Blog Archive

Wednesday, July 31, 2019

பொறுமை என்னும் நகை.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக   வாழ வேண்டும் .

பொறுமை என்னும் நகை.
+++++++++++++++++++++++++++
ஏம்மா எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டே
இருந்தே. உனக்கு அப்பா செய்யறதெல்லாம் தப்பா
தெரியவில்லையா.
என்ன பெரிய தியாகின்னு மனசில நினைப்போ.

.

எத்தனையோ முன்னுக்கு வந்திருக்க வேண்டிய குடும்பம்
ஒரு மனுஷனின் அசட்டுத்தனத்தால எல்லாருக்கும் ஏளனமாகப்
போச்சே.



இந்தப் பாடல் வந்த காலமும்  இந்த சம்பவங்கள் நடக்கும் காலமும் ஒன்று.
அதாவது 1955.

கும்பகோணம் டவுனை ஒட்டிய கிராமம் அது.
அதில் வசதியான குடும்பம் தான் அது.
வீடும் செழுமையும் வெளியே தெரியும்படி
வீட்டின் அமைப்பு இருக்கும்.

17 வயது பெண்ணும் 13 வயது மகனும் 
உப்பிலிக்கும் மைதிலிக்கும்.
அந்தக்காலத்திலியே  சட்டம் படித்து, கும்பகோணம் கோர்ட்டுக்குப் போய் வருபவர்
உப்பிலி.
அவரது பெற்றோர் வேறு ஒரு கிராமத்தில்
நிலபுலன்களைக்கவனித்து வந்தனர்.

குழந்தைகளின் படிப்புக்காகக் கும்பகோணத்துப் பக்கம் வந்தார்கள்.

நிலங்களில் பாடுபட்டு வழக்கப் பட்டவருக்கு
வக்கீல் தொழில் பிடிபடவில்லை.
தன்னை நம்பி வந்த விவசாயிகளிடம் அருமையாக 
நடந்து கொண்டு ,அவர்களுக்காக வாதாடி , 
வெற்றி தேடிக் கொடுத்தாலும்
அவர்களிடம் பணம் வசூல் செய்ய மனமாகவில்லை.

சேர்த்து வைத்திருக்கும் சொத்து போதும்.
அரிசி வந்துவிடுகிறது.
காய்கறிகளுக்கும் குறைவில்லை.
மைதிலியின் தகப்பனாரும் அவர் பங்குக்கு
பெண்வீட்டில் எண்ணெய் முதலான தேவையான
பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்து விடுவார்.

17 வயது மகள் வாரிஜாவின் அதிகப்படியான 
துடுக்குப் பேச்சுக்குக் காரணம்
அவளது தோழியின் தந்தையின் தந்தைக்கு
அதே கும்பகோணம் கச்சேரியில் கிடைத்த சப் ஜட்ஜ்
பதவிதான். கண்மண் தெரியாத செல்லம்  அந்தப் பெண்ணைப் பேச வைத்தது.  மைதிலி எப்படி கையாளுகிறாள்  என்பதை.......... 
மீண்டும் பார்க்கலாம்.



16 comments:

கோமதி அரசு said...

பாடல்கள் இனிமை. பிடித்த பாடல்கள்.
கதை மிக அழகாய் ஆரம்பித்து விட்டது.

வாரிஜாவை பற்றி கதை நகர போகிறதா?

மைதிலி எப்படி கையாளுகிறாள் என்பதை அறிய தொடர்கிறேன்.

KILLERGEE Devakottai said...

மைதிலியைப்பற்றி அறிய தொடர்கிறேன் அம்மா

நெல்லைத்தமிழன் said...

//என்ன பெரிய தியாகின்னு மனசில நினைப்போ.//

சிறுமிக்கு என்ன தெரியும்? அப்பாவின் அனுபவம் அவரை ஆன்மீகத்தில் எங்கேயோ உயரக் கொண்டு செல்வதை?

என்ன ஒரு நல்ல மனம் அவருக்கு....உதவி செய்துவிட்டுப் பணம் வாங்குவதா என்ற மனம், அதிலும் எளியவர்களிடம்.

Geetha Sambasivam said...

அந்தக்காலத்து "தேவன்" கதைகளைப் படிக்கிற மாதிரி இருக்கு. இது புத்தம்புதிய கதை போல! மேலே தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கேன்.

மாதேவி said...

அன்றைய கால நல்லமனிதர்கள். உதவும் எண்ணம் படைத்தவர்கள்.

தொடர்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரசியம்... தொடர்கிறேன்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
பதின்ம வயதுக்கு உண்டான விரைப்பு,
முரட்டுத்தனம் இந்தப் பெண்ணிடம் எப்படித்தான் வந்ததோ
என்று வியக்கும்படி இருந்தது அவள் நடவடிக்கை.
ஆனால் அம்மா பொறுமைசாலி.
வழிக்குக் கொண்டு வந்து விடுவாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,
என்னுடைய சித்தப்பா பெண், வெடுக்குச் சொல் ராணி.
அப்போதெல்லாம் 17 வயது சின்ன வயதில்லை.

அவள் பேசியது தவறே.
அவளை உணரவைப்பது அன்னையின் திறமை.
நல்ல மனிதர்கள் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம்.
இவருக்கும் உயர்வு உண்டு. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, இப்பொழுது பழைய மாவை அரைப்பதில்லை.ஹாஹ்ஹா.

அம்மாடி எத்தனை உயரத்துக்கு என்னைத் தூக்கி வைக்கிறீர்கள். தேவன் சார், லக்ஷ்மி, எல்லோருடைய பாதிப்பும் என் எழுத்திலும் இருக்கும்.

வாரிஜா திருந்தி எல்லோரையும் நிம்மதி அடையச் செய்யட்டும்.
நன்றி மா/

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, உண்மைதான். நம் தலைமுறை வரை பரவாயில்லை.
இனியும் நன்றாக இருப்பார்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். சோதனைகள் வருவதே
அடுத்து வரப்போகும் நன்மைக்குக் கட்டியம் கூறத்தான்.
நன்றி ராஜா.

வெங்கட் நாகராஜ் said...

மேலும் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளத் தொடர்கிறேன் மா...

ஔவையார் பாடலைக் கேட்டுக் கொண்டே படித்தேன். ஹிந்தி பாடலையும் கேட்டேன். நல்ல பாடல்கள்.

தொடர்கிறேன் மா.

வெங்கட் நாகராஜ் said...

அட இரண்டாவது பாடலும் தமிழ் தானா... நடிகர் பார்க்கும்போது ஹிந்தி பாடல் எனத் தோன்றியது.

இந்தப் பாடல் முதல் முறை கேட்பதாகத் தோன்றுகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

அட! புதுசா கதையா வல்லிம்மா...ஹப்பா மூன்று பாகத்தையும் தொடர்ந்து படித்துவிடலாம்...ஹா ஹா

முதல் பாகமே சூப்பராக இருக்கிறது. உங்கள் எழுத்து நடை அருமை அம்மா...வாரிஜா அழகான பெயர்.

பொருத்தமான பாடல்கள். நெட் விட்டு விட்டு வருவதால் பாடலும் அப்படித்தான் கேட்க முடிந்தது...

உப்பிலி என்ன உயர்ந்த மனம் படைத்தவராக இருக்கிறார். நல்ல மனது.

இதோ அடுத்த பகுதிக்குப் போகிறேன்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
ரசித்துக் கருத்து சொல்லி இருக்கிறீர்கள்.
நன்றி மா.
ஆமாம் இரண்டாம் பாடல் பாட்டாளியின் சபதம்
என்ற படத்தில் வந்தது.
அதன் இந்தி மூலம் மறந்து விட்டது.
மாங்க் கி சாத் துமாரா மைனே மாங்க் லியா சன்சார்
என்ற பாடல்.
மிக இனிமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு கீதா மா.
ஆமாம் புதுக்கதை தான்.
உப்பிலி மைதிலி குடும்பத்தில் வாரிஜாவே
உயர்ந்த படிப்பு படித்தாள்.
குணமும் மாறியது.
கதையை இத்தனை அழகாக விமர்சிக்கும் உங்கள்
வார்த்தை அழகு ரசிக்க வைக்கிறது மா.