வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
1996 தாம்பரத்துக்கு அருகே ஊரப்பாக்கம் இன்னும் வளராத
நிலைமையில் பாதி டவுன், பாதி கிராமம் என்ற அளவில்
எப்போதோ கணவன் கட்டிய வீட்டில் இருக்கும் ஒரு அம்மாவின் கதை.
ஜானம்மா தன் பெண் ,பையனுடன் அந்தச் சிறிய வீட்டில் இருந்தார் .
கணவர் வேலாயுதம் அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்து வைத்த ஆறு மாதங்களில்
திடீர் மாரடைப்பால் இறந்தார். வயது 52.
ஒரு பெரிய வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில்
போர்மன் வேலை.
இஞ்சினீரிங் இறுதி வகுப்பில் மகன் ஷிகிவாஹனன் படித்துக் கொண்டிருந்தான்.
மகள் கிருத்திகா பள்ளிப்படிப்பை முடித்திருந்தாள்.
கல்லூரி, வேலைபார்க்கும் நிறுவனம்,எல்லாமே அருகில் இருந்ததால்
அவர்கள் வாழ்க்கை அழகாகவே நடந்து கொண்டிருந்தது.
ஒரு வருட காலமாகவே முதுகு வழியால் அவதி பட்டுக் கொண்டிருந்தஆர் .
வேலை பளு அதிகமாக இருந்ததும் ,அடிக்கடி லிய்வு போடா முடியாததாலும், குடும்ப மருத்துவரிடம் அவ்வப்போது மருந்துகள் வாங்கி வலியை க் குறைக்கப் பார்த்தார்.
டாக்டர் சொன்ன இதய பரிசோதனைகளில் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.
ஒரு வார விடுப்பில் இருந்து மீண்டும் வேலைக்குச் சென்று விட்டார்.
ஒரு ஆடி மாதப் பிறப்பன்று ,தூங்கப் போனவர் எழுந்திருக்கவில்லை.
பக்கத்தில் இருக்கும் மருத்துவர் ஓரு மணி நேரமாகிவிட்டது.
என்று கைவிரித்துவிட்டுப் போய் விட்டார்.
இதோ பத்து வருடங்கள் ஆகி விட்டன.
33 வயது மகனுக்குத் திருமணம் செய்ய முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஜானம்மா.
மக்கள் படித்து முடித்தவுடன் அவளது 25 வயதில் அண்ணன் மகனுக்கே மணமுடித்ததில்
அந்தக் கடமை முடிந்தது.
வேலாயுதம் அவர்களின் அலுவலகம் மிக்கது தாராளமாக
வராது 30 வருட சேவையைப் பாராட்டி
ஒரு நல்ல தொகையைக் கொடுத்திருந்தார்கள். சிக்கியின் மேற்படிப்புக்கு, கிருத்திகாவின் திருமணத்துக்கும் அந்தத் தொகை உதவியது.
அடுத்த வருடம் நல்ல கணினிக் கம்பெனியில்
வேலைக்குச் சேர்ந்ததும், கிருத்திகாவின் முதல் குழந்தை பிறந்தது.
எல்லாப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட அண்ணனைக் கண்டு தங்கைக்கு ஏக மகிழ்ச்சி.
இன்னும் இரண்டு வருடங்கள் போனது . மகளின் இரண்டாவது பிள்ளைப் பேற்றையும் ஜானம்மா ஏற்றுக் கொண்டார்.
நடுவில் அவர்களை பார்த்து விசாரித்தவர்கள் சிக்கியின் திருமணத்தைப் பற்றி பேசும்போது அவன் 30 வயதை அடைந்திருந்தான்.
ஜானம்மா மனம் குறுக்கிப் போனார்.
இந்தப் பையனைக் கவனிக்காமல் விட்டோமே.
என்ற பாதி ப்பில் தெரிந்த ஜோசியர்களிடம் எல்லாம் அவன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போக ஆரம்பித்தாள்.
மகன் விரும்பும் வண்ணம் ஒரு வரனும் அமையவில்லை..

14 comments:
மகனும் கடமையில் தன்னை மறந்தார் போலும். தொடர்கிறேன். 96 களில் ஊரப்பாக்கம் இன்னும் கிராமமாகத்தான் இருந்திருக்கும்.
எப்படி மகனுக்கான தன் கடமையை மறந்தார்? 26 வயதிலிருந்தே ஆரம்பிக்கவேண்டிய கடமை அல்லவா அது? தொடர்கிறேன்.
கம்பெனி - ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனமா?
நல்ல வரன்(ம்) அமையுமா...?
தொடர்கிறேன் சகோதரியாரே
கதை நன்றாக இருக்கிறது.
மகன் விரும்பும் வண்ணம் பெண் அமைய வேண்டும்.
நல்ல மருமகளாக அமைய வாழ்த்துகள்.
மகளுக்கு வரன் பார்ப்பதை விட கடினமானது மகனுக்கு வரன் பார்ப்பது. விரைவில் நல்ல மருமகள் அமையட்டும்.
அன்பு ஸ்ரீராம்,
ஜானம்மா பெண்ணின் வாழ்க்கையில் மூழ்கிவிட்டார்.
அவருக்குப் புத்தி சொல்வது போல சில உறவினர்கள்
பெண்ணை முதலில் கவனி. மகனுக்குத் திருமணம் ஆனால் வருகிறவள் எப்படி
இருப்பாளோ என்று சொன்ன போதனை
அவரை மாற்றிவிட்டது.
ஆமாம் ஊரப்பாக்கம் அப்போது காடு போலத்தான் இருக்கும்.
தப்புதான் முரளிமா.
தெளிவுடன் சிந்திக்காமல் போனார்.
பாவம் அந்தப் பையன். 26 வயதில் தங்கை
திருமணத்துக்கு உழைத்தான். அப்பொழுதே தேடியிருந்தால் இரண்டு வருடங்களில்
நடந்திருக்கும்.
நீங்கள் சொல்வது உண்மை .அப்போது ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் கம்பெனி இருந்தது.
அன்பு தனபாலன் நல்ல வரம் கிடைக்கும். நல்லவனுக்கு நல்லதே நடக்கும் மா.
மிக மிக நன்றிகரந்தை ஜெயக்குமார்.
அன்பு கோமதி
மருமகள் அமைவதும் நல்ல வரம் தான்.
கடவுள் மனம் வைக்க வேண்டும்.
அன்பு கீதா மா.
அப்போது 30 வயது ஆனால் வரன் கிடைப்பது கொஞ்சம் சிரமம் ஆக இருந்தது.
இப்போது அந்த நிலைமை மாறி பெண்களுக்கே
30 வயதாகி விடுகிறது.
கதை தொடக்கம் வழக்கம் போல் அருமை.
மகனுக்கு விரைவில் பெண் அமைந்திட வேண்டும் அதுவும் குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக...தொடர்கிறோம் அம்மா
துளசிதரன், கீதா
கீதா: அம்மா இந்த ஊரப்பாக்கம் எல்லாம் சில வருடங்களாகத்தான் டெவலப் ஆகி வருகிறது...அப்போது கண்டிப்பாக சிறிய மிகவும் சிறிய ஊராகத்தான் இருந்திருக்கும்...இல்லையா
Post a Comment