வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
எதிர்பாராதது 3
மாதவனும் அவன் நண்பர்களும்
40 பையன்கள் தாவரவியல் மேஜர் எடுத்தவர்கள். இது ஒரு கல்விச் சுற்றுலாவாக
கொடைக்கானல் வர சந்தர்ப்பம் கிடைத்ததும்,
வந்துவிட்டார்கள். ரயிலில் வந்தவர்கள் கொடை ரோடு நிறுத்ததில்
இறங்கி கோடைக்கானல் வந்ததும்
யூத் ஹாஸ்டலில் இறங்கினார்கள்.
கிடைத்த உணவை உண்டு
அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களது ஆசிரியர் அழைத்துச் சென்றார்.
மாதவன் மனதில் பாட்டி கொடுத்த செய்தி ஒலித்துக் கொண்டிருந்தது.
அத்தை,மாலா எல்லொரும் அங்கே இருக்கிறார்கள். முடிந்தால் ஒரு எட்டு
பார்த்துவிட்டு வா.// சிறிய வயதிலிருந்தே மாலாவையும், அவளது தெளிவான பேச்சையும் ரசித்திருக்கிறான்.
ஏன் இந்த அத்தை மாலாவை முன் போல் அனுப்புவதில்லை
என்று ஆச்சர்யப் பட்டான்.
ஓ. அவளுக்கும் படிப்பு இருக்கிறது. கல்லூரிக்கு வேற சேர வேண்டும்.
அதுதான் காரணமாக் இருக்கும் என்று தீர்மானித்துக் கொண்டான்.
முன்பு ஆறு வருடங்களுக்கு முன்னால் எல்லோரும் இங்கே
வந்து இருந்த நினைவு.
விலாசம் தெரியாமல் எப்படி அங்கே போவது
என்று யோசித்துக் கொண்டே இருக்கும் போது
ஏரிக்கரை வந்துவிட்டது.
அங்கிருந்த ஓடங்கள், மரங்கள் எல்லாம் முன்பே பார்த்த நினைவு,.
ஆஹா இது ஜெமினி சாவித்திரி லேக்.
எல்லாப் படங்களிலும் இருவரும் ஓடம் ஓட்டாமல் இருக்க மாட்டார்கள். மாயா பஜார்,
பாசமலர், காத்திருந்த கண்கள் என்று வரிசையாக நினைவுக்கு
வந்தது. பாதிப்பாடல் நீரிலும் ,மீதிப்பாடல் செட்டிலும்
காட்சிகள் விரியும். நினைத்து சிரிப்புதான் வந்தது.
ஓடம் ஓட்டுபவருடன் இருவர் இருவராகப் போகலாம் என்று ஆசிரியர் சொன்னதும்
சிலர் தண்ணீருக்குப் பயந்து இறங்கவில்லை.
மாதவன் தன் நெருங்கிய நண்பன் பிரசாதைத் தேடினான்.
அப்போது கண்ணில் பட்டார்கள் அத்தையும் அவர்களது
குடும்பமும்.
அதோ மாலா. எப்படி வளர்ந்து விட்டாள்.
மாதவன் மனதில் ஏதோ புது உணர்ச்சி.
அதோ அவளும் பார்த்து விட்டாள். உடனே
முகம் நிறையப் புன்னகை.
அத்தைக்கு அதிர்ச்சியோ என்று சந்தேகித்தான்.
//நீ எங்கடா வந்த கொடைக்கானலுக்கு என்ற/ அத்தையைப் பார்த்து ஃபைனல்
வருடம் இல்லையா அத்தனை கல்வி சுற்றுலா
போக அனுமதி கிடைத்தது.
உடனே சேர்ந்து கொண்டேன்
மெட்ராஸ் வெய்யிலுக்கு இங்கே நல்ல குளிர் என்றான்.
//ஆமாம் நேற்றெல்லாம் இங்கே மழை. இதோ இவர்கள் என்
நாத்தனார் பெண்கள், கோகிலா, சந்த்ரா.
மாலா இதோ இருக்கிறாள்//
என்று சிரித்தபடி சொன்னாள் பொன்னா.
நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்கள் போட்டில் சென்று வந்துவிட்டீர்களா
என்றான்.
மாலாவை நேரில் பார்த்துப் பேச தயக்கமாக இருந்தது.
அவளே முன் வந்து//என்ன மாது ,ஆளே அடையாளம் தெரியவில்லை.
இப்படி உசரமாயிட்டயே// என்றதும் // ம்ம் நீயும் தான். இப்பவும்
தண்ணீரைக் கண்டால் பயமா உனக்கு// என்று கேட்டான்.
அதெல்லாம் அப்பவே போயாச்சு. நீச்சல் கற்றுக்கப்
போகிறேன் என்றாள் மாலா. சகோதரிகள் கைதட்டி சிரிக்க
அத்தையும் அவளது உறவினர்களும் நாம் பங்களோவிற்குப்
போகலாம்.
மாது, இதோ விலாசம். பக்கத்தில் தான் இருக்கிறது.
உன் நண்பனையும் அழைத்து வா. சாப்பிட்டு விட்டுப்
போகலாம் என்று அழைத்தாள்.
ஆசிரியரைக் கேட்டுக் கொண்டு வருகிறேன் அத்தை.
பை பை ஆல் என்று கை அசைத்த வண்ணம் பிரசாதுடன்
ஓடங்களின் கரைக்குப் போனான்.
படபடப்பு அடங்க நேரமானது.
ஏய் இன்னும் கொஞ்சம் நின்றிருக்கலாமேடா. அந்தப் பெண்களுடன் பேசி இருக்கலாமே
என்றவனை முறைத்தான்.
டேய் இவர்கள் உறவுப் பெண்கள்.
உன்னுடைய ப்ரெசிடென்சி கோமாளித்தனம் இங்கே காட்டாதே
என்ற மாதுவைப் பார்த்து சிரித்தான்.
முதுகில் தட்டிக் கொடுத்து புரிகிறது புரிகிறது.
/யார் யார் யார் அது யாரோ என்று
பாட ஆரம்பித்தவனை அடக்கி ஓடத்தில் ஏறினான்.
சற்றே தூரத்தில் சென்று கொண்டிருந்த கும்பலில்
மாலா மட்டும் தனித்துத் தெரிந்தாள். தொடரலாம்.

16 comments:
ஆஹா... வந்துருச்சு... ஆஹாஹான் ஓடி வந்தேன்... என்று பாடியிருக்கலாம் போலவே!
கதை இனிமையாகச் செல்கிறது... அருமை..
வாழ்க நலம்..
இந்த பகுதியை படித்ததும் முதல் இரண்டு பகுதிகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.
ஆஹா... கொடைக்கானலில் சந்தித்த விடார்கள்... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....
காலம்தான் எப்படி எப்படிச் செல்கிறது. தொடர்கிறேன். பெரும்பாலும் பின்னூட்டம் இடுவதில்லை (கதை முடிவு வரை)
'தனித்துத்தெரிந்தாள்"...ம்....
தொடரகாத்திருக்கிறோம்.
தெளிந்த நீரோடை போல் செல்கிறது கதை. அடுத்ததுக்குக் காத்திருக்கேன்.
அன்பு ஸ்ரீராம்,
இனிய மாலை வணக்கம்.
ஓ. அந்தப் பாட்டு போட்டு இருக்கலாம்.
நான் அறுபதுகளில் வந்த கோடைக்கானல் பாட்டுகளைத் தேடி இந்தப் பாடலைப் பதிவு செய்தேன் மா. நன்றி.
இனிய மாலை வணக்கம் அன்பு துரை.
கதையை ரசித்துப் படிப்பதற்கு மிக நன்றி மா.
வாழ்க வளமுடன்.
இனிய மாலை வணக்கம் அன்பு ஜோசஃப் ஜி.
கதையை ரசித்ததற்கு மிக நன்றி மா. அன்றாட வாழ்க்கைக் கதைதான்.
கூடவே கொஞ்சம் கற்பனை.
வாழ்க வளமுடன்.
அன்பு மாதேவி,
நீங்கள் எழுதினால் படிக்க அவ்வளவு ஆறுதலாக இருக்கும். வேலைகள் நிறைய இருந்தால் என்ன செய்வது.
நலமுடன் இருங்கள்.
அன்பு வெங்கட் இனிய மாலை வணக்கம்.
தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும் உங்களுக்கு என் நன்றி.
இன்னும் இரண்டு பாகத்துக்கு விஷயம் இருக்கிறது.
பார்க்கலாம்.வாழ்க நலமுடன்.
அன்பு முரளிமா,
இங்கேயும் அங்கேயுமாக அலைந்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் கயாப் பயணத்தைப் பற்றி நீங்கள் எழுத வேண்டும். நான் போகாவிட்டாலும்
சென்று வந்தவர்கள் அனுபவத்தைப் படிக்க ஆவல்.
எப்பொழுது வேண்டுமானாலும் படியுங்கள் நமக்குள் என்ன.
நன்றி மா.
அன்பு கீதாமா,
குழந்தையுடன் மகிழ்வாகச் செல்லும் நேரம். இடையில் இங்கேயும் வந்து படித்ததற்கு மிக நன்றி.
நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை மா. நன்றி.
கதை மிக அருமையாக போகிறது.
மாலா மாதவன் சந்திப்பு இனிமை.
பாடல் தேர்வுகள் எல்லாம் மிக அருமை.
அன்பு கோமதி
கால் வலி தேவலையா. எங்க அடிபட்டது.
நன்றி மா.
Post a Comment