வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
பொறுமை என்னும் நகை.
+++++++++++++++++++++++++++
ஏம்மா எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டே
இருந்தே. உனக்கு அப்பா செய்யறதெல்லாம் தப்பா
தெரியவில்லையா.
என்ன பெரிய தியாகின்னு மனசில நினைப்போ.
.
எத்தனையோ முன்னுக்கு வந்திருக்க வேண்டிய குடும்பம்
ஒரு மனுஷனின் அசட்டுத்தனத்தால எல்லாருக்கும் ஏளனமாகப்
போச்சே.
இந்தப் பாடல் வந்த காலமும் இந்த சம்பவங்கள் நடக்கும் காலமும் ஒன்று.
அதாவது 1955.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
பொறுமை என்னும் நகை.
+++++++++++++++++++++++++++
ஏம்மா எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டே
இருந்தே. உனக்கு அப்பா செய்யறதெல்லாம் தப்பா
தெரியவில்லையா.
என்ன பெரிய தியாகின்னு மனசில நினைப்போ.
.
எத்தனையோ முன்னுக்கு வந்திருக்க வேண்டிய குடும்பம்
ஒரு மனுஷனின் அசட்டுத்தனத்தால எல்லாருக்கும் ஏளனமாகப்
போச்சே.
இந்தப் பாடல் வந்த காலமும் இந்த சம்பவங்கள் நடக்கும் காலமும் ஒன்று.
அதாவது 1955.
கும்பகோணம் டவுனை ஒட்டிய கிராமம் அது.
அதில் வசதியான குடும்பம் தான் அது.
வீடும் செழுமையும் வெளியே தெரியும்படி
வீட்டின் அமைப்பு இருக்கும்.
17 வயது பெண்ணும் 13 வயது மகனும்
உப்பிலிக்கும் மைதிலிக்கும்.
அந்தக்காலத்திலியே சட்டம் படித்து, கும்பகோணம் கோர்ட்டுக்குப் போய் வருபவர்
உப்பிலி.
அவரது பெற்றோர் வேறு ஒரு கிராமத்தில்
நிலபுலன்களைக்கவனித்து வந்தனர்.
குழந்தைகளின் படிப்புக்காகக் கும்பகோணத்துப் பக்கம் வந்தார்கள்.
நிலங்களில் பாடுபட்டு வழக்கப் பட்டவருக்கு
வக்கீல் தொழில் பிடிபடவில்லை.
தன்னை நம்பி வந்த விவசாயிகளிடம் அருமையாக
நடந்து கொண்டு ,அவர்களுக்காக வாதாடி ,
வெற்றி தேடிக் கொடுத்தாலும்
அவர்களிடம் பணம் வசூல் செய்ய மனமாகவில்லை.
சேர்த்து வைத்திருக்கும் சொத்து போதும்.
அரிசி வந்துவிடுகிறது.
காய்கறிகளுக்கும் குறைவில்லை.
மைதிலியின் தகப்பனாரும் அவர் பங்குக்கு
பெண்வீட்டில் எண்ணெய் முதலான தேவையான
பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்து விடுவார்.
17 வயது மகள் வாரிஜாவின் அதிகப்படியான
துடுக்குப் பேச்சுக்குக் காரணம்
அவளது தோழியின் தந்தையின் தந்தைக்கு
அதே கும்பகோணம் கச்சேரியில் கிடைத்த சப் ஜட்ஜ்
பதவிதான். கண்மண் தெரியாத செல்லம் அந்தப் பெண்ணைப் பேச வைத்தது. மைதிலி எப்படி கையாளுகிறாள் என்பதை..........
மீண்டும் பார்க்கலாம்.