Blog Archive

Sunday, November 01, 2020

பத்து வருடங்களுக்கு முன்:)

வல்லிசிம்ஹன்   Halloween 2010




மீண்டும் அக்டோபர் மாசம். சிகாகோ  திமிலோகப்படுகிறது.
பெண்வீட்டில் சின்னவன் பல பல காஸ்டியூம்களைப் பார்த்துவிட்டு. ஸ்பைடர் மேன்
வாங்கி வந்திருக்கிறான்.
அண்ணாவின் பழைய உடைகள் அவனுக்குப் பொருந்தவில்லை. உடலமைப்பில்
அண்ணா பெரிய அளவு. இவன் இன்னும் சதை போட்டால் நன்றாகப்  பொருந்தும்.
எங்க !!சாப்பிடற சாப்பாடெல்லாம் ஓட்டம் விளையாட்டுல  கரைந்துவிடுகிறது:)

கடைக்கு அழைத்து போய் ,அவனை  தேர்ந்தெடுக்கச் சொன்னதும் ,பலவற்றையும் அணிந்து பார்த்து விட்டு,
ஒ ஐ கிவ் அப் மா. நத்திங் பிட்ஸ் மி''  ன்னு    கண் கலங்கியிருக்கிறான்.(டிராமா பாதி)
கடைசியாக ஸ்பைடர் மேன் கிடைத்திருக்கிறார்.
இப்ப எல்லாம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது. தானே எல்லாம் செய்து கொள்ளவேண்டும் என்ற கொள்கை.
வாங்கின  உடையை  அதற்கான அறையில் உள்ளே போய்க் சார்த்திக் கொண்டுவிட்டானாம் . எப்படியோ வளைந்து நெளிந்து  போட்டுக் கொண்டு விட்டான். ஜிப்  மட்டும் எட்டவில்லை. அம்மாவை அழைத்து அதையும் சரி
செய்துகொண்டுவிட்டான். இப்போது ஸ்பைடர் மேன் மாஸ்க் போடணுமே.

அதைப் பிரித்தபோது  தான்  ஒரு பிரச்சினை .அதில் கண்களாக  இரு நீளக் கோடுகளே இருந்தன.
சின்னவனுக்கு மூக்கை மூடினாலே பிடிக்காது. என்னதான் வலைமாதிரி  போட்டு இருந்தாலும் ,இந்த உடுப்பையும் வேண்டாம் என்று சொல்லப் போகிறான் என்று பெண் நினைத்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.
''அண்ணா ஐ ஆம் கோயிங் டு பி ய  ஹெட்லஸ்   ஸ்பைடர்மேன் '' என்று வருத்தப் பட்டு இருக்க்கிறான்.:(
பெரியவன் அந்த மாஸ்கைப் பார்த்துவிட்டு, இவ்வளவு தானா.நான் சரிசெய்து விடுகிறேன் என்று  அந்த  முகமூடியின் முன் பாகத்தை வட்டமாகக் கிழித்து எடுத்துவிட்டான்.
ஒரு புது விதமான,   ஸ்பைடர் மாஸ்க் போடாத ஸ்பைடர் குட்டியை  சின்னவன் பள்ளியில் நாளைக்குப் பார்க்கப் போகிறார்கள்.:)


11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள் அம்மா...

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்!  அப்புறம் என்ன ஆச்சு?

Geetha Sambasivam said...

இங்கே ஹூஸ்டனில் அப்புவுக்கு இப்போ இதில் எல்லாம் ஆர்வம் போய்விட்டது. பெரியவள் ரொம்பவே பெரியவள். குட்டிக் குஞ்சுலுவுக்கு இந்த வருஷம் இதெல்லாம் வாங்கலை போல! பிள்ளையிடம் கேட்டேன். ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டார். :))))) அதோட பள்ளிக்குப் போகணும்னு குஞ்சுலு தான் சொல்கிறது. இவங்க இப்போதைக்கு அனுப்பறதா இல்லை. :)))) அப்பு ஆன்லைனில் தான் வகுப்புகளைக் கவனிக்கிறாள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
உண்மைதான்.
அவன் 10 வயதான பிறகு இந்த விளையாட்டு பிடிக்கவில்லை.
நேற்று அறையை விட்டே வெளிவரவில்லை.

வேற வேலை இல்லையா. என்று விட்டான்.
காலம் மாறியாச்சு :)
பெரியவங்களா ஆகிட்டாங்க!!!!!!!!
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஹாஹா. ஸ்ரீராம். என்ன ஆச்சோ. பத்துவருடங்களுக்கு முன் இதை எழுதி வைய்த்தேன்.

எஞ்சாய் செய்திருப்பான். இப்போ அவங்க விளையாட்டு எல்லாம்
ரொபாடிக்ஸ் அந்த மாதிரி. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இப்போதைக்கு இங்கேயும் அதே கதைதான்.

ஸ்வீஸ் பேரன் சுவாரஸ்யமா வைத்திருக்கிறான். அவனும் மாறலாம்.
இங்கே கிருஷ்ணாவுக்கு கணினி, படிப்பு,
ஆன்லைன் ரொபாடிக்ஸ். அதில் போட்டி என்று
செல்கிறது.
இதெல்லாம் பேபி சமாசாரம்.:)
குஞ்சுலு பாடு பாவம் தான். அதுக்கு
பள்ளிக்கு போக முடிகீறதோ என்னவோ.

கோமதி அரசு said...

பழைய நினைவுகள் அருமை.

ஹலோவின் குதுகலம் இந்த வருடம் குறைச்சல் தான் மகன் ஊரிலும். அக்கம் பக்கம் குழந்தைகள் வந்து சென்று இருக்கிறார்கள். இவர்களும் மிட்டாய் கொடுத்து இருக்கிறார்கள்.

பேரன் எளிமையான காட்சில்லா முகமூடி அணிந்து சிறிது நேரம் வீட்டுக்கு வரும் குழந்தைகளை பயமுறுத்தினானாம்.

இங்கு எங்கள் குடியிருப்பு வளாகத்தில் மூன்று சிறுமிகள் முகத்தை கோரம் செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவருக்கும் பிஸ்கட் பாக்கெட் கொடுத்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்ப் கோமதிமா,
இங்கே ஒரு பெரிய பௌலில் சாக்கலேட்ஸ் வைத்துவிட்டோம்.
கண்ணாடிக் கதவு வழியே அந்த வழி போகும் குழந்தைகளைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்

முந்தைய கூட்டம் இல்லை. எண்ணி
பதினைந்து குழந்தைகள் வந்திருப்பார்கள்.

கடும் குளிரும் ,காற்றும் யாரையும் வெளியே
விடவில்லை.
ஏன் முகத்தைக் கோரமாக்கிக் கொள்ள வேண்டுமோ
எனக்கு இன்னும் புரியவில்லை.

நம்மூரில் மசானக் கொள்ளை நடக்குமே அது போல!!!!

தலையில் சிவப்பு மையைக் கொட்டிக் கொண்டு உலா வரும்
பெரியவர்கள்.
குளிர் நாட்களுக்குத் தங்களை மகிழ்வித்துக் கொள்கிறார்கள் போல.

////பேரன் எளிமையான காட்சில்லா முகமூடி அணிந்து சிறிது நேரம் வீட்டுக்கு வரும் குழந்தைகளை பயமுறுத்தினானாம்.// hahahhaa.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அருமையான நினைவுகள் வல்லிம்மா.. இவ்வருடம் இங்கு குட்டீஸ் க்கு மட்டுமே ஸ்கூலில் ஹலவீன் பார்ட்டி.. பெரிய வகுப்பினருக்கு இல்லை, ஆனாலும் எங்கள் மகன் ஸ்கூல் கப்டன் ஆக இருப்பதனால், அவர்கள் மட்டும் யூனிஃபோம் போல, வெள்ளை ரீ சேர்ட்டுக்கு வெட்டுக்குத்துப் பண்ணி, பிளட் வழிவது போல பெயிண்ட் பண்ணி, மாஸ்க்கும் பிளட் போல பெயிண்ட் அடித்துப் போட்டுப் போனார்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு அல்லிராணி அதிரா,
பேரனும் ப்ளட் கறை படிந்த. கையுறை அணிந்து, பீசணிக்காய் கார்வ் செய்து
அசத்தி விட்டான்.

சுற்றி இருந்த வீடுகளில் தோழர்களுடன் விளையாடி வந்தானாம். வாட்ஸாப்பில்
சொன்னான்.
நலமுடன் இருக்கட்டும் . நன்றி மா.

மாதேவி said...

இனிய நிகழ்வுகள்.

இங்கு மீண்டும் கொரானோ பயமுறுத்துகிறது.கடவுளை பிரார்திப்போம்