Blog Archive

Wednesday, September 18, 2019

எதிர்பாராமல்நடந்தது 4

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

எதிர்பாராமல்  நடந்தது 
+++++++++++++++++++++++++++
மலர்கள் 
மலரும் நேரம்   மாலை நேரம்  மாதவனும் பிரசாதும் 
அத்தை இருக்கும் பங்களாவுக்கு வந்தார்கள்.

அன்று முழுவதும்  வெவ்வேறு  இடங்களுக்குச் சென்று தாவரங்களை 
பார்வையிட்டு, வெவ்வேறு விவரங்களை சேர்த்து எழுதி வைத்துக் கொண்டனர்.
பண்ணைக்காடு, சிறுமலை எல்லா இடங்களுக்கும் வண்டியில் சென்றுவந்தனர்.

நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றார் எண்ணமே அத்தை 
அழைப்பை மாதவனுக்கு நினைவூட்டியது.

கொஞ்சமே கொஞ்சம்  மாலா நினைவும் வந்தது என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

😉😉😉

இன்னும் இரண்டு நாட்களில்  சென்னை வேறு 
திரும்ப வேண்டும்.
அதற்கப்புறம் அகமதாபாத்  சென்று மேலாண்மைப் படிப்பாக எம்பிஏ 
இரண்டு வருடங்கள்.

பிறகு நல்ல வேளையில் அமர வேண்டும். பிறகுதான் 
மணவாழ்க்கை என்பதில் திடமாக இருந்தான்.

இன்று மாலா  அவன் மனதை அசைத்து விட்டாள் .

என்னடா மாதவா போறோமா இல்லையா.
பசி வயத்தைக் கிள்றதுடா.
என்ற பிரசாத்தின் குரல் கேட்டதும்  உடனே ஸ்வெட்டர், கழுத்துக்கு 

உறை   எல்லாம்  அணிந்து கொண்டு கிளம்பினார்கள்.

பத்து நிமிடங்களில் அத்தை சொன்ன பெரிய வீட்டின் முன் நின்றனர்.

உள்ளே இருந்து பாட்டு சத்தமும் சலங்கை ஒலி யும் கேட்டது.

தயங்கியபடியே  படியேறி  வாசலில்  நின்ற மாதவனின் கண்ணில் பட்டது மாலாவின் பாடலும் அபிநயமும் தான்.



அவளுடன்  அவளின் அத்தை மகளும் சேர்ந்து ஆடுவது 
இன்னும் சிறப்பாக இருந்தது.

நண்பர்கள் இருவருக்கும் திகைப்பு. உள்ளே போய் 
அது அவர்களுடைய நடனத்துக்குத் தடையாக 
இருக்கக் கூடாது என்று ஒதுங்கியே  நின்றார்கள்.

கடைக்கண்ணால் அவர்கள் வந்ததை பார்த்துவிட்ட மாலா 
அம்மாவிடம் ஜாடை காட்டினாள். 
புரிந்து கொண்டு வாசலை நோக்கி வந்த 
பொண்ணா இருவரையும் உள்ளே அழைத்து வந்து அமரச் செய்தாள் .
இதோ முடிந்துவிடும்.  ஆரஞ்சுச் சாறு கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றாள் 


நடனம் முடிந்ததும் அத்தைகள் கைதட்ட அவர்களுடன் இளைஞர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

ரொம்ப நன்றாக இருந்தது மாலா  , கோகிலா என்று 
மாதவனும் பிரசாத்தும் சொல்ல 
,நன்றி கூறிவிட்டு உள்ளே விரைந்துவிட்டார்கள் பெண்கள்.

அங்கே உட்கார்ந்திருந்த மற்ற இரு பெண்மணிகளும் இவர்களது படிப்பு, மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் 

என்றெல்லாம் விசாரிக்க  இருவரும் மிக மரியாதையுடன் தங்கள் 

எண்ணங்களை பரிமாறிக் கொண்டனர்.

இடையில் அங்கே மற்றவர்களும்  வர 
ஒரு இனிய மாலை ஆரம்பமானது.







10 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான மாலை.... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

ஜீவி said...

'காத்திருப்பான் கமலக் கண்ணன்' எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

யூ ட்யூப் காட்சி தொடர்பாக இந்தப் பதிவும் அந்நாளைய சினிமாக் காட்சிகளை நினைவுறுத்தின. சினிமாக்களிலும் இப்படித் தான். ஆண்கள் வீட்டின் உள்ளே நுழைந்தாலே ஹாலில் பெண்கள் இருந்தால் உடனே உள்ளே ஓடி விடுவார்கள்.

தொடர்கிறேன்.

மாதேவி said...

மாலை பொழுது இனிய பாடலும் நடனத்துடன் இளவட்டங்களுக்கு கண்ணுக்கு விருந்து :)) தான். அந்துடன் விருந்தும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும் மனமும் குளிர்ந்திருக்குமே:))

Geetha Sambasivam said...

இனிய மாலைப் பொழுது அனைவர் மனங்களையும் மகிழ்ச்சியால் நிறைக்கட்டும்.

ஸ்ரீராம். said...

ஆஹா...    பொருத்தமான பாட்டை பொருத்தமான இடத்தில் நுழைத்திருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் வெங்கட். நல்ல கருத்துக்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஜீவி சார்.
சினிமாவில் மட்டும் இல்லை. எங்கள் வீட்டிலும் இதுதான்
பழக்கம். அம்மா அப்பா அழைத்தால் தான் வெளியே வருவோம்.

பெரியவர்கள் வந்தால் அவர்களை சேவிக்கச் சொல்வார். தாத்தா பாட்டி என்றால் உட்கார சலுகை உண்டு.
வாலிபர்கள் வந்தால் அனுமதி கிடையாது.
இத்தனை கட்டுப்பாடும் 60 களில் உண்டு.
அத்தனையும் மீறி இவரைத் தேடி மணந்தேன்.ஹாஹா.

ஆமாம் அப்போது வந்த பாட்டுகள் எல்லாம்
மிக இனிமை.கருத்தும் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
கள்ளம் கபடில்லாத இளம் மனங்களில் உற்சாகத்துக்கு கேட்பானேன்.
பெரியவர்களைப் பொறுத்து எல்லாம் நடக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

கீதா மா.
கதையை தொடர்ந்து படிப்பதில் சந்தோஷம்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
நல்ல பாட்டைத் தேர்ந்தெடுத்த பின் தான்
கதை நடக்கும்.
இசை முக்கியம் இல்லையா. நன்றி மா.;];:)