எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
அவ்வப் பொழுது என்னை மறந்து விடுகிறாய்.
உன்னை ஒழுங்காக வைத்திருப்பவன் நான்
அல்லவா. நொடி நேரத்தில் உன் கவலை
போக்கியவன் நான் இல்லையா.
அடிக்கு அடி எடுத்து வைத்து வந்து தரிசனம் செய்து விட்டுப் போனது 1987இல் .
அப்புறம் துன்பம் நேர்கையில் யாழெடுத்து என்ற பாடலுக்கு ஏற்ற மாதிரி தம்பியின் பைபாஸ் அறுவைக்கும்,
அம்மாவின் இருதய வலிக்கும்,
வீட்டுக்காரரின் சளி இருமலுக்கும்
இன்னும் ஏதேதோ சம்பவங்களுக்காக மட்டுமே என்னை நினைத்தாய்.
பிறகு மீண்டும் சம்சாரம்,பேரன் ,பேத்திகள் என்று மஞ்சள் துணியில் முடித்து வைக்க தெரிந்த உனக்கு,
மேலே ஏறி வந்து உன் பிரார்த்தனை செலுத்த முடியவில்லை. என்னைத் தரிசி க்க வந்தவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டாய் .
மனதிலாவது தக்க வைத்துக் கொள் என்றும் உன்னைக் காக்க நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லும் நரசிம்ம சாமி. மீண்டும் அப்ளிகேஷன் வைக்கிறேன். ஞாபகப் படுத்தியவர்கள் துளசி கோபால், எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம்.
ந்ருஸிம்ஹன் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 |
9 comments:
காப்பார், காப்பார்... அஞ்சேலெனக் கரம் காட்டுபவனல்லவா அவன். கவலை வேண்டாம்.
காப்பார், காப்பார்... அஞ்சேலெனக் கரம் காட்டுபவனல்லவா அவன். கவலை வேண்டாம்.
முடியாத போது இப்படியும் செய்யலாம் அம்மா...
தவறில்லையே.
அவரில்லாமல் உலகமே ஏது நெல்லைத்தமிழன்.
குந்தி சொன்னது நிஜம்தான். மனமோ உடலோ வலித்தால் மட்டுமே
நினைக்கும் மனித சுபாவம்.
நினைத்துதெளியவே வலிகளைக் கொடுக்கிறான்.
நம்பி முன்னேற அவன் பாதங்கள் சரணம்.
வேற வழி எனக்குத் தென் படவில்லை.
அங்கு வரும் நாட்கள் குறைவு. மகன் களுக்கு வேலை அதிகம்.
பக்கத்து வீட்டில் இவர்தான் குல தெய்வம்.
அதனால் அவர்கள் செல்லும்போது கொடுத்தனுப்புகிறேன்.
என் இயலாமையை நினைத்துத் துயரம் தான்.
அளித்தவன் அவன் தான். அவனே நிறைவேற்றிக் கொள்வான்
என்று நம்புகிறேன் தீர்க்கமாய். அன்பு வெங்கட். மனம் நிறை நன்றி நல்ல வார்த்தைகளுக்கு.
என்ன விசேடம்? எல்லாரும் சோளிங்கருக்குப் புறப்பட்டுவிட்டீர்கள்? துளசி கோபாலும் எழுதுகிறார். நீங்களும் அப்படியே. எங்ககிட்ட சொல்லக்கூடாதா? நானும் போவேனில்ல? கோயிலில் ஏதாவது விழாவா?
வணக்கம் திரு வினாயகம்.
அங்கு விழா வா தெரியாது. துளசி கோபால் அங்கே சென்ற வருடம் போய் வந்ததைச் சொல்லுகிறர். நான் அந்தப் பெருமாளிடம் வைத்திருக்கும்
நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்கிறேன்.
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
எப்போதும் அவரை மனதில் நினைத்திருக்கும் உங்களை எப்படி மறப்பார்
அவன் தாளின்றி வேறென்ன கதி!! அவரின் பரிபூரண அருள் தங்களிடம் நிலைத்திருக்கும் வல்லிம்மா
Post a Comment