Friday, November 06, 2020
Thursday, November 05, 2020
Wednesday, November 04, 2020
வெற்றி மீது வெற்றி
வல்லிசிம்ஹன்
ராமன் அரசாண்டால் பெண்கள் நிம்மதி.
ராவணன் ஆண்டால் சொல்லமலேயே புரியும்.
நம்மூர் ராவணனாவது வீணை வாசித்து
சிவனை வணங்கி , ஒரு நிமிடம் மயங்கித் தவறு இழைத்தான்.
சில இடங்களில் சில மனைவிகள் என்று
ஆடியவர்களையும் நமக்குத் தெரியும்.
பேச்சு மொழிகளால் வசியம் செய்தவர்கள் சிலர்.
உண்மை வார்த்தைகளால் கவர்ந்த காமராஜ் ,கக்கன் சிலர்.
ஆனால் நேர்மைக்கும் ஒரு பத்தினி,ஒரு சொல் என்ற
வார்த்தைக்கும் ஆளைத் தேடினால் இப்போது
கிடைப்பது சிரமம்.
தோற்றத்தையும் ஆளுமையையும் கொண்டு
மக்களை வென்றவரையும் தெரியும்.
நல்ல மனம் கொண்டிருந்தாலும் தோற்றவரையும் தெரியும்.
தீமை இழைத்தவரை விதி எப்படித் தோற்கடித்தது என்றும்
பார்த்திருக்கிறோம்.
வினாச காலம் வந்தால் மக்களுக்கும் விபரீத புத்தி
வரும் என்றும் பார்த்திருக்கிறோம்.
வலது கையை உயர்த்திப் பிரமாணம் செய்து
இடது கையால் கையெழுத்துப் போட்டு
தன் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டவர்களும் உண்டு.
உலகம் முழுவதும் பொய்மை
பெருகினாலும் மனம் பிறழாமல் நம் கடமையைச் செய்வோம்.
Monday, November 02, 2020
மஹாலயத்தில் தாத்தாவும் பாட்டியும் 2004
Vallisimhan
சேஷிப் பாட்டியும், பத்து தாத்தாவும் காய்கறி,சேப்பக் கிழங்கு
வகைகளை பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.
மஹா பரணிக்கு பக்ஷ சிராத்தம் செய்வது அவர்களுக்கு வழக்கமாகி இருந்தது.
தாத்தாவுக்கு 80 வயதாகிறது. 40 வருடங்களாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தார்.
பாட்டிக்கும் அலுப்பு என்பதே கிடையாது.
காலையில் எழுந்திருக்கும் போதே
பெரியவர்களெல்லாம் வீட்டில் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே எழுந்திருப்பார்.
கணகளைக் கசக்கைக்
கைகளைவிரித்துக் கராக்ரதே வசதே லக்ஷ்மி என்று மற்ற ஸ்லோகங்களையும்
சொல்லியே எழுந்திருந்து, கைகால்களைச் சுத்தம் செய்து குளித்து விட்டு அகண்ட விளைக்கை ஏற்றிவிடுவார்.
கணவருக்குக் காலையில் கஞ்சி குடிக்கும் வழக்கம் என்பதால்
அவரும் முறைப்படி சந்தியா வந்தனம் செய்தபிறகு
கஞ்சி கொடுப்பார்.
கிராமத்து வாழ்க்கை மெதுவே ஆரம்பிக்கும்.
அன்றைக்கு வேண்டிய பண்டங்கள் தயார்.
திதிக்கு ஏற்பாடு செய்த வைதிகர்கள் வந்து குளித்து
புது வேட்டிகள் உடுத்தி தயார் ஆவதற்குள்
பாட்டி க்ளிப்தமாக சிராத்த சமையலை முடித்து விடுவார்.
பரிமாறுவதற்கு மட்டும் பக்கத்து வீட்டு
சாலாட்சியை அழைத்துக் கொள்வாள்.
மஹாலய தர்ப்பணம் முடிந்து வந்தவர்கள் கிளம்பிய பிறகே
தன் உணவை எடுத்துக் கொள்வாள்.
தங்களுக்கு வேண்டும் பட்சண பலகாரம் போக மீதியை
சாலாட்சியின் கையில் கொடுத்துவிடுவாள்.
இருவருக்கும் இரவு பட்சணமே பலகாரம் என்பதால், நிம்மதியாகக்
காலை நீட்டி உட்கார்ந்து மாமியார் குண நலன் களையும், மாமனார்
கோபத்தையும் அலசிக் கொண்டிருந்தார்கள்.
என்னவோ அண்ணா, அவர்கள் கொடுத்த புண்ணியம் நம் குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள்.
நமக்குப் பிறகு அவர்கள் விடாமல் இந்தப் புண்ணிய காரியத்தை தொடர வேண்டும்.
ஆமாம்மா. செய்வார்கள். அவர்கள் ஸந்ததியின் நன்மைக்காக மட்டுமில்லாமல்
பொது நலனாக தான தர்மங்களையும் செய்ய வேண்டும் என்பதையும்
நாம் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
இன்று பூர்த்தியான மஹாபரணி ஸ்ராத்தம் நல்ல விதமாக நடந்ததும் அவர்கள் கருணை.
இதே போல அம்மாவின் நினைவு நாள் அடுத்த மாதம் வருகிறது.
சுமங்கலிப் பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.
உன் நாத்தனார்க்கு அழகாப் புடவை வாங்கிடலாம். ஜாம் ஜாம்னு நடக்கும் பாரு என்று
ஆனந்தமாக ஊஞ்சலில் படுத்துக்கொண்டார் பத்து தாத்தா.
தரையிலியே படுத்துப் பாட்டியும் உறங்க ஆரம்பித்தார்.
++++++++++++++++
P.S.மீள் பதிவு. மீட்கும் பதிவு. பின்னூட்டங்கள்
காணாமல், இமெயில் முகவரியும் தொலைந்த காலத்தில்
பதிவு மட்டும் பிழைத்த வருடம்:)
தாத்தா பாட்டி வாழ்க. படம் இணையம்.
| Aloo Matar Sabzi |
நெய்யில் குளித்திருக்கிறது:) இந்தியில் தான் சொல்கிறார். சமையல் செய்யும் விதம் அழகு.
புரிகிறது. இதயம் என்ன சொல்லுமோ!!!!
Sunday, November 01, 2020
பத்து வருடங்களுக்கு முன்:)
வல்லிசிம்ஹன் Halloween 2010
மீண்டும் அக்டோபர் மாசம். சிகாகோ திமிலோகப்படுகிறது.
பெண்வீட்டில் சின்னவன் பல பல காஸ்டியூம்களைப் பார்த்துவிட்டு. ஸ்பைடர் மேன்
வாங்கி வந்திருக்கிறான்.
அண்ணாவின் பழைய உடைகள் அவனுக்குப் பொருந்தவில்லை. உடலமைப்பில்
அண்ணா பெரிய அளவு. இவன் இன்னும் சதை போட்டால் நன்றாகப் பொருந்தும்.
எங்க !!சாப்பிடற சாப்பாடெல்லாம் ஓட்டம் விளையாட்டுல கரைந்துவிடுகிறது:)
கடைக்கு அழைத்து போய் ,அவனை தேர்ந்தெடுக்கச் சொன்னதும் ,பலவற்றையும் அணிந்து பார்த்து விட்டு,
ஒ ஐ கிவ் அப் மா. நத்திங் பிட்ஸ் மி'' ன்னு கண் கலங்கியிருக்கிறான்.(டிராமா பாதி)
கடைசியாக ஸ்பைடர் மேன் கிடைத்திருக்கிறார்.
இப்ப எல்லாம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது. தானே எல்லாம் செய்து கொள்ளவேண்டும் என்ற கொள்கை.
வாங்கின உடையை அதற்கான அறையில் உள்ளே போய்க் சார்த்திக் கொண்டுவிட்டானாம் . எப்படியோ வளைந்து நெளிந்து போட்டுக் கொண்டு விட்டான். ஜிப் மட்டும் எட்டவில்லை. அம்மாவை அழைத்து அதையும் சரி
செய்துகொண்டுவிட்டான். இப்போது ஸ்பைடர் மேன் மாஸ்க் போடணுமே.
அதைப் பிரித்தபோது தான் ஒரு பிரச்சினை .அதில் கண்களாக இரு நீளக் கோடுகளே இருந்தன.
சின்னவனுக்கு மூக்கை மூடினாலே பிடிக்காது. என்னதான் வலைமாதிரி போட்டு இருந்தாலும் ,இந்த உடுப்பையும் வேண்டாம் என்று சொல்லப் போகிறான் என்று பெண் நினைத்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.
''அண்ணா ஐ ஆம் கோயிங் டு பி ய ஹெட்லஸ் ஸ்பைடர்மேன் '' என்று வருத்தப் பட்டு இருக்க்கிறான்.:(
பெரியவன் அந்த மாஸ்கைப் பார்த்துவிட்டு, இவ்வளவு தானா.நான் சரிசெய்து விடுகிறேன் என்று அந்த முகமூடியின் முன் பாகத்தை வட்டமாகக் கிழித்து எடுத்துவிட்டான்.
Subscribe to:
Posts (Atom)
சுதந்திரம் அடைய என்ன தேவை?
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...


