Blog Archive

Wednesday, December 27, 2017

1932 /2017 ஒரு சகாப்தம் கே.வி.வி.ராஜன்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

என் அன்புள்ள மாமா  ,அம்பி என்னும் கீழநத்தம் வீரராகவ அய்யங்கார்  அவர்களின் மகன் வரதராஜன்

Add caption
புதன் காலை 9.30 மணி அளவில் இறைவன் திரு நாட்டுக்கு   ஏளினார் .
 அவரது பெண்கள் இருவருக்கும்  இதைத் தாங்கும் பக்குவத்தை பகவான் கொடுக்கட்டும் .
அன்னைக்கு அன்னையாய்  என்னைத் தூக்கி வளர்த்த அருமை மனிதர்.
வாழ்வின் கடைசிப்படிகளில்  மனைவி,மகன்,மகள்  இம்மூவரையும் இழந்தார். இந்த மார்கழி வளர்பிறை அவரை அழைத்துக் கொண்ட ஸ்ரீ வேணுகோபாலன் அவர்
ஆத்மாவைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றுவிடுவான்.

அம்பி எத்தனையோ காலங்களில் எங்கள் குடும்பத்துக்கு  உண்மையான இரும்புக்கரங்கள் கொண்டு அரவணைத்தாய். என் இன்னொரு தாயே உனக்கு கோடி நமஸ்காரங்கள்.

எங்கள் சிங்கம் திடீரென மறைந்த பொது  ஆண்டாள் உன்னை எப்படி இனிமே பார்ப்பேன்னு கதறினாய் நான் உன்னை சமாதானப் படுத்த வேண்டி வந்தது.
எல்லோரும்  ஸ்ரீவைகுண்டத்தில் சுகமாக இருங்கள்.🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

8 comments:

நெல்லைத் தமிழன் said...

உங்கள் வருத்தத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்.

எங்கள் ஊர்க்காரர்,, யாரையும் நினைவில்லை. (பெரியப்பா அங்கு 40களில்தான் குடியேறினார்). மறக்காமல், ஊரின் தெய்வமான ஸ்ரீவேணுகோபாலனைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

சுவற்றில் இருப்பது திருக்குடந்தை ஆண்டவனா?

KILLERGEE Devakottai said...

அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாரட்டும்.

- கில்லர்ஜி

ஸ்ரீராம். said...

ஆழ்ந்த இரங்கல்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

தாத்தாவும் பாட்டியும் கடைசி மாமா பிறந்தபிறகு சென்னை வந்தார்கள் என்று நினைக்கிறேன்
அன்பு நெல்லைத்தமிழன்.
1939 இல் இருக்கலாம். நிலபுலங்களை. வேதாந்தம் என்பவர் பார்த்துக் கொண்டார்.
எங்கள் வீட்டில் முரளிதரனும், வேணு கோபாலனும் நிறைய.ஆமாம். அவர்கள் ஆண்டவன் ஆஸ்ரமம் தான்.

Angel said...

ஆழ்ந்த இரங்கல்கள் வல்லிம்மா .

வெங்கட் நாகராஜ் said...

ஆழ்ந்த இரங்கல்கள் மா.....

Geetha Sambasivam said...

வருத்தமாக இருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

தாமதமான வருகை...ஆழ்ந்த இரங்கல்கள் வல்லிம்மா...

கீதா