எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
|
மாயனை மன்னு வட மதுரை மைந்தனை தூய பெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர் குல த்தினுள் தோன்றும் அணிவிளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதறுவான் நினறனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம். |
12 comments:
ஆண்டாள் திருவடிகளே சரணம்....
மாயனை, வடமதுரை மைந்தனை, யமுனை ஆற்றின் துறையிலிருப்பவனை, ஆயர் குலத்துக்கே அணிவிளக்காகத் தோன்றியவனை, அசோதையின் வயிற்றில் பிறந்தவனை, தூய்மையா வந்து, நாம் மலர் தூவி, வாயினால் அவன் புகழைப் பாடி, மனத்தினால் அவனோடே ஒன்றியிருக்க, நம் எல்லாப் பிழைகளும் போகும், எல்லாப் பாவங்களும் நெருப்பில் இட்ட பஞ்சுபோல் தூசாகும். அதனாலே அவன் நாமத்தைச் சொல்லிப் பாட வாருங்கள்.
பாசுரம் படித்தேன்.
நன்றி அனுராதா மா.
வரணும் நெல்லைத்தமிழன்,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைப்
பாடுவோம்.நன்றி மா.
வணக்கம் திரு .ஜம்புலிங்கம்.
நானும் பாசுரம் மறக்கக் கூடாது என்றே எழுதுகிறேன்.
ஐந்தாம் பாசுரம் சிறப்பு.
தொடர்கிறேன் மா.
பகிர்வுக்கு நன்றி
பாசுரமும் வாசித்தேன்...
நெல்லைத் தமிழன் அவர்களின் விளக்கத்தையும் வாசித்தேன் அருமை.
அன்பு வெங்கட்,
ஐந்து வயதில் கற்றது இந்தப் பாட்டுகள். கடவுள் இந்த
பாவை நோன்பை நான் இருக்கும் வரை என் மனதில்
பாட வைக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனைகள்.
அன்பு பூ விழி மிக நன்றி மா.
அன்பு குமார், மிக மிக நன்றி ராஜா.
Post a Comment