Blog Archive

Sunday, July 07, 2019

அங்கும் இங்கும்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழவேண்டும் .
அங்கும் இங்கும்





மமதா  ஹிந்திப்  படத்தின்  ஆரம்பப் பாடல். அஷோக்குமாரின்  கெளரவம் , கதாநாயகி சுசித்ரா சென்னின் இழைத்த நடிப்பு மிக  அருமையாக இருக்கும்.



காவியத்தலைவியின்  நாயக நாயகிகள்.

 மம்தா முதலில் வந்தது. வண்ணப்படம். அஷோக் குமார ,சுசித்ரா சென் ஜோடி
அருமையாக இருந்தாலும் என் உணர்வுகளைத் தொடவில்லை.
அஷோக் குமாரின் சோகத்தைப் புரிந்து கொண்ட அளவு,
கதா நாயகியின் முகbhaவங்கள் என்னை அடையவில்லை.
இதே ஜோடி வயதான கோலத்தில் இன்னும் அருமையாக
நடித்திருந்தார்கள்.

தேவ்யானியின் மகளாக சுசித்ரா சென்னின் நடிப்புக் கொஞ்சம்
துடிப்புடன் இருந்தது.தர்மேந்திராவின்  பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.
பாடல்கள் வெற்றி பெற்றன.

இதே பின்னால் காவியத்தலைவியாக வந்த போது
கறுப்பு வெள்ளையாக வெளி வந்தது.

கொஞ்சம் மிகையான மேக்கப்புடன் இருந்த முதிய சௌக்காரை
இளைய சௌக்கார் வென்று விட்டார் தோற்றத்தில்.
ஜெமினியும் சௌக்காரும் வரும் காட்சிகள் மிக அன்னியோன்யமாகப்
படமாகி இருந்தன.

இது போலப் புரிதல், பாலச்சந்தரால் தான் மேடைக்குக் கொண்டு வரமுடியும்.
அதுவும் அந்தக் கடைசிக் காட்சியில் அம்மாவுக்காக வாதாடும்
 பெண்ணாக ஜானகி உணர்ச்சிகளைக்
கொட்டி நடித்திருப்பார்.
அம்மா அமைதியாக முகபாவங்களைக் கட்டுப் பாட்டுடன்
வெளிப்படுத்துவார். தாயின் கர்வத்தை அந்தக் காட்சிகளில் பார்க்க முடியும்.
வித்தியாசமான கதையை கவனமாக இரு டைரக்டர்களுமே
கையாண்டிருக்கிறார்கள்.
எனக்குத் தமிழ் தான் மிகவும் பிடித்தது.

12 comments:

துரை செல்வராஜூ said...

கையோடு கை சேர்க்கும் காலங்களே..

எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
அடிக்கடி கேட்பதில் மகிழ்ச்சி...

இனிய பாடலைக் கேட்டதில் மீண்டும் மகிழ்ச்சி...

KILLERGEE Devakottai said...

முன்பு கருத்துரை போடவில்லையோ... ரசித்தேன் அம்மா.

ஸ்ரீராம். said...

துரை ஸார் சொல்வது போல அந்தப் பாடலும், இன்னொருபாடலும் சுசீலாம்மாவின் குரலில் இனிமை. சுசித்ரா சென்தானே ஆந்தியிலும் ஹீரோயின்?

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
மிக இனிமையான பாடல். மனம் லேசாகும் கேட்க மகிழும்.
இந்திப்பாடல் சோகமாகப் பாடுவது போல தோன்றும்.

வல்லிசிம்ஹன் said...

இப்போதுதான் இந்தப் படங்களைப் பார்த்தேன்.
அதனால் பதிந்தேன் மா. அன்பு தேவகோட்டைஜி
மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.
ஒரே போலத் தோற்றம் இரண்டு படங்களிலும்.
ஆந்தியில் சஞ்சீவ் குமார் நல்ல சப்போர்ட்.
இதில் அஷோக் குமார்.
நம் அளவு உணர்ச்சிகள் காட்ட மாட்டார்களோ என்று தோன்றும்.
I may be wrong.

Geetha Sambasivam said...

தமிழ், இந்தி எல்லாப் படங்களும் பார்த்திருக்கேன். எனக்கு சுசித்ரா சென் தான் மிகப் பிடித்தது. ஆந்தி படம் கிளாசிக்! அதைப் பலமுறை பார்த்திருக்கேன். எவருமே தமிழர்கள் மாதிரி உணர்ச்சிகளைக்காட்ட மாட்டார்கள் தான். இங்கே கொஞ்சம் எதற்கெடுத்தாலும் அதிகம் என என்னோட கருத்து. கண் பார்வையிலும், முக பாவத்திலுமே உணர்வுகளைக் காட்டிவிடுவார்கள் சஞ்சீவ் குமாரும், அசோக் குமார் போன்ற நடிகர்களும்.

கோமதி அரசு said...

இரண்டு பாடலும் மிக இனிமை.
அங்கு இங்கும் நன்றாக இருக்கிறது.
இப்படி நீங்கள் தொடரலாம் அக்கா.
ரசிக்க, கேட்க நாங்கள் இருக்கிறோம்.

கையோடு பாடல் மிகவும் பிடிக்கும்.
பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா,
நீங்கள் சொல்வது உண்மைதான். இந்தியில் வண்ணம் தூக்கலாகிக் கொஞ்சம் கெடுத்துவிடும். சுசித்ரா சென்,உத்தம் குமார் நல்ல ஜோடியாகப் பல படங்கள்.
அவர்கள் மிகத்திறமையான நடிகை என்பதில் சந்தேகம் இல்லை.

நம் தமிழ்ப் படங்களை இப்போது பார்க்கும் போது ஏன் இவ்வளவு மிகையான நடிப்பு என்று தோன்றத்தான் செய்கிறது.



வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
இசை நம்மை எப்போதும் தெளிவுரச் செய்வதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
ஸ்ரீராம், நீங்கள்,நான் ,துரை செல்வராஜு என்று இன்னும் பலர், ஏன் நம் தேவகோட்டைஜி கூடப்
பழைய பாடல்களில் நல்ல பழக்கம் உள்ளவர்கள் தான்.எனக்கே அவர்களைப் பார்த்து பெருமையாக இருக்கிறது.
இது போல ,இன்னும் யோசித்துப் பதிகிறேன் மா. மிக மிக நன்றி.

மாதேவி said...

ஹிந்தி பார்ததில்லை. தமிழ் பார்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.