வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
புது வருடம் பிறந்து, மதுரை மீனாள் சொக்கர் திருமணமும் நடந்து , அழகர் ஆற்றிலும் இறங்கி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோச்சனமும் கொடுத்தாகி விட்டது. இங்கே இன்று சித்ரா பவுர்ணமி.
கடவுள் கிருபையில் மேகமூட்டம் இல்லை.
தமிழ்நாட்டுக்கு வந்த நிலா இங்கேயும் வரக்
காத்திருக்கிறேன்.
சென்ற வார மருத்துவர் சந்திப்பில் ,
இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகச் சொல்லி எச்சரிக்கை விடுத்தார். இந்த விடாத தலைவலிக்கான காரணமும் தெரிந்தது.
ஒரே ஒரு கவலைப் பல பதிவுகளை படிக்க முடியவில்லை.
பிடித்த பாடல்களை பார்க்க முடியவில்லை என்பதே.
சத்தமே அதிர்ச்சி கொடுக்கிறது.
இதுவும் கடந்து போகும்.
தேர்தல்,
Notre Daum அக்னி க்குப் பாதி பலியானது,
அபத்தமான சொற்பொழிவுகள் சில வாட்ஸாப்பில் வந்தது
இவற்றையும் தாண்டி வந்தாகிவிட்டது.
நம் ஊருக்கு நல்லது நடக்க வேண்டும். படித்த ,நல்ல புத்திசாலிகள்
ஆட்சிக்கு வரவேண்டும்.
அனைவரும் வாழ்க வளமுடன்.
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
புது வருடம் பிறந்து, மதுரை மீனாள் சொக்கர் திருமணமும் நடந்து , அழகர் ஆற்றிலும் இறங்கி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோச்சனமும் கொடுத்தாகி விட்டது. இங்கே இன்று சித்ரா பவுர்ணமி.
கடவுள் கிருபையில் மேகமூட்டம் இல்லை.
தமிழ்நாட்டுக்கு வந்த நிலா இங்கேயும் வரக்
காத்திருக்கிறேன்.
சென்ற வார மருத்துவர் சந்திப்பில் ,
இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகச் சொல்லி எச்சரிக்கை விடுத்தார். இந்த விடாத தலைவலிக்கான காரணமும் தெரிந்தது.
ஒரே ஒரு கவலைப் பல பதிவுகளை படிக்க முடியவில்லை.
பிடித்த பாடல்களை பார்க்க முடியவில்லை என்பதே.
சத்தமே அதிர்ச்சி கொடுக்கிறது.
இதுவும் கடந்து போகும்.
தேர்தல்,
Notre Daum அக்னி க்குப் பாதி பலியானது,
அபத்தமான சொற்பொழிவுகள் சில வாட்ஸாப்பில் வந்தது
இவற்றையும் தாண்டி வந்தாகிவிட்டது.
நம் ஊருக்கு நல்லது நடக்க வேண்டும். படித்த ,நல்ல புத்திசாலிகள்
ஆட்சிக்கு வரவேண்டும்.
அனைவரும் வாழ்க வளமுடன்.
17 comments:
காலை வணக்கம் வல்லிம்மா... பொருத்தமான பாடல்களை இணைத்திருக்கிறீர்கள். படித்தவர்கள் ஆட்சிக்கு வருவதா? வந்துட்டாலும்....!
ஏன், நீங்கள் மருந்து, மாத்திரைகள் நேரத்துக்குச் சாப்பிடுகிறீர்கள்தானே? ஏன் உயர் ரத்த அழுத்தம் கூடுகிறது? உடல் நிலையில் கவனம் வையுங்கள்.
உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். அனைத்தும் விரைவில் சரியாக இறைவன் துணைநிற்பான்.
உங்கள் உடல்நிலையில் கவனம் வையுங்கள் ரேவதி. அன்று உங்களையும் உங்கள் பெண்ணையும் வீடியோ மூலம் பார்த்துப் பேசியதில் மனம் மகிழ்ச்சியாக இருந்தது. நீங்களும் கட்டுப்பாடான உணவு எடுத்துக் கொண்டாலும் ரத்த அழுத்தம் குறையவில்லை என்பதில் வருத்தமாக இருக்கிறது. மனக்கவலைகளை விட்டு ஒழியுங்கள்.
தாங்கள் நலம் பெற வேண்டுகிறேன் அம்மா
இந்நொடிவரை எங்கள் குலதெய்வக் கோவிலில் நான் மட்டும் மன அமைதியைத் தேடி... கடந்த இரண்டு தினங்களாக தங்கி இருக்கிறேன். (உத்திரகோசமங்கை அருகில்)
தங்களுக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.
உடல்நலம் முக்கியம் அம்மா... நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்...
உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
ரத்த அழுத்தம் - எதற்கும் கவலைப் படாமல் இருங்கள்மா... எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.
அரசியல் - இங்கே எல்லாம் அபத்தம். நல்ல பாடலைத் தான் இணைத்திருக்கிறீர்கள்.
பாடல் பகிர்வு அருமை.
உடல் நலத்தில் கவனம் வைங்க அக்கா.
குழந்தைகளுக்காக உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு வருத்தம் வருமே!
நடப்பது எல்லாம் இறைவன் செயல் என அவன் மேல் பாரத்தை போட்டு விட்டு இருங்கள் . அவன் பாத்துப்பான்.
எனக்கும் அதையே சொல்லிக் கொள்கிறேன்.
அன்பு ஸ்ரீராம்,
ஒரு மாதமாகவே தலைவலி. இருமல்.
இங்க இருக்கிற டாக்டர் ரொம்ப நல்லவர்.
போன வருடம் விழுந்த வலி
இப்போது படுத்துகிறது. வலி அதிகமானால் அழுத்தம் ஏறுவதும் அதிகரிக்கும்.
ஒரு வாரத்தில் சரி பண்ணிடலாம்.
மாத்திரை அளவை அதிகரிக்கலாம். நன்றி ராஜா.
அன்பு முனைவர் ஐய்யா. தங்கள் அன்புக்கு நன்றி. இனி வெய்யில்
காலத்தில்
காற்றுபட நடந்தாலே மனம் விடுபடும்.
அன்பு கீதாமா.
நன்றி மா. கால் உப்பு தான் சாப்பாடு. இடது இடுப்பில் வலி நெருக்குகிறது. அதனால்
அழுத்தம் அதிகமாகிறது.
அலுப்புதான். சரியாகி விடுகிறேன்.
அன்பு தேவகோட்டை ஜி. மகனாக எனக்காகப்
பிரார்த்தனை செய்கிறீர்கள். நான் நலம் பெற்று விடுவேன்.
எங்க மகனும் என் முகத்தைப் பார்த்து
அம்மா நான் கவலைப் படவில்லை
பிராத்திக் கொள்ளுகிறேன் என்று சொன்னான்,
எனக்குக் கவலை இல்லை மா. வாழ்க வளமுடன்.
அன்பு தனபாலன், உறுதியாக இருந்து குணமடைகிறேன் ராஜா.
அதேதான் அன்பு கோமதி.
குழந்தைகள் அதிலும் பெரியவன் உருகிவிடுவான்.
அதற்காகவே சரி செய்ய வேண்டும்.
நல்ல வார்த்தைகள் சொல்ல நீங்கள் எல்லாம் இருக்கும் போது ,
நம் பாபா இருக்கும் போது
கவலை இல்லை அம்மா.
வல்லிம்மா உடல் நலம் பார்த்துக்கொள்ளவும். மிக முக்கியம். பிரார்த்திக்கிறோம்.
துளசிதரன், கீதா
கீதா: அம்மா மருந்தெல்லாம் ஒழுங்கா எடுத்துக் கொண்டும் சாப்பாடு பத்தியம் என்றாலும் கூடுது என்றால்...அம்மா மனசை டென்ஷன் இல்லாம பார்த்துக்கோங்க. நாடு இருக்கட்டும்...அதுக்கு எல்லாம் கவலைப்படாதீங்கமா....நோ வொரிஸ்....
பிரார்த்திக்கிறோம்
நலம்பெற வேண்டுகிறேன்.
Post a Comment