வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11
++++++++++++++++++++++++++++++++++++++++++
சனிக்கிழமை ,வார இறுதி, மாணவர்கள் அறைகளில் தான் இருப்பார்கள் என்ற உறுதியோடு
கோகிலா, பெற்றோர் வெளியே சென்ற சமயம்,அஹமதாபாதுக்கு ட்ரங்க் கால் புக் செய்தாள்.
மாலவுக்கு உடல் எல்லாம் நடுங்கியது. ஆனந்தமா துக்கமா என்று படபடப்பாக இருந்தது.
ஒரு மணி நேரத்தில் லைன் கிடைத்தது. ஏதோ வேற்று கிரகத்திலிருந்து கேட்பது போல்
பிரசாதின் குரல் கேட்டது.
என்ன விஷயம் என்று கேட்டான். கோகிலா,நிலைமையைச் சொன்னதும்,
மாதவன் நேற்றே கிளம்பிப் போய்விட்டான்.
மாலாவும் நீயும் பயப்பட வேண்டாம் என்றான். மூன்று நிமிடங்கள் ஓவர்
என்றதும் வைத்துவிட்டார்கள்.
கோகிக்கி கையெல்லாம் வேர்த்திருந்தது.
மாலாவுக்கு உயிரெல்லாம் மெட்ராசுக்குப்
பறந்து விட்டது. பாட்டி பாட்டி என்று மனம் அரற்றியது.
ஆணாக இருப்பது எவ்வள்வு சௌகர்யம் பார்த்தியா.
விமானம் ஏறினால் பாட்டியைப் பார்க்க வந்துவிடலாம்.
நமக்கு எல்லாம் தனி ரூல். என்று பொருமினாள்.
அதை எல்லாம் யோசனை பண்ணாதே. இப்போது
அம்மாவுக்கு ஃபோன் போடு,
விவரம் கேட்டுக்கோ என்றாள்.
நல்ல தோழிடி நீ என்று அவளை அணைத்துக் கொண்டு
தொலைபேசி அருகே செல்லவும்,அத்தை அத்திம்பேரும் வந்து விட்டார்கள்.
மெட்ராசுக்கு போன் செய்கிறொம்மா என்றாள்
கோகிலா.
மாலா முகத்தைப் பார்த்த இருவரும் சம்மதித்தார்கள்.
அதற்குள். மெட்ராசிலிருந்து ட்ரங்க் கால் வருவதாக
தொலைபேசி கூவியது.
பயத்தில் உறைந்தாள் மாலா. அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டாள் அத்தை.
பொன்னா தான் பேசினாள். பாட்டி நலமாக இருப்பதாகவும் , மாலா சனிக்கிழமை புறப்பட்டு வரும்படியும்,திங்கள் திரும்பி விடலாம் என்றும் சொன்னாள்.
அத்தையிடம் விஷயத்தைக் கிரஹித்துக் கொண்ட மாலா
பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.
சாயந்திரம் கிளம்பினால் காலை அங்கே இருக்கலாம்.
கவலைப் படாதேமா என்று ஆதரவு சொன்னாள்.
அத்தைக்கும் ,மாலாவுக்கும் முதல் வகுப்பு டிக்கெட்டுக்கு
தொலைபேசினார் அத்திம்பேர்.
அருகிலிருந்த பிள்ளையார் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விட்டுக் கிளம்பினார்கள் இருவரும்.
அதிகாலை, மெட்றாஸ் வந்த ரயிலுக்காக காத்திருந்தான் மாதவன்.
பாட்டியின் பலவீன நிலை அவனை வருத்தியது. அப்பாவோடு பேசியதில் ஒருவாறு புரிந்து கொண்டான்
ரயிலை விட்டு இறங்கிய மாலாவை பார்த்து வருத்தம் மேலும் கூடியது.
அத்தைக்கு வணக்கம் சொல்லிவிட்டு அழுத்த கண்களுடன் இருந்த மாலாவை சமாதானப் படுத்தினான்.
இப்படி வேதனையோடு பாட்டியைப் பார்க்கக் கூடாது. எப்பவும் போலாகி கலகலப்பாக இரு என்றான். சரி என்று தலை ஆட்டினாள் அவள்.
வீடு சென்று, தயாராகி மருத்துவ மனைக்கு வந்தார்கள் .
பாட்டிக்குத் தெளிவு வந்திருந்தாலும் பலனாட்கள் வாழ்ந்து களைத்தது
போல் காணப்பட்டாள்.
மாது சொன்னதைக் கடைப் பிடித்து பாட்டியின் கைகளைப்
பிடித்துக் கொண்ட மாலா,
"இங்கே வந்து ஜாலியா இருக்கலாம்னு நினைச்சியா.
ஒழுங்கா முறையா எழுந்து என்னோட மதுரைக்கு வா'"
என்று முகம் மலரச் சொன்னாள்.
பாட்டியின் முகத்தில் முதல் தடவையாகப் புன்னகை.
அவள் பின்னால் நின்ற மாதுவைப் பார்த்ததும் இன்னும் சந்தோஷம்.
"கண்ணா இவர்களைச் சேர்த்துவை.
எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்" என்று நினைத்தவள் கண்களில்
மீண்டும் நீர்.
அந்த சமயம் பார்த்து அங்கு வந்த டாக்டர் ,ஓஹோ!!!!!!!!!!
இவர்கள் தான் பாட்டிம்மாவுக்கு மருந்தா.
இனி கவலை இல்லை." பசங்களா வெளியே இருங்கள்
பாட்டிக்கு ரத்த அழுத்தம் ,நாடித்துடிப்பு எல்லாம்
பார்க்கணும்'' என்று வெளியேற்றினார்.
அங்கிருந்த பல மருத்துவ சாதனங்களைப் பார்த் து பயந்தாள்
மாலா.
அறையை விட்டு வந்ததும் அம்மாவும் மாமி,மாமா அப்பா அனைவரையும்
பார்த்ததும் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.
பயமா இருக்குமா. பாட்டிக்கு என்ன என்று கேட்டாள்.
மாதவன் ,என்னோடு வா மாலா இங்கிருக்கும் கிருஷ்ணர் கோவிலுக்குப் போகலாம்
எல்லாம் சரியாகும் என்றான்.
அம்மாவைப் பார்த்த மாலா,அவனோடு கிளம்பினாள்.
கிருஷ்ணர் கோவில் சின்னக் கோவில்.
அத்லிருந்த பட்டாச்சார், மாதுவை அன்புடன் வரவேற்றார்.
அட இது தான் பாட்டி சொன்ன உன் வருங்கால மனைவியா.
பிரமாத ஜோடிப் பொருத்தம் போ.""
பாட்டி பேரில அர்ச்சனை செய்யணும் என்றான் மாதவன்.
திடீரென்று தன்னைச் சூழ்ந்த மகிழ்ச்சியைக் கட்டுப் படுத்த முடியவில்லை
மாலாவால்.
"ஆரோக்கியமா இருப்பா பாட்டி, இந்தா ,என்று கிருஷ்ணர் மேலிருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். இங்கேயே மாலை மாற்றலாம்
என்று எனக்குத் தோன்றுகிறது. கண்ணன் கூப்பிடுவான்
அப்ப வாருங்கள்" என்று மாலாவின் கையிலும் மல்லிகைச் செண்டை கொடுத்தார்.
இருவர் மனபாரமும் இறங்கிக் கண்களில் நேசம் நிறைந்தது.
ம்ம். மாப்பிள்ளை மாதிரியே இருக்கே" என்று வேடிக்கை செய்தாள்
மாலா. ""நீ மத்திரம் என்ன. சிவப்பு ரோஜா மாதிரித்தான் இருக்கே என்று மாலையை அவள் கையில் கொடுத்தான் மாதவன்.""
இனி அடுத்த பாகத்தில் இவர்களை இணைத்து விடலாம். சரியா.

19 comments:
மிகவும் இனிமையாகச் செல்கிறது கதை...
அடுத்த பாகத்தில் கல்யாண விருந்தா!?...
வாழ்க நலம்..
மிக இனிமையாகவும் அருமையாகவும் செல்கிறது கதை/நிகழ்வு. கடைசியில் மாலாவும், மாதவனும் ஒரு வழியாகச் சேர்ந்து விடுவார்கள் என்று தெரிந்து சந்தோஷமாகவும் இருக்கிறது.
நன்றி துரை செலவராஜு. இனி நலம் நோக்கிக் போகலாம்.
உண்மைதான் கீதாமா. வைதேகியையும் பொன்னாவையும் சமாதானப் படுத்த நாட்களாகின. ஆனால் நடந்தே விட்டது திருமணம்.
என்ன ஒரு ஆளுமை மாதவனிடம்.... சட்டென மாதவன் எடுத்த முடிவில் மற்றவர்களால் கூட ஒன்றும் சொல்ல முடியவில்லை. இரண்டு பாடல்கள் அப்புறம் கேட்கவேண்டும். என் வாழ்வில் மட்டும் தெரிந்த பாடல். உடனே கேட்டேன்
விரைவில் இணைந்திடட்டும் இவர்கள் வாழ்க வளமுடன்...
இனிய காலை வணக்கம் ஶ்ரீராம். ஆமாம் மது அந்த மாதிரி பையன் தான். தன் வாழ்ககையைத் தானே
தீர்மானித்து விட்டான். அதை சுயநலமாக நடத்தாமால். மற்றவரகளையும் கலந்து கொள்கிறான்.
அவ்வப்போதுதான் வாசிக்கிறேன்.ரசிக்கும்படியான நடை.
பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்
இனிமையான பாடல்கள்.இனிமையான முடிவுக்கு கட்டியம் கூறுகிறது.
பாட்டிக்கு மாலா, மாதவன் இருவரையும் பார்த்தவுடன் தெம்பு வந்து விட்டது.
புது பாதையில் மகிழ்ச்சியாக உலா வரட்டும் மாலா, மாதவன்.
மாலா- மாதவனுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் நிகழ்வுகளை நேரேட் செய்யும் விதம் பிடித்திருக்கிறது.
வணக்கம் திரு. முனைவர் ஐயா.,
தங்கள் கருத்துக்க் மிக நன்றி.
அன்பு தேவகோட்டைஜி,
அன்பினால் இணைந்த உள்ளங்கள் என்றும் நலமாக இருக்க வேண்டும்.
அன்பு கோமதி மா.
இனிய மணவாழ்வு அமைவதற்கு பல சிரமங்கள்
படவேண்டி இருந்தது இந்த தம்பதிக்கு.
பெரியவர்கள் சம்மதித்தது பெரிய விஷயம்.
தைரியமான முடிவை ஏற்பதும் ,அதுவுமிந்தச் சிக்கலான
பிரச்சினையில் சிரமம்தான். பாடல்களை ரசிப்பதற்காகவே இன்னும் பழிய பாடல்களைச்
ஸேர்க்கலாமா:)
சிறுவயதிலிருந்தே கதை சொல்ல மிகவும் பிடிக்கும். வணக்கம் ஜீவி சார்.
இது எப்படி திரிந்தது என்றால், நான் பேசுவதெல்லாம் உண்மை என்று ஒரு காலத்தில் சத்தியம் செய்ய வேண்டி வந்தது குழந்தைகளிடம்:)
அம்மா சொல்றதை அப்படியே எடுத்துக்கக் கூடாதுடா.
கண்ணு ,காது எல்லாம் வச்சிருப்பாள் என்பான் மகன்:)
நன்றி ஜீவி சார்.
ஆகா....ஜோடி கோவில் கிளம்பி விட்டார்கள்.
ஆமாம் மாதேவி , அவர்களைப் பொறுத்த வரையில் அதுமனதில் thiருமணத்தை நிச்சயம் கொண்ட நிகழ்ச்சி.. நன்றி மா.
ஆஹா... சுபமாகவே முடியும் என்று தெரிகிறது இப்பகுதி படித்தபோது.
மிகவும் இரசனையோடு படிக்க முடிகிறது இந்த நிகழ்வுகளை இப்போது - அப்போது அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என நினைவுடன்!
தொடர்கிறேன்.
அன்பு வெங்கட் ,
எத்தனை அழகாகப் பின்னூட்டம் இடுகிறீர்கள். படித்து கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.
சுபமாக முடிக்கவே எனக்கு விருப்பம்.
Post a Comment