷ்ணர் கோவில் சின்னக் கோவில்.
அத்லிருந்த பட்டாச்சார், மாதுவை அன்புடன் வரவேற்றார்.
அட இது தான் பாட்டி சொன்ன உன் வருங்கால மனைவியா.
பிரமாத ஜோடிப் பொருத்தம் போ.""
பாட்டி பேரில அர்ச்சனை செய்யணும் என்றான் மாதவன்.
திடீரென்று தன்னைச் சூழ்ந்த மகிழ்ச்சியைக் கட்டுப் படுத்த முடியவில்லை
மாலாவால்.
"ஆரோக்கியமா இருப்பா பாட்டி, இந்தா ,என்று கிருஷ்ணர் மேலிருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.  இங்கேயே மாலை மாற்றலாம்
என்று எனக்குத் தோன்றுகிறது. கண்ணன் கூப்பிடுவான்
அப்ப வாருங்கள்" என்று மாலாவின் கையிலும் மல்லிகைச் செண்டை கொடுத்தார்.

இருவர் மனபாரமும் இறங்கிக் கண்களில் நேசம் நிறைந்தது.
ம்ம். மாப்பிள்ளை மாதிரியே இருக்கே"  என்று வேடிக்கை செய்தாள்
மாலா. ""நீ மத்திரம் என்ன. சிவப்பு ரோஜா மாதிரித்தான் இருக்கே என்று மாலையை அவள் கையில் கொடுத்தான் மாதவன்.""
இனி அடுத்த பாகத்தில் இவர்களை இணைத்து விடலாம். சரியா.






எதிர்பாராமல் நடந்தவை 10

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிமையாக வாழ வேண்டும்.

எதிர்பாராமல்  நடந்தவை 10
+++++++++++++++++++++++++++++++++
அதிகாலை வானொலியில்  தெற்கு ஆசிய ஒலி  பர ப்பைக் கேட்டுக்கொண்டே காலை வேலைகளை செய்து கொண்டிருந்தாள் பொன்னா . வரதன் அலுவலகம் கிளம்பும் நேரம் . மத்ராஸிலிருந்து 
டிரங்க் கால்.
வாரத்துக்கு ஒரு முறை  அம்மாவுடன் பேசும் வழக்கம் இருந்ததால் 
உற்சாகமாக எடுத்தால். அம்மா  குரலுக்குப் பதிலாகத் தம்பியின் குரல்.

மனதில் எதோ அச்சம் தோன்ற என்னப்பா. என்று கேட்டால்.
பொன்னா , பயப்படாமல் கேளு.
அம்மா கிளினிக்கில் சேர்த்திருக்கிறது.
நேற்று  திடிரென்று மயக்கம் வந்து விட்டது.
டாக்டர் ,பரிசோதனைக்காக  இருக்கச் சொல்லி இருக்கிறார்.

இன்று காலை கண் விழித்ததும் உன்னை தான் கேட்டாள் .
நீயும் வரணும் வரமுடியுமா. எனக்கும் அம்மாவுக்கும் தைரியமாக 

இருக்கும் என்றதும், குரல் படபடக்க வரதனை அழைத்தாள் .
விஷயத்தைக் கேட்டதும், வரதனே கலங்கி விட்டார்.

கல்லூரிக்கு கிளம்ப  தயாராகிக் கொண்டிருந்த  மாலா கலவரத்துடன் அருகில் வந்தாள் . பாட்டிக்கு என்னம்மான்னு கேட்பதற்குள் அவள் கண்களில் கண்ணீர்.

உடனே சுதாரித்துக் கொண்ட பொன்னா , 
மருந்து எதோ எடுத்துக் கொள்ள மறந்து விட்டாளாம்.

இப்போ டாக்டர்   அதற்கு வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார்.

நான் ஒரு நடை   பார்த்து விட்டு வரலாம்னு தோணுகிறது 
நீ என்ன சொல்கிறாய்  என்று சொன்னதும் நானும் வரட்டுமா 
அம்மா என்று தயங்கியபடியே கேட்டாள் .




வரதன்  குறுக்கிட்டு, பயப்படாதே கண்ணா, நீ உன் அத்தையகத்தில் 

இருந்து கொள் , நாங்கள் இரண்டு நாட்களில் வந்து விடுவோம்.
என்றான். 

மாதுகிட்ட சொல்லி இருப்பார்களா அப்பா,
பாவம்  ரொம்பக் கவலைப் படுவான் என்று 

கம்மியாகிவிட்ட  குரலில் சொன்னாள் . இப்போது பொன்னா வுக்கே ஒரு குரல் அழவேண்டும் போல இருந்தது.

நீ இரண்டு நாட்களுக்கு வேண்டும் என்கிற துணிமணிகளை 

எடுத்துக்கோ, நானும் அப்பாவும் உன்னைக் கப்பலூரில் இறக்கிவிட்டு,

மதராசுக்குக் கிளம்புகிறோம். என்று இதமாகச் சொன்னாள் 

மறுப்பு சொல்லாமல் கிளம்பிவிட்டாள் மாலா. ஏனோ 
மாதவனிடம் பேச வேண்டும்  போலத்  தோன்றியது.

வரதன்  ,மாலாவை அக்கா வீட்டில் இறக்கி விட்டு வண்டி யை மதராஸை 
நோக்கித் திருப்பினான்.

 நடுவில்  நிறுத்தி   கலங்கி உட்கார்ந்திருந்த 
மனைவிக்கு   காப்பியும், இட்லியும்  வாங்கி சாப்பிட  வைத்தான். 

இந்தப் பொண்ணு  இவ்வளவு பாசம் வைத்திருக்கே 
என்ன செய்யப் போகிறோம். என்று சொல்வதற்குள்  கண்ணீர் வழியத் தொடங்கியது.

அவசரப்  படாதே மா.   எல்லாப் பிரச்சினைகளும் தானாகாத் தீரும். நீ 
வேணுமானால் பாரு" என்று அனைத்துக் கொண்டான்.

கப்பலூரில்  இறங்கி  அத்தை வீட்டில் நுழைந்த மாலா முகத்தைப் 
பார்த்து அதிர்ந்து போனாள்  கோகிலா.

அழாதே மாலு,

ஒண்ணுமே இருக்காது.  என்றவளைப்  பார்த்த  மாலா, எனக்கு மாதுவுடன் பேசணும்னு 
தோன்றுகிறது    கோகி .
என்றதும் அவளைத் தன் 

அறைக்கு அழைத்துப் போனாள் .


கோகிலா.  உள்ளே சென்றதும்  மாலு என்னிடம் பிரசாத் நம்பர் இருக்கிறது. அவனிடம்  கடிதம்  எழுதி வாங்கினேன். தப்பென்று எனக்குத்  தோன்றவில்லை.

மாலா திகைத்துப் போனாள் . அவர்கள் படிக்கப் போயிருக்கிறார்கள்.
அவர்களை நாம் தொந்தரவு செய்யக் கூடாது இல்லையா.

நான் அவனுடன் இன்னும் பேசவில்லை.
உனக்காக  கேட்கிறேன்.

மாமா பையன் தானே  . ஒரு தோழனிடம் பேசுவதில் என்ன தப்பு சொல்லு.
அவர்கள் அறைக்கே போன் இருக்கிறதா."
இல்லை  அவர்கள் ஹாஸ்டல்   மொத்த அறைகளுக்கும் 
ஒரு தனி ஃ போன் இருக்கும்.
அவர்களிடம் சொன்னால் இவர்களை அழைப்பார்கள்."

கொஞ்ச நேரம் கொடு. என்று பாட்டி பற்றிய கவலையில் ஆழ்ந்தாள்.

அங்கே மத்ராஸில் பாட்டி மிகச் சோர்வாக உறங்கி கொண்டிருந்தார்.
அவர் நினைப்பு மாதவனையும் மாலாவையும் சுற்றியே வந்தன.
இப்படி ஆகிவிட்டதே.

இனி எல்லாம் கண்ணன் விட்ட வழி. நான் யார் அவர்கள் 
வாழவைத்  தீர்மானிக்க.

இத்தனை வயதில்  எனக்கு என் இந்த  ஆசை. மற்றவர் மனங்களை மதிக்க வேண்டாமா. என்று தன்னை வருத்திக் கொண்டதில் அவள் இரத்த அழுத்தம் குறையவில்லை 

டாக்டர் இசிஜி, மானிட்டரைப் பொருத்தி இருந்தார்.
அவருக்கே கவலையாகிவிட்டது.
காவிசேரி  மாமா, பொன்னா , கோவிந்தன்,வைதேகி எல்லோரிடமும் அவளை அமைதியாகப் பேசி  
என்ன தொந்தரவு என்று கேட்கச் சொன்னார்.
பொன்னாவைப் பார்த்ததும், மாலா எங்கே என்றுதான் 
கேட்டார்.

வரச்சொல் லி  சொல்கிறேன் அம்மா. அதிகமாகப் பேசாதே என்றதும், நான் பேசிப் பயனில்லை. தெரிந்துவிட்டது.

நான் பேசவில்லை." என்று கண்களை மூடிக் கொண்டார்.
பொன்னாவின் துயரம் அதிகரித்தது.

டாக்டரிடம் பேசும்போது, இங்கே இருந்தால் இதயத்தை மானிட்டர் செய்வது சுலபம். 

உடல் நிலை சரியாக இல்லை.
உங்களுக்குப்  புரியும் என்று நினைக்கிறேன் என்று  அகன்று விட்டார்.




நலமே நடக்கும்.










Thursday, September 26, 2019

எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 
எதிர்பாராது  நடக்கும் அருள்கள் 9
++++++++++++++++++++++++++++++++++++



மாதவன், கோபி, பிரசாத்  இன்னும் இரண்டு மூன்று  மாணவர்கள் தமிழ் நாட்டிலிருந்து 

அகமதாபாத்  இந்தியன் இன்ஸ்டிடியூட் மானேஜ் மென்டில் 
இரு வருட  மேல் படிப்புப் படிக்கத்  தேர்ந்தெடுக்கப்பட்டு,
மதராஸை வி ட்டுக் கிளம்பினார்கள்.


சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் வழி அனுப்ப வந்த பாட்டி,
மாதவா, மனசை அங்கே இங்கே அலைய விடாதே. 

ஆறு மாதம் கழித்துத்தான்  உன்னைப் பார்க்க முடியும்னாலே வருத்தமா இருக்கு.
சுருக்க படிப்பை முடித்து வேலை தேடிக்கொள்.

அதுவரை  பாட்டி பொறுமையாகக்  காத்திருப்ப்பேன் என்று 
கண்ணில் வருத்தம் இருந்தாலும் 
சிரித்தபடி வழி அனுப்பினார்.
அம்மா,அப்பா,பாட்டி அனைவருக்கும்  கையசைத்தபடி 
ரயிலில் ஏறினான் ,மாதவன்.


Image result for ahmedabad IIM
அஹமதாபாத் கல்லூரி
வண்டி நகர ஆரம்பித்ததும்
எல்லோர் எண்ணமும் படிப்பை நோக்கி நகர்ந்தன.
தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எழுதின
தேர்வுகளும், நேர்காணலும் ஓராண்டு காலத்தில் நடந்து முடிந்தன.

இப்பொழுது  கிட்டத்தட்ட 20 லட்சங்களுக்கு
பெற்றோரிடம் இருந்து   செலவாகிறது என்று நினைக்கிறேன். 50 வருடங்களுக்கு முன் அப்படி இல்லை. மாணவர்களின்
படிப்புத் திறமைக்கும், ஐக்யூ  தரத்துக்கும் ஏற்றவாறு
உதவித்தொகைகளும் கிடைத்தன.

இருபத்து ஐந்து
ஆ யிரம்  ருபாய்களில் படிப்பை முடிக்க முடிந்தது. சிங்கத்தின்  ஒன்றுவிட்ட தம்பி அங்கே படித்தார். அதை ஒட்டி இந்த செய்தியைச் சொன்னேன்.
அந்தப்  பணத்தில் தங்குமிடம், படிப்பு எல்லாம் அடங்கும்.
மாதவனுக்கு இதுதான் மனதில் வந்து கொண்டிருந்தது.
முழுக் கவனமும்  படிப்பில் செலுத்தி  வெற்றி பெறத் தானும் நண்பர்களும்   முயற்சி  செய்ய வேண்டும் .

இதை பற்றி பேசியபடி பம்பாய் வந்து, அஹமதாபாத்துக்கு ரயில்
மாறினார்கள்.
மும்முரமான  கல்வி மாலா கோகிலாவுக்கும் ஆரம்பித்தது.
லேடி டோக் கல்லூரியில்   பொருளாதாரம்  பிரிவில்
இடம் கிடைத்தது.

கோடைக்கானலிலிருந்து மதராஸ் திரும்பின
காவிச்செரி  ஜோஸ்யர், பாட்டிம்மாவையும், வைதேஹியையும் ,
பார்க்க
 மாதவன் படிக்கச் சென்ற இரு வாரங்கள் கழித்து வந்தார்.

அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பாட்டி,
மாதவன் படிக்கப் போயிருக்கும் விஷயத்தை சொல்ல,அவரும் 
ஆனந்தப் பட்டார்.
நல்ல பையன் நன்கு   முன்னுக்கு வருவான். நல்ல எதிர்காலம் இருக்கு. அப்பழுக்கில்லாத
ஜாதகம் அவனுடையது. நம் மாலா ஜாதகம் போல என்று சொன்னார்.

இதோ காப்பி  கொண்டு வருகிறேன் என்றவாறு உள்ளே சென்றாள்
வைதேஹி.




நிலைமை சாதகமாக இல்லையோ என்றார் காவிசேரி .
பாட்டிற்கு காலையிலிருந்து அசதியாக இருந்தது. செல்லப் பேரனின் 
பிரிவு வருத்தத்தான் செய்தது .

மதுரை சென்று வரலாமோ என்று கூட யோசித்தார்.
"நீங்கள் சொல்லுங்கள். சொன்னபடி கும்பகோணம் எல்லாம் போய் வர முடிந்ததா" என்று கேட்டார் பாட்டி.

எல்லாம் கண்ணன்  கருணை. நல்லபடியாக நடந்தது. என் குரு  நாதரையும் பார்த்து மாலா ,மாதவன் ஜாதகங்களையும் காண்பித்தேன்.
என்றார் .
பாட்டி ஆவலுடன் பார்த்தார். நீங்கள் சொன்னது சரிதான். 
நல்ல பொருத்தம் இருக்கிறது இருவருக்கும். குரு  பலன் 
அடுத்த வருடமே வருகிறது. அடுத்த தையில் 
பொருத்தம் பார்த்து வைகாசியில் திருமணம் நடத்தலாம் என்று குரு சொன்னார் " என்று அவர் சொல்லி முடிப்பதற்கும் வைதேஹி வருவதற்கும் சரியாக இருந்தது.

எனக்கும் கேட்டது மாமா. இப்பதானே படிப்பு ஆரம்பித்திருக்கிறது.

அதற்குள் இந்தப் பேச்சு எனக்கு ஏதுவாகப் படவில்லை.
மேலும் மாலாவைத் திருமணம் செய்ய நாங்கள் இருவருமே சம்மதிக்க மாட்டோம். 
அவளுக்கும் நல்ல இடம் கிடைக்கும் இவனுக்கும் நல்ல பெண் கிடைப்பாள்.

நம்பிக்கை பற்றி பேசவில்லை. அபாயம் என்று தெரிந்த பிறகு 
இதில் பிரவேசிக்க இஷ்டம் இல்லை மாமா. அம்மாவின் ஆசையை எங்களால் நிறைவேற்ற முடியாது. என்று திட்டவட்டமாகப் பேசினாள் .

பாட்டிம்மாவுக்கத் திடீரென்று தலை சுற்றுவது போல் இருந்தது.
மாத்திரைகள் எடுத்துக் கொண்டேனே என்று நினைத்தவள் அப்படியே தரையில் சரிந்தாள்.
அதிர்ச்சி அடைந்த மாமா, பால் கொண்டு வாருங்கள் வைதேஹி, அப்படியே கோவிந்தனையும் அழையுங்கள் என்றார்.
பதட்டத்துடன் ஓடியவள்  கணவனையும் ,அழைத்து குடும்ப டாக்டரையும் அழைத்தாள் .
உடனே வந்தவர்  இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது  டாக்டர் கேவி தி கிளினிக்குக்கு உடனே போகலாம் என்று  மாமாவும் அவருமாகப் பாட்டியை நாற்காலியில் உட்கார வைத்து காரில் ஏற்றிக் கொண்டு விரைந்தனர்.

காவிச்செரி  மாமா, பாட்டியைத் தன சிறு வயதிலிருந்தே அறிவார். அவர் மனமே கலங்கி விட்டது.

ராமஜெபத்தைச் செய்தபடி ,,மயங்கி இருந்த பாட்டியை,மாம்பலம் டாக்டரின்  வைத்தியசாலைக்கு கொண்டு வந்தனர்.
மகா கெட்டிக்காரரான  கேவிடி  
சர்க்கரையும், ரத்த அழுத்தமும் அளவுக்கு மேல் இருக்கிறது.
பாட்டிம்மா இங்கே இரண்டு நாட்கள்  இருக்கட்டும். இதய பரிசோதனை  செய்ய வேண்டும்.
என்றபடி எமெர்ஜென்சி ஊசியைச் செலுத்தினார்.
ரொம்ப  அமைதியானவராச்சே. எப்படி இந்த அதிர்ச்சி என்றபடி சுற்றுமுற்றும் பார்த்தார்.
சலனமின்றி 

வெளியே வந்த மாமா, கோவிந்தன் விரைவதை பார்த்தபடி 
அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
மனம் ஜபித்துக் கொண்டே இருந்தது.

அரைமணி நேரத்தில் வெளியே வந்த கோவிந்தனின் கண்கள் கலங்கி  இருந்தன. வெளியே வந்தன.

அம்மாவுக்கு ஏன் இவ்வளவு தீவிர ஆசை.?

வைதேகியும் தான் பொறுமையாக இருக்கக் கூடாதா என்று புலம்பிக் கண்ணீர் வடித்தான்.

"நான் நன்மையை நினைத்து இந்த நல்ல வேலையில் புகுந்தேன்.
கோவிந்தா இனி என் குறுக்கீடு இருக்காது. அம்மா மனம் கோணாமல் நடந்துக்கோ.  மாற்றத்தை பகவானிடம் விடு. பொன்னாவை வரச்சொல்.
அவளைப்  பார்த்தால் அமைதி கூடும் "என்று சொல்லிவிட்டு,
டாக்டரைப் பார்க்க உள்ளே போனார்.

நம்பிக்கை வெல்லட்டும்.










Wednesday, September 25, 2019

எதிர்பாராதது நடந்தே விட்டது 8

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 

எதிர்பாராதது நடந்தே விட்டது 





அன்பு கோமதி அரசு

சொன்ன பிறகுதான் இந்தப் பாடல் மனதில் தோன்றியது.

நம் இரு கதா நாயகிகளும் அவரவர் மன இருப்பை அறிந்தாலும் தைரியமாகப் பேசிக்கொள்ளவில்லை .
பெற்றோர் மேலிருந்த மரியாதை  அவர்களை

அடக்கி வைத்தது. இருந்தும் மனது நினைவுகளில் மூழ்கும் போது
இருவரும்   மற்றவரைப் பார்த்துப் புன்னகைத்த வண்ணம் இருந்தனர்.

மாதுவும் தோழர்களும்  விடுதிக்கு கிளம்பினார்.
அத்தையைப் பார்த்து மாது 
சென்னைக்கு எல்லோரும் வாருங்கள்.
பிறகு படிப்பு ஆரம்பித்துவிட்டாள் சந்திப்பது கடினமாகிவிடும் 
என்று பொதுவில் சொன்னான்.
பிரசாத்தும் எங்கள் வீட்டிற்கும்  வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தான்.

"பெரியவர்கள் மட்டும் என்று இல்லை வால்  பசங்களும் வரலாம் என்றதும் பொய்க் கோபத்தில் கோகிலாவும்,மாலாவும் 
சிரித்தார்கள். ஒரு வாலு க்குத் தான் இன்னொரு வாலை த்  தெரியும் இ ல்லையாடி  கோகி"  என்றாள்  மாலா.

"ஹே இருட்டுகிறது ,  நாம்  கிளம்பினால்  சரியாக 
இருக்கும்". என்று மாதவன் முன்னேற, மற்றவர்கள் பின் தொடர்ந்தனர்.

நன்றிடா மாது  உன்னால்  இந்த மழை நாள் மகிழ்ச்சியாகச் சென்றது என்று 

தோழர்கள் சொல்வதை அமைதியாகக் கேட்டு நடந்தான் அவன்.

இதென்ன புது விதமாக மனதில்  எண்ணங்கள்.

படிக்கும் வயதில் இதெல்லாம் சற்று ஒதுக்கி வைக்க வேண்டும்.
எதிர்காலம் என்ன  தீர்மானத்தில் இருக்கிறதோ தெரியாது.

மனம் தளர்ந்தஆல்  குறிக்கோள்  தவறும் என்று நினைத்தபடி 
திரும்பி பிரசாத்தைப் பார்த்தான்.
அவன் எதோ மேகத்தில் நடப்பது போல் 
மிதந்து  வந்துகொண்டிருந்தான்.

"பாதையைப் பார்த்து வாடா. விழுந்து வைக்காதே."
" ஆளு நேத்திக்கே விழுந்துட்டாருப்பா என்றான் 
இன்னொரு நண்பன்.
கூடவே பொன் ஒன்று கண்டேன்  பெண்ணங்கு  இல்லை என்று பாட ஆரம்பித்தான்.
மாதவனுக்கு  கோபம் வந்து விட்டது. இது விளையாட்டு விஷயம் இல்லை.
நம்மைத் தாண்டி யாரிடமும் இப்படிப் 
பேசாதீர்கள்.

இன்னும் 4 வருடங்கள் கடந்தால் தான் நாம் எதையும் தீர்மானிக்க முடியும் 
என்று அடக்கினான். அந்தப்  பெண்கள் நம்மைவிடச் சிறியவர்கள்.
அவர்கள் விளையாட்டாகச் செய்ததை நீங்கள் மறந்து விடுங்கள்.
கௌரவம் காக்க வேண்டும்.

நண்பர்கள் மௌனமானார்கள்.

மாதவனின்  சொல்லில்  இருந்த உண்மை உறை த்தது.

தீவிர  யோசனையுடன்  வந்த மாணவர்களை பார்த்து அதிசயித்தார்
ஆசிரியர்.

இரவு உணவுக்குப் பிறகு சீக்கிரம்  தூங்குங்கள்.
நாளைக்காலை  கிளம்புகிறோம் .
கொடைரோடிலிருந்து  பஸ்  பிடித்து மாலை சென்னைக்குச் சென்று விடலாம் என்று சொன்னார்.

இங்கு நீங்கள் பெற்ற அனுபவப்  பாடங்கள் உங்களது மேல் படிப்புக்கு உதவும் என்றதும் எல்லோர் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது.
ஆமாம் சார். நல்ல பிராக்டிகல்  பயிற்சி என்ற படி உணவருந்தச் சென்றார்கள்.

அன்றிரவு நான்கு  மனங்கள்  விழித்திருந்தன. எதிர்காலம் என்ன என்று யோசித்தபடி.
மறு  நாள் மழையில்லாத    லேசான சிலிர்ப்புடன்  விடிந்தது.

மாதவன் அத்தை வீட்டுக்கு தொலைபேசித்  தான்  மதராஸ் கிளம்புவதைத் தெரிவித்தான்.
 பொன்னாவும்  நல்லபடியாகச் சென்று வர வாழ்த்துக்கள் 
சொல்லி   தொலைபேசியை வைத்தாள் .

மனம்   சில வினாடிகள் கலங்கியது. எத்தனை நல்ல பையன். எவ்வளவு அடக்கம்.

நிலைமை மாறாதா என்று  தோன்றியது .

அடுத்த நாள் எதிர்பாராத விருந்தாளியாக  வந்தவர் 

கிச்சம்மாப் பாட்டியின் நண்பர்   காவிசேரி  ஜோசியர்.

பொன்னாவுக்கு  அவரைப் பார்த்ததும் மிக மகிழ்ச்சி.
 என்ன சமாச்சாரம்.  பொண்ணை படிக்க வைக்கப் போகிறியா 
இல்லை கல்யாணமா  என்று குறும்பாக்க கேட்டார்.

மாமா உங்களுக்குத் தெரியாததா.
அவள் பட்டப்படிப்பு படிக்க ஆவலாக இருக்கிறாள்.

அது முடிந்ததும்  பையனைத் தேட வேண்டியதுதான் என்றாள் .

நல்ல வேளையாகப்  பெண்கள் காலை நடையாக  சுற்றிவர போயிருந்தார்கள்.
காவிசேரி  மாமா,"  என்னது இது உங்க அம்மாவிடம் சொல்லி இருந்தேனே  மாதவனுக்கு மாலாவுக்கும் தான் திருமணம் செய்யணும்னு" என்று வியந்தார்.
மூல  நட்சத்திரம் பற்றி  அவர்கள் அசௌகர்யப் படுகிறார்கள் .
எனக்கும் தயக்கம் தான் என்றாள் . அவர் யோசனையில் ஆழ்ந்தார்.
பிறகு  தன்னிடமிருந்த  பழைய காலப் புத்தகத்திலிருந்து சில  கோடிட்ட 
வரிகளைப்  படித்தார்.

மூல நட்சத்திரம் வேர் போன்றதுமா. நேர்மையாக இருப்பார்கள் மனதில் 
நேர்மை எனப்பட்டது  என்றால் 
பட்டதைத் தயங்காமல் செய்வார்கள்.

ஒருவர் காரணமாக இன்னொருவர் வாழ்க்கை பாதிக்கப் படாது.
நாம்  பிறக்கும்போது என்ன  வரம் வாங்கி கொண்டு வந்தோமோ 

அது நடக்கும். மாதவன்,உங்கள் தம்பி இருவருக்கும் நல்ல 
பலன்களே  தெரிகின்றன. நல்லதே நடக்கும் . என்று சொல்லி முடித்தார்.

//அதேபோன்று, ‘மூலத்து மாமியார் மூலையிலே’ என்றும் சொல்வழக்கு உண்டு. அதாவது, மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆணையோ, பெண்ணையோ மணந்தால், மாமனார் உயிர்நீத்து விடுவார்; அதனால், மாமியார் விதவையாகி, மூலையில் உட்கார்ந்து விடுவார் எனும் பொருளில் அப்படிச் சொல்வார்கள். ஆனால், இதுவும் மூடநம்பிக்கையே! மாமனாரின் மரணத்தை நிர்ணயிப்பது அவரது ஆயுட்பலமும், அவர் மனைவியின் மாங்கல்ய பலமும், அவரது மூத்த பிள்ளையின் ஜாதகத்தில் தெரியும் கர்ம பலனும்தான் என்று சாஸ்திரம் தெளிவாகக் கூறுகிறது. இதில் மருமகனையோ மருமகளையோ மூல நக்ஷத்திரத்தை வைத்துக் காரணம் காட்டுவதும் பயப்படுவதும் அறியாமை.//  இதுதான் அவர்  படித்துக் காட்டியது.
நன்மையை எதிர்பார்ப்போம். 


















Monday, September 23, 2019

எதிர்பாராமல் நடந்தது 7

வல்லிசிம்ஹன்
எல்லோரும்   வளமாக  வாழ வேண்டும் .

எதிர்பாராமல் நடந்தது  7






மாலாவும்  கோகிலாவும் உள்ளே அறைக்குள்  
ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சின்னவள் மாமி,அம்மாக்களுக்கு  உதவி செய்து கொண்டிருந்தாள் தொந்தரவு இல்லை.
மாலா உனக்கு மாதவனைப் பிடித்து இருக்கு தானே. ஒரே கண்ஜாடையும் ,புன்னகையும் அந்த வராந்தாவே ஜகஜ்ஜோதியாக 
இருந்ததே."

" ம்ம்ம்ம். இருக்கும் இருக்கும்.  இந்த  மாதிரி கலகலப்பில்லாத பசங்களோட நமக்கு 

ஒத்துவராதுமா என்றவளைப் பார்த்து கோகிலா அவர் உடன் வந்த பிரசாத்  நல்ல ஜோக் சொல்கிறார்.

இல்ல?
ஓஹோ அப்படிப் போகிறதா கதை.
 அத்தை ஏ!!!!!!! இவளுக்கு   ராஜேந்திரகுமாரின் எப்படியடி காதலிப்பது வேணுமாம்."

என்னடி சொல்ற. இங்க வந்து பேசு  என்று வந்தது அம்மாவின் குரல்.
மாலாவின் குரல் வெராந்தாவுக்குப் போய் விட்டது.
அந்த இளைஞர்கள் சிரித்து விட்டார்கள்.

கோகிலா பதிலுக்கு  " காதலித்தால் போதுமா.... படிச்சியான்னு கேட்டாள் 
அதுக்குப் பதில் சொன்னேன்  மா.'"

பொன்னாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
உள்ளே வந்து இலைகள் போட்டுத் தண்ணீர் எடுத்து வையுங்கள். கெக்கே பிக்கேன்னு என்ன சிரிப்பு 
என்றதும்  இருவரும்  உள்ளே சென்றனர்.

பலாப்பழம், சிறுமலைப் பழம், மாம்பழம் என்று கலவையாக ஒரு பெரிய பாத்திரத்தில் [பிட்டு மில்க்மெய்ட்  டின்னிலிருந்து அவற்றில் கலக்க சொன்னால்.
அமைதியாக இருவரும் சொன்ன வேலையைச் செய்தார்கள்.

மோர்க்குழம்பும் , உருளைக்கிழங்கு பொடிமாஸும், வாழைக்காய் வறுவலும் 

தக்காளி ரசமும் பிரமாதமாக அமைய,

உள்ளே பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய மாதவன் கண்களில் மாலா பட்டு மறைந்தாள்.

சென்னையில் அம்மா அப்பாவுடன் மழை, சாலைகளின் ரிப்பர் என்றதும், அவர்கள்  தாமதமாக வந்தால் பரவாயில்லை. பத்திரமாக இரு என்று  சொல்லிவிட்டு 
பொன்னாவுடன் பேச ஆசைப் பட்டார்கள்.

பொன்னாவும் வந்தால். என்ன அண்ணா ,மாது பத்திரமா இருக்கான். நான்தான் அவனை இங்கே சாப்பிடச் சொன்னேன்.
அவன் விடுதிக்குப் போகும் வழி எல்லாம் வழுக்குகிறதாம். பால்காரர் சொன்னார்.
 எப்படியாவது இரண்டு நாட்களில்  வந்து விடுவான்.
கவலைப் படாதே என்றாள் .

சரிம்மா நீங்க எல்லோருமே வெளியில் செல்லாமல் பத்திரமாக இருங்கள். நான் ,அம்மா நாளை பேசுகிறோம் என்று வைத்து விட்டார்.


பசங்களா  சாப்பிட வாருங்கோ என்றதும் உள்ளே வந்தவர்கள் கைகால்களைக் கழுவிக்கொண்டு , ,அத்தை,மாமி நீங்கள் உட்காருங்கள் நாங்கள் பரிமாறுகிறோம் என்றார்கள்.

அதெல்லாம் வேண்டாம்டா. உனக்கு இந்த வேலை எல்லாம் தெரியுமா என்றாள் 
 பொன்னா . ம்ம். பாட்டியும் நானும் செய்வோம் என்றதும் சரி அப்படியே செய்யுங்கள், மாலா கோகிலா 
அந்தப் பசங்களுக்கு எடுத்துக் கொடுங்கள் என்று சொன்னபடி வரதனின் 
தங்கைகளும் ,  பொன்னாவும் , மாதுவின் இரண்டு தோழர்களும் தரையில் அமர்ந்தனர்.

பிரசாத் எதோ   பாடலை முணுமுணுத்தபடி   பழக்கலவையை ஒவ்வொருவர் இலையிலும் அளவாகப் பரிமாற 

பொன்னா   'சத்தமா  தான் பாடேன் .நாங்களும் கேட்கிறோம்."


கொஞ்சம் தயங்கினான் வீரன் 😄😄😄 பிரசாத்.
நாங்க ஒன்னும் நினைக்க மாட்டோம் ,நீங்க பாடலாம்..என்று உத்தரவு போட்டாள்  கோகிலா 




அசந்து போய் விட்டார்கள் பெண்கள்.
ம்ம் . நல்ல சாய்ஸ் கோகி  என்று காதில் சொன்னாள்  மாலா.

மோர்க்குழம்பு, பொடேடோ  யாருக்கு வேணும். என்ற படி வந்த மாதுவை நீயும்   பா டலாமே என்றாள்  மாலா.

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று  சிரித்தபடி  தயிர் கொண்டு வைத்துவிட்டு,
என்ன நாம் உட்காரலாமா என்று கேட்டான்.

அனைவரும்  சாப்பிட்டு முடித்து வானொலி  கேட்க உட்கார்ந்தார்கள்.

மாது விடுதிக்கு   ஃ போன் 
செய்து  ஆசிரியரிடம் பேசினான்.  மழை நின்றவுடன்  ஜாக்கிரதையாக வரச்  சொன்னார்.
அடுத்த நாள்    பகலில் சாலைகள் சரியாகிவிடும். நாம் கிளம்பலாம். இரவு ரயிலில் 
மதராஸ் கிளம்பலாம் என்றார்.

ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு   ஓய்வாக அமர்ந்தார்கள்.
பெரியவர்கள் ஓய்வெடுக்க  ,பெண்களும்  இளைஞர்களும் சினிமா புத்தகங்கள் என்று பேசிக்கொண்டிருக்க மாலையும் வந்தது.



Sunday, September 22, 2019

பகுதி இரண்டு....... பாசுமதி

Vallisimhanபகுதி இரண்டு பாசுமதி.
++++++++++++++++++++++++++
முதல் வேலையாக தினேஷை  அழைத்தான்.
என்னடா, என் குழுவோடு தேக்கடி, முன்னாறு
வருகிறாயா.
கொஞ்சம் உன் வேலையைத் தள்ளிப் போடு. எனக்கு உன்னால் ஒரு வேலை நடக்கணும் என்று பீடிகை
போடுபவனிடம், என்னடா, பெண்கள் சமாசாரமா. வசமா எங்கயாவது
பிடிபட்டு விட்டாயா. வலையிலிருந்து மீட்கணுமா
என்று சிரித்தான் தினேஷ்.
டேய், வலை விரிக்க உன்னை அழைக்கிறேன்
என்னைக் குத்திக் காண்பிக்கிறாயே என்று வருத்தப் பட்ட பாசுவை அக்கறையோடு
பார்த்தான் தினேஷ்.
நீதான் பறவைகள் பலவிதம்னு  பல வண்ணம் பார்த்தவனாச்சே,
இப்போ புதிதா சால்லஞ்ச் வந்திருக்கா உனக்கு என்றவனிடம் விஷயத்தைச் சொன்னான். மதிவாணன் சுமதி நட்பு, தான் எப்படியும்
சுமதியைக் காதலித்து மணக்க வேண்டிய உணர்வு...
என்று விவரித்தவனைப் புதிராகப் பார்த்தான் தினேஷ்.
உன்னைத் திருமணம் செய்ய யாரும் மறுக்க மாட்டார்கள். வாட்ஸ் த ப்ராப்ளம்
என்று கேட்டவனிடம்,
தன் நடவடிக்கைகள், பெண்தோழிகள் அனைத்தையும் அறிந்தவளாக
சுமதி இருப்பதே பிரச்சினை.
தன்னை நல்லவனாகக் காட்ட ,தினேஷின் உதவி தேவை என்றதும் திகைத்துப் போனான்
தினேஷ்.

இதைவிட அதிசயம் மறு நாள் அவனுக்கு கம்பெனியில் காத்திருந்தது.
அவனுடைய அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு  மதி வந்திருந்தான்..
 என்ன விஷயம் மதி. பாஸ் ரொம்பக் கடிக்கிறானா. நான் வேணா பேசிப்பார்க்கிறேன்
என்று புன்னகையோடு கேட்டான் தினேஷ்.
இல்லப்பா, நான் காதலிக்கும் பெண்ணை அவரும் காதலிக்கிறார்.

நீ தான் உதவி செய்யணும். என்றான்.
ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டேனே அவனுக்கு என்றதும்
 அதிர்ச்சி காட்டினான்  மதிவாணன்.
என்ன கேட்டிருக்கிறார்//என்றதும் அதை சொல்ல முடியாது.
உனக்கு என்னவேணும் என்றதும்.
நீங்கள் அவரைப் போலவே உருவத்தில் ஒத்திருக்கிறீர்கள், அசப்பில் யார் வேணுமானாலும் ஏமாறுவார்கள்.
 இப்பொழுது போகப்போகும் ரிசார்ட்டில் கொஞ்சம் அப்படி இப்படி சுமதியிடம்
நடந்து கொண்டால் அவள் பாசுவை வெறுக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.
எனக்குச் சாதகமாக அமையும் என்றான். கலகலவென்று சிரித்துவிட்டான்
தினேஷ்.
அப்படியே செய்கிறேன் நீ கவலைப் படாதே போய் வா என்று அனுப்பிவிட்டு
யோசனையில் ஆழ்ந்தான்.ஒரு வெள்ளிக்கிழமை பஸ் முழுவதும் ஏறிக்கொண்ட
 அலுவலக நண்பர்களுடன்  பாட்டும் நடனமுமாக
உற்சாகமாகக் கிளம்பினார்கள்.
சுமதி,தாரிணி ,இன்னும் அவளுடன் வேலை செய்யும் உதவி மருத்துவர்கள், சுமதியின் செகரட்டிரி
சரண்யா என்று வண்ணமலர்க்கூட்டமாக மங்கையர்.

பாசுவும் ,மதியும் அடிக்கடி அவர்களிடம் வந்து நலம் விசாரித்துப் போனார்கள்.
சுமதிக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. இதென்ன புது அக்கறை என்ற படி திரும்பினவளின் கண்களில் தினேஷ் தென்பட்டான்.
சட்டென்று தன் முகம் மலர்ந்ததை அவளால் மறைக்க முடியவில்லை.
ஹேய் அதுயார் ,அச்சு அசல் பாசு மாதிரியே இருக்கிறாரெ
என்று கேட்ட தாரீணியிடம் அவர்,இவருக்கு கசின் என்றாள் சுமதி.
ஓ. அதென்ன திரும்பித் திரும்பி உன்னைப் பார்க்கிறார்,
எனிதிங்க் கோயிங்க் ஆன் பிட்வீன் யூ டூ
என்று கேலி செய்தாள்.
இல்லைப்பா. நீ வேற 😔😔😔😔😔.அவர்கள் லெவலே வேற.நான் வெறும் பணி செய்பவள்.
பாசு அங்கு உட்கார்ந்திருந்தால்  முன்னாறில் செய்திருக்கும் ஏற்பாடுகளைச் சொல்லலாம்
என்று பார்த்தேன்.
தினேஷ் இருக்கிறதைப் பார்த்ததும் ஒரு சர்ப்ப்ரைஸ் அவ்வளவுதான்
என்றவளைப் பார்த்து அந்த பேப்பர்களை என்னிடம் கொடு, நான் நம்ம பாஸ் உடன்
அரட்டை அடிக்கிறேன். நீ உன் புத்தகத்தை எடுத்துக் கொள் காதில்
இளையராஜாவை மாட்டிக் கொள்.,என்றபடி எழுந்த தாரிணியைத் திகைப்புடன்  பார்த்தாள்  சுமதி.


பேப்பர்களை எடுத்துக் கொண்டு பாசுவை நோக்கி விரையும்
தாரிணியை, குறும்பாகப் பார்த்த தினேஷ், தன் இடத்திலிருந்து எழுந்த சுமதியின் பக்கத்தில் இருந்த
காலி இருக்கையில் அமர்ந்தான்.
திடுக்கிட்டு நிமிர்ந்த சுமதியின் முகத்தைப் பார்த்தவனுக்கு
அவளின் சாந்தமான அழகு,மனதைத் தைத்தது.
ஒரு நிமிடம் தன் வாக்குகளை மறந்தான்.

இங்க உட்காரலாமா. உங்களுக்கு மறுப்பொன்றும் இல்லை என்றால் என்
பக்கத்தில் இருக்கும் அருணின் குறட்டையிலிருந்து தப்ப
ஆசை என்று இனிமையாகப் பேசினான்.
ஆச்சரியத்தில் விரிந்த விழிகளுடன் அவனை நோக்கிய
சுமதி பதில் சொல்லத் திணறினாள்.

சமாளித்துக் கொண்டு,இல்லை எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை.
தாரிணி...என்று பின்னோக்கிப் பார்த்தாள்.

ஓ...அவளுடைய அஜெண்டாவே பாசுவை நெருங்குவதுதான்
உங்களுக்குத் தெரியாதா. இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்களே.

நான்,நான் என்று தயங்கிய சுமதியைப் பார்த்து புன்னகைத்தபடி,
நீங்கள் உங்கள் பாடலைக் கேளுங்கள்,
நான் என் ஓய்வை எஞ்சாய் செய்கிறேன்,என்று இருக்கையை நீட்டி,பரிபூரண
அமைதி முகத்தில் பிரதிபலிக்கக் கண்களை மூடிக் கொண்டான்.
கண்களை மூடிக் கொண்டாலும் அவன் நினைவுகள் அவளைச் சுற்றியே வந்தன.
 அப்பழுக்கில்லாத அழகு. பாசு ,இவளை விரும்புவதில் ஆச்சர்யமே இல்லை.
கொஞ்சம் தன் வாழ்க்கை முறைகளைச் சீராக்கிக் கொண்டால்
இவளைக் கவருவதில் அவனுக்குச் சிரமம் இருக்காது//
என்று நினைத்தபடி உறங்க முற்பட்டான். கனவிலும் சுமதியே
வர, சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.
அவன் தோளில் சுமதியின் முகம்.
மூச்சே நின்றது போல உணர்ந்தான். பஸ்ஸின் வெளியே மழை.
பாட்டு கேட்டுக் கொண்டே அவள் உறங்கி இருக்க வேண்டும்.
பஸ் ஒரு குலுக்கலுடன் நின்றது.
அதில் எழுந்த சுமதி அருகில் தினேஷின் முகத்தைப் பார்த்துத் திகைத்துத் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.
மன்னிக்கணும். என்னை அறியாமல்...
என்றவளைக் கனிவுடன் பார்த்தான். இட்ஸ் ஓகே.
நாம கீழ இறங்கணும்.
பலத்த மழை.அதனால் தேக்கடி விருந்தினர் மாளிகையில் தங்கப் போகிறொம். என்றபடி  எழுந்த சென்றவனைப் பார்த்த வண்ணம் இருந்தவள் ,பாசு அருகில் வருவது கண்டு  மழையைப் பார்ப்பது போலாகி கண்களைத் திருப்பிக் கொண்டாள் . பின்னாலயே வந்த  தாரிணி நல்லாத தூங்கிட்டியே சுமதி. இயற்கைக் காட்சி கள் யானைகள் எல்லாம் மிஸ் பண்ணிட்டே என்று கேலி செய்தாள் .

ஆமாம் இந்த மழையில் பார்த்த பாறைகள  இவள்  யானை னை
ன்னு சொல்லிவருகிறாள்.
வாங்கப்பா  எல்லோரும்  க்ரீனவூட்ஸ் ரிஸார்ட்டுக்குப் போகலாம் என்று கிளப்பினான்.
மதுரையிலிருந்து இவ்வளவு சீக்கிரம் வந்துட்டோமே  என்றும் முப்பது  பேரும்  அந்த சொகுசுப் பேருந்திலிருந்து  இறங்கும்போது வரிசையாக நின்று கொண்டிருந்த ரிசார்ட்  பணியாளர்கள் குடை பிடித்து அழைத்துச் சென்றனர்.

மொத்தம் 10 அறைகள், ஒவ்வொன்றிலும் மூவர் தங்கலாம்.




Saturday, September 21, 2019

எதிர்பாராமல் நடந்தது 6

வல்லிசிம்ஹன்


எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
எதிர்பாராமல் நடந்தது 6

+++++++++++++++++++++++++++++



அடுத்த நாள் அதிகாலையில் கொட்ட ஆரம்பித்த மழை 

கடுமையான மலைச்சரிவுகளை  ஏற்படுத்தி இருந்தது.
சீக்கிரமாக எழுந்து  பஸ்  நிலையத்துக்கு விரைந்தவர்களுக்கு  இன்னும் பல பேருந்துகள் கிளம்பாமல் இருந்தது அதிசயமாக இருந்தது.

பஸ்  போகும் வழியில்  பாறைகள்  விழுந்திருந்தன .
மழை  அதிகமாகப் பெய்ய ஆரம்பித்தது .

மாதவனும்  அவனது நண்பர்களும் திகைத்தார்கள்.
மெயின்  திட்டம் சினிமா பார்ப்பதுதான்.
பிறகுதான் தாத்தா பாட்டி வீடு.

அதுவும் வந்திருப்பதோ 

Image result for Kadhalikka Neramillaiஇந்தப் படம்.  சென்னை தோழர்கள்  மிகவும் சிலாகித்த படம்.   நகைச்சுவை, காதல், புத்தம்புதிய நடிக நடிகையர்.

"என்னடா இந்த மாதிரி  ஆச்சு  நாம் போய் பஸ் கண்டக்டரைக் கேட்கலாம்" என்று விரைந்தனர்.

கோடைக்கானல்னா வசந்தம் ,குளீர்னு நினைத்துக் கொண்டு 

வந்தோமே.  சே ஒரு நாள் வீணாகிறதே" என்றான் பிரசாத்.

 BUS கண்டக்டர்  கையை விரித்தார்.
எப்பொழுது அங்கே க்ளியர் செய்வாங்கன்னு  தெரியாது சார். மதியம் 2 மணி ஆகலாம். 
மழை எல்லா இடங்களிலும் வலு த்திருக்கிறது.

நல்ல வேளை  நீங்கள் நடுவில் மாட்டிக் கொள்ளவில்லையே என்று சந்தோஷப்படுங்கள்.// என்றார்.
இன்னும் இருட்டிக் கொண்டு வருகிறது . உங்கள் விடுதிக்குச் 
செல்லுங்கள். மஞ்சு சூழ ஆரம்பித்துவிடும் என்றார்.

என்னது மஞ்சுவா, என்று வியந்தவர்களிடம், மேகக்  கூட்டம் பாதையை மறைக்கும், சின்னப் பசங்களா   நீங்க போங்க என்று விரட்டாத 
குறையாக அனுப்பினார் அவர்.

தங்களுக்குள் மழையை ரசித்துக் கொண்டு,
 விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தவர்களை நிறுத்தினான் பிரசாத்.

நாம எத்தனை பேர் இருக்கோம் ?
5 பேருடா .
ஹே  மாதவா, உங்க அத்தை வீட்டுக்குப் போகலாமா.

இதமா டீ குடித்து விட்டு விடுதிக்குப் போலாம் என்றான்.
மாதவன் தயங்க. "டே சாப்பாடெல்லாம் வேண்டாம் . நல்ல 
டீ  மட்டும் போதும்டா " என்றான்.

தீவிர மழையிலிருந்து தப்பிக்க நல்ல வழி என்று 

மாதுவும் சம்மதித்தான்.

நடனம் ஆடாத குறையாக  அவன் சிநேகிதர்கள் 
அத்தையின் வீட்டை அடைந்தனர்.

அங்கே வராந்தாவில் மழையை ரசித்த வண்ணம் தேநீர் பருகிக் 
கொண்டிருந்த  பொன்னா , மாலா ,கோகிலா எல்லோரும் திகைத்துப் 
போனார்கள்.

முதலில் எழுந்தது பொன்னா  தான்.
"என்ன ஆச்சு பசங்களா . இந்த மழையில் எப்படி மாட்டிக் கொண்டீர்கள்" என்று கேள்விகளை அடுக்கினாள் .

மாலாவும் கோகிலாவும்  கள்ள  புன்னகையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு,  வத்தலகுண்டு என்னாச்சு என்று சிரிக்காமல் கேட்டார்கள்.
வரேன்  வரேன் என்று மழைக் கோட்டுகளைக் களைந்த  

மாதவன், மாலாவைப் பார்த்து  புன்னகைத்தான்.

வருண பகவானுக்கு நாங்கள் சினிமா போவது பிடிக்கவில்லை 
என்று சொல்லிக் காரணத்தையும் விளக்கினான்.

நல்லா வேண்டும் உங்களுக்கு, எங்களையும் அழைத்திருந்தால் மழையே வந்திருக்காது.

என்றாள்  கோகிலா .

தோழர்கள் விழித்தார்கள்.
எங்களை என்றால் எங்களை மட்டும் இல்லை. மொத்த குடும்பமும் உங்களை பெரிய வண்டியில் அழைத்துப்  போயிருப்போம் என்று விளக்கினாள் :} மாலா .

அனைவரையும் உட்கார வைத்த பொன்னாவும் அவர்களது நாத்தனார்களும் 
உள்ளே தேநீர்  தயாரிக்க விரைந்தார்கள்.

மாலாவையும், கோகிலா, அவள் சகோதரி எல்லோரும் உள்ளேயிருந்து 

அழைக்கப் பட்டார்கள்.
ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்த சிநேகிதர்களிடம், சின்னப் பெண்களடா. 

மன்னித்து விடுங்கள். கலகலப்பு மதுரைப் பெண்களுக்கு அதிகம் .

நாம்  வாய் திறக்க வேண்டாம் " என்று கேட்டுக் கொண்டான்.

ஆஹாஆஆஆ...என்று தோழர்கள் புரிந்த  கொண்ட விதத்தில் தலையாட்ட,
தேநீர்  சுமந்தபடி அனைவரும் வந்தனர்.
கூ டவே பிஸ்கட், முறுக்கு ,  என்று குறிக்கும் வகைகளும் வந்தனர்.
தேநீர் மனம்  நாசியைத் துளைக்க, மழை வெளியே தாளம் போட 

ஒரு புதிய அனுபவம் தொடங்கியது.



மழை நிற்பதாகத் தெரியவில்லை.
பெண்கள் அனைவரும் சேர்ந்து  வந்திருக்கும் இளைஞர்களுக்கு மத்திய சாப்பாடு தயார் செய்யலாம் என்று தீர்மானித்து அவர்களை அணுகி 

இரண்டு மணி நேரத்தில் சமையல் தயாராகிவிடும் சாப்பிட்டு விட்டு விடுதிக்கு நீங்கள் செல்லலாம் என்றனர் .
மாதவன் மிகத்  தயங்கினான்.

பிரசாத் , மாதவா, நாம் விடுதியில் லஞ்சுக்குச் சொல்லவில்லை என்று நினைவு படுத்தினான். அவனுடைய நண்பர்களும் மிக்க கட்டுப்பாடான 

வாலிபர்கள் தான்.
அத்தையைப் பார்த்த மாதவன், எளிமையாக ஏதாவது செய்தால் போதும் அத்தை.

ஸ்பெஷல் ஒன்றும் வேண்டாம். மழை நின்றதும் கிளம்ப வேண்டும். நாளைக்குள் நிலைமை சரியாக வேண்டும். அம்மா அப்பா கவலைப் படுவார்கள் என்றான்.

நீ இப்போதே மெட்றாசுக்குப்   பேசு.

சாலை நாளை சரியாகிவிடும்.
கவலை  வேண்டாம்ப்பா  என்று ஆறுதல் சொன்னாள் .

இதோ நான் டிரங்க் கால் புக் செய்கிறேன் என்று எழுந்தாள் மாலா.
இன்னும் ஒரு மணி நேரத்தில் மெட்ராசுக்கு  நீ பேசலாம் மாது 
என்று நல்ல செய்தியுடன் வந்தவளை பார்த்து நன்றி சொன்னான்.


உள்ளேயிருந்து சீட்டுக்கட்டு, காரம் போர்ட் என்று கொண்டு வந்து வைத்துவிட்டு பெண்கள் தாயாருக்கு உதவி செய்ய உள்ளே சென்றனர்.


மழை நின்றதென்னவோ மாலையில் தான். பிறகென்ன நடந்தது என்று பார்க்கலாமா.












மன அழற்சி செய்யும் மாயம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.

எங்கள் ப்ளாக்  ஸ்ரீராம் பதிவிட்ட படத்துக்கும் கவிதைக்கும்
மனம் நிறை நன்றி.

மன அழற்சி  செய்யும் மாயம்
+++++++++++++++++++++++++++++++++
 செல்லி, செல்லிம்மா எழுந்திருடா.
ஞாயிற்றுக்கிழமை தூங்கினது போதும்

இன்னிக்கு நாம் தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்குப்
போகணுமே.
வா வா. குளித்து உடை மாத்திக்கோ.
  // நீ காமாட்சி கோவிலுக்கும் அழைச்சுப் போனாதான்
நான் வருவேன்.  சேரி,, இரண்டு கோவிலுக்கும் போலாம்.

வில்வண்டி கூட வந்துட்டது.
மாட்டு சத்தமும் சலங்கை சத்தமும் கேட்க
விழித்துக் கொண்ட செல்லாவுக்கு
தான் இருக்கும் இடம் புரியவில்லை.
அம்மா,அம்மா என்று தீனக் குரல் எழுப்பினாலும்

அம்மாவைக் காணவில்லை.
இன்னோரு குரல்தான் அம்மா எழுந்திருங்க எத்தனை நேரம் தூங்குவீங்க.
இதோ மருமக்ள கஞ்சி கொண்டு வந்துட்டாங்க.
வாயத் திறங்கமா. //என்று அழைக்கும் இன்னோரு குரல்.
தன்னிச்சையாகத் திறந்த வாயில் ,
கஞ்சி ஊறியது. விழுங்கவும் முடியவில்லை.
அரைமணி கழித்தே சாப்பாட்டு வேளை முடிந்தது.
செல்லி என்கிற செல்லாப் பாட்டிக்கு 85 வயது.
அவள் மனம்  சென்று வந்ததோ கடந்த காலங்கள்.



வைத்தி யர் நரம்புத் தளர்ச்சிக்குக் கொடுத்த மருந்து வேலை
செய்ய மீண்டும் துயில்.

அவளத்தட்டி எழுப்பியது கணவரின் குரல்.
தூங்க விடாமல் என்னன்னா தொந்தரவு.
குழந்தையைப் பார்த்துக் கோங்கோ. நான் தூங்கறேன்.
அம்மா நான் தான் சின்னி மா. உன் பையன்.
எழுந்திருமா. உன் பேரன்களைப் பார்.
உடனே மழலைக் குரல்கள்.பாட்டி பாட்டி
நான் பாடட்டுமா என்று கட்டிலில் ஏறியது குழந்தை.

பள்ளிக்கூடம் போலியா நீ என்று வார்த்தைகள் வெளிவந்ததும் ஒரே கரகோஷம்.
பாட்டிக்கு  சதீஷைத் தெரிந்துவிட்டது.
ஓ ஷி இஸ் பெட்டெர் டுடே என்ற ஆர்ப்பரிப்பு.

அவள் தன்மகன் என்று நினைத்துச் சொன்ன சொல்.
குழந்தையின் கன்னங்களை வருடிக் கொடுத்தபடியே
துயிலில் ஆழ்ந்தாள் பாட்டி.

உடன் வந்த நினைவில் செங்கமலம்
கிணற்றங்கரையில் விழுந்துட்டா.
யாரது பாசியை விட்டு வைத்தது. குழந்தை விழுந்துவிட்டாளே.
வீட்டுப் பொண்களுக்கு விதரணை வேண்டாமா
என்று ஒலித்த கணவரின் குரல்.
உடல் எல்லாம் நடுங்கியது.
சாப்பாடு ,சமையல் தூக்கம் ,பன்னீர் மாதிரி ரசம் பண்ணான்னு
பெருமை.
மாமியாரின் அதட்டல். குழந்தையை வண்டியில் அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்ததென்னவோ
செல்லிப்பாட்டிதான்.
தொண்டை நிறைய துக்கம் அழுத்த விசும்பினாள்
பாட்டி.
 அருகிலிருந்த தலையணையைத் தட்டிக் கொடுத்து
ஒண்ணுமில்லடா தூங்கு
அம்மா பார்த்துக்கறேன். நிஜக் கண்ணீர் இருபுறம் வழிய, துடைத்து விட்டது மருமகளின் கரங்கள்.
ஒண்ணும் இல்லமா. நாங்க எல்லாரும் சௌக்கியம்.
என்று தட்டிக் கொடுத்தாள்  நிர்மலா.
அம்மாக்குப் பழைய பாட்டுகளைப் போட்டு வைக்கலாம். மனசுக்கு நிம்மதி கிடைக்கும். இது
சின்ன மகன். 1950,60 வருடப்  பாட்டுக்களை போடு.

அம்மாவுக்குப் பிடிக்கும்.


இது ஒரு நாள் நிகழ்வு. இது போல பல வருடங்களைத் தாண்டியே
உடல் நலம் நலிந்து,மகிழ்ச்சிக்கும்,துக்கத்துக்கும்,கற்பனை செய்த
பயங்கரகளுக்கும் பயந்து,மகிழ்ந்து,அழுது
தன் உலகத்தில் வாழ்ந்து மறைந்தாள்.
செல்லி.
அவளை விடக் கலங்கியது அவள் குடும்பம் தான்.
கண்முன்னே உயிரோடு இருந்த ,
ஆனால் தங்களை மறந்த அன்னையைப் பார்க்கத்தான் சகிக்கவில்லை.
இறைவன் நம்மைக் காக்கட்டும்.

பல நினைவுகளைக் கொண்டு வந்த பாட்டி படத்துக்கு நன்றி ஸ்ரீராம்.



Friday, September 20, 2019

எதிர்பாராமல் நடப்பது 5

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழவேண்டும் 


Add caption
எதிர்பாராமல் நடப்பது  5

மாலாவுக்கும் மாதவனுக்கு சிறிய வயதிலிருந்து 

நட்பு உண்டு.  கோவில்கள்,கடற்கரை ,மஹாபலிபுரம் என்று 
மாமா,பாட்டியுடன்  சுற்றிய வருடங்கள்  பல. மாமா ஸ்ரீநிவாசன்,மாமி பத்மா 
இருவருமே  மிக அருமையாக அவளிடம் அன்பைப் பொழிவார்கள்.

பாட்டிம்மா மூவரையும் சேர்த்துக் கொண்டு
கதை சொல்வது, கைகளில்   அமுது படைப்பது என்று 

செல்லமாகவே வளர்த்தாள் .   ராமன், சீதை,லக்ஷ்மணன் என்று 
அலங்காரம் செய்து மகிழ்வாள்.

இதெல்லாம்  பத்து,பன்னிரண்டு வயது வரைதான் .



அவரவர்களுக்குப் படிப்பு, பாட்டு,நடனம் என்று 
தங்களை வளர்த்துக் கொள்ள ஈடுபடும் பொது சந்திப்புகளும் குறைந்தன.

மாதவன் டென்னிஸ்    விம்பிள்டன் ராமநாதன் கிருஷ்ணனிடத்தில் பயின்று நன்றாக விளையாட ஆரம்பித்தான்.

அவனும் தம்பி கேசவனும்   இரட்டையர் போல் பல ட்டூர்னமெண்ட்களில் வாங்கிய  வெள்ளி கோப்பைகள் 
அவர்கள் பெற்றோருக்கு அளவில்லாத ஆனந்தம் 
கொடுத்தது.

மாலா பிறந்த போது   ஏமாந்தது இவர்கள் தான். இபோது  போல  21 ஆம் நூற்றாண்டு இல்லையே.

ஆணா கப் பிறந்திருந்தால்  அரசாளும் நட்சத்திரம். பெண்ணாகி விட்டதே 

என்று பெருமுட்டுச்சு விட்டாள்  மதனி வைதேஹி.

மாலாவிடம் அதிக அன்பு காட்டினாலும் தன மகனுக்கு அவளைத் திருமணம் செய்யும்  எண்ணம் எழவே இல்லை.

பொன்னா  இதை நன்றாக உணர்ந்தாள்.

இப்பொழுது இங்கு வந்திருக்கும் மாதவனின் நல்ல குணம் நடவடிக்கை 
எல்லாம் காணும் போது   அவள் மனம் 
இந்த ஜோடி  சேர்ந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அனைவரும் சாப்பிட உட்கார்ந்த பொது,
சின்னவர்கள் உட்கார பெரியவர்கள் பரிமாறினார்கள்.

ஒரே குதுகலமாக நேரம் சென்றது.
பிரசாத் ,கல்லூரியில்  நடக்கும்  நகைச்சுவை காட்சிகளை சொல்லச் சொல்ல 

பெண்களிடையே  சிரிப்பு பரவியது.

மாதவன்  சாப்பிடும் இலையிலிருந்து  கண்ணே எடுக்கவில்லை.

மாலா அவனைக் கிண்டல் செய்தாள் . 
சாப்பாட்டு ராமன் தெரியும் . இப்போதுதான் மாதவனைப் பார்க்கிறேன் 
எனவும் அவனுக்கே சிரிப்பு வந்து விட்டது.

இன்று முழுவதும் நாங்கள் நடந்த நடைக்கு  இன்னும் ஒரு 
தடவை கூடச் சாப்பிடுவேன் என்று சிரித்தான்.

பெண்ணை உறுத்து   விழித்தாள்  பொன்னா .


கொஞ்சம் பேசிக்கொண்டே சாப்பிடட்டும் என்று கேட்டேன் மா. சரி மாது.

உன்னைச்  சொன்னால் உன்     அத்தைக்குப் பிடிக்கவில்லை.

சினிமா  எல்லாம் பார்ப்பீர்களா என்று ஆரம்பித்தாள்.
உடனே பிரசாத்   அவனுக்கு  சிவாஜி படம் எனக்கு எம்ஜிஆர்.

எனக்காகப்  பணக்காரக் குடும்பம்  போன வாரம் பார்க்கவந்தான்.
அதில் அவனுக்கு மிகவும் பிடித்தது 

அந்த  டென்னிஸ்  பாட்டுதான்.

சகோதரிகள்  மூவரும் பறக்கும் பந்து பறக்கும் என்று 
பாட ஆரம்பித்தனர்.

இளைஞர்கள் இருவரும்  ஆச்சரிய பட்டார்கள்.
மதுரைக்கும்  அந்த சினிமா வந்துவிட்டதா என்றனர்.


ஏன் எங்க மதுரை  என்ன  குக்கிராமமோ.
எல்லாப் படமும் வந்து விடும்.

என்று அரட்டை நீள



 பொன்னா    தான் முற்றுப்புள்ளி வைத்தாள் .

நாளைக்கு மதியம் வாருங்களேன்  என்று அழைக்க 
அவர்கள் நண்பர்களோடு   வத்தலகுண்டு வரை போய் வருவதாகத் திட்டம் 
வர இரவாகிவிடும். அடுத்த நாள் சென்னை கிளம்ப வேண்டும் என்றனர் 
இருவரும்.

   ஒரு  நொடியில் மாலாவின் முகம் வாடியது.
அதையும் கவனித்தான் மாதவன்.

பெற்றோர்   சொல்லாவிட்டாலும் அவன் நிலைமையை ஓரளவு யூயூகித்து இருந்தான்.

அவன் மனதிலும் வெறுமை சூழ்ந்தது.


பொன்னாவுக்கு,  அவனது வத்தலகுண்டு உறவினர்களைத் தெரியும்.

தன்  மதனியின்   பெற்றோர் அங்கு  இருப்பதும், அவர்கள் வீட்டிலும் 
ஒரு பெண் ,அவனுக்கு   ஏற்ற திருமண வயதில் இருப்பதும் 
அவள் அறிந்திருந்தாள் .


சரிம்மா  நாம் பிறகு சந்திக்கலாம். இந்த பழங்கள் 
எடுத்துக் கொண்டு போ. இங்கே தோட்டத்தில் விளைந்தது என்று சப்போட்டா, கொய்யா, ஆரஞ்சுப் பழங்களை 
பையில் போட்டுக் கொடுத்தாள் .


அங்கே வெறும் கையோடு போக வேண்டாம்  என்றதும் சிரித்தபடியே அத்தையை அனைத்துக் கொண்டான் மாதவன்.

ஹே மாலா, எந்தக் கல்லூரி என்று எனக்குத் தெரிவியுங்கள்.

படிப்பிலும் கவனம் தேவை  என்றபடி  விடை பெற்றான்.

பிரசாத் எதோ முணுமுணுப்   பதைக் கண்டு என்னடா என்றான்.
//ஒரு பெண்ணை ப் பார்த்து நிலவை ப் பார்த்தேன் என்று வான நிலவைக் காட்டினான்.

ஆமாம் அழகுதான் தொட முடியாது என்ற மாதவனின் குரல் கம்மியது.
























Wednesday, September 18, 2019

எதிர்பாராமல்நடந்தது 4

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

எதிர்பாராமல்  நடந்தது 
+++++++++++++++++++++++++++
மலர்கள் 
மலரும் நேரம்   மாலை நேரம்  மாதவனும் பிரசாதும் 
அத்தை இருக்கும் பங்களாவுக்கு வந்தார்கள்.

அன்று முழுவதும்  வெவ்வேறு  இடங்களுக்குச் சென்று தாவரங்களை 
பார்வையிட்டு, வெவ்வேறு விவரங்களை சேர்த்து எழுதி வைத்துக் கொண்டனர்.
பண்ணைக்காடு, சிறுமலை எல்லா இடங்களுக்கும் வண்டியில் சென்றுவந்தனர்.

நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றார் எண்ணமே அத்தை 
அழைப்பை மாதவனுக்கு நினைவூட்டியது.

கொஞ்சமே கொஞ்சம்  மாலா நினைவும் வந்தது என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

😉😉😉

இன்னும் இரண்டு நாட்களில்  சென்னை வேறு 
திரும்ப வேண்டும்.
அதற்கப்புறம் அகமதாபாத்  சென்று மேலாண்மைப் படிப்பாக எம்பிஏ 
இரண்டு வருடங்கள்.

பிறகு நல்ல வேளையில் அமர வேண்டும். பிறகுதான் 
மணவாழ்க்கை என்பதில் திடமாக இருந்தான்.

இன்று மாலா  அவன் மனதை அசைத்து விட்டாள் .

என்னடா மாதவா போறோமா இல்லையா.
பசி வயத்தைக் கிள்றதுடா.
என்ற பிரசாத்தின் குரல் கேட்டதும்  உடனே ஸ்வெட்டர், கழுத்துக்கு 

உறை   எல்லாம்  அணிந்து கொண்டு கிளம்பினார்கள்.

பத்து நிமிடங்களில் அத்தை சொன்ன பெரிய வீட்டின் முன் நின்றனர்.

உள்ளே இருந்து பாட்டு சத்தமும் சலங்கை ஒலி யும் கேட்டது.

தயங்கியபடியே  படியேறி  வாசலில்  நின்ற மாதவனின் கண்ணில் பட்டது மாலாவின் பாடலும் அபிநயமும் தான்.



அவளுடன்  அவளின் அத்தை மகளும் சேர்ந்து ஆடுவது 
இன்னும் சிறப்பாக இருந்தது.

நண்பர்கள் இருவருக்கும் திகைப்பு. உள்ளே போய் 
அது அவர்களுடைய நடனத்துக்குத் தடையாக 
இருக்கக் கூடாது என்று ஒதுங்கியே  நின்றார்கள்.

கடைக்கண்ணால் அவர்கள் வந்ததை பார்த்துவிட்ட மாலா 
அம்மாவிடம் ஜாடை காட்டினாள். 
புரிந்து கொண்டு வாசலை நோக்கி வந்த 
பொண்ணா இருவரையும் உள்ளே அழைத்து வந்து அமரச் செய்தாள் .
இதோ முடிந்துவிடும்.  ஆரஞ்சுச் சாறு கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றாள் 


நடனம் முடிந்ததும் அத்தைகள் கைதட்ட அவர்களுடன் இளைஞர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

ரொம்ப நன்றாக இருந்தது மாலா  , கோகிலா என்று 
மாதவனும் பிரசாத்தும் சொல்ல 
,நன்றி கூறிவிட்டு உள்ளே விரைந்துவிட்டார்கள் பெண்கள்.

அங்கே உட்கார்ந்திருந்த மற்ற இரு பெண்மணிகளும் இவர்களது படிப்பு, மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் 

என்றெல்லாம் விசாரிக்க  இருவரும் மிக மரியாதையுடன் தங்கள் 

எண்ணங்களை பரிமாறிக் கொண்டனர்.

இடையில் அங்கே மற்றவர்களும்  வர 
ஒரு இனிய மாலை ஆரம்பமானது.







Monday, September 16, 2019

எதிர்பாராதது 3

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
எதிர்பாராதது 3

மாதவனும் அவன் நண்பர்களும் 
40 பையன்கள் தாவரவியல்  மேஜர் எடுத்தவர்கள். இது ஒரு கல்விச் சுற்றுலாவாக
கொடைக்கானல் வர சந்தர்ப்பம் கிடைத்ததும்,
வந்துவிட்டார்கள். ரயிலில் வந்தவர்கள் கொடை ரோடு  நிறுத்ததில் 
இறங்கி கோடைக்கானல் வந்ததும் 
யூத் ஹாஸ்டலில் இறங்கினார்கள்.
கிடைத்த உணவை உண்டு
அவர்கள் செல்ல வேண்டிய  இடத்திற்கு அவர்களது ஆசிரியர் அழைத்துச் சென்றார்.

மாதவன் மனதில் பாட்டி கொடுத்த செய்தி ஒலித்துக் கொண்டிருந்தது.

அத்தை,மாலா எல்லொரும் அங்கே இருக்கிறார்கள். முடிந்தால் ஒரு எட்டு
பார்த்துவிட்டு வா.// சிறிய வயதிலிருந்தே மாலாவையும், அவளது தெளிவான பேச்சையும் ரசித்திருக்கிறான்.
ஏன் இந்த அத்தை மாலாவை முன் போல் அனுப்புவதில்லை
என்று ஆச்சர்யப் பட்டான்.

ஓ. அவளுக்கும் படிப்பு இருக்கிறது. கல்லூரிக்கு வேற சேர வேண்டும்.
அதுதான் காரணமாக் இருக்கும் என்று தீர்மானித்துக் கொண்டான்.
முன்பு ஆறு வருடங்களுக்கு முன்னால் எல்லோரும் இங்கே
வந்து இருந்த நினைவு.

விலாசம் தெரியாமல் எப்படி அங்கே போவது 
என்று யோசித்துக் கொண்டே இருக்கும் போது
ஏரிக்கரை வந்துவிட்டது.

அங்கிருந்த ஓடங்கள், மரங்கள் எல்லாம் முன்பே பார்த்த நினைவு,.
ஆஹா இது ஜெமினி சாவித்திரி லேக்.
எல்லாப் படங்களிலும்  இருவரும் ஓடம் ஓட்டாமல் இருக்க மாட்டார்கள். மாயா பஜார்,
பாசமலர், காத்திருந்த கண்கள் என்று வரிசையாக நினைவுக்கு
வந்தது. பாதிப்பாடல் நீரிலும் ,மீதிப்பாடல் செட்டிலும் 
காட்சிகள் விரியும். நினைத்து சிரிப்புதான் வந்தது.
 ஓடம் ஓட்டுபவருடன் இருவர் இருவராகப் போகலாம் என்று ஆசிரியர் சொன்னதும்

சிலர் தண்ணீருக்குப்  பயந்து இறங்கவில்லை.





மாதவன் தன் நெருங்கிய நண்பன் பிரசாதைத் தேடினான். 
அப்போது கண்ணில் பட்டார்கள் அத்தையும் அவர்களது 
குடும்பமும்.
அதோ மாலா. எப்படி வளர்ந்து விட்டாள்.
மாதவன் மனதில் ஏதோ புது உணர்ச்சி.
அதோ அவளும் பார்த்து விட்டாள். உடனே
முகம் நிறையப் புன்னகை.
அத்தைக்கு அதிர்ச்சியோ என்று சந்தேகித்தான்.

//நீ எங்கடா வந்த கொடைக்கானலுக்கு என்ற/ அத்தையைப் பார்த்து ஃபைனல்
வருடம் இல்லையா அத்தனை கல்வி சுற்றுலா
போக அனுமதி கிடைத்தது.
உடனே சேர்ந்து கொண்டேன்
மெட்ராஸ் வெய்யிலுக்கு இங்கே நல்ல குளிர் என்றான்.
//ஆமாம் நேற்றெல்லாம் இங்கே மழை. இதோ இவர்கள் என்
நாத்தனார் பெண்கள், கோகிலா, சந்த்ரா. 
மாலா இதோ இருக்கிறாள்//
என்று சிரித்தபடி சொன்னாள் பொன்னா.

நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்கள் போட்டில் சென்று வந்துவிட்டீர்களா
என்றான். 
மாலாவை நேரில் பார்த்துப் பேச தயக்கமாக இருந்தது.

அவளே முன் வந்து//என்ன மாது ,ஆளே அடையாளம் தெரியவில்லை.
 இப்படி உசரமாயிட்டயே// என்றதும் // ம்ம் நீயும் தான். இப்பவும்
தண்ணீரைக் கண்டால் பயமா உனக்கு// என்று கேட்டான்.

அதெல்லாம் அப்பவே போயாச்சு. நீச்சல் கற்றுக்கப்
போகிறேன் என்றாள் மாலா. சகோதரிகள் கைதட்டி சிரிக்க
அத்தையும் அவளது உறவினர்களும் நாம் பங்களோவிற்குப்
போகலாம்.

மாது, இதோ விலாசம். பக்கத்தில் தான் இருக்கிறது.
உன் நண்பனையும் அழைத்து வா. சாப்பிட்டு விட்டுப்
போகலாம் என்று அழைத்தாள்.
ஆசிரியரைக் கேட்டுக் கொண்டு வருகிறேன் அத்தை.
 பை பை ஆல் என்று கை அசைத்த வண்ணம் பிரசாதுடன்
ஓடங்களின் கரைக்குப் போனான்.
படபடப்பு அடங்க நேரமானது.
ஏய் இன்னும் கொஞ்சம் நின்றிருக்கலாமேடா. அந்தப் பெண்களுடன் பேசி இருக்கலாமே
என்றவனை முறைத்தான்.
டேய் இவர்கள் உறவுப் பெண்கள்.
உன்னுடைய  ப்ரெசிடென்சி கோமாளித்தனம் இங்கே காட்டாதே
என்ற மாதுவைப் பார்த்து சிரித்தான்.
முதுகில் தட்டிக் கொடுத்து புரிகிறது புரிகிறது.
/யார் யார் யார் அது யாரோ என்று 
பாட ஆரம்பித்தவனை அடக்கி ஓடத்தில் ஏறினான்.
சற்றே தூரத்தில் சென்று கொண்டிருந்த கும்பலில்
மாலா மட்டும் தனித்துத் தெரிந்தாள். தொடரலாம்.







Saturday, September 14, 2019

எதிர்பாராமல் நடந்தது 2

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.


எதிர்பாராமல் நடந்தது 
++++++++++++++++++++++++++மாலா தினம் இரண்டு மணி நேரமாவது நடன அசைவுகளைப் பயிற்சி செய்து
திறன்பட ஆடினாள்.
மதுரைக்கு ஏதோ திருமண விழவிற்காக வந்த கிச்சம்மாப் 
பாட்டியின் வருகை  அவளுக்கு இன்னும் மகிழ்ச்சி கொடுத்தது.
பேத்தியின் அருகாமையில் பாட்டிக்கு இன்னும் மகிழ்ச்சி கூடியது.

மகள் பொன்னாவிடம் தன் ஆசையைத் தெரிவித்தார்.
பொன்னாவுக்கும் மாதவனிடம் மிகுந்த அன்பு உண்டு. மகள் அவனை நினைப்பதையும் அவள் அறிவாள்.

ஆனால் குடும்ப ஒற்றுமை கலைய அவள் விரும்பவில்லை.
அம்மா சொல்வது போல  எல்லாமே சரி என்றாலும், அண்ணா, மதனி மனம் நோக
தான் நடக்கக் கூடாது என்பதில் அவள் வைராக்கியமாக இருந்தாள்.

அம்மாவிடமும் அதையே சொன்னாள்.
மாலா படிக்கட்டும். அவளுக்கு ஏற்ற வரன் கிடைப்பான்.
அவள் மனதில் இன்னும் ஆசையை வளர்க்கக் கூடாது.

இப்போது படிக்காவிட்டால் வாழ்க்கை முழுவதும் சந்தர்ப்பம் கிடைக்காது.
என்று உறுதியாக அம்மாவிடம் மறுத்து விட்டாள்.

கிச்சம்மா பாட்டி சலித்துக் கொள்ளவில்லை.
திருமோகூர், அழகர் கோவில், திருப்பரங்குன்றம், ,மீனாக்ஷி அம்மன் என்று
போய் வந்தார்.
பேத்தியை அழைத்துச் செல்லவும் மறக்கவில்லை.
அந்த அந்தக் கோவில் தல புராணங்களையும்
சொல்லிக் கொண்டே வருவார்.
இடையே ஒரு நாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்தார்கள்.
மாதவன் பற்றிப் பேச்சே எடுக்கவில்லை.
காலம் கனியும் போது காரியம் கைகூடும் என்ற திட நம்பிக்கை
அவரிடம் இருந்தது.
பள்ளி ஆண்டுவிழாவும் வந்தது.
அடக்கமான ,ஆடம்பரம் இல்லாத உடையில் 
மாலா மிக அழ்காகத் தெரிந்தாள். அத்தைகள்,அவர்களது 
மக்கள் எல்லோரும் வந்திருந்து கொண்டாடி போனார்கள்.

தேர்வு நாள் வருவதையொட்டி பாட்டிம்மா 
கிளம்பிவிட்டார்.
குழந்தை நல்ல தேர்வடைஅய வேண்டும் என்று யாருக்குத் தான் ஆசை இருக்காது.
அப்போது பதினோராம் வகுப்பு இருந்தது.
மாலா கணக்கு,விஞ்ஞானம் ,சிறப்புத் தமிழ் எல்லாவற்றிலும் நல்ல
தேர்ச்சி பெற்றாள்.
கோடை மாதங்களில் கொடைக்கானல் செல்வது வழக்கம்.
வரதனின் அப்பா அங்கே தனி வீடு வாங்கி இருந்தார்.
மாலா,அவளுடைய அத்தைகள், அவரது மகள்கள் எல்லோரும் உற்சாகக் கிளம்பி அங்கே
சென்றனர்.
வரதனும் பொன்னாவும் வார இறுதிகளில் வந்து சென்றார்கள்.
மே மாத நடுவில் மாதவனின் கல்லூரி சுற்றுலா
அங்கு வந்தது தான் ஒரு கலகலப்புக்குக் காரணமானது.




Thursday, September 12, 2019

எதிர்பாராமல் நடந்தது.

வல்லிசிம்ஹன்

எல்லோரும்   வளமாக  வாழ வேண்டும்.
எதிர்பாராமல் நடந்தது.

++++++++++++++++++++++++++++++++++++  //மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும்  அருவி ஓரம்//என்று முணுமுணுத்தபடி 
வந்த மகளை புன்னகையுடன் 

பார்த்தால் அவள் அம்மா பொன்னா .
என்ன உத்ஸாகம்  , பாட்டெல்லாம் பலமாக இருக்கிறது 
என்று கேட்டாள்   .

பள்ளி விழா ஒன்றுக்கு ஆட  எனக்கு   டீச்சர் அழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.
இந்தப் பாடல்  மனதில் வந்தது. ஏம்மா என்னால் 
முடியுமா  என்று கேட்டாள்   மாலா.




நீதான்  நாட்டியம் கத்துக்கிறியே  மா. நன்றாக ஆடலாம்.
 உடைகள் இருக்கின்றன.  நல்ல முத்து மாலை மட்டும் அணிந்து 
அளவான  அலங்காரம் செய்தால் அழகாக 
ஆடலாமே.

இரண்டு வாரங்கள் முன்  நாம் பார்த்த படம் தானே 
பத் மினி  ஆடுவது நினைவில் இருக்கிறதா.

இல்லாவிட்டால் நானும்   கற்றுத்  தருகின்றேன் .

பதினைந்து வயதுக்கு  உரிய  , வனப்பும், இயல்பாகவே அமைந்த அமைதியான முகமும் 
அம்மாவின் கண்ணே படும் போல   அமைந்திருந்தது.

என்றைக்கு ஆண்டு விழா. 
இந்த மாதம்   25 ஆம் தேதி மா.

பாடங்கள்  எல்லாம் முடிந்த நிலையில்  
ஆண்டுத்தேர்வுக்கு   முன்னால்   இந்த விழா நடக்கும்.
  இது வரை சிறு வயதினருக்கான கோலாட்டம், 
போல  நிகழ்ச்சிகளில்  பங்கு கொண்ட பெண்ணுக்கு இது போல நிகழ்ச்சி அமைவது நல்லதொரு 
அனுபவமாக அமையும்  என்று அம்மாவுக்கு 
மகிழ்ச்சி.

அம்மா  அந்தப் பாடல், ரிக்கார்டு   இந்திரா விடம் இருக்கிறது.
வாங்கி வரட்டுமா என்று ஆவலுடன் கேட்டாள்  மகள் .

உம்ம் ...போயிட்டு வா. பேசிக்கொண்டே   நிற்காதே.
விளக்கேற்ற வந்துவிடு..... என்று சொன்னபடி 
தன்  வேலைகளைக் கவனிக்கக்  கிளம்பினாள் .


பொன்னாவுக்கும்  வரதனுக்கும்   மாலா ஒரே மகள் .
செல்லம்  குறைவாகவும் கண்டிப்பு  நிறைவாகவும் வளர்க்கப்பட்டவள் .

மதுரையில் எல்லா உறவுகளும்  சூழ , வரதனின் 
தனியார் கம்பெனி கொடுத்த சம்பளத்தில் நிறைவாகவே வாழ்வு சென்று கொண்டிருந்தது.

பொன்னாவின் அண்ணா ராஜாமணி சென்னையில் இருந்தார்.

வரதனின் அக்கா, தங்கைகள் மதுரை,அதைச் சுற்றி இருந்த 
பசுமலை, கப்பலூர் என்று இருந்தனர். 

 கப்பலூர் மில்லில் அக்காவின்  கணவர்  தலைமைப் பொறுப்பில் இருந்தார்.
இன்னோர் தங்கையின் கணவர் வரத்தான் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே  ,இன்னுமொரு இலாகாவில் இருந்தார்.



நமோ  நாராயணாய

நல்ல  ஒற்றுமையான குடும்பம்.

விடுமுறை நாட்கள், பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் ஒன்று கூடிக் கொண்டாடுவார்கள்.
இரண்டு  அத்தைகள் வீட்டிலும் மாலாவுக்கு பாசம் அதிகம்.

மாமா வீட்டுக்கு  ஆண்டு  தேர்வு முடிந்ததும் கட்டாயம் ஒரு  மாதமாவது போய் வருவாள்.
கடந்த இரண்டு வருடங்களாகத் தான்  செல்லவில்லை.
பெண்  ருதுவானதும்,
அண்ணா   வீட்டில்  அவருடைய வயது வந்த  பையன்களும் இருப்பதால் 
அனுப்புவதில்லை.
தான் கட்டுப்பெட்டித்தனமாக இருப்பது புரிந்தாலும் 

திருமணம் முதலிய  விழாக்களுக்கு குடும்பத்தோடு போய் வருவார்கள்.

ஒரே ஒரு காரணம்  மாலாவுக்கு மூல நட்சத்திரம்

. ஜாதகம் பார்த்த காவிச்செறி,ஜோஸ்யர் அவள் அமோகமாக இருப்பாள் என்று  சொல்லியது பொன்னாவுக்கு  நிம்மதி கொடுத்தது.

அண்ணா மதனியிடம் இது பொழப்பு பேச்சைக் கூட ஆரம்பிக்கவில்லை.
பொன்னாவின் அம்மாவுக்கு மாலா தன வீட்டு மருமகளாக வரவேண்டும் என்ற 
ஆசை மிக இருந்தது.

பேரன்கள்  இருவருமே  நல்ல அழகன்கள் .
 பெரியவன் கல்லூரிப் படிப்பை முடிக்கப் போகிறான்.

5 வயது வித்தியாசம் பொருத்தமாக இருக்கும்,

கூடலழகர் தான் இந்த ஜோடியைச் சேர்த்து  வைக்க வேண்டும்  என்று வேண்டிக் கொண்டால்.
அவனுக்கு, அதாவது மாதவனுக்கு  இன்னும் ஐந்து வருடம் சென்றுதான் திருமணம் என்று 
தீர்மானம் செய்தாகிவிட்டது.

அதற்குள் மாலாவும் பட்ட
 படிப்பை முடித்து விடுவாள்.
கிச்சம்மா பாட்டியின் ஆசை நிறைவேறுமா.
பார்க்கலாம்.

புதுக்கணினியில்  பதிவு செய்யும் முதல் பதிவு.










Tuesday, September 10, 2019

New post

வல்லிசிம்ஹன்
பரிசோதனைப் பதிவு
Add caption
வெற்றி வெற்றி. புதுக்கணினி பாபாவின் கருணையில் 
உயிர்  பெற்றது.ஷீர்டி சாயீ  சரணம் .

Saturday, September 07, 2019

புதுப்பிக்கப் படும் உலகம் .... வீடு

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வலமாக வாழ வேண்டும்.

புதுப்பிக்கப் படும் உலகம்  வீடு 


வீடு முழுவதும் தலை எங்கே கால் எங்கே என்று தெரியாமல்
மாறி இருக்கிறது.

நம் கணினி  மேஜை முழுவதும் வீட்டுப் பொருட்கள்.
வீடெங்கும் பெயிண்ட் வாசனை.
குறுக்கே நெடுக்கே போகும் சுறுசுறு ஆட்கள் இரண்டு பேர்.
நவீன ஏணிகள்.

ப்ளாஸ்டிக் போர்வைக்குள் ஒளிந்த சோஃபாக்கள்.
மம்மா...அதாவது நான் பார்க்க டிவி யை மட்டும் மூடவில்லை.

நான்கு நாட்களாக முக்கால் வாசி முடிந்துவிட்டது.
சமையல் ஓரிடம் அவர்கள் வருவதற்கு முன்னால் முடித்து சாப்பாடுகள் என் மேஜைக்கு வந்து மூடப்பட்டுவிடும்.

இன்றும் நாளையும் அவர்கள் வர மாட்டார்கள்.
ஆனால் இந்த இளைஞர்களின் ....வயது 55.60.... சுறுசுறுப்பையும் திறமையையும்
சொல்லி முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஒரு மணி நேரத்துக்கு 35 டாலர்கள்.
எட்டுமணி நேரத்தில் சாதிக்கும் வேலை அதிசயிக்க வைக்கிறது.

நடுவில் ஒரு ப்ரேக். அப்போது அவர்களின் பெரிய வண்டியில் வீட்டிலிருந்து கொண்டு
வந்த உணவை உண்டு
ஒரு சிகார் பற்றவைத்துக்கொண்டு  அரைமணியில் முடித்து வந்துவிடுவார்கள்.
1996 இல் கட்டிய வீடு.
கவனிக்க வேண்டிய தருணம்தான்.

இது தவிர மாற்ற வேண்டிய  விளக்குகள். முழுவதும் பிரகாசமாக
எல் இ டி டேலைட் பல்புகளும்,
அலங்கார விளக்குகளும்.
 பூர்த்தியான பிறகு படம் எடுக்க வேண்டும்.

Image result for lAMPS LED

Friday, September 06, 2019

சியாட்டிலின் இரண்டாம் நாள், ரெயினியர் மலைச் சிகரம்.

நாங்கள்  மலையேறி ய இடம் 
மலை அடிவாரம் கிரிஸ்டல் மௌண்டன் 
மலைமேல் காப்பிக்கடை.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக   வாழ வேண்டும்.

சியாட்டிலின் இரண்டாம் நாள் 
 ரெயினியர் மலைச் சிகரம்.
Image result for road to mount rainier from Seattle
Add caption

 சிகாகோவிலிருந்து  சியாட்டில் வந்து சேரும்போது
மதியம் இரண்டு ஆகி விட்டது.
விமான நிலையத்திலிருந்து பெல்வியு மாரியாட் பான் வாய்
 வந்து  சேர இரண்டு மணிகள் ஆயின.

வரும் வழியில் 19 வருடங்களுக்கு முன் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு
மாப்பிள்ளை அழைத்துப் போனார்.
பையன் களுக்கு ஒரே உத்சாகம்.
அவர்கள் இருந்தபோது ஒரு பூகம்பமும் வந்திருந்தது.
அதிலிருந்து எப்படித் தப்பினார்கள் என்று
மகள் விளக்கிக் கொண்டு வந்தாள்.
இறைவன் எத்தனையோ கருணை காட்டி இருக்கிறான்.

இப்பொழுதும் மழைக்காலம் ஆரம்பித்து, கிழக்குக் கடற்கரையைத் தாக்கிக்
கொண்டிருக்கிறது. இந்த ஊரின் வித விதமான சீதோஷ்ணமே
வியப்புக் கொடுக்கக் கூடியது.
சியாட்டில் என்றால் எப்பொழுதும் மழை பெய்யும் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன்.நாங்கள் அங்கே இருந்த ஐந்து நாட்களும் ஒரே ஒரு மழை பெய்தது.
உலகம் முழுவதும் வானிலை  மாறி விட்டிருக்கிறது.

ஊர் சுற்றி விடுதி வந்து சேர்ந்ததும் ,விடுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் நடந்தோம்.

ஒரே கலகலப்பு.
எல்லா கணினி மென்பொருள் கம்பெனிகளும் இங்கே தான்
இருக்கின்றன.
அதில் வேலை செய்யும் வாலிப வாலிபிகள் தற்காலிகமாகத் தங்க
வைக்கப் படும் விடுதிகளில் இதுவும் ஒன்று.
காலையில் ஆறரை மணிக்கு அழகாக காலை உணவை முடித்துக் கொண்டு
விடுதி கொடுக்கும் வண்டியில் ஏறி, மைக்ரோசாஃப்டோ,  ஆமேசானோ,
ஆப்பிளோ, எல்லாவற்றிலும் வேலை செய்யும் முகங்களில் முழுவதும் உத்சாகம்.
அதில் முக்கால்வாசி இந்திய முகங்கள்.
அடுத்த நாள் நாங்கள் பார்க்க வேண்டிய இடம் எரிமலைகளில் ஒன்றான
ரெயினியர் மலை.
இப்பொழுது மௌனமாக இருக்கும் மலை பெருமூச்சு மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறது.
அதீத வெய்யிலினால் ஆங்காங்கே காட்டுத்தீ இருக்கும் செய்தி வந்ததும் கொஞ்சம்
தயக்கம் இருந்தது.
கடைசியில் வியூ பாயிண்ட் சிகரம் சென்று தொலைவிலிருந்து
ரெயினியரைப் பார்க்கலாம் என்று கிளம்பினோம்.
அலுக்காமல் சலிக்காமல் விரையும் வாகனங்கள்.
மரங்களுடே   கண்ணாமூச்சி ஆடிய சூரியன்.
Add caption
Cable cars or Gondolos to the top.




செல்லும் வழியில் முழுவதும் பசுமையான நெடு நெடுவென்று வளர்ந்த மரங்கள். எதோ  வனத்துல வந்து விட்டோமோ என்று திகைக்க வைத்தன . மாடுகள் மட்டும் இருந்திருந்தால் ஸ்விட்சர்லாந்து என்று நினைக்கலாம். வெய்யில்  நிறைய இருந்தாலும் மக்கள் கூட்டம் அதிகம் 
மலை முகட்டில்  நின்று  செலஃபி எடுக்கும் கும்பல். தடுப்பு சுவரின்  மீது விளையாடும்  கன்னியர் காளையர்.

Crystal mountain  என்று அழைக்கப் படும் இந்த மலையிலிருந்து சுற்றி இருக்கும் ஐந்து சிகரங்களைக்  காணலாம்.

சில்லென்று காற்று அடித்தாலும் சூரியனின் உஷ்ணமும் தெரிந்தது.
எங்களுக்கு ரெயினர் போகும் அவசரம் .
கீழே இறங்கி வந்ததும் காப்பி குடிக்க விரைந்தோம்.

 அங்கே  வந்த வானொலி அறிக்கை.  சில இடங்களில் காட்டுத்தீ 
அதிகமாக இருந்தததால் அனைவரும்  எச்சரிக்கையோடு இருக்கும் படி செய்தி வாசிக்கப் பட்டது. அப்பொழுதே மணி மூன்றாகி இருந்தது,.
ரெயினியர் போக வேண்டுமானால் இன்னும் ஒரு மணி நேரம்  ஆகும். திரும்பிப் போகும் நேரம் மூன்று மணி நேரக்  காட்டு வழி.


இருட்டில்  எங்கேயாவது அகப்பட்டுக் கொண்டால்  சிரமம்.
மான்கள்  ஏதாவது வண்டியில் அகப்பட்டால்   அதுவேற 
வேதனை .

அங்கிருந்து கிளம்பினாள் போதும் என்கிற  அவசரம் சிறு சலனமாகப் பரவியது.
அதை எல்லாம் மீறி ஆட்டம் பாட்டம் எல்லாம் அங்கே நடந்து கொண்டிருந்தன.
சுற்றி இருந்த மரங்களூடே   மினுமினுப்பாக பங்களாக்களில் 
விளக்குகளும் மெல்லிய இசையும்   ஆரம்பித்தன.
அவர்களுக்கு இந்த எச்சரிக்கை எல்லாம் பழக்கம் போல.

பேரனுக்கும் அவனுடைய வேலைக்கு அடுத்த நாள் 
போக வேண்டும்.  
அதனால், ரெயினியர் மலை அடிவாரத்துக்குப் போகும் 
எண்ணத்தைக் கைவிட்டு சியாட்டிலுக்குத் திரும்பும் சாலையில் புகுந்தோம்.
வழி நெடுக்கப் படங்கள் எடுத்துக் கொண்டே வந்தான் சின்னவன்.

அதில்தான் சில படங்களைப்  பதிவிட்டிருக்கிறேன்.
இத்துடன் இந்தப் பயணக்கட்டுரை இனிதே முடிந்தது.




.