வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
ஷிகிக்கு 30 போய்,31 ம் போய் 32 வந்தது.
காஞ்சிபுரம் போய் நாடி ஜோதிடம் பார்த்தார்கள்.
அவனுக்கு 25 வயதிலே திருமணம் நடந்திருக்கணுமே. இனி 33 வயதில்தான் நடக்கும் . பெண் மனத்துக்குப் பிடித்தவளாக வருவாள். பெற்றோர் நல்லவர்களாக அமைவார்கள்.
திருமணம் முடிந்த 6 வருடங்களில் மழலைச் செல்வம் வரும்.
எதோ பரிகாரமாக நவக்கிரகங்கள் இருக்கும் ஊர்களுக்கு முக்கியமாக ஆலங்குடி குரு பகவான் தரிசனமும், திருவெண்காட்டு ஈசன் தரிசனமும் செய்யச் சொன்னார்கள்.
அங்குதான் புதன் க்ஷேத்திரம் என்பதால் அங்கே
அவன் வயதுக்கு ஒத்த அகல்விளக்குகளை ஏற்றினால் நன்மை கிடைக்கும் என்றார்கள்.
ஷிகியும்
அம்மாவை அழைத்துக் கொண்டு தன வண்டியில் ஓட்டுனரை ஏற்பாடு செய்து கொண்டு
அத்தனை கோவில்களுக்கும் சென்று வந்தான்.
மனதுக்கு அமைதி கிடைத்தது.
வழக்கம் போல் வாழ்க்கை நடந்தது.
அம்மா பலரிடமும் சொல்லி ஏற்பாடு செய்த
பெரிய இடத்துப் பெண்களை அவன் போய்ப் பார்க்கக் கூட விரும்பவில்லை.
அம்மாவின் கவலை அதிகரித்தது .
தன்னைப் பார்க்க வந்த, தம்பியிடம் நீ கொஞ்சம் சொல்லுடா. இப்படி பிடி கொடுக்காமல் இருக்கானே .
தினம் பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு இரவுதான் வருகிறான்.
அப்படியா என்று கேட்டுக் கொண்டவர் ,ஷிகியிடம் மனம் விட்டுப் பேசினார்.
அவன் வந்ததும் அவனுடனேயே பிள்ளையார் கோவிலுக்கும் போனார்.
என்னப்பா உனக்கு சங்கடம் என்றதும்,
மாமா, அம்மாவுக்குப் பக்கத்தில் இருக்கிற நாவல் பழம்
கண்ணில் படவில்லை. உச்சியில் இருக்கும் மாம்பழம் தான் வேண்டும் என்கிறார் என்றான்.
அது யாருடா நாவல் பழம் என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
அத்தை மாமாவைத்தான் சொல்கிறேன் .
அவர்கள் குடும்பம் அப்பா இருக்கும் போது நிறைய வந்து போவார்கள்.
அவர்களின் நிலைமை எங்களைவிட இப்போது தாழ்ந்துதான் இருக்கிறது.
ஆனால் அவர்கள் பெற்ற பெண்கள் இருவரும்
நல்ல பெண்மணிகள்.
மூத்தவளுக்கு அப்பாவின் நண்பர் மகனை முடித்து வைத்தார்கள்.
அவர்களுக்கு ஆரணியில் ஜவுளி வியாபாரம்.
நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
இளையவளுக்கு இப்போது 26 முடிந்து விட்டது.
பட்டப் படிப்பு முடித்து சாதாரண வேலைக்குச் சென்று வருகிறாள்.
நல்ல பண்பு மிக்க பெண் மாமா என்றான். நீ அங்கே இன்னும் போய் வருகிறாயா என்று கேட்டார்.
அம்மாவை மீறி செய்ய மாட்டேன் மாமா. அவர்களே இந்த இரத்தின விநாயகர் கோவிலுக்கு வருவார்கள்.
இங்கே கதை சொல்பவர்கள் அதிகமாக வருகிறார்கள். எனக்கு அமைதி கிடைக்கிறது என்று முடித்தான்.
இந்த செய்தியை அப்படியே ஜானம்மாவிடம் சொன்னார்
மாமா.
நமக்குச் சரியான இடம் அதுதானா. குழப்பமாக இருக்கிறதே என்று குழம்பினார் ஜானம்மா.
இல்லை அக்கா. அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.
நீதான் அங்கே போக வேண்டும். நல்லதே நினைத்து செய் என்றபடி
அடுத்த நாள் காலையில் கிளம்பினார்.
சித்திரை மாதம் முடியும் நிலை. ஒரு வெள்ளிக்கிழமை ஷிகி இடம்
சொல்லிவிட்டு தன தம்பி மனைவியையும் அழைத்துக் கொண்டு தாம்பரத்தில்
இருக்கும் நாத்தனார் வீட்டுக்கு ப் போனார்.
அவர்கள் இவரைப் பார்த்து திகைத்தார்கள்.
அண்ணி வாங்க என்று ஆதரவாககே கைகளை பிடித்துக் கொண்டால் அன்னம்.
ஜானம்மாவுக்குக் கணவர் நினைவு வந்தது.
வாங்க உள்ள வாங்க மகன் மகள் எல்லாம் சவுக்கியமா
என்று மகிழ்ச்சி யுடன் வரவேற்ற அன்னத்தின் கணவரைப் பார்த்து வணக்கம் சொன்ன ஜானம்மாவுக்கு அவர் பின்னால் வந்த ஷெண்பக வல்லியைப் பார்த்து பிரமித்தாள் .
நாகரீ கத்தின் சுவடு படாத அழகிய
பதவிசான பெண்ணாய் அவள் வந்து வணங்கியதும்
கண்கள் கலங்கின.
இந்த அன்பை எல்லாம் விட்டு இருந்தேனே.
என்றபடி செண்பகத்தை அணை த்துக் கொண்டாள் .
அண்ணி நீங்க வருவீங்கன்னு தெரியாது
ஒரு நிமிடம் இதோ பஜ்ஜி தயார் செய்கிறேன் என்ற அன்னத்தைப்
பார்த்து செண்பகம் அம்மா நான் செய்து கொண்டு வருகிறேன்.
அத்தைக்கு மருதாணி செடியைக் காண்பி என்றாள்
ஜானம்மாவுக்கு ஒரே ஆச்சசர்யம். எப்பொழுது ஒரு தீபாவளிக்கு எல்லோரும் மருதாணி வைத்துக் கொண்டதை இந்தப் பெண் நினைவு வைத்திருக்கிறதே என்று மகிழ்ந்தாள்.
எல்லாமே கனவு போல நடந்தது.
பஜ்ஜி போட்ட கையோடு. மருதாணியைப் பறித்து,
அத்தையிடம் கொடுத்தாள் அந்த அருமைப் பெண்.
அத்தை நீங்க அடிக்கடி வரணும் என்றும் கேட்டுக் கொண்டாள் .
அப்போதுதான் தான் வந்த வேலை நினைவுக்கு வர,
ஜானம்மா, செண்பகத்திடம், கைநிறைய மல்லிகைச் சரத்தைக் கொடுத்து , நீ வந்துடுடா கண்ணு எங்க வீட்டுக்கு. நல்ல நாளாகப் பார்த்து என்று சொல்லி உச்சி முகர்ந்தாள் .
அன்னமும் சந்தானமும் திகைப்புடன்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
உங்களுக்கு மனசம்மதம் இருந்தால் ஷிகிவாகனனுக்கு
செண்பகத்தை மணமுடிக்க நினைக்கிறேன்
என்றாள் கண்களில் மகிழ்ச்சியோடு.
அன்றிலிருந்து ஆரம்பித்த மகிழ்ச்சி, வைகாசி மாத நன்னாளில் திருமணத்தில் வந்துதான் பூர்த்தியானது.
இந்தப் பெண் நம் வீட்டுக்கு வருவதற்காகத்தான் இத்தனை தாமதமாகி விட்டது.
இனி சிக்கியின் நலனே என் நலன் என்று தீர்மானித்தாள் ஜானம்மா.
மனங்கள் ஒன்று பட்டதில் இல்லறமும் நல்லறமாகியது.
மணமக்கள் வாழ மாமியாரும் நலம் பெற்றாள் .