Friday, December 29, 2017

அம்பி மாமா 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  அம்பி மாமா 2
+++++++++++++++++++++++++
1954 அம்மாவுக்கு அல்சர் வந்து மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
வரும் நேரம் கூட வந்த துணை அம்பி மாமா.
தாத்தா மறைந்த நிலையில் குடும்பத்தைத் தோளில் நிற்க வைத்தது
நிலைமை.
 இன்னோரு தம்பி அப்போது படித்து முடித்த நிலைமையில்
விசாகப் பட்டணம் நகருக்குப் பயிற்சி பெற பி அண்ட் டி
போஸ்ட்ஸ் ஆண்ட் டெலகிராப் ஆபீஸில் பயிற்சி.

அப்போது மற்ற மாமாக்கள் வயதில் சிறியவர்கள்.
இல்லை என்ற சொல்லே இல்லாமல்
குடும்பம் நடக்கும்.எப்போதும் வளம்.
அவர்கள் குடியிருந்த குடியிருப்பில்
அத்தனை பேருக்கும் இந்த வாலிபர்களின் மேல் அத்தனை மரியாதை.
அப்பா இல்லாமல் வளரும் விதம் கண்டு அதிசயிப்பார்கள்.
எனக்குத் தெரிந்து க்ளாக்ஸோ கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து
டைப்பிங்க் ,ஷார்ட் ஹாண்ட் என்று எல்லாவிதத்தில் முதன்மையாக
 வெற்றி பெற்றவர்.
பிற்காலத்தில் டெல்லி செல்லும்போது
அவர் தட்டச்சு செய்யும் வேகம் கண்டு
அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.
ஒரு நிமிடத்தில் 147 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வலிமை படைத்தவர்.
கடின உழைப்பால் முன்னேறி தன் டிபார்ட்மெண்ட் தலைமைப் பொறுப்பை
 ஏற்று ,ஒரு மதராஸி என்ற வகையில் அவர்
முன்னேறியது அனைவருக்கும் அதிசயமே.
எந்த நிலையிலும் அசரவே மாட்டார்.
1957இல் அவருக்கு வாய்த்த மனை நலம் மிக்க நல்ல பெண்ணாக
ஜெயலக்ஷ்மி என்னும் என் ஜெயா மன்னி
குடும்பத்தையும் அரவணைத்துக் கொண்டவனையும் காத்தவர்.
என் பாட்டியின் அன்புக்குரிய மருமகள்.
சந்தோஷக் காலங்கள் தொடர்ந்தன.
அவர்கள் சென்னை வரும் நாளில்
நாங்கள் செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு
ஒரு மணி நேரம் முன்னதாகவே போய்விடுவோம்.
வாய் கொள்ளாத சிரிப்புடன் தம்பதியரும் குழந்தைகள் இருவரும் இறங்குவது
இன்னும் நினைவில் இருக்கிறது.
ஒரு டெல்லி மண் கூஜா, நிறைய பாதுஷா, பிஸ்கட்,தேன் குழல்
என்று பெரிய டாக்சி நிறைய பொருட்கள் வரும்.
பரந்த மனம் கொண்ட தம்பதியரின்
குடும்பம் சிறிய வருமானம் கொண்டததுதான்.
இருந்தும் வள்ளல்கள்
போல நடந்து கொள்ளும் பெருந்தன்மை. தொடரும்.

Wednesday, December 27, 2017

1932 /2017 ஒரு சகாப்தம் கே.வி.வி.ராஜன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

என் அன்புள்ள மாமா  ,அம்பி என்னும் கீழநத்தம் வீரராகவ அய்யங்கார்  அவர்களின் மகன் வரதராஜன்

Add caption
புதன் காலை 9.30 மணி அளவில் இறைவன் திரு நாட்டுக்கு   ஏளினார் .
 அவரது பெண்கள் இருவருக்கும்  இதைத் தாங்கும் பக்குவத்தை பகவான் கொடுக்கட்டும் .
அன்னைக்கு அன்னையாய்  என்னைத் தூக்கி வளர்த்த அருமை மனிதர்.
வாழ்வின் கடைசிப்படிகளில்  மனைவி,மகன்,மகள்  இம்மூவரையும் இழந்தார். இந்த மார்கழி வளர்பிறை அவரை அழைத்துக் கொண்ட ஸ்ரீ வேணுகோபாலன் அவர்
ஆத்மாவைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றுவிடுவான்.

அம்பி எத்தனையோ காலங்களில் எங்கள் குடும்பத்துக்கு  உண்மையான இரும்புக்கரங்கள் கொண்டு அரவணைத்தாய். என் இன்னொரு தாயே உனக்கு கோடி நமஸ்காரங்கள்.

எங்கள் சிங்கம் திடீரென மறைந்த பொது  ஆண்டாள் உன்னை எப்படி இனிமே பார்ப்பேன்னு கதறினாய் நான் உன்னை சமாதானப் படுத்த வேண்டி வந்தது.
எல்லோரும்  ஸ்ரீவைகுண்டத்தில் சுகமாக இருங்கள்.🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Friday, December 22, 2017

கடிகைப் பெருமான். ஸ்ரீ அமிர்தவல்லி சமேத யோக நரசிம்மன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
அவ்வப் பொழுது என்னை மறந்து விடுகிறாய்.
உன்னை ஒழுங்காக வைத்திருப்பவன் நான்
அல்லவா. நொடி நேரத்தில் உன் கவலை
போக்கியவன் நான் இல்லையா.
அடிக்கு அடி  எடுத்து வைத்து வந்து  தரிசனம் செய்து விட்டுப் போனது 1987இல்  .
அப்புறம் துன்பம் நேர்கையில் யாழெடுத்து  என்ற பாடலுக்கு ஏற்ற மாதிரி தம்பியின் பைபாஸ் அறுவைக்கும்,
 அம்மாவின் இருதய வலிக்கும்,
வீட்டுக்காரரின் சளி இருமலுக்கும்
 இன்னும் ஏதேதோ சம்பவங்களுக்காக மட்டுமே என்னை நினைத்தாய்.
பிறகு மீண்டும் சம்சாரம்,பேரன் ,பேத்திகள் என்று மஞ்சள் துணியில் முடித்து வைக்க தெரிந்த உனக்கு,
மேலே ஏறி வந்து  உன் பிரார்த்தனை செலுத்த முடியவில்லை. என்னைத் தரிசி க்க வந்தவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டாய் .

மனதிலாவது தக்க வைத்துக் கொள்  என்றும் உன்னைக் காக்க நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லும் நரசிம்ம சாமி. மீண்டும்  அப்ளிகேஷன் வைக்கிறேன். ஞாபகப் படுத்தியவர்கள் துளசி கோபால், எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம்.
ந்ருஸிம்ஹன் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மார்கழிப் பாவை 8

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மார்கழி  பாசுரம்  8
+++++++++++++++++++++++


கீழ் வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு*
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்*
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து* உன்னைக்
கூவுவான் வம்து நின்றோம்** கோதுகலமுடைய
பாவாய்! எழும்திராய், பாடிப் பறை கொண்டு*
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய*
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்*
ஆவா என்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய் 

Thursday, December 21, 2017

கனவுகள் 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

கடந்து வந்த பாதையில்
மலர்களும் முட்களும்.
பல நேரங்களில் நினைவுகளை மலர்கள்
ஆக்கிரமிக்கின்றன .
இரவின் நடு நிசியில் முட்கள்
உறுத்தும் போது  ,கண்ணன் நாமம் கைகொடுக்க விடிகிறது மார்கழி 6ஆம் நாள்.
கசக்கும் நினைவுகளை  மேல் எழாமல் தடுப்பதும் அவனே.
Add caption

Wednesday, December 20, 2017

மார்கழிப் பாசுரம் 5

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மாயனை மன்னு வட   மதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
 ஆயர் குல த்தினுள் தோன்றும் அணிவிளக்கைத்
 தாயைக்  குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க
 போய பிழையும் புகுதறுவான் நினறனவும்
 தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   சின்னவன் கண்களைச் சுருக்கி விரித்து
ஹோம்வொர்க் ஒண்ணும் இல்லை பாட்டி
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கட்டுமான்னு கேட்டால் ஏதோ
இருக்குன்னு அர்த்தம்.
கொஞ்சம் உன்னுடைய ஃபோல்டரை செக் பண்ணுடா. ஏதாவது பேப்பர்
இருக்கும் என்பேன்.
நீ யேன் என்னை டிரஸ்ட் பண்ண மாட்டேங்கறே.
ஓகே. உனக்காகப் பாக்கறேன்.
முதல்ல விளையாடணும் என்பான்.
பாவமா இருக்கும்.
15 நிமிஷம் 45 நிமிஷம் ஆகும்.
டேய் பையா. பாத்துடு. இல்லைன்னால் 11 மணி வரை நீதான் முழிச்சு வேலை செய்யணும் என்று கொஞ்சம் கடுமை காட்டுவேன்.
உன் அம்மா அப்பா  உன்னை இப்படி மிரட்டுவார்களா என்பான்.
நானே வேலை முடிச்சுட்டு தான் விளையாடப் போவேன்
என்பேன்.
பட் உனக்கு இந்த மாதிரி இருட்டு விண்டர் டேய்ஸ் கிடையாது.
என்ன வேணா விளையாடலாம் என்று என்னைப் பேசவைத்துவிடுவான்.
திரும்பிப் பார்க்கும் முன் கராத்தே வகுப்பு நேரம் அம்மா வந்ததும்
சுணங்குவான்.
அம்மா I have lots of home work.
give me a break from karate maa.
இத்தனை நேரம் என்னடா பண்ணினே.
பாட்டி ரொம்ப விஷயம் சொன்னாம்மா.
#கிருஷ்ணசேட்டை

வயதானவர்களின் கொண்டாட்ட நாள்.

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன்   வாழ்க. வயதானவர்கள் (சீனியர் இல்லை) தினம். அக்டோபர் 1. வயதான வயதாகிக் கொண்டிருப்பவர்கள் தினம் இன்று அக்டோபர்...