மார்கழிப் பாசுரம் 4
+++++++++++++++++++++++++
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியன் தோளுடைய பத்மனாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
வையத்து வாழுவீர்காள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ பாற்கடலில் பையத்துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி , மையிட்டு எழுதோம்,மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம். ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். ஆண்டாள் திருவடிகளே சரணம். அம்மா உன் ஆசைப்படியே நாங்கள் நடந்து கொள்ள உன் கருணையே வழிகாட்டி.🙏🙏🙏
வண்டியை விட்டு இறங்கிய ராதை வீட்டுக்குள் பாடியபடி விரைந்தாள். பின்னாலயே வந்த
நவீன், கூடத்தில் உட்கார்ந்திருந்தவர்களைக் கண்டு அதிர்ந்து போனான்.
அடுத்த அரை மணி நேரம் வீடு அமளிதுமளிப் பட்டது.
ராதை மட்டும் அமைதியாக இருந்தாள்.
அவளின் அம்மா ,அப்பா அதிர்ச்சியுடன் அவர்கள் பேசுவதைப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள், நவீன் ஏதோ அவர்கள் மொழியில் கெஞ்சுவது
தெரிந்தது.
ராதையைக் கேட்டால் மௌனம் சாதித்தாள்.
அவளுக்கும் இந்த விஷயம் தெரியும் என்று உணர்ந்தனர்.
பெண்ணைப் பெற்றவர், அவரிடம் வந்து நாங்கள்
இதை எதிர் பார்க்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்
கல்யாணம் ஆயிற்று.
என் மகள் கர்ப்பம் தரித்து ,,இரண்டு மாதங்களில்
இங்கே வேலை கிடைத்து வந்தான்.
இது போல அனியாயம் நாங்கள் கண்டதில்லை.
வருடம் ஒரு முறை வந்தானே.
ஒன்றும் எங்களுக்குத் தோன்றவில்லையே.
உங்கள் பெண்ணும் மணமானவள் ஆமே. இந்த
உறவை எப்படி அனுமதித்தீர்கள்.
நாங்கள் தென்னாட்டுக்காரர்கள் பண்பாடு மிக்கவர்களாகத்தான் எங்கள்
ஊரில் பார்த்திருக்கிறோம்.
இந்த அவமானம் எங்களால் தாங்க முடியாது.
இந்த மாப்பிள்ளையும் எங்களுக்கு வேண்டாம்
என்று வெளியே நடந்தார்.
அவரது மனைவி ராதையைப் பார்த்து அவர்கள் மொழியில்
அழுதுகொண்டே ,கதறினாள்.
பின் கணவனைப் பின் பற்றினாள்.
நவீன் ,ராதையைப் பார்க்க அவள் தன் அறைக்குள்
புகுந்தாள் .அவனும் பின் தொடர
அதற்குப் பின் நடந்த ரசாபாசம் ,அவர்கள் வீட்டு சமையல் வேலை செய்யும் அம்மா
மூலம்
பாட்டிக்கு வந்தது. தொடரும்.
அப்பா, huggingனால் என்ன அர்த்தம், சின்னப் பையன் மாதவ்
கேட்டதும் அவனை அணைத்துக் கொண்டான் கேசவன்.
இதுதான் கண்ணா. நீ பாட்டியை ஓடிப்போய்க் கட்டிக்கிறியே அதுதான்.
ஏன் பாடம் எதிலாவது வந்திருக்கா என்றான்.
இல்லை என்று திணறும் குழந்தையைப் பார்த்து மனம் நெகிழ்ந்தது
அப்பாவின் மனம்.
சரி .சொல்ல வேண்டாம். ஹக்கிங்க் இஸ் குட்
பையா. கண் களில் சந்தேகத்தோடு பார்க்கும் 7 வயசுக் குழந்தையைப் பார்த்து
வேறு ஒன்றும் சொல்லாமல் மீண்டும் அணைத்துக் கொண்டான்.
மனதில் கண்ணீர் நிரம்பியது.
சென்னை வந்த ஆறு மாதங்களில் குழந்தைகளை இங்கும்
ராதையுடனும் இருந்தன. பள்ளிக்கூடத்துக்கு இங்கிருந்தே சென்றன.
வந்த ஒரு வாரத்தில் ராதையின் கட்டுப்பாடுகளை ஒத்துக் கொண்டே குழந்தைகளை அழைத்து வந்தான்.
பெரியவர்கள் அவனுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை.
அவன் மனமும் இறுகிக்கொண்டது.குழந்தைகளுக்கு
மட்டும் திறந்து கொண்டது. இதோ 3 வருடங்களும் ஓடி விட்டன.
ராதையின் வீட்டில் எல்லாமே வழக்கப்படியே நடந்தது.
நவீன் கிருஷ்ணா அவளுடைய உயிராக நடந்து கொண்டான்.
ஒரே ரசனை, புத்தக வாசிப்பு, பாடல்,நடனம் எல்லா
விருப்பங்களும் ஒத்துப் போயின. அந்த ஒரு நாள் வரும் வரை.
வாசலில் நின்ற வயதானவர்களைப் பார்த்து ராதையின் தந்தை
ஆங்கிலத்தில் யாரென்று கேட்டார்.
நவீன் கிருஷ்ணா இங்கே இருக்கிறானா என்று கேட்டார் அந்த பெங்காலி மனிதர்.
இருக்கிறார். நீங்கள் யார் என்றதும், தன் மனைவியைப் பார்த்துவிட்டு அங்கேயே நின்ற
அந்த மனிதர் நாங்கள் அவனுடைய மாமனாரும் மாமியாரும்,
என்றதும் ஒரு தடவை உடல் நடுங்கியது ஸ்ரீனிவாசனுக்கு.
அதாவது ராதையின் அப்பாவுக்கு.
ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு அவன் கல்யாணமானவனா என்றார்.
ஆமாம் 5 வருடங்கள் ஆகிறது ஒரு பையன் கூட இருக்கிறான்.
அவன் ஒரு வருடமாக கல்கத்தாவுக்கு வரவில்லை.
கடிதங்களுக்குப் பதில் இல்லை. கவலையாகிவிட்டது.
அதுதான் நேரே வந்தோம்.
அவன் வேலை செய்யும் கம்பெனியில் விசாரித்தபோது
அவன் இந்த விலாசத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.
அவனை அழைக்க முடியுமா.
அவன் குழந்தையும் மனைவியும் டாக்சியில் இருக்கிறார்கள்.
என்று சொன்னவரைப் பார்த்து வெறிக்க மட்டுமே
முடிந்தது.
அதே சமயம் வெளி கேட்டைத் திறந்து உள்ளுக்குள் நுழைந்தது
ராதை ஓட்டிய ஹெரால்ட் வண்டி. பக்கத்திலிருந்து உத்சாகமாக இறங்கினான்
நவீன். தொடரும்.