Blog Archive

Wednesday, April 24, 2019

திருமணம் கைகூடும் 2

வல்லிசிம்ஹன்

 எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

ஷிகிக்கு 30 போய்,31 ம் போய்  32 வந்தது.
காஞ்சிபுரம்  போய் நாடி ஜோதிடம் பார்த்தார்கள்.

அவனுக்கு 25 வயதிலே திருமணம் நடந்திருக்கணுமே. இனி 33 வயதில்தான் நடக்கும் . பெண் மனத்துக்குப் பிடித்தவளாக வருவாள். பெற்றோர் நல்லவர்களாக அமைவார்கள்.

திருமணம் முடிந்த 6 வருடங்களில்  மழலைச் செல்வம் வரும்.
எதோ பரிகாரமாக  நவக்கிரகங்கள் இருக்கும் ஊர்களுக்கு முக்கியமாக ஆலங்குடி குரு  பகவான்  தரிசனமும், திருவெண்காட்டு ஈசன் தரிசனமும் செய்யச் சொன்னார்கள்.
அங்குதான் புதன் க்ஷேத்திரம் என்பதால் அங்கே
அவன் வயதுக்கு ஒத்த அகல்விளக்குகளை ஏற்றினால் நன்மை கிடைக்கும் என்றார்கள்.

ஷிகியும்
அம்மாவை அழைத்துக் கொண்டு  தன வண்டியில் ஓட்டுனரை ஏற்பாடு செய்து கொண்டு

அத்தனை கோவில்களுக்கும் சென்று வந்தான்.
மனதுக்கு அமைதி கிடைத்தது.

வழக்கம் போல் வாழ்க்கை நடந்தது.
அம்மா  பலரிடமும் சொல்லி ஏற்பாடு செய்த
பெரிய இடத்துப் பெண்களை  அவன் போய்ப் பார்க்கக் கூட விரும்பவில்லை.

அம்மாவின் கவலை அதிகரித்தது .
தன்னைப் பார்க்க வந்த, தம்பியிடம்  நீ கொஞ்சம் சொல்லுடா. இப்படி பிடி கொடுக்காமல் இருக்கானே .
தினம் பிள்ளையார் கோவிலுக்குப்  போய்விட்டு இரவுதான் வருகிறான்.

அப்படியா என்று  கேட்டுக் கொண்டவர் ,ஷிகியிடம்  மனம் விட்டுப் பேசினார்.
அவன் வந்ததும் அவனுடனேயே  பிள்ளையார் கோவிலுக்கும் போனார்.
என்னப்பா உனக்கு  சங்கடம் என்றதும்,
மாமா, அம்மாவுக்குப்  பக்கத்தில் இருக்கிற  நாவல் பழம்
கண்ணில்  படவில்லை. உச்சியில் இருக்கும் மாம்பழம் தான் வேண்டும் என்கிறார்  என்றான்.
 அது யாருடா நாவல் பழம் என்று  சிரித்துக் கொண்டே கேட்டார்.
அத்தை மாமாவைத்தான் சொல்கிறேன் .
அவர்கள் குடும்பம்  அப்பா இருக்கும் போது நிறைய வந்து போவார்கள்.
அவர்களின் நிலைமை எங்களைவிட இப்போது தாழ்ந்துதான் இருக்கிறது.

ஆனால் அவர்கள் பெற்ற  பெண்கள் இருவரும்
நல்ல பெண்மணிகள்.
  மூத்தவளுக்கு   அப்பாவின் நண்பர் மகனை முடித்து வைத்தார்கள்.

அவர்களுக்கு  ஆரணியில் ஜவுளி வியாபாரம்.
நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

இளையவளுக்கு இப்போது 26 முடிந்து விட்டது.
பட்டப்  படிப்பு முடித்து   சாதாரண வேலைக்குச்  சென்று வருகிறாள்.

நல்ல பண்பு  மிக்க பெண் மாமா என்றான். நீ அங்கே இன்னும் போய் வருகிறாயா  என்று  கேட்டார்.

அம்மாவை மீறி செய்ய மாட்டேன் மாமா. அவர்களே இந்த இரத்தின விநாயகர் கோவிலுக்கு வருவார்கள்.
இங்கே கதை சொல்பவர்கள் அதிகமாக வருகிறார்கள். எனக்கு அமைதி கிடைக்கிறது  என்று முடித்தான்.

இந்த செய்தியை அப்படியே ஜானம்மாவிடம் சொன்னார்
மாமா.

நமக்குச் சரியான இடம் அதுதானா. குழப்பமாக இருக்கிறதே என்று  குழம்பினார் ஜானம்மா.

இல்லை அக்கா. அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.

நீதான் அங்கே போக வேண்டும். நல்லதே நினைத்து செய் என்றபடி
அடுத்த நாள் காலையில் கிளம்பினார்.
சித்திரை மாதம் முடியும் நிலை. ஒரு வெள்ளிக்கிழமை ஷிகி இடம்
சொல்லிவிட்டு  தன தம்பி மனைவியையும் அழைத்துக் கொண்டு தாம்பரத்தில்
இருக்கும்  நாத்தனார் வீட்டுக்கு ப் போனார்.

அவர்கள் இவரைப் பார்த்து திகைத்தார்கள்.
அண்ணி வாங்க என்று ஆதரவாககே கைகளை பிடித்துக் கொண்டால் அன்னம்.
ஜானம்மாவுக்குக் கணவர் நினைவு வந்தது.
வாங்க உள்ள வாங்க  மகன் மகள் எல்லாம் சவுக்கியமா
என்று  மகிழ்ச்சி யுடன் வரவேற்ற அன்னத்தின் கணவரைப் பார்த்து வணக்கம் சொன்ன  ஜானம்மாவுக்கு அவர் பின்னால் வந்த ஷெண்பக வல்லியைப் பார்த்து பிரமித்தாள் .
 நாகரீ கத்தின் சுவடு படாத அழகிய

பதவிசான பெண்ணாய் அவள் வந்து வணங்கியதும்
கண்கள் கலங்கின.
இந்த அன்பை எல்லாம் விட்டு இருந்தேனே.

என்றபடி செண்பகத்தை அணை த்துக் கொண்டாள் .
அண்ணி  நீங்க வருவீங்கன்னு தெரியாது
ஒரு நிமிடம்  இதோ பஜ்ஜி தயார் செய்கிறேன் என்ற அன்னத்தைப்
பார்த்து  செண்பகம்  அம்மா நான் செய்து கொண்டு வருகிறேன்.
அத்தைக்கு  மருதாணி செடியைக் காண்பி என்றாள்

ஜானம்மாவுக்கு ஒரே ஆச்சசர்யம். எப்பொழுது ஒரு தீபாவளிக்கு  எல்லோரும் மருதாணி வைத்துக் கொண்டதை இந்தப் பெண் நினைவு வைத்திருக்கிறதே  என்று மகிழ்ந்தாள்.

எல்லாமே  கனவு போல நடந்தது.
பஜ்ஜி போட்ட கையோடு. மருதாணியைப்   பறித்து,
அத்தையிடம் கொடுத்தாள்  அந்த  அருமைப் பெண்.
அத்தை நீங்க அடிக்கடி வரணும் என்றும் கேட்டுக் கொண்டாள் .

அப்போதுதான் தான் வந்த  வேலை நினைவுக்கு வர,
ஜானம்மா, செண்பகத்திடம், கைநிறைய மல்லிகைச் சரத்தைக் கொடுத்து  , நீ வந்துடுடா கண்ணு எங்க வீட்டுக்கு. நல்ல நாளாகப்  பார்த்து என்று சொல்லி உச்சி முகர்ந்தாள் .
அன்னமும்  சந்தானமும்  திகைப்புடன்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

உங்களுக்கு  மனசம்மதம் இருந்தால்  ஷிகிவாகனனுக்கு
செண்பகத்தை மணமுடிக்க நினைக்கிறேன்
என்றாள்  கண்களில் மகிழ்ச்சியோடு.

அன்றிலிருந்து ஆரம்பித்த  மகிழ்ச்சி, வைகாசி மாத நன்னாளில்  திருமணத்தில் வந்துதான் பூர்த்தியானது.

இந்தப் பெண் நம் வீட்டுக்கு வருவதற்காகத்தான் இத்தனை தாமதமாகி விட்டது.

இனி சிக்கியின் நலனே என் நலன்  என்று தீர்மானித்தாள்  ஜானம்மா.

மனங்கள் ஒன்று பட்டதில் இல்லறமும் நல்லறமாகியது.

மணமக்கள்  வாழ மாமியாரும் நலம் பெற்றாள் .






19 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்ந்தேன்
நன்றி சகோதரியாரே

ஸ்ரீராம். said...

ஷிகியின்நல்ல மனம் வாழ்க... இனி என்ன, எல்லாம் இன்ப மயம்தானே?

ஸ்ரீராம். said...

//அவனுக்கு 25 வயதிலே திருமணம் நடந்திருக்கணுமே. இனி 33 வயதில்தான் நடக்கும் //

இது மாதிரி ஜோதிடங்கள் நானும் கேட்டிருக்கிறேன். எனக்கு அப்போது சில கேள்விகள் தோன்றும். அப்போ 25 வயதில் இவனுக்காக எழுதி வைக்கப்பட்ட அந்தப் பெண் என்ன ஆகி இருப்பாள்? அவளேதான் இவனின் 33 வது வயது வரை காத்திருப்பாளா? இல்லை, அந்தப் பெண் வேறொருவனைத் திருமணம் புரிந்திருப்பாரா? ஆம் எனில் அது நியாயமா? இந்த 33 வயதில் இப்போது காத்திருக்கும் பெண் இதேபோல இன்னொரு பஸ்ஸைத்ஹவர விட்டவளா?!!

Geetha Sambasivam said...

நல்லபடி மனதுக்குப் பிடித்த பெண்ணாக அமைந்ததில் மகிழ்ச்சி. தம்பதிகள் நீடூழி வாழட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

லேட்டானாலும் லேட்டஸ்டா வந்தது போல!! சுபமாக முடிந்து எல்லோரும் சந்தோஷமாக வாழ்ந்திட வேண்டும் அம்மா.

நல்ல முடிவு

கீதா

கோமதி அரசு said...

ஷிகிவாகனனுக்கு
செண்பகத்தை மணமுடிக்க நினைக்கிறேன்
என்றாள் கண்களில் மகிழ்ச்சியோடு.//

அப்புறம் என்ன ! எல்லாம் இன்பமயம் தான்.
பாட்டு பகிர்வு மிக பொருத்தம்.
கதை அற்புதம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தையாருக்கு வணக்கமும் நன்றியும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், தாய் மனம் வைத்தால் மகன் வாழ்வு சிறப்புறும்
இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தால்
இந்தப் பிரச்சினை எழும்பி இருக்கத் தேவையே இல்லை.
அந்தப் பையன் அதுதான் அவன் பெயர் செந்தில்,
எங்க பையனோடு வேலை பார்த்தவன்.என் வீட்டுக்காரருக்கும் நெருங்கிய தோழன்.
ஜிம்மில் இருவரும் சேர்ந்து பயிற்சி செய்வார்கள்.

எங்கள் வீட்டில் வந்து திருமணம் பற்றி விவாதிப்பான்.
அவங்க அம்மா எங்க வீட்டுக்கு
வந்தபோது நாங்கள் விவரமாகப் பேசினோம்.
இப்போது எல்லாம் நலம்.

வல்லிசிம்ஹன் said...

இவனின் 33 வது வயது வரை காத்திருப்பாளா? இல்லை, அந்தப் பெண் வேறொருவனைத் திருமணம் புரிந்திருப்பாரா? ஆம் எனில் அது நியாயமா? இந்த 33 வயதில் இப்போது காத்திருக்கும் பெண் இதேபோல இன்னொரு பஸ்ஸைத்ஹவர விட்டவளா?!!//Sriram ,,certainly not. He decided on Shenbakam.Never told his mother. That girl would have married some one else.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா.மனம் போல மாங்கல்யம்.
நன்றி மா.
என் நாத்தனார் கல்யாணியும் ,அத்திம்பேர்
வெளினாடு போகப் போகிறார் என்றதும்
திருமணத்துக்கு மறுத்தார். மற்ற வரன் கள் வந்தும் அமையவில்லை. அவர் வெளினாட்டிலிருந்து வந்தே இருவருக்கும் திருமணம் நடந்தது.
இன்னாருக்கு இன்னார் என்று பாட்டு வருமே அது போல.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, இதோ நானே லேட் தான், எதிர்பாராமல் மறைந்த என் நாத்தனார் நினைவில் இரு நாட்களாக வேதனை.

ஆமாம் இந்தத் திருமணம் மகனும் அன்னையும் புரிந்து கொண்டதால் நடந்தது.
நன்றி மா.

Geetha Sambasivam said...

எந்த நாத்தனார்?எப்போ?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
எத்தனையோ விஷயங்கள் பேசிக்கொள்வதால்
இனிதே முடியும்.
மகனுக்கும் அன்னைக்கும் பந்தம் ,நெருக்கம் அதிகரிக்க வேண்டும்,
இவனும் பேசாமல் அம்மாவும் கேட்காமல் இவ்வளவு கால தாமதம்.
இப்போது இரண்டு குழந்தைகளும் பிறந்தாச்சு.எல்லாம் நலமே. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

Dear Geetha SAMBASIVAM,
MY SISITER IN LAW kALYANI KIRUSHNASWAMY PASSED AWAY early Thursday morning.In her sleep. she was active even on 23rd posting recipies.

romba varuththamaa irukku.

Geetha Sambasivam said...

கடவுளே, ஆனால் கொடுத்து வைத்த ஆத்மா! மனசு அடிச்சுக்கறது. எனக்கும் அவங்க முகநூல் மூலம் சிநேகம் தானே! ரொம்ப வருத்தமா இருக்கு! உங்களுக்கு எவ்வளவு வருத்தமா இருக்கும்னு புரிஞ்சுக்க முடியறது!

துரை செல்வராஜூ said...

>>> கைநிறைய மல்லிகைச் சரத்தைக் கொடுத்து , நீ வந்துடுடா கண்ணு எங்க வீட்டுக்கு. நல்ல நாளாகப் பார்த்து என்று சொல்லி உச்சி முகர்ந்தாள் ... <<<

இந்த மாதிரியான மகிழ்ச்சியும் மனநிறைவும் தான் எல்லாஇடங்களிலும் வேண்டும்...

மனம் நிறைந்தததம்மா!...

ஸ்ரீராம். said...

//MY SISITER IN LAW kALYANI KIRUSHNASWAMY PASSED AWAY early Thursday morning.In her sleep//

ஆமாம் அம்மா... பேஸ்புக்கில் பார்த்தேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.​மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு ,
நல்ல மனைவி,நல்ல பிள்ளை,நல்ல குடும்பம் தெய்வீகம்னு முன்னே பாடல் ஒன்று வரும்.
அது போல நல்ல அம்மாவுக்கும் மகனின் மனம் தெரிந்திருக்க வேண்டும்., தாமதமாகப் புரிந்து கொண்டாலும் நன்மை செய்தார் ஜானம்மா.
பிள்ளைகள் சுகம் தானே பெற்றவள் சுகம்.நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் , அன்பு கீதா நன்றி.
உடல் சரியில்லாமல் இருந்த போது இரண்டு வருடங்களுக்கு முன் பங்களூரில் அவர்கள்
வீட்டுக்குப் போயிருந்த போது அணைத்துக் கொண்டு கலங்கினார்.
அவரது மகன் இங்கே தான் இருக்கிறான்.
அவனால் இப்போது போக முடியவில்லை.
மகள் அதிர்ச்சியில் இருக்கிறாள். என்ன செய்யறது ரேவதி மாமி
என்று சொல்கிறது.
ஆனால் ஏகப்பட்ட கசின்ஸ் எல்லோரும் வந்துவிட்டார்கள்.

அவரைப் பொறுத்த வரையில் விடுதலைதான்.